தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்த வார விசேஷங்கள்

27.9.2025 - சனி லலிதா கௌரி விரதம்

Advertisement

புரட்டாசி மாதம் வளர்பிறை சஷ்டியில் அனுஷ்டிக்கப்படும் விரதம் உபாங்க லலிதா விரதம். நவராத்திரியில் அம்பாள் பரமேஸ்வரியை நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதம் மன ஒருமைப்பாட்டையும் ஆற்றலையும் அதிகரிக்கும். சகல மங்களங்களையும் தரும். நவராத்திரியோடு இணைந்து வருவதால் இதைக் கொண்டாடுவது எளிது. தேவியின் ஆயிரம் நாமங்களில் லலிதா நாமம் ரகசியங்களுள் ரகசியமானது. நோய்களைப் போக்கும். செல்வத்தை அளிக்கும். அகால மரணம் ஏற்படாது, ஆயுளைத் தரும். பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்குப் பிள்ளைச் செல்வம் தரும். கங்கை போன்ற நதிகளில் நீராடுதல், காசியில் லிங்கப் பிரதிஷ்டை செய்தல், கிரஹண காலத்தில் அசுவமேத யாகம் செய்தல், கிணறு வெட்டுதல், அன்னதானம்செய்தல், இவை எல்லாவற்றையும் விட மிகுந்த புண்ணியமானது லலிதா சகஸ்ர நாமப் பாராயணம். எனவே இன்று லலிதா சகஸ்ர நாமப் பாராயணம் செய்யவும்.

28.9.2025 - ஞாயிறு திருமலை பிரம்மோற்சவம் மோகினி அலங்காரம்

இன்று திருமலை பிரம்மோற்சவத்தில் காலை மோகினி அவதாரத்தில் பெருமாள் திருவீதிஉலா வருகின்றார். இரவு 7:00 மணி அளவில் புகழ்பெற்ற கருட சேவை உற்சவம் நடைபெறும். இன்று சஷ்டி விரதம் இருக்க வேண்டிய நாள். முருகனை நினைத்து விரதம் இருக்க வேண்டும். முருகனை செவ்வரளி பூக்களால் அர்ச்சிக்க நல்லது. மாலையில் திருப்புகழ் பாராயணம் செய்ய வேண்டும்.

29.9.2025 - திங்கள் சரஸ்வதி ஆவாஹனம்

சப்தமி திதி இன்று. நவராத்திரியில் சப்தமியில் கலைமகளை பிரதானமாகத் தொழும் நாள். சப்தமி என்பது சூரியனுக்கு உரிய நாள். அவரும் கலைக்கு உரியவர் என்பதால் சப்தமி தினத்தில் சரஸ்வதியை ஆவாகனம் செய்கிறோம். இதனை சரஸ்வதி சப்தமி என்று சொல்வார்கள். நவராத்திரியின் ஏழாம் நாளாகிய சரஸ்வதி சப்தமி எனப்படும் மஹா சப்தமியில் சரஸ்வதி தேவிக்குரிய பூஜா மந்திரங்களில் மிக அற்புத சக்திமிக்கதாகவுள்ள வாக்வாஹினிக்குரிய ஸ்லோகங்களை பிலகரி இராகத்தில் பாடி, எலுமிச்சம்பழம் சாதம் பிரசாதமாக படைத்து பழங்களில் பேரீச்சையும், புஷ்பங்களில் தாழம்பூவும் பத்திரங்களில், தும்பை இலைகளாலும் அர்ச்சித்து வழிபட வாக்கு சித்தி உண்டாகும்.

29.9.2025 - திங்கள் தான்தோன்றி மலை கல்யாண வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம்

தான்தோன்றி மலை கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில், தமிழ்நாட்டின் கரூர் நகரில் அமைந்துள்ளது. தானாகவே தோன்றிய மலை என்பதால் இப்பகுதி ‘‘தான்தோன்றி மலை’’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது மற்றும் பாறையில் புடைப்புச் சிற்பமாக வெங்கடரமண சுவாமியின் திருவுருவம் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தென் திருப்பதி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், திருமணத் தடைகளை நீக்கவும், குழந்தை இல்லாத தம்பதிகள் அதிக எண்ணிக்கையில் இறைவனின் ஆசிகளைப் பெறவும் மக்கள் வரும் ‘பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலின் ஒரு குறிப்பிடத்தக்க வினோதமான அம்சம் என்னவென்றால், பக்தர்கள் தங்கள் காணிக்கைகளில் ஒரு பகுதியாக பாதணிகளை வழங்குகிறார்கள். பக்தர்கள் பருக்கள் மற்றும் தழும்புகளிலிருந்து விடுபட கோயிலுக்கு மிளகு, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றையும் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் இன்று திருக்கல்யாண உற்சவம்.

