தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புரட்டியெடுக்கும் துன்பங்களிலும் துணை நிற்கும் திருவேங்கடம்!

புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே, நம் மனம் திருவேங்கடத்து இன்னமுதனின் திவ்யத் திருத்தலமான, திருமலை - திருப்பதியைத் தான் நினைக்கிறது! அதிகாலைப் பொழுதில், அரைத் தூக்கத்திலுள்ள நம்மை, எழுப்புவதும், வீதியிலிருந்து, வரும், "கோவிந்தா.... கோவிந்தா..." எனும் புனித சப்தம்தான்!!நம்மையும் அறியாமல், நம் மனம் திருவேங்கடத்து எம்பெருமானைத்தான் நினைக்கிறது. இதுவே புரட்டாசி மாதத்தின் தெய்வீக சக்தியாகும்.வீடுகள்தோறும் சுத்தம் செய்து, மங்கலக் கோலமிட்டு, நெய்தீபத் திருவிளக்கை ஏற்றிவைத்து, பகவான் திருவேங்கடத்து இன்னமுதனை மாவிளக்கேற்றி வைத்து, நம் இல்லத்திற்கு அழைத்து, உபசரித்து, பூஜிப்பது, குடும்பத்திற்கு லட்சுமி கடாட்சத்தைப் பெற்றுத்தரும். அந்தத் திருவிளக்கின் தீபத்தின் ஒளியின்மூலம், திருவேங்கடவனே நம் இல்லங்களுக்கு எழுந்தருளி அருள்புரிவதாக, பல காலமாகப் பூஜித்து வருகிறோம்.புரட்டாசி மாதந்தோறும், நவக்கிரகங்களின் நாயகனாகிய சூரிய பகவான், புதனின் வீடான கன்னி ராசியில், சூரியனுக்குப் பகை வீடாகும்!

Advertisement

இப்புரட்டாசி மாதத்தில் நிகழும் மிக முக்கியமான கிரக மாறுதல், நவக்கிரகங்களில் எவ்விதத் தோஷமுமில்லாத குரு பகவான், புதனின் ராசியான மிதுனத்ைத விட்டு, அவரது உச்ச வீடான கடகத்திற்கு மாறுவதேயாகும்!இம்மாறுதலின் விசேஷ பலன்களை, பிரத்யேகமாக விசேஷ மலரில் பிரசுரிக்கவுள்ளோம். அனைவருக்கும் மிகவும் பயனுள்ள மலராகும் இது!குரு பகவான், கடக ராசியில் பிரவேசிப்பதிலிருந்து, ஒரு வருட காலத்திற்கு குரு பகவானின் சஞ்சார நிலையின் பலன்களை இம்மலர் முன்கூட்டியே எடுத்துரைக்கும் - வாசக அன்பர்களின் நலனிற்காகவே!ஏற்கெனவே கூறியுள்ளபடி, கடக ராசி, குரு பகவானின் உச்ச வீடாகும். அதாவது, கடக ராசியில் சஞ்சரிக்கும்போது, அதிக பலனைப் பெறுகிறார் என்பதே அதன் பொருள்!கடக ராசியில் சஞ்சரிக்கும் வரையில், குரு பகவான் விருச்சிக ராசியையும், மகர ராசியையும், மீனராசியையும், மகர ராசியையும், அவரது சொந்த ராசியான மீனத்தையும், தன் சுபப் பார்வையினால், பலப்படுத்துகிறார்!மிதுன ராசியில் இருக்கும்வரை, கும்ப ராசியில் இணைந்துள்ள சனி மற்றும் ராகுவையும், தன் சுபப் பார்வையினால், தோஷத்தை நீக்கி, தூய்மைப் படுத்துகிறார். "குரு பார்க்கில், கோடி தோஷம் விலகும்...!" என்பது ஆன்றோர் வாக்காகும்.

இனி, இம்மாதத்தின் ராசி பலன்களைத் தெரிந்துகொள்வதற்கு முன், விசேஷ, புனித, புண்ணிய தினங்களைத் தெரிந்து கொள்வோம்.

புரட்டாசி 1 - (17-9-2025) : புரட்டாசி மாதப் பிறப்பு. இன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம், பூஜை செய்வது குடும்பத்திற்கு அளவற்ற நன்மை செய்யும்.

