ஒன்பது கோளும் ஒன்றாய் கொண்ட பிள்ளையார்.
பல லட்சம் விநாயகர் சிலைகள் உலகம் முழுக்க இருக்கின்றன. எங்கும் எதிலும் எவ்வித அழகிய, எளிமையான கோலத்திலும் காட்சி கொடுப்பவர் விநாயகர். இதோ இப்போது சதுர்த்தி விழாவில் ‘‘கூகுள்’’ விநாயகர் முதல் ‘‘கூலி’’ விநாயகர் வரை ஊர்வலத்தில் இடம் பிடிப்பார் என்பது உறுதி. எனினும் நம் தமிழ்நாட்டில் இன்னமும் பார்க்காத, அதே சமயம் பார்க்க வேண்டிய சில தனித்துவமான விநாயகர்கள் பட்டியல் இதோ.
ஸ்ரீஆதியந்த பிரபு
சென்னை அடையாறில் உள்ள மத்யகைலாசம் கோயிலில் ஆதியந்த பிரபுவாக விநாயகர் காட்சி தருகிறார். விநாயகர்-அனுமான் சரிபாதியாக அமைந்த திருக்கோலமே இந்த ஆதியந்த பிரபு.
பொல்லாப் பிள்ளையார்
திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். அதாவது பொல்லாத பிள்ளையார் என்று அர்த்தமில்லை. கல்லைப் பொலிந்து பிள்ளையார் செய்யாமல், சுயம்புவாகத் தோன்றியதால் பொல்லாப் பிள்ளையார் என்று இந்த பிள்ளையாருக்குப் பெயர்.
மிளகுப் பிள்ளையார்
திருநெல்வேலி சேரன் மாதேவியில் உள்ள பிள்ளையார் மிளகுப் பிள்ளையார். இங்கு கால்வாயில் நீர் வற்றிக் காணும்போது மிளகை அரைத்து விநாயகர் மேல் பூச மறுநாளே கால்வாயில் தண்ணீர் பெருகுகிறது என்பது நம்பிக்கை. அதன்படி அங்கே நடக்கவும் செய்வதால் இங்கே இருப்பவர் மிளகுப் பிள்ளையார்.
ஓங்கார ஒலி தரும் விநாயகர்
காஞ்சிபுரம், திருவோணக் காந்தன் தளியில் கருவரை மண்டபத்தில் நுழைவாயிலில், சுவரின் முகப்பில் விநாயகர் திருவுருவம் ஒன்று இருக்கிறது. அவரது அருகில் சென்று நம் காதை வைத்துக் கேட்டால் ஒரு வகை ஓங்கார ஒலி ஒலிக்கு மாம். இதைப் பல்லாண்டு காலமாக பல்லாயிரம் மக்கள் கேட்டு மகிழ்ந்து வியக்கின்றனர்.
பஞ்சமுக விநாயகர்
திருவொற்றியூர் தியாகேஸ்வரர் கோயிலில் பஞ்சமுக விநாயகர் சிலை உள்ளது. ஐந்து முகங்களும் ஒரே வரிசையில் அமைந்துள்ளது இங்கே மிகவும் சிறப்பு.
கரும்பு விநாயகர்
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள விநாயகர் கற்பக விநாயகர். தாமரைப் பூவில் அமர்ந்திருப்பார். இவரது கையில் முழுக் கரும்பு இருக்கும். அடிக்கரும்பு ஒரு கையிலும், நுனிக்கரும்பு மற்றொரு கையிலும் இருக்கும். இந்த விநாயகருக்கு கீழே மிகவும் சிறிய ஆஞ்சநேயர் சிலை உள்ளது தனிச் சிறப்பு.
லட்சுமி கணபதி
பத்துக் கரங்களுடனும், இரு தேவியருடனும் காணப்படும் மகாகணபதி லெட்சுமி கணபதி எனப்படுகிறார். தாம்பரம், ஜாபர்கான் பேட்டை, உட்பட சென்னையிலும், மேலும் எல்லா ஊர்களிலும் நிச்சயம் ஒரு லட்சுமி கணபதி கோவில் இருக்கும். இங்கே வணங்கினால் செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பெண் உருவில் விநாயகர்
நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள சுசீந்திரம் தாணுமாலயன் ஆஞ்சநேயர் ஆலயத்தில் உள்ள விநாயகர் கணேசினி என்னும் பெயரில், பெண் உருவில் காட்சி தருகிறார். இவருக்கு புடவை கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.
சாட்சி விநாயகர்
கீழ்த்திருப்பதி திருச்சானூர் குளத்தருகில் உள்ள விநாயகரின் பெயர் சாட்சி விநாயகர். திருப்பதி வெங்கடாசலபதி அலமேலு மங்காதேவி திருமணத்திற்கு இந்த விநாயகர் சாட்சியாக இருந்ததால் இந்த பெயர் ஏற்பட்டிருக்கிறது இவருக்கு.
சோழபுரம் விநாயகர்
இது புறநகர், திருவாரூர் அருகே அமைந்துள்ள கோவிலில் உள்ள விநாயகர் சிலை. இந்த சிலை கறுப்பு கல் கொண்டு சோழர் காலத்தில் சிற்பக்கலைஞர்களால் செதுக்கப்பட்டது. விநாயகர் தலையில் முத்து விளங்கும் உருவம் இதன் தனித்துவம்.
முருகன் விநாயகர் (முடியுள்ள விநாயகர்)
மதுரையில் உள்ள இந்த விநாயகர் சிலை ‘முடியுள்ள விநாயகர்’ என அழைக்கப்படுகிறார். இவருக்கு முடி இல்லை என்பது பெரும் விசேஷம். பொதுவாக விநாயகர் சிலைகளுக்கு முடி இருப்பது வழக்கம். இந்த விநாயகருக்கு முடி இருக்காது, ஆனால் பெயர் முடியுள்ள விநாயகர்.
காசி விநாயகர் (செங்கல்பட்டு விநாயகர்)
செங்கல்பட்டு அருகே உள்ள இந்த விநாயகர் சிலை வெள்ளி மற்றும் தங்கம் கலந்த அமைப்பில் உள்ளது. இந்த வகை சிலைகள் தமிழ்நாட்டில் அரிது.
முக்குறுணி விநாயகர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஒரு பிரபலமான விநாயகர் சிலை. இது ஒரு குறுணி என்பது 6 படி என்ற அளவில், மூன்று குறுணி அளவுள்ள பச்சரிசி மாவினால் செய்யப்பட்ட கொழுக்கட்டையை விநாயகர் சதுர்த்தி நாளில் படைப்பதால் இப்பெயர் பெற்றது.