தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வில்வம் தந்த மோட்சம்

பகுதி - 2

“எனக்கு சொந்த ஊரு திருச்சி பக்கத்துல லால்குடிங்க. நான், பொறந்த ரெண்டு வருசத்துக்குள்ள உடம்பு சரியில்லாம எங்கம்மா எறந்துட்டாங்க. அதுலேருந்து எங்கப்பாதான் என்னய வளத்துனாரு. எனக்கு ஆறு வயசாகும்போது என்ன கூட்டிக்கிட்டு பொளப்பு தேடி இந்தப் பக்கம் வந்தாரு. இந்த ஊரு பண்ணைல மாடு மேச்சு பராமரிக்கற வேல கெடச்சிசுங்க. நான், படிக்க பள்ளிக்கூடம் போவலீங்க. எங்கப்பாருட்ட நெறயா படிச்சிருக்கேன்.

எங்கப்பாருக்கு பாட்டுன்னா உசிரு. புரந்தரதாஸர், முத்துஸ்வாமி தீட்சதர், சாமா சாஸ்திரிகள்… திருவையாறு தியாகராஜ சாமி பாட்டெல்லாம் ரொம்ப நல்லா பாடுவாரு. எனக்கும் சொல்லிக் கொடுப்பாரு. நானும் பாடுவேன். அந்த ஆசயிலதான் என் பேர பண்டரிவிட்டலன்னு வெச்சிருக்காரு. இப்ப அவுரு இல்லீங்க. மோச்சத்துக்கு போய் நாலு வருசம் ஆயிடிச்சி. நா, இப்ப பண்ணைல மாடுங்களை மேச்சு பராமரிக்கிறேன். அங்கு சோறு போட்டு சம்பளம் தர்றாங்க. இப்ப எனக்கு பன்னிரண்டு வயசாவுது சாமி.” என்று சொன்னான். இதைக் கேட்டு நெகிழ்ந்தார், ஸ்வாமிகள்.

“அது சரி… இந்த சுத்து வட்டாரத்லயே வில்வமரம் இல்லேனு எல்லாரும் சொல்றச்சே ஒனக்கு மட்டும் எங்கேருந்து இவ்வளவு வில்வம் கெடச்சுது?” என்றார் ஆச்சரியத்தோடு.பண்டரிவிட்டலன் பவ்யமாகச் சொன்னான்; “இங்கருந்து ஐந்து மைல் தள்ளிருக்கற மலை அடிவாரத்தில நெறயா புல்லு மண்டிக் கெடக்குது சாமி. அங்கதான் எங்கப்பாரு காலத்துலேருந்து மாடு மேக்கப் போவோம். அங்க மூணு பெரிய வில்வ மரங்க இருக்கு! அப்போ எங்கப்பாரு அந்த இலைங்கள பறிச்சாந்து காட்டி, `எலே பண்டரி… இந்த எலை பேரு வில்வம். இதால சிவபெருமானுக்கு பூச பண்ணுனா அம்புட்டு விசேஷம்டா. பாத்து வெச்சுக்க’னு சொன்னாரு.

அது நெனப்லய இருந்துச்சு சாமி. முந்தா நாளு நம்ம மடத்துக்காரவங்க இந்த இலய காட்டி, ‘நெறய வேணும்னு கேட்டப்ப புரிஞ்சு போச்சு. ஓடிப் போயி ஓலக்கூடயிலே பறிச்சாந்து வெச்சேன்… மாடு மேய்க்கற பையன் கொண்ணாந்ததுனு தெரிஞ்சா பூஜைக்கு ஏத்துக்க மாட்டீங்களோனு பயந்துதான் யாருக்கும் தெரியாம வெச்சிட்டுப் போனேன். இதான் சாமி சத்தியம்!” மேலும் நெகிழ்ந்த ஆச்சார்யாள், சற்று நேரம் மௌனம் காத்தார். பிறகு, “பண்டரிவிட்டலா… ஒனக்கு என்ன வேணும்… என்ன ஆசைன்னு சொல்லு. அத மடத்லேர்ந்து பூர்த்தி பண்ணச் சொல்றேன்!” என்றார் வாஞ்சையுடன். உடனே பண்டரி விட்டலன், “சிவ… சிவா!” என்று சொல்லி கன்னத்தில் போட்டுக்கொண்டு பேசினான்;

“சாமி... எங்கப்பாரு, ‘பண்டரி… நாம இந்த ஒலகத்துல எதுக்குமே ஆசப்படக் கூடாது. ஆனா, ஒண்ணே ஒண்ணுக்கு மட்டும் ஆசப்படணும்!’னு சொல்லிட்டே இருப்பாரு. எனக்கு இப்ப இரண்டே ரண்டு ஆச இருக்கு. நீங்க உத்தரவு தந்தீங்கன்னா ஒரு ஆசய இப்ப சொல்றேன். இன்னொண்ண நீங்க இந்த ஊர்லேர்ந்து பொறப்பட்டு போற அன்னக்கி சொல்றேன் சாமி…” என்று நமஸ்கரித்து எழுந்தான். அவன் கண்களிலிருந்து பொலபொலவென்று நீர். உருகிப் போனார் ஸ்வாமிகள்.

