தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காரிய சித்திக்கு காலஅனுமன்

இந்த வாரம் ``வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்கள்’’ பகுதியில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அத்தாப்பூர் என்னும் இடத்தில் ``அனந்தகிரி கால அனுமன்’’ கோயில் உள்ளது. இந்த கோயிலை அப்பகுதி மக்கள் சுருக்கமாக கால அனுமன் கோயில் என்றே அழைக்கிறார்கள். இந்த கோயிலைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ...

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹைதராபாத்

ஹைதராபாத் நகரம் மிகவும் பாரம் பரியம் கொண்ட நகரம். ஒரு காலத்தில் கோல்கொண்டா என்னும் இடத்தை மையமாகக் கொண்டு உருவானதுதான் இன்றைய ஹைதராபாத் நகரம். அதன் பின், இந்த பகுதியை முதன் முதலில் கிழக்குச்சாளுக்கியர் ஆட்சி செய்தார் (கிழக்குச்சாளுக்கியர்கள், வெங்கி சாளுக்கியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள், இவர்கள் 7 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை ஆட்சி செய்த ஒரு வம்சம் ஆவர். பின்னர், காகதியர்கள் (காகதியர்கள் என்பது 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவை ஆண்ட ஒரு அரச வம்சமாகும்) மற்றும் பல சுல்தான்கள் ஆட்சி செய்தனர். சுல்தான் குலி என்பவர், கோல்கொண்டா இடத்தின் ஆளுநராக இருந்தார். அவர் தனக்கு மேலே இருக்கும் பஹ்மனி சுல்தான் என்பவருக்கு எதிராக செயல்பட்டு, 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், புதியதாக குதுப் ஷாஹி என்னும் புதிய வம்சம் உதயமாகி, பஹ்மனி சுல்தானை வென்று, தான் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில்தான், ஹைதராபாதின் தற்போது புகழ்பெற்ற சார்மினார் மற்றும் 10,000 நபர்கள் வரை தொழுகை செய்யும் மெக்கா மசூதி ஒன்றும் கட்டப்பட்டது. அதன் பிறகு, இந்த பகுதி முகலாயர் ஆட்சிக்குக்கீழ் வந்தது. பின்னர் ஆசிப் ஜா என்பவர் தனது தனி ஆட்சியை உதயமாக்கி, அந்த பகுதியை ``ஹைதராபாத் டக்கன்’’ என்று பெயரிட்டு, ஆசிப் ஜாஹி வம்சத்தைத் தொடங்கினார்.

பழமை வாய்ந்த கோயில்கள்

கலா அனுமன் கோயில் கொண்டுள்ள அத்தாப்பூர் - ராம்பாக் பகுதியைப்பற்றிய சுவாரஸ்ய தகவலைச்சற்று தெரிந்து கொள்ளலாமா! ராம்பாக் என்பது ஹைதராபாத்தின் அட்டாபூர் பகுதியில் உள்ள ஒரு பகுதியாகும். இது ஹைதராபாத் நகரின் மையப் பகுதியாகும். கோல்கொண்டா என்னும் இடத்திற்கு சற்று அருகிலேயே உள்ளது.

ஹைதராபாத் விமான நிலையம் செல்ல, ராம்பாக் வழியாகவே செல்ல வேண்டும். அதே போல், அத்தாப்பூர் பகுதியில் மட்டும் சுமார் 500 முதல் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல கோயில்கள் உள்ளன. இப்பகுதியிலுள்ள கோயில்களின் கட்டடக் கலையைப் பார்த்தால், அவை குதுப் ஷாஹி ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவை என நன்கு கணிக்கலாம். அப்படி ஒரு அழகிய தோற்றம். அதே போல், இங்குள்ள ராஜகோபுரங்கள் தெற்கிந்தியக் கட்டடக் கலையில் அமைந்துள்ளன.

இந்த கோயில், ஹைதராபாத் நகரின் ராம்பாக் பகுதியில், பி.வி.என்.ஆர். எக்ஸ்பிரஸ்வேயை ஒட்டியுள்ள இடத்தில் அமைந்துள்ளது. கால அனுமன் கோயிலின் நுழைவாயில் கதவுகள், குதுப் ஷாஹி பாணியில் மரக்கட்டையால் செய்யப்பட்ட ஒரு சிறப்பான வாயிலாகும். முன்னொரு காலத்தில், இக்கோயிலில் தர்மசாலையாக (ஓய்வு இடமாக) இருந்த இடம், இப்போது பெரிய கோ சாலையாக (மாட்டுப் பண்ணை) மாற்றப்பட்டுள்ளது. இந்த கோ சாலை, கோயிலின் நுழைவாயிலின் இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர் எதிர்புறம் அதாவது கோயிலின் நுழைவாயிலின் வலப்புறம் அர்ச்சகரின் வீடு உள்ளது. சற்று தூரத்தில் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் நடுவில் இரண்டு அழகிய மரங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றில், இந்த கோயிலின் வரலாற்றை பற்றிய ஒரு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதை பக்தர்கள் படித்து, கால அனுமனை பற்றி தெரிந்து கொள்கிறார்கள்.

