உமையம்மை பேறு பெற்றவன்
ஆதித்தன், அம்புலி அங்கி, குபேரன்
அமரர்தங்கோன்,
போதில் பிரமன், புராரி, முராரி பொதியமுனி
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன்முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர்-போற்றுவர் தையலையே
தொன்னூற்றி ஏழாவது அந்தாதி
“ஆதியாக”
இந்தப் பாடலானது முழுவதுமே கலைச்சொற்களால் ஆனது. உமையம்மையை வழிபட்டு பேறு பெற்றவர் களின் பெயர்களை வரிசையாக குறிப்பிட்டுள்ளது போல் தோன்றும். அது ஒருவகையில் உண்மை என்றாலும் அதையும் தாண்டி பதினாறு தகவல்களை இப்பாடல் நமக்கு தருகிறது என்பதை ஸ்ரீ வித்யா உபாசனை செய்பவர்கள் உதவிகொண்டு நாடினால், அதைப் புரிந்துகொள்வது எளிதாகும். இனி பாடலுக்குள் நுழைவோம்.
“அந்தாதி
பொருட்சொல் வரிசை”
ஆதித்தன்,
அம்புலி
அங்கி
குபேரன்
அமரர்தங்கோன்
போதில் பிரமன்
புராரி
முராரி
பொதியமுனி
காதி பொருபடைக் கந்தன்
கணபதி
காமன்
முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே
இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கதை இனி காண்போம்.
“ஆதித்தன்”
செந்நிறமும், கருநிறமுமான தாமரை மலர்களை இரு கரங்களில் தரித்திருப்பவர். சுடர்மிக்க சோதி வெள்ளத்தின் நடுவில் அமர்ந்திருப்பவர். மஞ்சள் நிறமான ஆடை, சந்தனம், பூமாலைகள் இவற்றையணிந்தவர். பளபளப்பாக ஒளி வீசும் அணிகளையுடையவர். இவ்வாறான சூரியனை வணங்குகின்றேன்.
சூர்ய:
‘ரக்தாசிதாம் போஜதரம் கராப்யாம்,
ஆதீப்த பாமண்டல மத்ய சம்ஸ்தம்,
சூர்யம் பிஷங்காம் சுக ந்த மால்ய,
மாதீப்த திவ்யா பரணம் நமாமி’
“அம்புலி”
பனிபோல் தூய்மையான வெண்ணிறமானவன், தனது அமுத கிரணங்களை மூவுலகங்களிலும் பரவச் செய்பவன், முத்துமாலைகள், பளபள வென்று வெள்ளி இவற்றால் தன்னை அலங்கரித்துக்கொண்ட வெள்ளாம்பல் மலர் போன்ற புயங்களுடையவன், தூய வெண்பட்டு உடுத்தியவன், சிறந்தவன், கோணலாகவும் நீல [கருப்பு] நிறமுமான குழல்களை [தலைமயிர்] உடையவன். இவ்வாறான சந்திரனை வணங்குகின்றேன்.
சோம:‘ப்ராலேயாமல மாத்ம தி தி சுதா, சங்க்ராந்த
லோகத்ரயம், முக்தா ஜால விராஜி ரப்ய, விலச த்வேஷாந்த ராலா ங்க்ருதம்,
பாஸ்வத் கைர ரவ சாருபாஹு,
மமல க்ஷெள மாவதா தம் பரம்,
வந்தே
சோம மரால நீல விலச, த் கேசம் மநோ நந்தநம்’
“அங்கி”
மூன்று கண்களுள்ளவன், மிகவும் சுடர் விட்டெரிகின்றவன், கிரீடம் தரித்தவன், வெண்ணிறமான ஆடையுடுத்தியவன், செந்நிறமானவன், பலவிதமான அணிகள் அணிந்தவன், தாமரை மலரிலமர்ந்தவன், வேண்டிய வரங்களைக் கொடுக்கும் வரத முத்திரை, சக்தி [வேல்], ஸ்வஸ்திகம், அபய முத்திரை இவற்றைக் கைகளில் தரித்தவன், பொன் மாலைகளால் அலங்கரிக்கப் பெற்றவன், இவ்வாறாகிய அந்த [பிரசித்தமான] அக்நி தேவனை வணங்குமின்.