“சொல்லு… சொல்லு, ஒனக்கு என்ன ஆசைனு” என்று உற்சாகப்படுத்தினார். அவன் தயங்கியபடி, “வேற ஒண்ணுமில்லீங்க சாமி. எங்கப்பாரு எனக்கு, நெறய புரந்தரதாஸர், முத்துஸ்வாமி தீட்சதர், சாமா சாஸ்திரிகள், தியாகராச சாமி பாடுன பாட்டெல்லாம் சொல்லிக் குடுத்திருக்காரு… நீங்க இங்கே தங்கி இருக்கற வரை ஒங்க முன்னாடி நா பாடணும் சாமி! நீங்க கேட்டு அருள் பண்ணணும்!” என்று வேண்டினான். அதைக் கேட்டு பரம மகிழ்ச்சி அடைந்தார், ஆச்சார்யாள்.

“பண்டரிவிட்டலா...! அவசியம் நீ பாடு… நா கேக்கறேன். எல்லாரையும் கேக்கச் சொல்றேன். தினம் மத்யானம் சரியா மூணு மணிக்கு வந்துடு. ஒக்காந்து பாடு. சந்திரமெளலீஸ்வர ஸ்வாமி கிருபை ஒனக்கு கிடைக்கட்டும்! க்ஷேமமா இருப்பே நீ!” என்று ஆசீர்வதித்தார். மகிழ்ந்து போனான் பண்டரிவிட்டலன். ஆச்சார்யாள் விடவில்லை. “அது சரி பண்டரிவிட்டலா... அந்த இன்னொரு ஆசை என்னன்னு சொல்லேன்… கேப்போம்!” என்றார்.

“இந்த ஊரவிட்டு நீங்க பொறப்படற அன்னிக்கு அத ஒங்ககிட்ட வேண்டிக்கிறேன் சாமி!” என்று மரியாதையோடு பதில் சொன்னான் அவன். ஸ்வாமிகள் அவனுக்குப் பிரசாதமும் அழகான துளசி மாலை ஒன்றையும் அதிகாரியை விட்டுக் கொடுக்கச் சொன்னார். வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்ட பண்டரிவிட்டலனுக்கு பரம சந்தோஷம். நமஸ்கரித்துவிட்டுப் புறப்பட்டான். அடுத்த நாள் முதல் சரியாக மதியம் மூன்று மணிக்கு முற்றத்தில் வந்து அமர்ந்து தனக்குத் தெரிந்த, புரந்தரதாஸர், ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி கீர்த்தனைகளையும், சாமா சாஸ்திரிகள் பாடல்களையும் பாட ஆரம்பித்தான். கூடத்தில் அமர்ந்து ஸ்வாமிகள் ரசித்துக் கேட்டார். அவன் குரல் மிக இனிமையாக இருந்தது. அவன் பாடும்போது ஏற்படுகிற உச்சரிப்புப் பிழைகளை சரியாக உச்சரித்துத் திருத்தினார் ஸ்வாமிகள்.

அன்று இருபத்தோராம் நாள். ஸ்ரீசந்திரமௌலீஸ்வர பூஜையைப் பூர்த்தி செய்து, பிக்ஷையை ஸ்வீகரித்துக்கொண்டு அந்த ஊரைவிட்டுப் புறப்பட்டார் ஸ்வாமிகள். சத்திரத்தை விட்டு வெளியே வந்த ஆச்சார்யாள், தம்மை வழியனுப்ப கூடியிருந்த ஜனங்கள் மத்தியில், ஆசி உரை நிகழ்த்தினார். அதைக் கேட்ட அனைவரின் கண்களிலும் நீர் பெருகியது. பரிவாரங்களுடன் மெதுவாக நடக்க ஆரம்பித்த ஆச்சார்யாள்.

திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவராகத் திரும்பி நின்று சத்திரத்தைப் பார்த்தார். அங்கே - வாசல் பந்தக் காலைக் கட்டியணைத்தவாறு, கேவிக்கேவி அழுதபடி நின்றிருந்தான் பண்டரிவிட்டலன். அவனை அழைத்துவரச் சொன்னார் ஸ்வாமிகள். ஓடி வந்தான். மண்ணில் விழுந்து நமஸ்கரித்து எழுந்தான். அவனைப் பார்த்து வாஞ்சையோடு சிரித்த பரப்பிரம்மம்;“பண்டரிவிட்டலா! ஒனக்கு இருக்கற பக்தி, சிரத்தை, ஞானத்துக்கு நீ க்ஷேமமா இருக்கணும். அது சரி… நான் பொறப்படற அன்னிக்கு இன்ெனாரு ஆசைய சொல்றேன்னு சொன்னயே! அது என்னப்பா?” என்று கேட்டார். அதற்கு பண்டரிவிட்டலன் சொன்னான்;

