தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சப்தகன்னியர் தரிசனம்

* கன்னியாகுமரி, திருவட்டாறுக்கு அருகே உள்ள அருவிக்கரையில் சப்தகன்னியர்களும் கருவறையில் பிரதான தெய்வங்களாக வீற்றிருக்கிறார்கள். தேவியரின் தேவியின் இருபுறமும் விநாயகரையும், வீரபத்திரரையும் காணலாம்.

Advertisement

* நாகை, தரங்கம்பாடி செம்பனார்கோயிலில் உள்ளது சுவர்ணபுரீஸ்வரர் ஆலயம். இங்கு, ஒன்பது இலையில் மங்கலப்பொருட்களை வைத்து சப்தகன்னியரை வணங்கி, ஏழு இலைகளை தானமாகவும், ஒரு இலையை பூஜை செய்பவருக்கும் மற்றுமொரு இலையை யாரேனும் உறவினருக்கும் தர, அந்த தோஷங்கள் நீங்குகின்றன.

* திண்டுக்கல், நத்தம் அருகே கரந்தமலையில் அருளும் சப்தகன்னியர்கள் குடும்ப ஒற்றுமைக்கும், தொழில் அபிவிருத்திக்கும் அருள்கின்றனர்.

* திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறம் உள்ள சப்தகன்னியர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று விசேஷமாக வழிபடப்படுவதால், அதை ஞாயிற்றுக்கிழமை கோயில் என்றே அழைக்கின்றனர். வைகாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள் கரும்பு, பூப்பந்தல் அமைத்து இந்த சப்தகன்னியரை வழிபடுகின்றனர்.

* கரூர், குளித்தலையில் உள்ள கடம்பவனேஸ்வரரின் கருவறையிலேயே சப்தகன்னியரும் கொலு வீற்றிருக்கின்றனர். இவர்களில் சாமுண்டியே துர்க்கையாக இத்தலத்தில் வழிபடப்படுகிறாள்.

* திருச்சி, லால்குடிக்கருகே, மணக்கால் நங்கையாரம்மன் ஆலயத்தில் பேரழகு மிக்க சப்தகன்னியரை தரிசிக்கலாம். நவராத்திரி முடிந்த 10ம் நாள் இங்கு பிரார்த்தனை நிறைவேற்றப்படும்.

* கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள கச்சிராபாளையத்தில் நாகபுத்து மாரியம்மன் ஆலயத்தில் சுதைவடிவிலும்  7 புற்றுகள் வடிவிலும் சப்தகன்னியரை வணங்கலாம். நாகதோஷத்தை விலக்கும் தலம் இது.

* கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் அம்பிகை பெரியநாயகிக்கு தவத்தின் போது உதவிய சப்தகன்னியரை தனி சந்நதியில் தரிசிக்கலாம்.

* முஷ்ணம் பூவராகர் ஆலயத்தில் அம்புஜவல்லித் தாயாரின் தோழிகளாக சப்தகன்னியர் தனி சந்நதியில் வழிபடப்படுகின்றனர். சில பக்தர்கள் பங்குனி மாத உற்சவத்தின்போது வெவ்வேறு வேடம் புனைந்து இந்த சப்தகன்னியருக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

* கோயமுத்தூர் மருதமலையில் பாம்பாட்டிச் சித்தர் சந்நதியின் அருகே சப்தகன்னியர் விசேஷமாக வழிபடப்படுகின்றனர். கன்னிப் பெண்கள் 3 வெள்ளிக்கிழமைகள் விரதமிருந்து இவர்களுக்கு மஞ்சள்பொடி அபிஷேகம் செய்ய, அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகிறது.

* வேலூர் புதிய பேருந்து நிலையத்தின் அருகே செல்லியம்மன் ஆலயத்தில் செல்லியம்மனுடன் மற்ற ஆறு மாதர்களும் அருள்கின்றனர். அதிகாலை நேர அபிஷேக நேரத்தில் மட்டுமே

அவர்களை தரிசிக்க முடியும்.

* தாம்பரம் - காஞ்சிபுரம் சாலையில் ஒரகடம் கூட்டுரோடு அருகே 3 கிமீ தொலைவில் உள்ள எழுச்சூரில், மும்மூர்த்திகளுடன் சப்தகன்னியரை தரிசிக்கலாம்.

* திருப்போரூர் - செங்கல்பட்டு பாதையில் உள்ள செம்பாக்கம் கிராமத்தில் ஜம்புகேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்குள்ள சப்தகன்னியர்க்கு பொங்கல் வைத்து வழிபட திருமணத்தடைகள்

நீங்குகின்றன.

* காஞ்சிபுரம் காந்தி சாலையில் ரங்கசாமிகுளம் பகுதியில் உள்ள ஆகாய கன்னியம்மன் ஆலயத்தில் சப்தகன்னியரை தரிசிக்கலாம். இங்கு ஒவ்வொரு அமாவாசையன்றும் சிறப்பு அன்னதானம் செய்யப்படுகிறது.

Advertisement

Related News