குன்றில் பத்மநாபஸ்வாமி

அந்த மண்டபத்தை கடந்தோமேயானால், இடதுப் புறத்தில் ஒரு சிறிய மலைக்குன்றில், ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி எழுந்தருளியிருக்கின்றார். அதனால்தான் கால அனுமன் கோயிலை, அனந்தகிரி கால அனுமன் கோயில் என்றும் அழைக்கிறார்கள். அனந்த பத்மநாபசுவாமி கோயில் கொண்டுள்ள நேர் எதிரில் வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ``கால அனுமன் சந்நதி இருக்கிறது. ஸ்ரீ அனந்த பத்மநாபஸ்வாமியும், ஸ்ரீ கால அனுமனும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கிழக்கு சாளுக்கியர் காலத்தில் இருந்தே வழிபாட்டில் இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அதன் பின் வந்த அரசர்கள், ஆலயத்தை புதிப்பித்து கோயில்களை கட்டினர். ஸ்ரீ அனந்த பத்மநாபர் சந்நதி அருகில் காணப்படும் தீர்த்தக் குளத்தின் கட்டடக் கலை, குதுப் ஷாஹி காலத்தைச் சேர்ந்தது என்று வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. மேலும், ஸ்ரீ அனந்த பத்மநாபர் சுவாமியின் விமானம் இந்தக் குளத்தின் இடது மேல் மூலையில் காணப்படுகிறது.

அங்கிருந்து சில அடி தூரத்தில், ஒரு பெரிய கல் துவஜஸ்தம்பம் (கொடிமரம்) இருக்கிறது. அதன் அருகிலேயே நாகர்கள், ஸ்ரீ மகாலட்சுமி ஆகிய சந்நதிகளும் இருக்கின்றன. மேலும், இங்கு விசேஷமாக னிவாசப் பெருமாள் சந்நதியும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமியை தரிசனம் செய்து வந்த பின்னர், அவருடைய கருவறைக்கு மேல் உள்ள விமானத்தையும் சேவித்த பின், நேராக ஸ்ரீ கால அனுமனை தரிசிக்க நாம் செல்ல முடியும்.

தச ஜன்மஜயன் அனுமான்

மகாபாரதத்தில், பரீட்சித்து மன்னனின் மகனும், அபிமன்யுவின் பேரனும், அர்ஜுனனின் கொள்ளுப் பேரனுமான பேரரசன் ஜனமேஜயன், இந்த கால அனுமனை தரிசித்ததால், கால அனுமனுக்கு, ``தச ஜன்மஜயன்’’ அனுமான் என்னும் இன்னொரு பெயரும் உண்டு. மேலும், கால அனுமன் மூர்த்தி கறுப்பு கிரானைட் கல்லால் உருவானதாக நம்பப்படுகிறது. ஆகையால்தான் அனுமனுக்கு ``கால அனுமன்’’ என்ற பெயரிலும் பிரசித்தி பெற்று இருக்கிறார். கால அனுமன், சுமார் ஏழு முதல் எட்டு அடி உயரம் கொண்டவர். தெற்குத்திசையை நோக்கி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அனுமனின் கம்பீரக் கால்கள், முழுமையாக நிலத்தில் உறுதியாக பதிந்துள்ளன. அந்தக் கால்களில் நூபுரம் (கால் வளையல்) மற்றும் தண்டை (முழங்கால் அலங்காரம்) அணியப்பட்டு காட்சியளிக்கிறார்.

அவருடைய விசாலமான மார்பில், யஜ்ஞோப்பவீதம் (பூணூல்) மற்றும் இரண்டு மணிமாலைகள், கைகளில் கங்கணங்கள் மற்றும் புஜவலியம் எனும் ஒரு அலங்காரத்தை தோள்களில் அணிந்தும், காதுகளில் குண்டலத்தையும் அணிந்து கொண்டு, ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமியை நோக்கியவாறு அருள்கிறார், கால அனுமன். எப்போதும் போல், வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுமார்களில், அனுமனின் தலைக்கு மேல் வால் சென்றும், அதில் ஒரு சிறிய மணி ஒன்றும் காணப்படும். இந்த கால அனுமனும் அப்படியே தோற்றமளிக்கிறார். என்ன ஒரு வித்தியாசம் என்று சொன்னால், இதுவரை நாம் பார்த்து வந்த வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்களில் திருமுகமானது ஒரு திசையில் திரும்பி காணப்படும். ஆனால் இந்த கால அனுமன், நேராகவே பக்தர்களை நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். அருமையான திருத்தலம். ஒரு பக்கம் ஸ்ரீ பத்மநாபஸ்வாமி, மறுபக்கம் ஸ்ரீனிவாசப் பெருமாள், இன்னொரு பக்கம் மகாலட்சுமி, பழங்காலத்துக்குளம் அதன் அருகேயே கோ சாலை இவை எல்லாவற்றிக்கும் மேலாக கால அனுமன். நிச்சயம் ஒரு முறையாவது சென்று தரிசிக்க வேண்டிய தலம்.