“எங்கப்பாவோட மாடு மேய்க்கிற நேரத்ல அவுரு சொல்வாரு சாமி… ‘சோமையா... கடவுள்ட்ட நாம என்ன வேண்டணும் தெரியுமா? கடவுளே, எனக்கு மறுபிறவி வேணாம். நான், மோச்சத்துக்கு போவணும். நீ கருண பண்ணுனு வேண்டிக்கணும். அதுக்கு நாம சத்தியம் தர்மத்தோடு வாழணும். நீ மகானுங்க யாரையாச்சும் எப்பனா சந்திச்சின்னா, அவங்ககிட்ட மோட்சத்த வாங்கிக் குடுங்கனு வேண்டிக்க’… அப்டீனு சொல்வாருங்க சாமி. எனக்கு அந்த மோட்சத்தை நீங்க வாங்கிக் கொடுக்கணும் சாமி!”என்று பன்னிரண்டு வயதுச் சிறுவனின் நாவிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டது அந்தப் பரப்பிரம்மம். பிறகு சிரித்தபடி,

“கவலைப்படாதே... உரிய காலத்லே ஒனக்கு பகவான் அந்த மோக்ஷ பிராப்தியை அனுக்கிரகம் பண்ணுவார்!” என்று ஆசீர்வதித்துவிட்டு, அந்த ஊர் ஜமீன்தாரைக் கூப்பிட்டு, “இந்த பண்டரிவிட்டலனை பற்றிய விஷயம் எதுவாக இருந்தாலும் அதை ஸ்ரீமடத்துக்கு உடனே தெரிவிக்க வேண்டும்” என்று கூறிவிட்டுக் கிளம்பினார். அனைவரும் ஊர் எல்லை வரை வந்து ஸ்வாமிகளை வழியனுப்பி வைத்தனர்.

பல வருடங்களுக்குப் பிறகு... ஒரு நாள் மத்யானம் இரண்டு மணி இருக்கும். ஸ்ரீகாஞ்சி மடத்தில் பக்தர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்த ஆச்சார்யாள், திடீரென்று எழுந்து மடத்தை விட்டு வெளியே வந்து வேகமாக நடந்தார். அனைவரும் பின்தொடர்ந்தனர். ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் புஷ்கரணிக்கு வந்தவர், ஸ்நானம் பண்ணினார். பிறகு, ஜலத்தில் நின்றபடியே கண்மூடி ஏதோ ஜபிக்க ஆரம்பித்தார். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை ஸ்நானம் பண்ணி ஜபம் செய்தார். இப்படி மாலை ஆறு மணி வரை எழெட்டு தடவை பண்ணினார். ஸ்வாமிகள் கரையேறி படிக்கட்டில் அமர்வதற்குள் மடத்தைச் சேர்ந்த ஒருவர் வேகமாக ஓடி வந்து நின்றார்.

‘என்ன?’ என்பது போல அவரைப் பார்த்தார் ஆச்சார்யாள். உடனே அவர்; “குண்டூர்லேருந்து ஒரு தந்தி. பண்டரிவிட்டலனுக்கு சீரியஸ்னு இருக்கு! யார்னு தெரியல பெரியவா” என்றார். ஸ்வாமிகள் அங்கிருந்தவர்களிடம், “அந்தப் பண்டரிவிட்டலன் இப்போ இல்லை! சித்த முன்னாடிதான் காலகதி அடஞ்சுட்டான். நான், அவா ஊர்ல போய்த் தங்கியிருந்து கிளம்பற அன்னிக்கு, ‘எனக்கு நீங்க மோட்சம் வாங்கிக் கொடுக்கணும்னு கேட்டான்.

‘சந்திரமௌலீஸ்வர ஸ்வாமி கிருபைல ஒனக்கு அது கெடைக்கும்னேன். திடீர்னு அவனுக்கு ஏதோ விஷக் காச்சல் ஏற்பட்டுருக்கு. மோட்சத்தயே நெனச்சுண்டு அவதிப்பட்ருக்கான். கிரமமா அவன் மோட்சத்துக்குப் போய்ச் சேரணும்னா இன்னும் ஆறு ஜன்மா (பிறவி) எடுத்தாகணும். எப்படியாவது அவன் மோட்சத்தை அடையணும்கிறதுக்காகத்தான் ஜபம் பண்ணி பிரார்த்திச்சேன். பண்டரிவிட்டலன் ஒரு நல்ல ஆத்மா!” என்று சொல்லிவிட்டு, விடுவிடுவென்று ஸ்ரீ மடம் நோக்கி நடக்க ஆரம்பித்தார் மகாஸ்வாமிகள்! குளத்தின் படிக்கட்டில் நின்றிருந்த மடத்து ஆசாமிகள் பிரமித்துப் போயிருந்தனர்!

(மகிமை தொடரும்...)

ரமணி அண்ணா

Related News