தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்த வார விசேஷங்கள்

6.12.2025 - சனி பரசுராம ஜெயந்தி

Advertisement

பொதுவாக தசாவதாரங்கள் என்றாலும், பாஞ்சராத்ர ஆகமத்தில் அஹிர் புதந்யை சம்ஹிதையில், மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் 39 என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அவதாரங்களை பூரண அவதாரம் என்றும், அம்ச அவதாரம் என்றும் ஆவேச அவதாரம் என்றும் வகைப்படுத்துவர். அதிலே, ஆவேச அவதாரம்தான் பரசுராம அவதாரம். விஷ்ணு பகவானின் ஆறாவது அவதாரம். திரேதாயுகத்தில் ஜமதக்கினி முனிவருக்கும், ரேணுகாவுக்கும் குமாரனாக அவதரித்தவர். ``ராமபத்ரா’’ என்றும் இவருக்கு பெயர். கையில் எப்போதும் ஒரு கோடாரி வைத்திருப்பதால், பரசுராமர் என்று பெயர். ``பரசு’’ என்றால் கோடாலி. கேரளப் பகுதியை கடல் ஆக்கிரமித்த போது, கடலின் பிடியிலிருந்து பூமியைக் காத்தார் என்று ஒரு வரலாறு உண்டு. அதனால், கேரள தேசத்தை பரசுராம தேசம் என்று சொல்வார்கள். வில் வித்தையில் வல்லவர். இவரை ஜெயிப்பதற்கு ஆண் மகனே இல்லை என்று சொல்லும் படியாக வாழ்ந்தவர்.

நேர்மையற்ற அரச பரம்பரையினர் 21 தலைமுறை வென்றவர். மகாபாரதத்தில் தம்முடைய வில்வித்தையை பீஷ்மருக்கும், துரோணருக்கும், கர்ணனுக்கும் சொல்லித் தருகின்றார். பரசுராம அவதாரத்தைக் குறித்து ஆழ்வார்கள் பாசுரங்களில் பல இடங்களில் பாடி இருக்கின்றார்கள். சப்த சிரஞ்சீவிகள் ஒருவர் (சப்த சிரஞ்சீவிகள்: ஆஞ்சநேயர், விபீஷணன், வியாசர், அஸ்வத்தாமன், பரசுராமர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர்) என்றும் இவரைச் சொல்வார்கள்.பொதுவாக பரசுராமருக்கு என்று தனிக் கோயில்கள் தமிழகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டம் திருவல்லம் என்ற இடத்தில் பரசுராமருக்கு கோயில் உள்ளது. வல்லம் என்றால் தலை என்று பொருள். திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமியின் உடைய திருமுடி இந்த தலம் வரை நீண்டதால் இத்தலத்திற்கு திருவல்லம் என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

6.12.2025 - சனி திருவண்ணாமலை சுப்ரமணியர் தெப்ப உற்சவம்

திருவண்ணாமலையில், அண்ணாமலையார் கோயில் திருவிழாக்களின் போது, குறிப்பாக கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, வள்ளி மற்றும் தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் தெப்ப உற்சவம், அய்யங்குளத்தில் நடைபெறும். இது தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இதில் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வருவார்கள்.

8.12.2025 - திங்கள் சங்கடஹர சதுர்த்தி, திருவெண்காடு 1008 சங்காபிஷேகம்

15 திதிகளில் நான்காவது திதியான சதுர்த்தி தினம். விநாயகருக்கு உரிய தினம். சங்கடங்களை (தடைகளை) நீக்கி காரிய சித்தி பெறச் செய்யும் விரதத்தை இன்று அனுஷ்டிப்பார்கள். காலை முதல் விரதமிருந்து மாலையில் விநாயகர் கோயிலுக்குச் சென்று கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பச்சரிசி பிட்டு, வெள்ளரிப்பழம், தேங்காய், வாழைப்பழம் முதலிய நிவேதனங்களைப் படைத்து (அருணகிரிநாதர் சொன்னபடி) அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுவது அமோகமான சுப பலன்களைச் செய்யும். காரிய வெற்றியைத் தரும். சந்திர மௌலீஸ்வரராகிய சிவபெருமானுக்கு, சங்குகளில் புனித நீரை நிரப்பி அபிஷேகம் செய்கின்ற வழிபாடு எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை சோமவாரத்தில் நடைபெறும். திருவெண்காடு, திருக்கடவூர், திருவாடானை, திருக்கழுக்குன்றம் முதலிய சிவாலயங்களில் இன்று அதி விமர்சையாக 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.சிவபெருமான் அபிஷேகப் பிரியன் என்பதால், அனல் வடிவமாக அவன் எழுந்த கார்த்திகை மாதத்தில் புனல் எனப்படும் நீரை சங்கில் நிரப்பி அபிஷேகம் செய்து, அவருடைய அருளைப் பெறுகிறார்கள். இந்த சங்கு அபிஷேகத்தில் கலந்து கொள்வது மன தைரியத்தை வளர்க்கும். சந்திரனால் ஏற்படும் தோஷங்களைக் குறைக்கும். 108 அல்லது 1008 சங்குகளை இதற்குப் பயன்படுத்துவார்கள். கலசாபிஷேகம் போல் சங்குகளை பரப்பி வைத்து, நீர் நிரப்பி அபிஷேகம் செய்யும் காட்சியைக் காண்பதே நமக்குப் பெரும் புண்ணியத்தைத் தரும்.

