தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்யாண மந்திரம் அக்னி காரியம்

திருமணத்திலே அக்னி காரியம் என்பது மிக முக்கியமானது. ஆண்டாள் வாரணமாயிரம் என்கிற பதிகத்திலே திருமண முறையை நிரல் நிறையாக சொல்லிக் கொண்டு வருகின்றாள். இன்றைக்கு அந்த வரிசை யானது கொஞ்சம் முன் பின்னாக பின்பற்றப்பட்டு வந்தாலும் ஆண்டாளின் வாரணமாயிரம் பதிகத்திலே சொல்லப்பட்ட முக்கியமான நிகழ்வுகள் எல்லாமே இன்றைக்கும் நடந்து வருகின்றன. ஆண்டாள் நாச்சியார் அக்னி காரியத்தைப் பற்றி அழகாகச் சொல்லுகின்றாள். மணமக்களை மண வேதிகைக்கு அழைத்து வந்து அமர வைத்து அவர்களுக்கு மங்களாஸாஸனம் செய்து ஸங்க்ரமமாக ஹோமம் ஒன்றினைச் செய்ய வேண்டும்.

Advertisement

தமிழர் மரபிலும் இது உண்டு. அழல் ஓம்பல் என்று சொல்லுவார்கள். காரணம், தேவர்களோடு நம்மைத் தொடர்பு படுத்தி அந்த தெய்வங்களின் கருணையை, ஆசிகளைப் பெற்றுத் தருவது அக்னி தேவன் தான். அக்னி இல்லாவிட்டால் இந்த உயிர் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை. நெருப்பு என்று சொல்லப்படுகின்ற பஞ்ச பூதங்களிலே ஒன்றான இந்த அக்னியால் தான் உலகமும், உயிர்களும் வாழ்கின்றன. அக்னியே இந்த திருமண நிகழ்வுகளுக்குச் சாட்சியாக விளங்குகின்றான். அந்த அக்னியின் வழியாகத்தான் மற்ற தேவர்களைத் தொடர்பு கொள்ள முடியும். ஆகவே தீ வளர்த்து ஹோமம் செய்வது என்பது திருமணத்திலே ஒரு முக்கியமான நிகழ்வு.

அந்த ஹோமத் தீயானது ஓங்கி வளர வேண்டும். அதன் நறுமணப் புகையானது அந்த இடம் முழுவதும் பரவ வேண்டும். ஹோமத்தீ குறைந்தது 14 அங்குலம் ஓங்கி ஒளி வீசவேண்டும். இதனை எப்படிச் செய்வது என்பதை ஆண்டாள் கீழ்க்கண்ட பாசுரத்திலே மிக அழகாக வலியுறுத்துகின்றார்.

வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்

பாசிலை நாணல் படுத்துப் பருதிவைத்து

காச்சின மாகளிறன்னான் என் கைப்பற்றி

தீவலஞ் செய்யக் கனாக்கண்டேன் தோழீநான்!

- என்பது பாசுரம்.

இந்த அக்னியை எப்படி வளர்ப்பது? அதனை யார் வளர்ப்பது? அதற்குத் தேவையான பொருட்கள் என்னென்ன? என்பதையெல்லாம் ஆண்டாள் இந்தப் பாசுரத்திலே விளக்குகின்றாள். இதனை அக்னிமுகம் அல்லது அக்னிகாரிகா என்று சொல்லுகிறார்கள். இதனை எப்படிச் செய்வது என்று பார்ப்போம். முதலில் இடத்தைச் சுத்தி செய்ய வேண்டும். படியிலே அக்னியைச் சேர்த்து ஸ்தலசுத்தி செய்த இடத்தில் 2 தர்ப்பங்களை எடுத்து தெற்காக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி 3 கோடுகளும் தெற்குக்கு வடக்காக 3 கோடுகளும் கிழிக்க வேண்டும். பிறகு அந்த தர்ப்பத்தை தொன்னையிலே ஊற்றி வைக்கப்பட்ட தீர்த்தத்தினால் புரோட்சித்து எறிந்து விடவேண்டும். பிறகு அந்தத் தீர்த்தத்தைத் தொட வேண்டும். அந்த தீர்த்தத்தை கீழே கொட்டிவிட்டு வேறு தீர்த்தத்தை தொன்னையிலே சேர்த்து அந்த தொன்னையை அக்னிக்குக் கிழக்கே வைக்க வேண்டும். அக்னிக்கு 4 திசைகளிலும் நான்கு நான்கு தர்ப்பங்களை எடுத்து கிழக்கு நுனியாகவும், வடக்கு நுனியாகவும் வைக்க வேண்டும்.

இதனைத் தான் ஆண்டாள் பாசிலை நாணல்படுத்து என்று பாடுகின்றாள். நாணல் என்பது தர்ப்பப்புல். புரசஇலை பெரியது ஒன்று சின்னது ஒன்று, நீள் தொன்னை, புரோட்சித்து, 20 புரசங்குச்சி அல்லது அரசங்குச்சி எடுத்து தொன்னைகளில் இரண்டு இரண்டாகக் கவிழ்த்து வைத்து அதன்மேல் 2 தர்ப்பத்தினால் செய்த ஆயாமத பவித்ரத்தை வைத்துவிட்டு கவிழ்த்து வைத்த அந்த ப்ரோட்சணி தொன்னையை நிமிர்த்தி வைத்து அக்னிக்கு மேற்கே உள்ள தர்ப்பத்தில் வைத்து அதிலே கொஞ்சம் தீர்த்தத்தைச் சேர்க்க வேண்டும்.

