தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருஆமாத்தூர், அபிராமேஸ்வரர் திருக்கோயில்

ஒரு காலத்தில் பசுக்களுக்கு கொம்புகள் இல்லாமல் இருந்தன. இதனால், பசுக்களை கொடிய விலங்குகள் தாக்கின கொடுமைப்படுத்தின. வருத்தமடைந்த பசுக்கள் தங்களை காத்துக்கொள்ள சிவனை வேண்டி கொம்புகளை பெற்ற தலம் திரு ஆ மத்தூர் நந்தி தேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை நதிக்கரையில் உள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறு பசுக்கள் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. ஆக்கள் அதாவது பசுக்கள் பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. ரவியால் சபிக்கப்பட்ட பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டும் வழிபடும் வழக்கமுடையவர். உமையம்மை இறைவன் உடலில் இடப்பாகத்தை பெற்ற போதும் வண்டு உரு எடுத்து துளைத்து சிவனை வழிபட்டார். அதனால் அவரை உமையம்மை வன்னிமரமாக ஆகுமாறு சபித்தார். பின்னர் முனிவர் அபிராமேஸ்வரரை வழிபட்டு அவர் அருளால் சாபம் நீக்கம் பெற்றார். தலத்தின் தலவிருட்சம் வன்னிமரம் ஆயிற்று சூரபத்மனை அழிக்க முருகன் இத்தலத்தில் வழிபட்டு முருகன் பார்வதி தேவியிடம் வேல் வாங்கி சென்ற புராணம் உண்டு.

Advertisement

ராவணனை வதம் செய்த ராமன் தனது பிரம்மஹத்தி நீங்க இங்கு சிவனுக்கு தண்ட தீர்த்தத்தால் அபிேஷகம் செய்தார்.இங்கு மூலவர் சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். இங்குள்ள முத்தாம்பிகையை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.இந்த தெய்வத்திற்கு சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகம் நாமகரணம் செய்திருக்கிறது.

* பௌர்ணமி நாளில் கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டு இருந்தால் இத்தலத்தில் இரவு வைத்திருந்தாலே இங்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை கால்நடைகளுக்கு தெளித்தோ பருகவோ செய்தால் விரைவாக கால்நடைகள் குணமாகும்.

* லக்னத்திற்கு எட்டாம் (8ம்) பாவகத்தில் சனி உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை இரவு ஒரு பிடி எள் எடுத்து தண்ணீரில் ஊறவைத்து சனிக்கிழமை காலை தல விருட்சமான வன்னி மரத்திற்கு ஊற்றி வழிபட்டால் சனி தோஷம் குறைய வாய்ப்புண்டு.

* ஆறாம் (6ம்) இடத்தில் வியாழன் இருந்தால் தங்கம் அணியக்கூடாது என்பது பொதுவான விதி. இத்தலத்தில் சொர்ண அபிஷேகம் செய்து அந்த தங்கத்தை எடுத்து வீட்டில் வைத்தால் ஆபரணச் சேர்க்கை அமையும் என்பது சிறப்பானதாகும்.

* சந்திரதோஷம் உள்ளவர்கள் மற்றும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் பெற்றவர்கள் புனர்பூ தோஷம் உள்ளவர்கள் முத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களை சொர்ண அபிஷேகத்திற்கு கொடுத்து பெற்று பயன்படுத்தி வருவது சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கப்பெறுவார்கள்.

* பிரதோஷ நாள் அன்று நந்தி தேவர் பூஜித்து அவரிடம் உங்கள் கோரிக்கைகளை வைத்தால் உங்கள் துன்பங்கள் குறையும்.விழுப்புரத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் செஞ்சி செல்லும் வழியில் கோயில் உள்ளது.

Advertisement