தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அர்சிக்கெரே சிவாலயம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: ஹொய்சாள மன்னர் இரண்டாம் வீர வல்லாளன் (பொ.ஆ.1220) ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.காலம்: `அர்சிக்கெரே’ என்ற ஊரின் பெயருக்கு அரசியின் ஏரி (கெரே) என்று பொருள்.

சந்திரமௌலேஸ்வரா கோயில் - `ஈஸ்வரன் கோயில்’ அல்லது `சிவாலயா’ என்றும் அழைக்கப்படுகிற இக்கோயில், ஹொய்சாளர் கோயில்களின் வரிசையில் ஒரு அரிய கட்டடக்கலை அதிசயமாகும். 16 முனைகள் கொண்ட நட்சத்திர வடிவத்தில் மிகவும் சிக்கலான கட்டடவியல் அமைப்புடன், மேலிருந்து பார்க்கையில் ஒரே வரிசையில் அமைந்த தனித்துவமான விண்மீன் தொகுப்பில் உள்ள மூன்று நட்சத்திரங்களைப் போல இக்கோயில் தோற்றமளிக்கிறது.

ஒரு தளத்துடன் (‘ஏககூட’) அமைக்கப்பட்ட இக்கோயில் விமானத்தில் ‘சுகநாசி’யுடன் உள்ளது, அதன் மீது அமர்ந்திருக்கும் காளை பிற்காலச் சேர்க்கையாகும். இன்றைய லேத் இயந்திர தொழில்நுட்பப் பாணியில் அமைந்த இக்கோயிலின் தூண்களும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய மேற்கூரைகளும் பெயர் தெரியா சிற்பிகளின் நிபுணத்துவத்திற்கும் கைவினைத்திறனுக்கும் சான்றாக நிற்கின்றன.

மிகவும் பிரம்மாண்டமான கோயில் கட்டுமானங்கள் ஏதுமில்லாமல் இருந்தாலும் சிறப்பான அமைப்பியல், சிற்ப நுணுக்கம் ஆகியவற்றால் இக்கோயில் தொல்லியல் ஆர்வலர்களை பெரிதும்

ஈர்க்கின்றது.பொ.ஆ.11 ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னன் எரேயங்காவின் (1098-1102) ராணி மகாதேவியால் கட்டப்பட்ட ஒரு பெரிய ஏரியிலிருந்து இந்தப்பெயரைப் பெற்றது. சிறிய வணிக நகரான அர்சிக்கெரே, கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ளது.

 

Related News