பூசம்
பலன்கள்;
பரிகாரங்கள்...
கால புருஷனுக்கு ஏழாவது வரக்கூடிய நட்சத்திரம் பூசம் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்திற்கும் எண்ணிற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் ஆவார். எட்டாம் எண் சனி்க்குரியது. பூசம் என்ற சொல்லுக்கு வளத்தை கொடுப்பது என்று பொருளாகும். புனர்பூச நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் குடம், தரா, கொடிறு, தையம், மதி ஆகியன... பூச நட்சத்திரத்தின் அடையாளச் சின்னங்களாக தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி ஆகியனவாகும். பூச நட்சத்திரத்தின் அதிபதி வியாழன் என்ற பிரகஸ்பதி ஆவார். வியாழன் பூச நட்சத்திரத்தில்தான் உச்சம் பெறுகிறது. குரு பகவான் பிறந்த நட்சத்திரம் பூசம். எனவே, வளத்தை கொடுக்கும் நட்சத்திரம் குரு என்றால் மிகையில்லை.
பூசம் - விருட்சம் : அரச மரம்
பூசம் - யோனி : ஆண் ஆடு
பூசம் - பட்சி : செம்போத்து
பூசம் - மலர் : பன்னீர் மலர்
பூசம் - சின்னம் : அம்பு
பூசம் - அதிபதி : சனி
பூசம் - அதி தேவதை : பிரகஸ்பதி
பூசம் - கணம் : தேவ கணம்
மீட்டெடுக்கும் பூசம்
பூசம் என்றால் வளமை அல்லது வளர்ச்சி என்று பொருள். பூச நட்சத்திரத்தில்தான் குரு பகவான் பிறப்பெடுத்திருக்கிறார். மேலும், ராமாயணத்தில் ராமரின் தம்பி பரதனும் இதே நட்சத்திரத்தில்தான் அவதரித்துள்ளார். நேர்மைக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் நீதிமானாக விளங்கக்கூடியவராக உள்ளார். பூச நட்சத்திரக்காரர்களை நம்பி எப்பொருளை கொடுத்தாலும் அப்பொருள் அப்படியே கிடைக்கும்.தேவர்களின் குருவான பிரகஸ்பதி தன் மகன் கசனை அசுர குருவான சுக்ராச்சாரியாரிடம் குரு குலம் பயில அனுப்பி வைக்கிறார். சுக்ராச்சாரியாரிடம் குருகுலக் கல்வியை கற்கிறான். சுக்ராச்சாரியாரின் மகளான தேவயானி கசனை ஒரு தலையாகக் காதலிக்கிறாள். உயிரை மீட்டெடுக்கும் மிருத சஞ்சிவினி மந்திரத்தை கற்கவே கசன் இங்கு வந்துள்ளான் என அறிந்து அவனை பலமுறை கொலை செய்கிறார்கள். ஆனால், தேவயானி தன் தந்தையிடம் முறையிட்டு ஒவ்வொரு முறையும் மிருத சஞ்சிவினி மந்திரத்தால் உயிர் பெறச் செய்கிறார்.
இவ்வாறே, ஒரு முறை அசுரர்கள் கசனை எரித்து சாம்பலாக்கி சோம பானத்தில் கரைத்து சுக்ராச்சாரியாருக்கே கொடுத்து விடுகிறார்கள். வெகு நேரம் வராததால் தேவயானி தந்தையிடம் முறையிடவே தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றின் உள்ளே இருப்பதை அறிகிறார். ஆகவே, மீண்டும் மிருத சஞ்சிவினி மந்திரத்தை உச்சரித்து மீட்டெடுக்கும் பொழுது சுக்ராச்சாரியார் வயிறு வெடித்து மரணமடைகிறார். அவரை தன்னுடைய மிருத சஞ்சிவினி மந்திரத்தால் மீண்டும் மீட்டெடுக்கிறார். அப்பொழுது தேவயானி தன் காதலை கசனிடம் சொல்கிறாள். ஆனால், கசன் அதனை மறுத்து உன் தந்தையின் வயிற்றிலிருந்து நான் வந்ததால் உனக்கு சகோதரன் எனச் சொல்லி மறுக்கிறான். கோபம் கொண்ட தேவயானி மிருத சஞ்சிவினி மந்திரம் மறந்து போகட்டும் எனச் சபிக்கிறாள். பின்பு தேவ குருவான பிரகஸ்பதி தன் மகனை மீட்டெடுக்கிறார் என்பதே புராணம். பூசத்தில் பிறந்த குரு எதையும் திரும்பப் பெறும் சக்தி படைத்தவர்
என்பதே உணர வைக்கிறது.
பொதுப்பலன்கள்
இந்த நட்சத்திரக்காரர்கள் எதையும் நிதானமாக செய்து சிறப்பான முடிவெடுப்பார்கள். ஆனாலும், தாமதத்தை இவர்களால் தவிர்க்க முடியாது. வியாழன் தொடர்பான விஷயங்களை பூசம் நட்சத்திரத்தில் செய்வது நற்பலன்களை கொடுக்கும். குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்பவர்கள் பூசம் நட்சத்திரத்தில் கோயிலில் சென்று பிரார்த்தனை செய்தால் நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும். பொருளாதாரம் மேம்பட பூச நட்சத்திரத்தன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பை அளிக்கும்.வளர்ச்சி இவர்களுக்கு நிச்சயம் உண்டு. மேல்நிலை நோக்கி வளர்ந்து கொண்டே இருப்பார்கள்.
குரு புஷ்ய யோகம்
எந்த காரியம் வளர்ச்சியில் வெற்றியடைய வேண்டுகிறோமோ அந்த காரியத்தை எந்த ஒரு மாதத்தில் வியாழக் கிழமையும் பூசம் நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய நாளில் தொடங்கினால் வெற்றியையும் வளர்ச்சியை நோக்கிச் செல்லும். அன்று நவகிரகங்களில் வியாழனுக்கும் சனி பகவானுக்கும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யுங்கள் முன்னேற்றம் நிச்சயம். இந்த நன்னாளே குரு புஷ்ய யோகம் என்று சொல்லப்படுகின்றது.
தொழில்
இந்த எத்தனை வகை போராட்டங்கள் இருந்தாலும் இறுதியில் வெற்றியை நோக்கி பயணிக்கும் நிலைபாடு கொண்டவர்கள். எப்படிப்பட்ட தொழிலையும் திறம்படச் செய்யும் திறமை உள்ளவர்கள். தொழிலை புரிந்து கொள்ளும்வரைதான் இவர்களுக்கு போராட்டம் பின்பு எல்லாம் பெரிய மாற்றம்தான்.பூசத்திற்கான வேதை நட்சத்திரம்வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். பூராடம் வேதை நட்சத்திரமாக உள்ளது. எனவே, பூராட நட்சத்திரத்தை சேர்க்க வேண்டாம்.
பூசம் நட்சத்திரப் பரிகாரம்
இந்த நட்சத்திரத்திற்கு குருவே அதிதேவதையாக இருப்பதால், தஞ்சாவூர் பேராவூரணியில் உள்ள அட்சயபுரீஸ்வரர் ஆவார் உடனுறை அம்மை அபிவிருத்தி நாயகி. இதில், அட்சயம் என்பது வியாழனைக் குறிக்கிறது. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறந்த அமைப்பாகும்.