தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜாதகம் இல்லாதவர்களுக்கான பரிகாரங்கள்

ஊழ்வினையை தெளிவுபடுத்தி வாழ்வை நெறிப்படுத்த உருவாக்கப்பட்ட தெய்வீக கலை ஜோதிடக் கலை ஆகும். ஜோதிடம் என்பது ஜோதி இருக்கின்ற இடம் என்று பொருள்படும். இந்த உன்னத தெய்வீக கலையை கொண்டு, ஒரு மானுட கர்மா, அதன் கர்ம வினைப்படி நிகழும் சுகம் மற்றும் துக்கங்களை அறிய முடியும். இவ்வாறு ஒரு மனிதன், தன்னுடைய கர்மவினை இப்படி நிகழும் சுக - துக்கங்களை அறிந்து கொள்ள அவனின் ஜனன ஜாதகம் மிக முக்கியமானதாகக் கருதப் படுகிறது. ஜனன கால ஜாதகம் இல்லாதவர்களுக்காக எண்ணற்ற பிரசன்ன முறைகள் ஜோதிடர்களால் பார்க்கப்படுகின்றன. பிரசன்னம் என்ற வார்த்தைக்கான பொருள், தோன்றுதல் அல்லது உதித்தல் என்பதாகும்.

Advertisement

ஒருவர் ஒரு பிரச்னையை முன்னிட்டு பலன் காண வரும் நேரத்தில் உள்ள கிரக நிலையை கொண்டு, பலன் கூறும் முறையே பிரசன்ன ஆரூடமுறையாகும். பிரசன்ன ஆருட முறைகளில் முற்றிலும் நிமித்த நிலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. தவிர கைரேகை சாஸ்திரம், டாரட் கார்டு (அட்டை) கணிப்பு, நாடி ஜோதிடம் என ஜாதகம் இல்லாதவர்களுக்கு இவைகள் எல்லாம் வரப் பிரசாதமாக உள்ளன.

எது எப்படி இருப்பினும், ஒருவருக்கு ஜனன ஜாதகம் என்பது மிகமிக முக்கியமானதாகும். பரிகாரங்கள் என்பது ஒருவரின் ஜாதக ரீதியாக கூறப்படுகிறது. ஜாதகம் இல்லாதவர்கள், தங்களின் கஷ்டங்களைப் போக்க கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்தால் வாழ்க்கை நலமாக அமையும்.

1. பசு மாடுகளுக்கு புல், வைக்கோல் மற்றும் அகத்திக்கீரை போன்ற தீவனங்களை வழங்க வேண்டும்.

2. ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்ய வேண்டும்.

3. தினமும் நாய்களுக்கு உணவிட்டு வரவேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கி நிம்மதி உண்டாகும்.

4. பறவைகளுக்கு நவதானியங்களும், காகத்திற்கு உணவுகளும், தினமும் மறக்காமல் வைக்க வேண்டும்.

5. தினமும் பெரியோர்களின் காலில் விழுந்து அவர்களின் நல் ஆசியைப் பெற வேண்டும்.

6. பெற்றோர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் சொற்படி நடக்க வேண்டும்.

7. ஏழை மற்றும் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு பொருள், கல்வி உதவி அளிக்க வேண்டும்.

8. கோயில்களில் அடிக்கடி அன்னதானம் செய்ய வேண்டும். தினமும் காலையில் குளித்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.

9. ஜாதகம் இல்லாதவர்கள், முக்கிய வேலையாக வெளியே செல்லும்போது சர்க்கரை கலந்த தயிரை சிறிதளவு சாப்பிட்ட பின் செல்ல வேண்டும்.

*ஜாதகம் இல்லாதவர்களுக்கு துன்பங்கள் வந்தால், அதை சரி செய்ய எளிமையான ஒரு பரிகாரம்.

நல்ல முற்றிய கொப்பரைத் தேங்காய் ஒன்றினை மட்டையோடு எடுத்துக் கொள்ளவும். அதன் மேலே சீவி அதில் ஒரு ஓட்டை போட்டு, அதனுள் பேரீச்சம் பழம் கரும்புச் சர்க்கரை முந்திரி ஆகிய மூன்றையும் போட்டு அடைத்து எடுத்து சென்று ஒரு அரச மரத்தின் அடியில் புதைத்து விடவும். அதன் பிறகு துன்பங்கள் குறைந்து நன்மைகள் நடக்கும்.