புரட்டாசி 2 - (18-9-2025) : சன்னியஸ்த மாளயம். ஆயுதங்களினால், மரணமடைந்தவர்களுக்கு, திதி, தர்ப்பணப் பூஜை ஆற்ற வேண்டிய புண்ணிய தினம்.

புரட்டாசி 3 - (19-9-2025) : பிரதோஷம். கஜச்சாயை. மறைந்த முன்னோர்களுக்கு, மஹாளயத் தர்ப்பணம் செய்யவேண்டிய புனித தினம். இன்றே பிரதோஷமும்கூட. மாலையில், சிவ தரிசனம் பாபங்களைப் போக்கும்.

புரட்டாசி 4 - (20-9-2025) : சஸ்திரவத மஹாளயம். ஆயுதங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றால் மரணமடைந்த உறவினர்களுக்கு, தர்ப்பணம் ஆகிய பூஜைகளைச் செய்ய வேண்டிய மகத்தான புண்ணிய தினம். இதன் பலனாக, குலம், குடும்பம் செழிக்கும். மேலும், இன்று மாத சிவராத்திரி விரதம். விரதங்களில் மிக, மிக விசேஷமான விரதம் ஏகாதசி விரதம்! அவ்விரதத்திற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத மற்றொரு விரதம் மாத சிவராத்திரி! பகல் பொழுது முழுவதுமாக நிர்ஜலமாக (நீரைக் கூடப் பருகிடாமல் அன்ன-ஆகாரமில்லாமல்) இருந்து, மாலை நேரத்தில் இரண்டாவது முறையாக ஸ்நானம் செய்து, அவரவர்களுக்குரிய சின்னங்களை நெற்றியில் பூசி, ருத்ராட்ச மாலை அணிந்து, ஒவ்வொரு காலங்களிலும், ஸ்ரீசிவபெருமானுக்கு பால், தயிர், கரும்புச் சாறு, தேன், தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு, மணங்கமழும் சந்தனக் குழம்பு, விபூதி, முக்கனிகளாகிய, மா, பலா, வாழைப் பழங்களாலும், தாழம்பூ குங்குமத்தாலும் அபிஷேகம் செய்விக்க வேண்டும். இவ்வாறு பக்தி - சிரத்தையுடன் புரியும் ஆராதனை அபிஷேகத்தினால் மனம் குளிர்ந்த இறைவன், உங்களுக்கு எல்லாவிடங்களிலும் உற்ற துணையாக இருந்து உங்களையும், உங்கள் இல்லத்தாரையும் காத்தருள்வான் என்பது சத்தியம். மேலும், நீங்கள் எண்ணியதெல்லாம் நடந்தேறும். வாக்குப் பலிதமாகும். சிவபெருமானுக்கு இன்றைய தினத்தில் வில்வ இலைகளால் அர்ச்சிப்பதும் அளவற்ற புண்ணிய பலன்களைப் பெற்றுத் தரக்கூடிய ஒன்று. மேலும் சிவ பூஜை செய்ய இயலாதவர்கள்கூட, இரவில் கண் துயிலாமல், கண்விழித்து சிவ நாமத்தை உச்சரித்தாலோ அல்லது வெறுமனே விழித்திருந்தாலோ அனைத்துவித நலன்களும் உங்களை வந்தடையும். இவ்விரதத்தைப் பற்றி ஸ்கந்தபுராணத்தில் வெகுவாக சிலாகி்த்துக் கூறப்பட்டுள்ளது. முடிந்தவரை அனைவரும் கடைபிடிக்கவேண்டியதும், மிகச் சுலபமாக புண்ணிய பலனைப் பெற்றுத் தந்திடுமாகிய இவ்விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

புரட்டாசி 5 - (21-9-2025): சர்வ மஹாளய அமாவாசை. பித்ருக்களுக்கு திதி கொடுத்து, பூஜிக்க வேண்டியதும், தில ஹோமம் செய்யவும் மிகவும் ஏற்ற - மகத்தான புண்ணிய தினம்.