9.12.2025 - செவ்வாய் கோரக்கர் சித்தர் குருபூஜை

சித்தர் பாரம்பரியத்தில், கோரக்கர் 18 சித்தர்களில் ஒருவர். நாகப்பட்டினத்தில் உள்ள வடக்கு பொய்கைநல்லூரில் அவரது ஜீவ சமாதி இருக்கும் மருதமலையில் ஒரு கோயில் உள்ளது. ஒரு கணக்கின்படி, அவர் தனது இளமையின் பெரும்பகுதியை கோவை வெள்ளியங்கிரி மலையில் கழித்தார். கோரக்கரைப் பொறுத்தமட்டில், பல சிவாலயங்கள் உள்ளன. பேரூர், திருச்செந்தூர் மற்றும் திருகோணமலையில் அமைந்துள்ளது. கோரக்கர் குகைகள் சதுரகிரி மற்றும் கொல்லிமலை ஆகிய இரண்டிலும் காணப்படுகின்றன, அங்கு அவர் தனது சாதனா பயிற்சி செய்ததாக குறிப்பிடப்படுகிறது. அவரது சகாக்களான 18 சித்தர்களைப் போலவே, கோரக்கரும் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் தொடர்பான தமிழ்க் கவிதைகளை எழுதியுள்ளார். அவர் குரு பூஜை இன்று.

10.12.2025 - புதன்மந்தாசஷ்டி

கார்த்திகை மாதம் தேய்பிறை சஷ்டி திதி அன்று விரதம் இருந்து சூரியனை வணங்க வேண்டும். அப்படி வணங்கினால் அவர்கள் சந்ததி பெருமையோடு வாழும். தரித்திரம் விலகி ஐஸ்வர்யம் பெருகும். ஆன்ம பலம் அதிகரிக்கும். அன்றைய தினம் காலை பொங்கல் வைத்து சூரியனை மந்தார மலர்களால் வழிபட வேண்டும். அதனால் இந்த சஷ்டிக்கு மந்தா சஷ்டி என்று பெயர். இதனால் குடும்பம் வசதி வாய்ப்புகளோடு

முன்னேறும்.

11.12.2025 - வியாழன் சகல நன்மை தரும், சர்வத சப்தமி

கார்த்திகை மாதம் பௌர்ணமியை அடுத்துள்ள சப்தமி திதியை சர்வத சப்தமி என்று அழைப்பர். அன்றைய தினம் விரதம் இருந்து உப்பு மற்றும் எண்ணெய் கலக்காத பிரசாதத்தை சூரிய பகவானுக்கு படைத்து வணங்க வேண்டும். பின்னர், தங்களால் இயன்றளவு அந்தணர்களுக்கும், வேதம் வல்லார்களுக்கும், அடியார்களுக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்ய வேண்டும். இதனால் சூரியன் தோஷங்கள் விலகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். கண் நோய்கள் விலகும். தந்தை மகன் உறவு பலப்படும்.

12.12.2025 - வெள்ளி மகாதேவாஷ்டமி

இந்த உலகத்தையும், உயிர்களையும் படைத்த இறைவன், தான் படைத்த உலகத்துக்கும் உயிர்களுக்கும் ஆபத்து வருகின்ற பொழுது, தானே தோன்றி அவற்றை நீக்குகின்றான். சிவபெருமான், உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அசுர சக்திகளால் அலைக் கழிக்கப்படும் பொழுது, தானே தோன்றி அழிக்கிறார். அப்படி அழிப்பதற்காக ஏற்பட்ட உக்கிரமான சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒன்று பைரவர் வடிவம். அவருக்கு உரிய திதி எட்டாவது திதியான தேய்பிறை அஷ்டமி திதி. அன்று அந்தி சாயும் நேரத்தில் சிவாலயத்துக்குச் சென்று காலபைரவரை வழிபட வேண்டும். அங்கு நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனைகளில் பங்கு பெற வேண்டும். இதன் மூலமாக சகல கிரக தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு பெறலாம். கால தேவனான எமனின் அச்சுறுத்தல்களில் இருந்து, தம்மை அண்டியவர்களைக் காத்து மரண பயம் நீக்குபவர் இவர். இந்த வழிபாடு, உடல் பிணியையும் மனப் பிணியையும் அகற்றும். பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து, சிகப்பு நிற மலர்களைச் சமர்ப்பித்து, செவ்வாழை பழத்தை நிவேதனமாக படைக்கலாம். தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

