காவியம் போற்றும் காவேரி நதி!
நம் நாட்டில் ஓடும் பல புண்ணிய நதிகளில் மிகச் சிறப்புக் கொண்டதாக கங்கைக்கு ஈடாகப் போற்றப்படுவது காவேரி நதி. இதற்கு ‘பொன்னி’ என்ற திருநாமமும் உண்டு. அடியார்களின் திருக்கூட்டத்தில் ஒருவரான மகான் அருணகிரிநாதர் திருச்சி காவிரிக் கரையில், ஆலயங்கொண்டுள்ள குமார வயலூர் முருகனைப் புகழ்ந்து பாடும்போது ‘‘நாத பிந்துகலாதி நமோ’’ (திருப்புகழ்) ‘‘ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டலமீதே மனோகர ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூரா’’ என்கிறார்.
காவேரி சோழ மண்டலத்தின் இறை பக்திக்கும், வளமைக்கும் காரணமானதோடு, ஏழ் தல புகழ் மிக்கது என்பதை அதில் குறிப்பிடுவார். நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் 1-179-1, 1-179-3, 1-179-4ல் ரிக்குகளில் அகஸ்திய மாமுனிவர், லோபமுத்ரை என்பவனிடம் ‘‘தேவியே! நீ என்னுடைய அவ்யாஜ கருணையால் எந்த ஜீவர்களுக்கும், அறிந்தோ அறியாமலோ ஏற்பட முன்ஜென்ம மாந்தரீய தோஷங்கள் அனைத்தையும் எளிதில் நிவர்த்தி செய்வாயாக! மேலும் அன்னை பசியால் வாடும் தன் சிசுவுக்குப் பால் கொடுத்து, அக்குழந்தையின் கஷ்டத்தைப் போக்கி, அதை களிப்புறச் செய்வது போலவே, நீ நதி வடிவமாக, தட்சிணப்பாரத பூமியில் விளங்குவாயாக’’ என்றுகூறி அவளை ஆசிர்வதிப்பார்.
யார் அந்த லோபமுத்திரை?
அத்தேவி உலக நன்மையின் பொருட்டு ஸஹ்ய மலையில் வாழ்ந்த கவேரர் என்ற மகரிஷிக்கு புத்திளியாக பிரம்ம தேவனால் கொடுக்கப்பட்டவள் என வேதம் கூறும். ஸ்ரீமத் பாகவதத்தில், ‘‘கலியில் காவேரியின் ஜலத்தை எவர் அருந்து கிறாரோ அவர்கள் தூய்மையான ஸ்ரீ வாசுதேவனிடத்தில் பக்தி கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள்’’ என்று உரைக்கப்பட்டுள்ளது. இன்னும் காவேரியைப் போற்றும் ஆவணங்கள் இவை;
‘‘தேவர்கள், கின்னரர்கள், வித்யாதார்கள் தங்கள் ஸ்தானங்களைக் கூட வெறுக்குகிறார்கள்; அவர்கள் விரும்புவது காவிரி தீரத்தை. ஏரளன அத்மனம் செய்வதற்கும், செய்விப்பதற்கும், ஜீவித்தியத்திற்கு தேவையான திரவியங்களைப் பெறுவதற்கும், சுவர்க்க சுகத்தை அடைவதற்கும் ஏற்பட்ட உன்னத ஸ்தலமாக அது உள்ளதால்… மேலும் அவர்கள் அதனை விரும்பக்காரணம் காவிரி நதி பாயும் நாட்டில் பிறப்பது நன்றே போதுமானது என்பதால்.
- சிவலீலார்ணவம்’’ என்ற கிரந்தத்தில் மகான் ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர்.
காவேரி! நான் உன்னுடைய பரி பூரணமான புண்ணிய தீரத்தில் அடிக்கடி ஸ்நானம் பிரிந்து, பாபங்களை விரட்டியடித்து, பாபமற்றவனாய், வயது முதிர்ந்த நிலையில், எனது அபீஷ்டங்களைப் பெற்றவனாய் நிற்கிறேன் என்பதை நீங்கள், உமது பார்த்தாவாகிய சமுத்திர ராஜனிடம் தெரிவிப்பாயாக’’
- ஸஹ்யஜா நவரத்தின மாலிகா’’ என்ற கிரருதத்தில் தியாகராஜ மதி என்கிறது. மகான் ராஜூ சாஸ்திரிகள்.
இன்னும் எத்தனையோ காவியர்களாக, வேதம், புராணம், இதிகாசம் போன்ற பலவற்றில் அன்னை காவேரியின் புகழ் விவரமாக்கி கூறப்பட்டுள்ளது. எனவே, காவிரி நதி தீரத்தில் என்றோ பிறந்தவர்களும், இன்னும் அங்கே விகிப்பவர்களும், தாங்கள் மிகுந்த புண்ணியசாலிகள், பாக்கியவான்கள் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!
தொகுப்பு: கீதா சுப்பிரமணியன்