சேலம் கந்தாஸ்ரமம் முருகன் கோயில்
* பூரம், பரணி நட்சத்திரத்தன்று சுவாமியை வழிபட்டு விபூதி அபிஷேகம் அல்லது அர்ச்சனை செய்து சுவாமியை வலம் வந்து அம்பாளையும் வலம் வந்து செந்தாமரைப் பூவினை கோயிலுக்கு வரும் கன்னிப் பெண்களுக்குத் தானமாக வழங்கினால் எப்பேர்பட்ட திருமண தோஷம் விலகி திருமணம் கைகூடும். முருகப் பெருமான் உங்கள் காரியங்களை முன்னெடுத்துச் செய்வார் என்பது ஐதீகம்.
* அனுஷ நட்சத்திரத்தன்று படிக்கும் பெண்கள் மற்றும் கல்யாணம் ஆகாத பெண்கள் சுவாமியையும் தாயாரையும் தரிசனம் செய்து இங்குள்ள துறவிகளுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றால் பெரிய ஏற்றத்தை வாழ்வில் பெறுவார்கள். திருமணத் தடை உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும்.
* அவிட்டம் நட்சத்திர நாளில் கரும்புச் சாறில் அபிஷேகம் மற்றும் கொண்டைக் கடலையில் நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கினால் சொத்து பிரச்னை தீரும். கட்டிடத் தொழில் துறையில் வளர்ச்சிக் காண்பார்கள்.
* சித்ரா பௌர்ணமி கந்தாஸ்ரமத்தில் தங்கி சுவாமி தரிசனம் செய்து வந்தால் எப்படிப்பட்ட பிணியும் நீங்கி செல்வம் அதிகரிக்கும். குபேரனின் சம்பத்தை பெறுவார்கள். விசாக நட்சத்திர பௌர்ணமி அன்று செய்வதும் இதே போன்று சிறப்பான பலன்களைத் தரும்.
* கல்வியில் குழந்தைகள் சிறந்து விளங்க இக்கோயிலில் பேரீச்சம் பழமும், செவ்வாைழ பழமும் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து ஒரு மணி நேரம் அமர்ந்தால் ஞாபக சக்தி பெருகி வளர்ச்சி பெறுவார்கள்.
* உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி தாயாருக்கு எலுமிச்சை மாலை கொடுத்து வழிபட்டால் சொத்து பிரச்னையில் தீர்வுகள் உண்டாகும். வழக்குகள் இருந்தால் முடிவுக்கு வரும்.
* அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி - கேது தொடர்புடையவர்கள். இங்கு தரிசனம் செய்து பெரியவர்களின் ஆசி பெற்றால் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். வீட்டில் லட்சுமி கடாட்சமும், ஐஸ்வர்யம் பெருகும்.
*முருகன் தன்னைத்தானே சுட்டிக்காட்டியதால் சனி - கேதுவிற்கான சிறப்பான திருத்தலமாகும். இத்தலம் அழகும், அருளும், ஆனந்தமும் நிரம்பப் பெற்ற பிரச்சித்தி பெற்ற ஸ்தலமாகும்.
ஜோதிட ஆய்வாளர் திருநாவுக்கரசு