அக்நி:
‘த்ரிநயந முருதப்தம் பதம் மௌளீம் சு சுக்லாம்,
பர மருண ம நேகா கல்ப மம் போஜ சம்ஸ்தம்,
அபிமத வர சக்தி ஸ்வஸ்திகா பீதி ஹம்ஸ்தம்,
நமதம் அநக மாலாலங் க்ருதம் தம் க்ருஷானும்’
“குபேரன்”
சோம தேவனே உங்களுக்கு என் வணக்கம் உரித்தாகட்டும். கதையை தரித்தவனே உங்களுக்கு என் நமஸ்காரம் உரித்தாகட்டும். யக்ஷர்களின் அரசனே புண்ணியத்தால் சுமக்கப்படுபவனே உன்னை வணங்குகிறேன்.
குபேர:
‘நமஸ்தே சோம தேவாய
நமஸ்தே கதாதாரினே,
நமஸ்தே யக்ஷ் ராஜாய
புண்ய வாஹாயதே நம:’
“அமரர்தங்கோன்”
தேவகங்கையின் கரையில் முளைத்து வளர்ந்த கற்பக மரங்களின் கீழ், தேவர் குழாங்களால் சூழப்பட்டவனாய் பெரிய யானையின் மேல் வீற்றிருப்பவனும், பொற் கிண்ணத்திலிருக்கும் பொற் குவியலை இரு கைகளாலும் ஸாதகனுக்கு [மந்திரத்தை ஜபம் செய்து சித்திபெற முயற்சிப்பவனுக்கு] அள்ளிக்கொடுத்துக் கொண்டிருப்பவனுமாகிய [தேவேந்திரனை வணங்குகிறேன்]
இந்திரன்‘மந்தாகிநீ தடருஹ த்ரி தஷ திரு மாதோ,
ப்ருதரகை: பரிவ்ருதம் கஜராஜசம் ஸ்தம்,
தோர்ப்யாம் சு வர்ண சஷக ஸ்த: மகுப்ய’
றஜாத மாதாய சாதக வராய ச: ப்ரியந்தம்’
“போதில் பிரமன்”
இவருக்குக் கைகள் நான்கு.
அவைகளால் முறையே பலாசமரத்தின் தடி [தண்டம்], ஸ்படிகக் கற்களால் அமைக்கப்பெற்ற அக்ஷமாலை, பொன்னால் செய்யப்பட்ட கமண்டலம் [கிண்டி], தாமரை மலர் இவற்றைத் தரித்துக் கொண்டிருப்பர். செந்நிறமான சடைமுடி உடையவர், பொன்னிறமான உடம்பையுடையவர். இவ்வாறான நான்முகனை வணங்குகின்றேன்.பிரம்மா:
‘ஆஷாட தண்ட ஸ்படி காக்ஷ மாலா,
ஸ்வர்ண குண்டீ சரசி ருஹாணி,
பிப்ராண மார க்த ஜடா கலாபம்,
ஒசதுர் முகம் பீதி ருசம் நமாமி’
“புராரி”
இனி எட்டு வகையான திரிபுராந்தக மூர்த்தியைப் பற்றிச் சொல்லப் போகிறேன். இவருக்கும் வலது கால் இயற்கையான நிலையிலும், இடது கால் சிறிது வளைந்தும் இருக்கும். இவருக்குக் கைகள் நான்கு அவற்றில் வலது முன் கையில் நாபிஸூத்ரத்தின் முடிவில் ‘ஸிம்ஹகர்ண’ முத்திரையுடன், அம்பை நடுவில் பிடித்திருப்பர். இடதுகை அக்குளின் அளவு வரை உயர்த்தப்பட்டு வில்லைப் பிடித்தவாறிருப்பார். மற்ற இரண்டு கைகளும் “கர்த்தரீமுக” முத்திரையுடன் கூடியிருக்கும். வலது கையில் மழுவும், இடது கையில் புள்ளிமானும் இருக்கும். சடைமுடியுடன் கூடியிருப்பார். அணிகலன்கள் அனைத்தும் அணிந்திருப்பர். பவழம் போன்ற நிறமுடையவர். இடது புறம் பார்வதி தேவியும் இருப்பார். இவ்வாறான இந்த மூர்த்தி எட்டு வகை திரிபுராந்தக மூர்த்திகளுக்குள் முதலாவதாகும்.
