அன்பிலாந்துறை சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்
ராவணன் குபேரனை தந்திரத்தால் வென்று அவனது புஷ்பக விமானத்தை கவர்ந்தான். அதிகமாக ஆணவம் ஏற்பட்டு கைலையை அடைந்தான் ராவணன். சிவபெருமான் வாழ்ந்த மலையை பெயர்த்தெடுக்க முயற்சித்தான். ராவணனின் ஆணவத்தை அடக்க ஈசன் தனது பெருவிரல் நுனியால் அழுத்த ராவணன் துடித்து அலறினான். அந்த சத்தம் மிகவும் பயங்கரமாக ஒலிக்கவே, அந்த சத்தம் வாகீச முனிவரின் காதில் விழுந்தது. இதனால் மனம் இளகிய வாகீச முனிவர் ஈசனின் மனம் கனிய உனது இசையால் அவரைப் போற்றிப் பாடு என ராவணனுக்கு உபதேசித்தார்.அதன்படியே, ராவணன் செய்ய உயிர் தப்பினான். இந்த செயல் ஈசனுக்கு கோபத்தை ஏற்படுத்தவே, நீ பூலோகத்தில் பிறக்க வேண்டும் என வாகீச முனிவர் சாபம் பெற்றார். ஆகவே, அன்பிலாந்துறையில் சுயம்புவாக எழுந்தருளிய ஈசனை வழிபட்டார். இந்த நிகழ்வை திருநாவுக்கரசர் தனது பதிகத்திலும் குறிப்பிட்டுள்ளார். வாசகர் பணிந்த ஈசன் சத்தியவாகுசர் என்ற திருநாமம் கொண்டார். பாகிசர் என்ற பெயரும் நான்முகன் என்ற பெயரும் பிரகஸ்பதி என்ற நாமமும் உண்டு. பிரம்மனுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க இங்கு வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. வாகீசர் இந்த கோயிலில் வழிபட்டதால் சத்தியவாகீசுவரர் என்றழைக்கப்படுகிறார்.
அன்பில் என்ற இவ்வூரில் ஆலமரங்கள் நிறைந்த வனத்தில் கோயில் அமைந்துள்ளதால் இந்த ஊரின் பெயருடன் ஆலந்துறை இணைத்து இறைவனின் பெயர் அன்பிலாந்துறையார் என்றழைக்கப்படுகிறார். இக்கோயிலில் திருஞானசம்பந்தரின் பாட்டை கேட்டு ஒரு காலை மடக்கி ஒரு காலை குத்துகாலிட்டு அமர்ந்து ரசித்ததால் இங்கு எழுந்தருளியுள்ள விநாயகர் செவி சாய்த்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.இங்குள்ள சிவபெருமானை வழிபடுவதால் ஏழேழு ஜென்மங்களுக்கு உள்ள பாவங்கள் தீர்கின்றன.இத்திருத்தலத்தில் சௌந்தர்ய நாயகி உடனுறை சத்தியவாகீஸ்வரர் எழுந்தருளி உள்ளார். இந்த தெய்வங்களுக்கு சூரியன், வியாழன், சுக்ரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளது.
*ஜாதகத்தில் சூரியன் 2ம் பாவகத்தில் இருந்தால் அவர்கள் இக்கோயிலில் கோதுமையும் வெல்லமும் கலந்து இனிப்பான பொருட்களை சுவாமிக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட்டு அதனை அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுத்தால் செல்வ வளம் பெருகும். அரசு வேலை தொடர்பான விஷயங்களில் உள்ள இடர்பாடுகள் நீங்கும்.
*ஜாதகத்தில் 2ம் பாவகத்தில் சந்திரன் இருந்தால் நதியில் எடுத்த தீர்த்தத்தையோ அல்லது கடல் நீரையோ எடுத்து வந்து அதில் பால் கலந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
*வியாழக்கிழமை விரதம் இருந்து வெள்ளிக்கிழமை ஒரு அத்தி மரக்கன்றை சுவாமியிடம் வைத்து அர்ச்சனை செய்து விஷ்ணுவை வழிபட்டு வளர்த்து வந்தால் கர்ம தோஷம் அனைத்தும் விலகி செல்வச் செழிப்பு உண்டாகும்.
*தொடர்ந்து இக்கோயிலில் உள்ள மூலவருக்கு நல்லெண்ணெய் காப்பிற்காக கொடுத்து வந்தால் கர்மதோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.