12.12.2025 - வெள்ளி மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை

பொய்ப்பொருளிலும் மெய்ப்பொருள் கண்டவர் மெய்ப்பொருள் நாயனார். திருநீறு பூசிய அடியாரைக் கண்டால் சிவனாகவே எண்ணி வணங்கியவர். திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர். சிவபெருமானை குலதெய்வமாக வணங்கிய மலையமான் குலத்தைச் சேர்ந்தவர். இவர் பெருமை பொறாது இவரோடு பகை பாராட்டிய முத்த நாதன் என்கின்ற சிற்றரசன் இருந்தான். இவரை வாள் போரில் வெல்ல முடியாது எனவே சூது செய்து கொன்றொழிக்க வேண்டும் என்ற கொடிய திட்டத்தைத் தீட்டினான். மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தியை கண்டும், அவர் சிவனடியார்களைக் கண்டால், உடலும் உள்ளமும் குழைந்து ஒடுங்கி வணங்குவதையும் அறிந்த முத்தநாதன், அவரை சாய்க்கும் வழியாக ஒரு சிவனடியாராக வேடம் போடுவது என்று முடிவு செய்தான். திருநீறு தரித்து, கையில் ஏடு ஏந்தி, மெய்ப்பொருள் நாயனாரின் அரண் மனைக்குச் சென்றான். சிவ ஆகம நெறியை இப்பொழுதே நான் அரசனுக்குச் செப்ப வேண்டும் என்று காவலர்களை பலவந்தப்படுத்தி அரசரின் தனி அறையினுள்ளே நுழைந்தான். சிவ வேடம் தரித்து இருந்தாலும்கூட, சிவனாகவே கருதி மெய்ப்பொருள் நாயனார் முத்தநாதனை வணங்கினார். ‘‘யாரும் அறியா சிவ ரகசியத்தை தனியே தங்களுக்குச் சொல்ல வேண்டும். அதனால் யாரும் இங்கே இருக்கக் கூடாது’’ என்று முத்தநாதன் கேட்க, அரசன் அரசியாரையும் அந்தப்புரத்திற்கு அனுப்பிவிட்டு, ஒரு சிறந்த ஆசனத்தை முத்தநாதனுக்கு அளித்துவிட்டு அவனுடைய காலடியில் மெய்ப்பொருள் நாயனார் கை கூப்பி அமர்ந்தார்.மெய்க்காவலனும் இல்லாத அந்தநேரத்தில் சுவடிக் கட்டைப் பிரிப்பது போல விரித்து அதனுள்ளே மறைத்து வைத்திருந்த கொடிய குறுவாளால் மெய்ப்பொருள் நாயனாரை வெட்டிச் சாய்த்தான். அதைக் கண்ட தத்தன் என்ற மெய்க்காப்பாளன் உடனே உடைவாளை ஓங்கி முத்தநாதனை வெட்டுவதற்குப் பாய்ந்து வந்தான்.அந்த நிலையிலும் மெய்ப்பொருள் நாயனார் ஒரு சிவனடியாரைக் கொல்வது தகாது என்று ‘‘தத்தனே…. நில்... இவர் நம்மைச் சேர்ந்தவர்” என்பதைச் சொல்லி தடுத்தார். அவர் செய்த அடுத்த செயலானது இன்னும் அற்புதமானது. ‘‘தத்தா... இனி இவர் அரண்மனையில் இருக்கும் வரை, இவருடைய உயிருக்கு ஆபத்து. சிவ வேடம் தரித்த எதிரியாக இருந்தாலும்கூட அதற்கு ஒரு மதிப்பு தர வேண்டும். இந்த அடியாருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நகரத்துக்கு வெளியே பாதுகாப்பாக விட்டு வரவேண்டும். அதுவரை நான் காத்திருப்பேன்’’ என்றார். ஊரே திரண்டு முத்தநாதனை கொல்வதற்கு தயாராக இருந்த நிலையில், அரசரின் ஆணையை எல்லோருக்கும் சொல்லி அமைதிப்படுத்தி விட்டு, கனத்த மனதோடு, கொடியவன் முத்தநாதனை, சிவ வேடம் தரித்து இருந்த ஒரே காரணத்தினால், நாட்டிற்கு வெளியே பாதுகாப்பாக விட்டுவிட்டு, கண்ணீருடன் அரண் மனைக்கு திரும்பினான். அதுவரை தம்முடைய உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த மெய்ப் பொருள் நாயனார், ‘‘என் வாழ்நாளில் நீ செய்த காரியத்தை இனி வேறொருவர் யார் செய்யப் போகிறார்கள்?’’ என்று கை கூப்பியபடி சிவபதம் அடைந்தார். எதையும் சிவதரிசனமாகவே கண்ட மெய்ப்பொருள் நாயனாரின் குருபூஜை தினம் இன்று. (கார்த்திகை உத்திரம்)

விஷ்ணுபிரியா

Advertisement

Related News