உண்மையே உயர்ந்த தர்மம்!
நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஒரு கதை உண்டு. ஒரு கிராமத்தில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் எப்போதும் குறும்பு செய்து மற்றவர்களை ஏமாற்றுவான்.
ஒருநாள், அவன் கிராம மக்களிடம் ‘‘புலி வருது! புலி வருது!’’ என்று கத்தினான். கிராம மக்கள் அவனை நம்பவில்லை, அதனால் சிரிக்கிறார்கள்.
சிறுவன் மீண்டும் கத்தினான். கிராம மக்கள் அவன் மேலும் ஏமாற்றியதாக நினைத்து அவனை அலட்சியம் செய்கிறார்கள்.
அப்போது ஒரு புலி வந்து சிறுவனைத் தாக்குகின்றது.
சிறுவன் உதவி கேட்டு கத்தினான், ஆனால் யாரும் அவனை நம்பவில்லை.
இறுதியில், சிறுவன் தன்னுடைய குறும்புத்தனத்தால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் மிகவும் துயரமடைந்தான்.
இந்தக் கதையில் ஒரு சிறுவன் பொய்யாக கூச்சலிட்டு, கிராம மக்களை ஏமாற்றிக் கொண்டே இருந்தான். ஆனால் உண்மையில் ஆபத்து வந்தபோது யாரும் அவனை நம்பவில்லை. அதன் விளைவாக அவனுக்கு தீங்கு நேர்ந்தது. பொய் சொல்லுவதும், பிறரை ஏமாற்று வதும் ஒருவரின் நம்பகத்தன்மையை நாசமாக்கும். நம்பிக்கை என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான செல்வம். ஒருமுறை அது உடைந்துவிட்டால், மீண்டும் எளிதில் பெறமுடியாது.
எப்போதும் உண்மையைப் பேசுபவன், பிறரிடம் மதிப்பையும் நம்பிக்கையையும் பெறுவான். சின்னச் சின்ன குறும்புகளாக இருந்தாலும், அடிக்கடி பொய் சொல்லும் பழக்கம் வாழ்க்கையை ஆபத்துக்கு கொண்டு சென்றுவிடும்.
இறைமக்களே, பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன் (சங். 119:163) என்றும் பொய் சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை (சங். 101:7) என இறைவேதம் கூறுகிறது. உண்மையோடு நடப்பவன் எந்தச் சூழ்நிலையிலும் பிறரின் ஆதரவைப் பெறுவான். ஆகவே, “உண்மையே உயர்ந்த தர்மம்” என்ற பழமொழியை நினைவில் கொண்டு வாழ்வது நமக்கு பாதுகாப்பையும் நல்ல பெயரையும் தரும்.
- அருள்முனைவர். பெவிஸ்டன்.