அருள்மிகு அவிநாசி அப்பர் திருக்கோயில்
கிரகங்களே தெய்வங்களாக
நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் அவிநாசி வந்த பொழுது ஒரு வீதியின் வழியே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. அதற்கு எதிர் வீட்டில் துக்கம் அனுசரித்து வீடு சோகமாக இருந்தது. அப்பொழுது அங்கு விசாரித்த பொழுது, ஒத்த வயதுடைய இரு சிறுவர்கள் இருந்தனர். அதில், ஒரு சிறுவனுக்கு பூணூல் கல்யாணம் நடக்கிறது. மற்றொரு நான்கு வயதுடைய சிறுவன் மூன்று ஆண்டுகளுக்கு முன் முதலை இழுத்து சென்று விழுங்கிவிட்டதாகவும் தெரிவித்தனர். சோகம் நிறைந்த வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் விசாரிக்கிறார். அவர்கள் இப்பொழுது எங்கள் குழந்தை இருந்தால் அவனுக்கும் நாங்கள் பூணூல் கல்யாணம் செய்து வைத்திருப்போம் என கூறுகின்றனர். ஈசனின் கருணை இருந்தால் அற்புதம் நடக்கும் என கூறி, முதலை விழுங்கிய குளக்கரைக்கு பெற்றோருடன் செல்கிறார். அங்கு சிவபெருமானை மனமுருகி பத்து பதிகங்களை பக்தி பரவசத்துடன் பாடுகிறார் சுந்தரர்.
அப்பொழுது அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது. சிவன் அருளால் வறண்டு போயிருந்த குளத்தில் நீர் நிரம்பியது. பின்பு, நீருக்குள் இருந்து முதலை வெளிப்பட்டு வாயைத் திறந்து மூன்று வருடத்திற்கு முன் விழுங்கிய சிறுவனை கக்கி சென்றது. அவன் அப்போது ஏழு வயது பாலகனாக முதலையின் வாயிற்குள் இருந்து வெளிப்பட்டான். சிறுவனின் பெற்றோர் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர். பின்பு, அச்சிறுவனுக்கு பூணூல் கல்யாணம் நடத்தி வைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரர், ஸ்ரீ அவிநாசி அப்பர் என்ற திருநாமங்கள் உண்டு. அதுமட்டுமன்றி பிரம்மன் வணங்கியதால் பிரம்மபுரீஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார். பிரம்மா நூறு ஆண்டுகளும் இந்திரன் பன்னிரெண்டு ஆண்டுகளும் நாக கன்னிகை இருபத்தி ஒரு மாதங்களும் இங்கு வழிபட்டதாக ஐதீகம். இந்த திருத்தலத்தில் மூன்று தீர்த்தங்கள் உண்டு. காசி, கங்கை, நாக கன்னிகை தீர்த்தம் ஐராவத தீர்த்தம் ஸ்தலம் அறமாக மாமரம் விளங்குகிறது.
இத்தலத்தில் தேளுக்கு விளக்கேற்றி வழிபடும் சம்பிரதாயம் உள்ளது. இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.
இங்குள்ள தெய்வத்திற்கு ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரர் கருணாம்பிகை குரு, சூரியன், சந்திரன், சனி ஆகிய கிரகங்கள் நாமாகரணம் செய்துள்ளது.
* புனர்பூசம் நட்சத்திர நாளில் ஐராவத தீர்த்தத்தில் குளித்து தல விருட்சமான பாதிரி மரத்தில் மா கட்டையில் சிறு தொட்டில் செய்து பட்டு நூலால் மரத்தில் கட்டி சுவாமிக்கு மாம்பழம் நைவேத்தியம் செய்தால் பிள்ளைப்பேறு உண்டாகும்.
* அனுஷ நட்சத்திர நாளில் இங்குள்ள தேளுக்கும் முதலைக்கும் விளக்கேற்றி வழிபட்டால் விஷ ஜந்துகள் பயம் நீக்கும்.
* புனர்பூசம் நட்சத்திர நாளில் இக்கோயிலின் தலவிருட்சமான பாதிரி மரத்திற்கு மாமரத்தில் செய்யப்பட்ட சிறிய தொட்டில் செய்து வெண்பட்டு அல்லது மஞ்சள் பட்டு நூலால் இம்மரத்தில் கட்டி பின்பு பார்லி அரிசியில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்து தொடர்ந்து மூன்று மாதம் செய்தால் புத்திரப்பேறு உண்டாகும்.
* பிரம்மோற்சவ நாளி்ல் பார்லி நீரை தலவிருட்சத்தில் ஊற்றி ஐராவத தீர்த்தத்தில் நீராடி பிரம்மனை வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்கப் பெறுவர்.
* ரேவதி நட்சத்திர நாளில் காசி கங்கை கிணற்றில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் பெண்களுக்கு பூப்படைவது தடைபட்டால் இங்கு சரியாகும் என்பது நம்பிக்கை.
* யானை ஒன்று செய்து உங்கள் விருப்பப்படி இத்தலத்தில் வைத்து இறைவனை வேண்டினால் காசி சென்ற புண்ணியம் உண்டாகும்.