துன்பமில்லா இடமும் உண்டோ?
பகுதி 3
இந்த பாகவதத்தின் மகிமைகளை, ஸ்ரீ மத்வாச்சாரியார் மிக ஆழமாக விளக்குகிறார்கள். பாகவதம் என்பது ஐந்து முக கமலத்தின் கிரந்தங்கள். இதில், ஐந்து விதமான கிரந்தங்கள் உள்ளடங்கி இருக்கிறது.
1) பிரம்ம ஸூக்தத்தின் வியாக்கியங்கள் (விளக்கங்கள்)
2) மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் (மகாபாரத கதையினை நிர்ணயம் செய்வது)
3) காயத்திரி மந்திரத்திற்கு வியாக்கியானம் (விளக்கங்கள்)
4) வேதாந்த தர்ஜுமே (உபநிஷத்துகளின் பொருள் புரியும் விளக்கங்கள்)
5) 18 புராணங்களின் சாராம்சம் ஆகியவை உள்ளடங்கியது ``ஸ்ரீ மத் பாகவதம்’’.
இத்தகைய பாகவதத்தில், 344 அத்தியாயங்கள் கூடியிருக்கிறது. அதில் மொத்தம் 18,000 ஸ்லோகங்கள் இருக்கின்றன. 12 ஸ்கந்தமாக வேதவியாசர் உருவாக்கியுள்ளார். பரீக்ஷித் மற்றும் சுக்காச்சாரியார் ஆகிய இருவருக்குள் நடக்கும் உரையாடல்கள்தான் (conversation) ``ஸ்ரீ மத் பாகவதம்’’. 12 ஸ்கந்தத்தில் இருக்கும் ஒவ்வொரு அத்தியாயங்களின் தலைப்பை மட்டும்
பார்ப்போமா!