29.9.2025 - திங்கள் பத்ரகாளி ஜெயந்தி

பக்தர்களை காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் அன்னை பராசக்தி எடுத்த அவதாரங்களில் ஒன்று காளி அவதாரம். காளிக்கு கரியவள் என்று ஒரு பொருள் உண்டு. தச மகா வித்யாக்களில் ஒருவராகக் கருதப்படும் பத்ரகாளி கண்களில் கோபம் தெறிக்க ஆக்ரோஷமாக கைகளில் சூலத்தை ஆவேசமாகப் பிடித்திருப்பாள். காலின் கீழே ஒரு அசுரனை மிதித்து வதம் செய்யும் ஆக்ரோஷமான கோலம் அச்சப்படுத்தும். அன்னை யின் கழுத்தில் மண்டை ஓடு மாலை தொங்கும். பத்து கரங்களிலும் வரிசையாக ஆயுதங்களை ஏந்தி இருப்பாள் காளி தேவி. பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும் பக்தர்களுக்கு சாந்த சொரூபி. வரங்களை கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பவள். துஷ்டர்களை அழிக்கத்தான் ஆயுதம் ஏந்தியிருக்கிறாள் காளி அம்மன் இன்று நள்ளிரவு பல துர்க்கை மற்றும் காளி கோயில்களில் பத்ரகாளி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும்.

30.9.2025 - செவ்வாய் துர்காஷ்டமி

நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை ‘துர்காஷ்டமி’ என்று புராணங்கள் போற்றும். துர்காதேவியின் அம்சமான 64 யோகினிகளும் பிராம்மி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, நாரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சக்திகளும் ஒன்றிணைத்து செயலாற்றும் நாள். சண்டன் - முண்டன், ரக்த பீஜன் ஆகிய அசுரர்கள் வர பலத்தால் உலகை பாழ்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களை அழிக்க அன்னை துர்கை தனது நெற்றியிலிருந்து சாமுண்டா எனும் உக்கிர சக்தியை உண்டாக்கினாள். இந்த சக்தி உண்டான தினம் துர்காஷ்டமி தினம். இந்த நாளில் சிறு பெண் குழந்தையை துர்கையாக பாவித்து பூஜிக்க வேண்டும். அம்பாளுக்கு வெண் தாமரை முல்லை, மல்லிகை போன்ற மலர்களைச் சமர்ப்பித்து, சாம்பிராணி தூபமிட்டு, நல்லெண்ணெய் தீபமேற்றி, தேங்காய் சாதம், கொண்டைக்கடலை சுண்டல் ஆகியவற்றைப் படைக்கலாம்

30.9.2025 - செவ்வாய் ஒப்பிலியப்பன் கோயில் சூர்ணாபிஷேகம்

துளசி வனம் மற்றும் மார்கண்டேய க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது. இது கோயில்களின் நகரமான கும்பகோணத் திலிருந்து 7 கி.மீ தெற்கே அமைந்துள்ளது. மூலவர்  ஒப்பிலியப்பன், மனைவி பூமிதேவி நாச்சியார் உடன் இருக்கிறார். இது பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், விண்ணகரப்பன் மற்றும் என்னப்பன்என ஐந்து வடிவங்களில் பெருமாள் காட்சி தரும் ஒரே திவ்யதேசம். இங்கு திருமலை போலவே பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும். இன்று சூர்ண உற்சவம் நடைபெறுகிறது.

1.10.2025 - புதன் சரஸ்வதி பூஜை - ஆயுதபூஜை

நவராத்திரியின் 9 ஆவது நாள் கொண்டாடப்படும் மகா நவமி தினம் தான் சரஸ்வதிபூஜை தினமாகவும் ஆயுதபூஜை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. வீட்டையும் தொழில் கூடத்தையும் மாவிலை தோரணங்கள் மற்றும் வாழை மரம் போன்ற மங்கலப் பொருட்களை கொண்டு அலங்காரம் செய்யுங்கள். பூஜை அன்று மாலை நேரத்தில், வீட்டுக் கருவிகள், தொழில் கருவிகள் மற்றும் உபயோகப்படுத்தும் வாகனங்களைக் கழுவி, சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். மஞ்சள், குங்குமம், சந்தனம் வைக்க வேண்டும். நல்ல மலர்களை கொண்டு பூஜை அறையை அலங்கரியுங்கள். சுவாமி படங்களுக்கு முன்அனைத்து கருவிகளையும் அல்லது ஆயுதங்களையும் வைத்து வணங்குங்கள். தேவிக்குரிய ஸ்தோத்திரங்களை சொல்லுங்கள். பாடல்களைப் பாடுங்கள். இசைக்கருவிகள் மற்றும் புத்தகங்களையும் இதே வழிமுறையில் வணங்கலாம்.

