தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர்
ஒருமுறை பரமேஸ்வரனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஒரு கட்டத்தில்பகடைக்காயில் விழுந்த எண்ணிக்கையில் சந்தேகம் வர நடுவராக இருந்த அன்னை விஷ்ணுவிற்கு சாதகமாக பரமேஸ்வரனை குற்றம் சொல்லவே, கோபம் கொண்ட பரமேஸ்வரன் பார்வதியை பசுவாக மாற சாபமிட்டார். தன்னால்தானே பார்வதி பசுவாக மாறினார் என்பதால் பெருமாள் மாடு மேய்ப்பவராக அவதாரம் எடுத்து இவ்வூரில் எழுந்தருளினார். எனவே, இவ்வூரில் பெருமாளின் பெயர் 'ஆமருவியப்பன்' என்று அழைக்கப்படுகிறது.
பசுவாக மாறிய பார்வதி பல திருத்தலங்களுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டு கடைசியாக தேரழுந்தூர் வந்து வழிபட்டு சுய ருபத்தை பெற்றாள். இங்குள்ள அம்பாள் ‘சவுந்தர்ய நாயகி' என அழைத்தனர். தன் அழகை பிறர் விரும்ப வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அன்னையிடம் வணங்கினால் அதற்கான ஆசியை பெறலாம். இங்குள்ள சிவபெருமான் வேதபுரீஸ்வரர் என்பதாகும். சிவபெருமானும் அந்தணர் வேடம் பூண்டு இங்கு மரத்தின் கீழ் அமர்ந்து வேதம் போதித்ததால் அவர் வேதபுரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். கம்பர் அவதரித்த ஊராக இது சொல்லப்படுகிறது. அஷ்டலட்சுமி சாப விமோசனம் பெற்ற ஊராக கருதப்படுகிறது. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாக உள்ளது.
ஊர்த்துவரதன் என்ற மன்னனின் பறக்கும் தேரை அகஸ்திய மாமுனி தனது தவ வலிமையால் பூமியில் அழுத்தியதால் தேர் பூமியில் வந்து விழுந்தது. இதனால் ‘தேர் அழுந்தூர்' என்று வந்தது. அதுவே, இப்பொழுது தேரழுந்தூர் என்றழைக்கப்படுகிறது.
இக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் வேதபுரிஸ்வரர் அன்னை செளந்தர்ய அம்பிகை இவர்களுக்கு சூரியன், வியாழன், கேது, சுக்ரன் ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளன.
* ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று கோயில் முழுக்க விளக்கால் அலங்கரித்து பூஜை செய்து நெய் தீபம் ஏற்றி செண்பகவல்லி அம்மனுக்கு பூ மாலை சாற்றி வழிபட்டு கருப்பு எள் உணவு தானம் வழங்கினால் அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கப் பெறுவர். குபேர சம்பத்து கிடைக்கும்.
* ஞாயிற்றுக்கிழமை வரும் பௌர்ணமி நாளில் வேத தீர்த்தம் என்றழைக்கப்படும் தேவமிர்த தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு அறுகம்புல் மாலை கொடுத்து வழிபாடு செய்தால் பிஎச்டி படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். வேதம் படிப்பவர்கள் வழிபட்டால் சிவபெருமானே வந்து தீட்சை கொடுக்கும் பலன் கிடைக்கும்.
* வெள்ளிக்கிழமை அல்லது அஸ்வினி நட்சத்திர நாளில் தேவாமிர்த தீர்த்தத்தில் நீராடி அகத்தியரை வழிபட்டு எப்படிப்பட்ட நோயும் குணமாகும். தோல் தொடர்பான பிணிகள் குணமாகும்.
* அஸ்வினி நட்சத்திர நாளில் சுவாமியை வழிபட்டால் ஆட்டிஸம் தொடர்பான பிணிகள் நீங்கும். விஜயதசமி நாளில் இங்கு பிள்ளைகளை நெல் பரப்பி எழுத வைத்து பின்பு பள்ளியில் சேர்த்தால் மேன்மேலும் படிப்பு வரும்.
* ஐந்தாம் பாவகத்தில் புதன், சனி சேர்க்கை பெற்ற குழந்தைகளுக்கு மறதி உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் மந்தமாக இருப்பர். அகத்தியருக்கும் சுவாமிக்கும் தர்ப்பைபுல் மாலை கொடுத்து பின்பு பசுவிற்கு வல்லாரை கீரையும் கருணைக்கிழங்கும் வெள்ளை பசுவிற்கு கொடுத்து வழிபட்டால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பௌர்ணமி அன்று மகாவில்வ செடியை நட்டு அதை பராமரித்து வளர்த்தால் வறுமை நீங்கப் பெறுவார்கள். மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் வழியில் 10 கி.மீ தூரத்தில் தேரெழுந்தூர்.