தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வித்தியாசமான விக்ரகங்கள்

Advertisement

* சுருட்டப்பள்ளி தலத்தில் ஈசனின் கருவறைக்குப் பின் உள்ள திருமால், வலக்கையில் கபாலம் ஏந்தியிருக்கிறார்.

* பொதுவாக ஐந்து தலை ஆதிசேஷனின் மீது அனந்தசயனம் செய்யும் கோலம்தான் திருமாலுக்கு. ஆனால் சிதம்பரம் திருக்கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் ஏழு தலை ஆதிசேஷனின் மேல் சயனித்திருக்கிறார்.

* திருப்பதிக்கு அருகே உள்ள ரேணிகுண்டாவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகப் பெருமான்கள் திகழ்கிறார்கள்.

* குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மனும் ஞானமுத்தீஸ்வரனும் ஒரே பீடத்தில் வடதிசை நோக்கி எழுந்தருளியுள்ளனர். வேறு எந்த காளி கோயில்களிலும் இப்படி காண இயலாது.

*திருப்பூவனத்தில் பொன்னையாள் எனும் பக்தை சிவலிங்கத்தின் அழகில் மயங்கி அதைக் கிள்ளிய வடுவுடன் ஈசனை தரிசிக்கலாம்.

* தர்மபுரி கோட்டைக் கோயிலில் முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் மயில் மீது, ஐயப்பனைப் போல் குத்திட்டு அமர்ந்திருக்கிறார்.

* காவேரிப்பாக்கம் சிவாலயத்தில் தட்சிணாமூர்த்தி ஜடாமுடியுடனும் அட்சமாலை, அக்னி ஏந்தி காலடியில் உள்ள மானுக்கு உபதேசம் செய்யும் நிலையில் தரிசனம் தருகிறார்.

* வேலூர் - ஆற்காடு அருகே, திருவலம் ஈசன் ஆலயத்தில் ஈசனின் கருவறை முன் ஜனக முனிவரின் திருவோடு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

* சென்னை - பழவேற்காடு சின்னக்காவணம் சதுர்வேதீஸ்வரர் ஆலய அம்பிகை பாசம், அங்குசம் ஏந்தாமல் மேல் இருகரங்களில் தாமரை மலர்களை ஏந்தி, கீழிரு கரங்களில் அபய - வரதம் தரித்து மகாலட்சுமி அம்சமாய்விளங்குகிறாள்.

* சிங்கப்பெருமாள் கோயில் - ஸ்ரீபெரும்புதூர் பாதையில் உள்ள ஆப்பூர் மலையில் அருளும் பிரசன்ன வெங்கடாஜலபதி த்ரிபங்க நிலையில் மகாலட்சுமியை தன்னுள் ஏற்று அருள்கிறார். அதனால் இவருக்கு பட்டுப்புடவையே சாத்தப்படுகிறது.

* வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கலையழகு கொஞ்சும் திருமண மண்டபத்தில் குழந்தை வடிவில் தவழும் அற்புத விநாயகரை தரிசிக்கலாம்.

* கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாள், உத்தானசயனம் எனும் படுத்திருந்து சற்று எழுந்திருக்கும் பாவனையில் தரிசனம் அளிக்கிறார்.

* ஆனை மலையில் உள்ள மாசாணியம்மன் முப்பதடி நீளத்தில் சயனித்த திருக்கோலம் கொண்டிருக்கிறாள்.  இழந்த பொருளை திரும்பப் பெற மிளகாய் அரைத்துத் தடவும் பிரார்த்தனை இங்கு மேற்கொள்ளப்படுகிறது.

* வரகூரில் லட்சுமி ஹயக்ரீவர் தோற்றத்தில், திருமகளை மடியில் இருத்தி தழுவிய நிலையில் லட்சுமி நாராயணர் காட்சியளிக்கிறார்.

* திருச்சி, லால்குடி அருகில், அன்பிலில் உள்ள சிவதலத்தில் அப்பர், ஞானசம்பந்தர் பாடல்களை செவி சாய்த்துக் கேட்ட கோலத்தில் ‘செவிசாய்த்த விநாயகரா’கக் காணலாம்.

* பூம்புகார் அருகே, சாயாவனம் தலத்தில் வில்லேந்திய வேலவனைக் கண் குளிரக் கண்டு வணங்கலாம்.

* திருவாரூர் தியாகராஜர் ஆலய முதல் பிராகாரத்தில் ஐந்து தலை நாகம் படுத்திருக்க அதன் நடுவில் விரிந்த தாமரை மலரில் நடனமாடும் விநாயகரை தரிசிக்கலாம். யோக சாஸ்திரப்படி குண்டலினி விநாயகராக இவர் போற்றப்படுகிறார்.

* திருநெல்வேலி, தென்காசி அருகில், இலத்தூர் ஆதீனம் காத்த ஐயனார் ஆலயத்தில் எமனையும் அவன் மனைவி எமியையும் சிலை வடிவில் காணலாம்.

* மதுரைக்கு அருகே திருவாதவூர் ஆலய ஏரி, விஷ்ணு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த ஏரியின் அளவைக் காட்டும் கம்பத்தின் மேல் உள்ள புருஷாமிருகத்தை (மனிதன் பாதி மிருகம் பாதி) காவல் தெய்வமாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.

* திருச்சி, திருப்பாச்சிலாசிரமம் தலத்தில் முயலகனுக்குப் பதிலாக பாம்பின் மேல் நடனமாடும் நடராஜப் பெருமானை தரிசிக்கலாம்.

Advertisement