1.10.2025 - புதன் ஏனாதி நாயனார் குருபூஜை

ஏனாதிநாதர், நாச்சியார்கோயில் அருகில் உள்ள எயினனூரில், தோன்றினார். அரச குலத்தார்க்கு வாள் வித்தையைப் பயிற்று வித்து, அதன் மூலம் ஈட்டிய பொருளை சிவனடியார்களுக்கே அளித்து சிவத்தொண்டு புரிந்தார். அதிசூரன் என்னும் வாள் வித்தைப் பயிற்சியாளன் ஏனாதிநாதரின் புகழ் மீது பொறாமை கொண்டான். தன்னுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெறு பவருக்குத் தான் அனைவருக்கும் வாள் வித்தை கற்பிக்கும் உரிமை என்று கூறி அவன் ஏனாதியாரைப் போருக்கு அழைத்தான். கடும் போரில் அவன் தோற்றான். ஏனாதிநாதரை வஞ்சனையால் வெல்ல எண்ணி மீண்டும் போருக்கழைத்தான்.ஏனாதிநாதரும் போருக்கு வந்தார். அதிசூரன், கேடயத்தால் திருநீறு பூசிய தன் நெற்றியை மறைத்துக் கொண்டு வந்து, போரிடும் போது கேடயத்தை விலக்கி, நீறணிந்த தன் நெற்றியை ஏனாதிநாதரிடம் காட்டினான். நெற்றியில் திருநீற்றினைக் கண்டதும் ஏனாதிநாத நாயனார், சிவனடியாரை எதிர்ப்பதோ, போரிடுவதோ முறையாகாது என்று கருதி, தன் வாளையும், கேடயத்தையும் உயர்த்திப் பிடித்து போரிடாமல் அமைதியாக நின்றார். அதிசூரன் தன் வாளால் ஏனாதிநாதரை வெட்டிக் கொன்றான்.

2.10.2025 - வியாழன் விஜயதசமி, திருவோண விரதம்

நவராத்திரியின் பத்தாவது நாள், வெற்றி தரும் பத்தாம் நாள் என்று பொருள்படும் படியாக விஜயதசமி நாள். இந்த நாளில் எந்த செயலைத் தொடங்கினாலும் அது பூரணமான வெற்றியைத் தரும். இன்றைய தினம் தொழில், புது கணக்கு எனத் தொடங்குவதற்கு வேறு எந்த தோஷங்களையும் பார்க்க வேண்டியதில்லை. குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஏற்ற நாள். இந்த நாளில் குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்வது நல்லது. அனேக இடங்களில் கோயில்களில் குழந்தைகளை மடியில் அமர வைத்து அட்சராப்பியாசம் செய்ய வைப்பார்கள். இன்று திருவோண விரதம் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. வைணவ ஆலயங்களில் இன்று மாலை பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடந்து வன்னி மரத்துக்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

2.10.2025 - வியாழன் மத்வ ஜெயந்தி

மத்வாச்சாரியார் ஜெயந்தி, மத்வ நவமி என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ மத்வாச்சாரியார், துவைத சித்தாந்தத்தைப் பரப்பியவர். துவைதம் என்று அழைக்கப்படும் ஸ்ரீமத்வ மத சித்தாந்தம், உலகம் உண்மையானது; மாயத் தோற்றம் அல்ல என்கிறது. பக்தியால் மோட்ச நிலையை அடைய முடியும் என்பது துவய மதக்கோட்பாடு தெரிவிக்கிறது. ஸ்ரீமத்வர் எட்டு மடங்களை நிறுவினார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மடத்தின் அதிபதி, உடுப்பி கிருஷ்ணனுக்கு ஆராதனை செய்யும் `பர்யாய’ முறையைக் கொண்டு வந்தார். ஜெயதீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திரர் ஆகியோர் ஸ்ரீமத்வாச்சாரியாரின் வழியில் தோன்றிய மகான்கள்.

2.10.2025 - வியாழன் குணசீலம் தீர்த்தவாரி

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி விஷ்ணு கோயில் திருச்சிக்கு 20 கி.மீ. தொலைவில், குணசீலம் என்னும் ஊரிலுள்ள அற்புதமான பெருமாள் கோயில் ஆகும். இது கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் 11 நாட்களுக்கு பிரம்மோற்ஸவம் நடக்கும். இன்று தீர்த்தவாரி.

3.10.2025 - வெள்ளி சர்வ ஏகாதசி

இன்றைய பாபங்குச ஏகாதசி (பாவங்களை அழிக்கும் ஏகாதசி) என்பது புரட்டாசி மாத வளர்பிறை (அஸ்வின்) ஏகாதசியாகும், இந்த நாள் ‘‘அஷ்வினா-சுக்ல ஏகாதசி’’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி அன்று விரதம் அனுசரிப்பதன் மூலம், பக்தர்கள் அனைத்து பாவங்களையும் நீக்கி, புண்ணியம், சாந்தி மற்றும் நன்மைகளைப் பெறலாம்.

3.10.2025 - வெள்ளி துளசி கௌரி விரதம்

துளசி கௌரி விரதம் என்பது துளசி மற்றும் கௌரி அம்பாளின் சிறப்பைப் போற்றும் விரதம். இது பாபங்குச ஏகாதசி திதியில் அனுசரிக்கப்படுகிறது. இதில் துளசி மற்றும் கௌரிக்கு செய்யப்படும் பூஜை சிறப்பானது. திருமண வரம், வம்ச செழிப்பு, மற்றும் சகல நன்மை களையும் அருளும் ஒரு விரதமாகக்

கருதப்படுகிறது.

விஷ்ணுபிரியா

Advertisement