தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரச மரம் பிரதட்சணம்!

நம்பிக்கைதான் வாழ்க்கை. அந்த வகையில் அரச மரத்தை பிரதட்சணம் செய்வதும் நம்பிக்கை!

*அரச மரம் காற்றையும் நிழலையும் மட்டும் தருவதில்லை. பல நன்மைகளையும் செய்கிறது. அரச மரம் 1800 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு, பதிலுக்கு 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக கண்டு பிடித்துள்ளனர்.

*அரச மரத்தில் முப்பெரும் தெய்வங்களும் வசிப்பதாக ஐதீகம். வேரில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும், உச்சியில் சிவனும் உள்ளனர். பொதுவாக அரச மரத்தடியில் விநாயகரையும், நாகராஜனையும் காணலாம்.

*விநாயகர் சங்கடங்களை களைபவர். அதனால் அரச மரத்தடியில் உள்ள விநாயகரை வழிபடுவதால் சுவாசிக்க பிராணவாயு மற்றும் சங்கடங்களை சமாளித்து அருள் வழங்குவார்

*புத்தர் ஞானம் பெற்றதும் அரச மரத்தடியில்தான்! இதற்கு தேவலோகத்து மரம் என்றும் பெயருண்டு.

*திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அரச மரத்தை சுற்ற காரணம், இதன் காற்று கர்ப்பப்பை கோளாறை நீக்கும் என்பது நம்பிக்கை.

*வடநாட்டில் கணவர் ஆயுளுடன் வாழ, நூலால் அதனை சுற்றி வணங்குவர். மேலும் அரச மரத்தில் சனி பகவான் இருப்பதாக பண்டிதர்கள் கூறுவது வழக்கம். பூச நட்சத்திரக்காரர்கள் அரச மரத்தை சுற்றி வணங்கினால், சனி மனம் மாறி வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை!

*தமிழ்நாட்டில் திருவாடுதுறை, திருநல்லம் மற்றும் திருப்பரிதிநியமம் ஆகிய ஸ்தலங்களில் அரச மரமே ஸ்தல விருட்சம். அரச மரம் போல் தழைத்து வாழ வேண்டும் என்பதற்காக திருமண மேடையில் அரச மரத்தின் கிளையை அரசாணிக்காலாக நடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

*அரச மரத்தில் விஷ்ணு-லட்சுமியுடன் வசிப்பதாக ஐதீகம். இதனால் வடநாட்டில் அரச மரத்திற்கு நீர் ஊற்றி வழிபட்டால் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை!

* நம்பிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும், அரச மரம் மற்ற மரங்களிலிருந்து மாறுபட காரணம், இந்த மரம் மட்டுமே இரவிலும் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்டது.

- ராஜிராதா, பெங்களூரு.

Related News