புராரி
‘அதாஸ்ட்டப் ரவக்ஷ்யாமி, த்ரிபுராந்தகமூர்த்திநம்,
தஷிணம் சுஸ்த்திதம் பாதம்
வாமபாதந்து குஞ்சிதம்,
தக்ஷிணே பூர்வ ஹஸ்தம் து,
நாபி சூத்ர வசானகே,
சிம்ஹ கர்ணம் து தத் சம்ஸ்தம்,
பாண மத்யே நி பீடீதம்,
வாம ஹஸ்தே தநுர்
த்ருத்வா, கக்ஷாந்தோர்த்வம்
சமுத்ருதே, கர்த்தரீ வர
ஹஸ்தௌ த்வௌ, டங்க
க்ருஷ்ண ம்ருகான் விதௌ,
டங்கந்து தக்ஷிணே நாமே,
க்ருஷ்ண சாரங்க மேவஹி,
ஜடாமகுட சம்யுக்தம்,
சர்வா பரண பூஷிதம்,
ப்ரவாள சத்ருஷம் ப்ரக்யம்,
வாமே கௌரி சமாயுதம்.’
“முராரி”
தாமரைமலர், கதை, சங்கு, சக்கரம், இவற்றையும், வித்யை, கண்ணாடி, பொற்குடம், இவற்றையும் கையிலேந்தியது; மேகம், மின்னல், இவற்றினுடையது போன்ற அழகுள்ளது, இடது புறம் கொங்கையையுடையது, அடர்த்தியான ஆபரணங்கள் உள்ளது. ஒருவருக்கொருவர் அணைத்துக் கொள்வதில் ஆசை மிகுதியால் ஈருடலும் ஒன்றாகி விட்டது. இவ்வாறான செந்தா மரைக் கண்ணனுடைய திருமகளுடைய திருமேனி உங்களைக் காக்கட்டும்.
நாராயண:
‘ஹஸ்தே பிப்ரத் சரசிஜகதா சங்க சக்ராணி வித்யாம்,
பத்மாதர் ஷௌ கநக கலசம் மேகவித் யுத்விலாஸம்,
வாமோ ததுங்கஸ்தந மவிரலாகல்ப மாச்லே ஷலோபா,
தேகீ பூதம் வபுர வதுவ: புண்டரீகாக்ஷ ல க்ஷ் ம் யா:’
“பொதியமுனி”
இவர் பொன்னிறமான உடலை உடையவர். பல நிறமான ஆடைகளை உடுத்திவர்கள். வயது முதிர்ந்தவர், இரண்டு கைகளுடையவர். சாந்தமானவர். சடை முடியால் அலங்கரிக்கப் பெற்றவர். பூணூல் அணிந்து உள்ளவர். சாம்பலினால் மூன்று பட்டையை நெற்றி முதலிய இடங்களில் அணிந்தவர். நின்று கொண்டிருப்பவர் அல்லது வீற்றிருப்பவர் [வலது கையில் தண்டம், தடி வைத்திருப்பர்]. இடது கையில் குடை பிடித்திருப்பர். அல்லது குடை, தடி இவைகளில்லாமல் வலது கையில் ஞானமுத்திரையுடனும், இடது கையை இடது முழங்காலில் வைத்தவராகவும் இருப்பார்.