புரட்டாசி 6 - (22-9-2025) : நவராத்திரி ஆரம்பம். அவரவர் இல்லங்களில், சக்திக்கு ஏற்ப, வீட்டை அலங்கரித்து, பொம்மைக் கொலு வைத்து, ஸ்ரீமகாலட்சுமி, அம்பிகை, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரையும் தினமும் பூஜித்து, இந்த ஒன்பது நாட்களிலும் ஒன்பது வகையான மலர்களைக் கொண்டும், நாளொன்றிற்கு ஓர் அலங்காரம் செய்தும், ஒன்பது வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளைப் பூஜிப்பது அளவிடற்கரிய புண்ணிய பலன்களைக் கொடுக்க வல்லது. மேலும், இன்றைய தினத்தில் சுமங்கலிகளுக்கு, குங்குமம், புஷ்பம், வெற்றிலை, பாக்கு, பழம், தாம்பூலம் கொடுத்தும், வசதியுள்ளோர் புடவை ரவிக்கைத் துண்டு கொடுத்து, அவர்களை வணங்கினால், மணமான பெண்மணிகளுக்கு, தீர்க்கமான சுமங்கலித்துவம் கிட்டும். திருமணமாகாத கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். புத்திரபாக்கியம் கிட்டாத பெண்மணிகளுக்கு, சத்புத்திரர்கள் உண்டாகும். இந்த ஒன்பது நாட்களும், வீட்டைச் சுத்தமாகவும், தூய்மையுடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.

திருமகள் கடாட்சம் ஏற்படும். வறுமை நீங்கும். கடன்கள் அடைபடும். வருமானம் உயரும். வியாதிகள் நீங்கும். திருமணத் தடைகள் இருப்பின், அவை உடனுக்குடன் நீங்கும். மேலும், இன்று கன்றுடன் கூடிய பசுக்களைப் பூஜிப்பதும், கோசாலை நடத்துபவர்களுக்கு, எந்தவகையிலாவது உதவி புரிவதும் மகத்தான புண்ணிய பலன்களைக் கொடுக்க வல்லது.

புரட்டாசி 7 - (23-9-2025): சந்திர தரிசனம் உத்தமம் இன்றைய தினத்தில் அனைவரும் மாத்ருகாரகரான சந்திரனைத் தரிசித்து வணங்க வேண்டும். இந்நாள் வளர்பிறை ஆரம்பித்த முதல் நாளாகையால், இந்நன்னாளில் மாலை சூரிய அஸ்தமனமாகும் நேரத்தில், மேற்குக் கீழ்வானில் தோன்றும் சந்திரோதயத்தை தரிசனம் செய்வோருக்கு, அந்நாள் தொடங்கி, அந்த மாதம் முடிவுறும் காலந்தொட்டு நல்லதொரு வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் குடும்பத்தில் உண்டாவதைக் கண்டு மகிழ்வீர்கள். மேலும், இவ்வாறு ஒவ்வொரு மாதமும் தரிசிப்போருக்கு சதாபிஷேகம் கொண்டாடும் பாக்கியத்தையும் ஆயிரம் பிறைகளைக் காணும் மகத்தான பேரினையும் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களையும் நல்நெறிப்படுத்துவர்.

புரட்டாசி 9 - (25-9-2025) : ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமியின் திரு அவதார நட்சத்திரமாகிய ஸ்வாதி! இன்றைய தினத்தில், மாலை நேரத்தில் அரிசி மாக் கோலமிட்டு, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமியின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, மண் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து, துளசி தளம் கொண்டு அர்ச்சித்து, வலம் வந்து நமஸ்கரித்து, வெல்லம், சுக்குப்பொடி, ஏலக்காய்ப் பொடி கலந்த பானகத்தை நைவேத்தியம் செய்து, கீழ்க்கண்ட மந்திரச் செரிவூட்டப்பெற்ற ஸ்லோகத்தை ஒன்பது அல்லது பதினெட்டு முறைகள் ஜபிக்க வேண்டும். உங்கள் அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேறிடும். மேலும், கண் திருஷ்டி விலகும். சுயதொழில் புரிவோருக்கு, தொழில் போட்டிகள் விலகிடும். உங்களைக் கண்டாலே எதிரிகள் தெரித்தோடிவிடுவார்கள்."உக்ரம், வீரம், மஹாவிஷ்ணும் சர்வதோ முகம் நரசிம்மம் பத்ரம் மிருத்யும், மிருத்யும் நமாம்யஹம்"புரட்டாசி 12 - (28-9-2025) : சஷ்டி விரதம். முருகப் பெருமானின் திருவருள் கிட்டும்.