ஆயாமத பவித்ரத்தை வடக்கு நுனியாக வைத்து தொன்னை ஜலத்தை அப்படியே மேலும் கீழுமாக அரைக்க வேண்டும். தொன்னை புரச இலை இவற்றை நிமிர்த்து தொன்னை ஜலத்தை ஆயாமத பவித்ரத்தினால் 3 தரம் ப்ரோட்சிக்க வேண்டும்.

மீதமுள்ள தீர்த்தத்தைக் கொட்டிவிட்டு வேறு தீர்த்தத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். ப்ரணீதி தொன்னையை எடுத்து எதிர் பக்கத்திலே வைக்க வேண்டும். அதில் தீர்த்தம் மற்றும் அக்ஷதையையும் சேர்த்து பவித்ரத்தினால் மேலும் கீழுமாக அரைத்து அந்த தொன்னையை நெற்றிக்கு நேராக தூக்கிப் பிடிக்க வேண்டும்.

நுனியை நறுக்கி தீர்த்தத்தைத் தொட்டு நெய் தொன்னையில் சேர்த்து மறுபடியும் 2 தர்ப்பத்தை அக்னியில் கொளுத்தி நெய் தொன்னையை சுற்றி எறிந்து விடவேண்டும்.

அந்தத் தணலை அக்னியில் சேர்த்து நெய்யை ஆயாமத பவித்ரத்தினால் அரைத்து பிறகு அந்த பவித்ரத்தை அவிழ்த்து தீர்த்தத்தைத் தொட்டு தர்ப்பத்தை அக்னியில் சேர்க்க வேண்டும். புரச இலைகளை அக்னியில் காய்ச்சி தர்ப்பத்தினால் துடைத்து மறுபடியும் காய்ச்சி இலையை வைத்துவிட்டு தர்ப்பத்தை தீர்த்தத்தைத் தொட்டு அக்னியில்சேர்க்க வேண்டும்.

புரங்குச்சி கட்டு 20ல் இருந்து கொஞ்சம் தடித்த குச்சியை மேற்குப் பக்கத்திலும், மெல்லிய நெட்டையான ஒரு குச்சியை தெற்குப் பக்கத்திலும், மெல்லிய குட்டையான ஒரு குச்சியை வடக்குப் பக்கத்திலும் வைத்து 2 குச்சிகளை எடுத்து மேற்குக் குச்சியைத் தொட்டுவிட்டு அக்னியின் முன் பக்கத்தில் தெற்கிலும் வடக்கிலும் மூலையில் வைக்க வேண்டும். அப்பொழுது சொல்லப்படும் மந்திரம்:

``அதிதேநுமந் யஸ்ய அநுமதேநு மந்யஸ்ய

சரஸ்வதேநு மந்வஸ்ய தேவசவித: ப்ரஸூவ’’

- என்று சொல்லி அக்னியை தீர்த்தத்தினால் பரிசேஷனம் பண்ண வேண்டும்.

இதனை ஆண்டாள் பாசிலை நாணல் படுத்திப் பரிதி வைத்து என்று பாசுரத்திலே சுட்டிக் காட்டுகின்றாள். மீதியுள்ள 15 குச்சிகளையும் நெய் தொன்னையில் நனைத்து, அஸ்ய மாணவகஸ்ய ப்ரஜாபத்யாதி விரத உபக்ரம உத்சர்ஜன ஹோமகர்மணி

ப்ரஹ்மண் இத்மம் ஆதாஸ்யே

என்று ப்ரஹ்மாவை கேட்டுவிட்டு அக்னியிலே குச்சிகளைச் சேர்க்க வேண்டும். அதாவது இந்த ஹோமத்தை ப்ரஹ்மாவின் அனுமதிபெற்றுச் செய்வதாகப் பொருள். ப்ரஹ்மாவும் உடனே அதை அனுமதிப்பதாக ஒரு வார்த்தையை நாமே கூறிக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு ப்ரஹ்மாவை மனதில் தியானித்து சின்ன புரச இலையில் நெய்யை எடுத்து வடமேற்கிலிருந்து தென்கிழக்காக அக்னியில் தாரையாகச் சேர்க்க வேண்டும். அப்பொழுது சொல்ல வேண்டிய மந்திரம்.

ப்ரஜாபதயே இதம் நமம:

பெரிய இலையில் நெயை எடுத்து தென்மேற்கிலிருந்து வடகிழக்கில் நெய்யை சேர்த்து அக்னயே ஸ்வாஹ: என்று அக்னிமத்தியில் ஹோமம் செய்ய வேண்டும்.

அக்னயே இதம் நமம: என்று சொல்லி மறுபடியும் நெய் எடுத்து ஸோமாய ஸ்வாஹ: என்று தென் பாகத்திலேசேர்க்க வேண்டும்.

சேர்த்துவிட்டு ஸோமாய இதம் நமம: என்று சொல்லி மறுபடி நெய் எடுத்து ஓம் அக்னயே ஸ்வாஹ: என்று மத்தியில் ஹோமம் செய்ய வேண்டும். செய்துவிட்டு அக்னயே இதம் நமம: என்று சொல்லி மறுபடியும் நெய்யை எடுத்து ஓம் பூத்

புவ: ஸ்வ: ஸ்வாஹ: என்று ஹோமம் செய்து ப்ரஜாபதயே இதம் நமம: என்று சொல்ல வேண்டும்.

இதற்குப் பிறகு பகவான் விஷ்ணுவை நினைத்துக் கொண்டு த்வாதஸ மந்திரங்களாலோ இல்லாவிட்டால் நாராயண ஸூக்தத்தாலோ அல்லது நாராயண உபநிஷத் வாக்கியங்களாலோ ஹோமம் செய்யலாம். இல்லாவிட்டால் அக்னியில் நாம் பகவானைத் தியானித்து ஹோமத்தைச் செய்யலாம்.

Advertisement

Related News