*ஜாதகம் இல்லாதவர்களின் கிரக தோஷங்களை நீக்கும் பரிகாரம்.

பச்சரிசி, தேங்காய் துருவல், வாழைப் பழம் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து புற்று போல செய்து கோயிலில் நாகாத்தம்மன் சிலை முன்போ அல்லது புற்றின் முன்பாகவோ வைத்து அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைத்து வணங்கினால், ஜாதகம் இல்லாதவர்களின் கிரக தோஷங்கள், கண்திருஷ்டிகள் நீங்கி தடைபடும் காரியங்கள் எல்லாம் தடை இல்லாமல் நடக்கும்.

*ஜாதகம் இல்லாதவர்கள் எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்.

ஜாதகம் இல்லாதவர்கள், விருத்தாசலத்தில் பழமலை நாதர் கோயிலில் உள்ள ஆழத்து விநாயகரை வேண்டி வணங்கினால், தோஷங்கள் நீங்கும். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, விருத்தகிரீஸ்வரர் என்ற பழமலைநாதர் கோயில். பழமலைநாதர் கோயில் வெளிப்பிரகாரத்தில், ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சந்நதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகர், தரை மட்டத்தில் இருந்து கீழே பள்ளத்தில் இருப்பதால் ஆழத்து விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

ஆழத்து விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். பிரம்மாவுக்கு அறிவு புகுத்தியவர். பிரம்மா, விருத்தாசலத்தில் மலையை உருவாக்க எண்ணினார். அங்கு சிவபெருமான் ஆதிமலையாக காட்சியளித்தார். ஆகையால் பிரம்மா, சிவனே மலையாக இருக்கிறார் என்று சென்றுவிட்டார்.

இத்தலம் ஐந்தின் சிறப்புகளைக் கொண்டது. இங்கு திருச்சுற்றுகள் கோபுரங்கள், கொடி மரங்கள், நந்திகள், தீர்த்தங்கள், மூர்த்திகள், லிங்கங்கள், தேர்கள், திருக்கோயில் உள் மண்டபங்கள், விநாயகர்கள் என்று எல்லாமே ஐந்தைந்து மயம்தான். இவ்வாறு மனம் இன்னும் பூமியை தோண்டி ஆழமாக சென்று உற்றுநோக்கின் அதையே இயக்கும் சக்தியாக பிள்ளையார் என்ற பரமாத்மா வஸ்துவை கண்டறியலாம். இதன் நிரூபணமாகவே, இங்கு பூமியிலிருந்து 18 அடி ஆழத்தில், பிள்ளையார் அருள்கிறார். ஆழ் அகத்து விநாயகர் என்பதே ஆழத்து விநாயகர் என்று மருவி வழங்கப்படுகிறது. 16 படிக்கட்டுகள் இறங்கியே இவரை தரிசிக்க முடியும். தனியாக கொடிமரம் இவருக்கு அமைக்கப்பட்டுள்ளது.

ஆழத்து விநாயகர், திருமணத்தடை நீக்குகிறார். குழந்தை பாக்கியம் தருகின்றார். சிறந்த கல்வி வழங்குகின்றார். 21 பிறவிகளில் ஏற்பட்ட தோஷங்கள் நீக்குகிறார். ஜாதகம் இல்லாதவர்கள், இங்கு வந்து இவரை வேண்டி வணங்கினால், எல்லா தோஷங்களும் நீங்கப் பெறுகின்றனர். சங்கடஹர சதுர்த்தி அன்று இவரை வேண்டி வணங்கினால், எல்லா தோஷங்களும் விலகுகின்றன. சங்கடங்களும் நீங்குகின்றன. உலகின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து 108, 27 என்ற எண்ணிக்கையில் சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

``திருவும் கல்வியும் சீரும்

தழைக்கவும் என்று தொடங்கி

பெருகும் ஆழத்துப்

பிள்ளையாரைப் பேணுவோம்’’

- என்ற பாடல் இவரைப் பற்றியது.

இவரை வழிபாடு செய்தபின் படியேறி மேலேறுவது போல கல்வியுடன் சீரான செல்வமும் தந்து நல்வாழ்வினை மேன்மை அடைய செய்வார். எனவே, ஜெனன ஜாதகம் இல்லாதவர்கள் ``திருமுதுகுன்றம்’’ என்று அழைக்கப்படும் விருத்தாசலத்தில் உள்ள பழமலை நாதர் கோயிலில் அமைந்துள்ள ஆழத்து விநாயகரை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

Advertisement

Related News