அகஸ்த்ய:
‘பித வர்ணாயது நாநா வர்ணாபராந்விதா:,
வ்ருத்தாச்ச த்விபுஜா சாந்தா ஜடா மகுட மண்டிதா:,
பிந்துகா வதருதயாந்தாச்ச யக்ஞ
சூத்ரசமந்விதா:, பஸ்மந்நைவ த்ரி புண்மராத்யா:
ஸ்தாநகா வாஸநா ஸ்துத்வா, தண்டம் தக்ஷிண ஹஸ்தேது
ச் சக்ரம் வாமகரே த்ருதா:, சத்ரதண்டௌ
விநா வாத சவ்யே வைஞாந முத்ரிகாம்,
வாம ஜாநு பரிந்ய ஸ்த்வா ஹஸ்தஸமந்விதா:’
“காதி பொருபடைக் கந்தன்”
சுடர்மிக்க கிரீடம், கர்ணபத்ரம், குண்டலங்கள் இவற்றையணிந்தவர். செண்பக மலர்மாலையைக் கழுத்திலணிந்தவர், இரண்டு கைகளிலும் முறையே சக்தியை [வேலை]யும் வஜ்ஜிராயுதத்தையும் தரித்தவர். அல்லது இடது கையை இடுப்பில் வைத்து, [வலதுகையில்] வரத முத்திரையைத் தரித்திருப்பவர். குங்குமக்குழம்பைப் பூசியதனால் ஒளிமிக்கு விளங்குகிறவரும், செந்நிறமான ஆடை யணிந்தவருமான “குருவை’’ [ஸுப்பிரமணியனை] த்யானிக்கவேண்டும்.
ஸ்கந்த:
‘ஸ்புரன் மகுட பத்ர குண்டல விபூஷிதம்
சம்பக, ஸ்ரஜா கலித கந்தரம் கர யுகே ந
சக்திம் பவிம், ததாந மதவா க டீ கலித
வாம ஹஸ்தேஷ்டதம், குரும் சுஸ்ரூண பாசுரம் ஸ்மரது பீத வாஸோவஸம்’
‘‘கணபதி’’
சிவப் புதல்வரும் யானை வடிவமும் செந்நிறமும் முக்கண்ணும் அபயவரத முத்திரையை கையில் தரித்தவரும் ஒளிர்கின்ற கயிறையும் யானையை அடக்கும் அங்குசத்தை தரித்தவரும் அமிர்த மயமான உடல் உடையவரும் பாம்பைப் பூணூலாக அணிந்தவரும் உயிர்த்தலைவனின் புதல்வனும் இடையூறு அழிப்பவருமாகிய
விக்னராஜரை வணங்குகிறேன்.
கணபதி
‘சிவ சுத கஜ ரூபம் ரக்த வர்ணம் த்ரிநேத்ரம்,
அபய வரத ஹஸ்தம் திவ்ய பாஸாங்குஸாட்யாம்,
அம்ருதமய ஸ்ரீ ரம் ஸர்பயக்ஞோபவீதம்,
பசுபதி ஸீத மீசம் விக்னராஜம் நமாமி’
“காமன்”
செந்தாமரைமலரில் அமர்ந்தவன். தனது நான்கு கைகளில், கரும்புவில், மலர்க்கணை, வரத முத்திரை, அபய முத்திரை இவற்றைத் தரித்தவன். சிவப்பான சந்தனம் முதலியவற்றை அணிந்தவன். இடதுபுறம் மடியில் உட்கார்ந்திருக்கும் “ரதி” தேவியினால் எக்காலமும் சேர்த்து அணைத்துக் கொள்ளப் பெற்றவன். தாமரைமலர் போன்ற அவளது முகத்தில் பதிந்த (உற்று நோக்கியவாறேயிருக்கும்) கண்களையுடையவன். மனதைக் கவரும் வடிவழகுள்ளவன். இப்படிப்பட்ட மன்மதனை எப்பொழுதும் வணங்குகின்றேன்.
காமன்
‘ரக்தாம் அம்போரு ஹ சம்ஸ்த்திதம்
ககரதல கோதண்டம் இக்ஷுத்பவம்,
புஷ்பஸ்த்திரம் வரதாபயயெளச ததம்
ரக்தாங்க ராஹாதிகம், வாமாங்க ஸ்திதயோ
ப கூட மனிசம் ரத்யாச ததேக்ஷணம்,
தத்வக்த்ராம் பூருஹே மணோகர
தனும் வந்தே சதா மன்மதம்’
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்