புரட்டாசி 13 - (29-9-2025) : சரஸ்வதி ஆவாஹனம். பிரம்மஸ்வரூபியாகியவளும், ஈரேழு பதினான்கு உலகையும் காத்தருள் புரிபவளுமாகிய லோக மாதா பராசக்தி அனந்தகோடி அவதாரங்களை எடுத்திருந்தாலும், அவற்றுள் மிக முக்கியமாக ஐந்து அவதாரங்கள் பக்த கோடிகளால் பெரிதும் போற்றிக் கொண்டாடப்படுகிறாள். திருப்பாற்கடலில் சயன திருக்கோலத்தில் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் அருள்பாலித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய நாபீ கமலத்தில் வீற்றிருந்த நான்முகனுக்கு சேவை சாதித்து, சிருஷ்டிக்கும் வழிமுறைகளை எடுத்தோதியபோதும், திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய அமுதத்தைப் பகிர்ந்தளிக்க மோகினியாக திருவுருவம் எடுத்தபோதும், தட்சணின் யாகத்தை அழித்த தாட்சாயணியாக அவதரித்தபோதும், சர்வேஸ்ரனாகிய ஈசனை மணக்க, காஷ்மீரத்தில் ஸ்ரீபார்வதி தேவியாக திருமணம் புரிந்ததும், ஸ்ரீசக்ரம் எனும் ரதத்தில் அமர்ந்து, பண்டாசுரனைஅழித்து, லிதாம்பிகையாகஅவதரித்தவளுமாகியதும், தசாவதாரங்களை எடுத்தருளிய எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் திருப்பாற்கடலைக் கடைந்தபோது மந்திரகிரி மலையைத் தனது முதுகில் தாங்கிய ஆமைவடிவினனாக உருவெடுத்ததிற்கு இணையானதாகவும், நவக்கிரகங்களில் சனிபகவானின் தோஷங்களை அடியோடு போக்கியருளுபவளுமாகிய ஸ்ரீபத்ரகாளி அவதாரப் புண்ணிய தினம். இன்றைய தினத்தில், தயிரன்னம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு விநியோகிப்பது உங்கள் வீட்டில் சகல சௌபாக்கியங்களையும் தந்தருள்வாள்.

புரட்டாசி 15 - (1-10-2025) : சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை. மஹா நவமி. இன்றைய தினத்தில், நம் வாழ்வின் ஜீவாதாரனமாகியதும், நாம் அன்றாடம் உபயோகிக்கும் அனைத்துவித கருவிகளையும், இசைக் கருவி முதற்கொண்டு, நம்மை அறிவு ஜீவியாக மாற்றம்பெற உதவிடும் புத்தகங்களையும் வைத்துப் பூஜிக்க வேண்டும். இன்றைய தினத்தில் புதிய புத்தகம் ஒன்றையாவது வாங்கிப் பூஜையறையில் வைக்க வேண்டியது அவசியம்.

புரட்டாசி 16 - (2-10-2025): விஜயதசமி. இன்றைய தினத்தில் மறு பூஜை ெசய்து, தொழில் தொடங்கினால், இடையூறு ஏதுமற்ற, தொழில் போட்டி பொறாமையற்ற நிலை அவ்வருடம் முழுவதும் தொட்டதெல்லாம் துலங்கும், செல்வச் செழிப்பு அபரிமிதமாக ஏற்படும். வாழ்க்கையில், மகிழ்ச்சியும் மன நிறைவையும் காண்பீர்கள்.

புரட்டாசி 17 - (3-10-2025): ஏகாதசி. அன்னைக்கு மிஞ்சிய தெய்வமில்லை! கங்கைக்கு மிஞ்சிய புண்ணிய தீர்த்தமில்லை!! காயத்ரி மஹா மந்திரத்திற்கு இணையான மந்திரமில்லை!!! என்பது மூக்தோர் வாக்கு. பாபாங்குச ஏகாதசி பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், யுதிஷ்டருக்கும் நடந்த கலந்துரையாடலில், "இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவரின் பத்து தலைமுறையினர் செய்த பாபங்கள் விலகிச் சென்றிடும். அதுமட்டுமல்லாது, தாய் வழியில் பத்து தலைமுறையினர் செய்த பாபங்களும், மனைவி அல்லது கணவர் செய்த கொடும் பாபங்களனைத்தையும், தீயினிற் தூசாக்கிடும் வல்லமை இந்தப் பாபாங்குச ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்போர்க்கு உண்டு!

புரட்டாசி 18 - (4-10-2025): சனிப் பிரதோஷம் - பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் தோன்றியது ஆலகால விஷம்! அவ்விஷத்திலிருந்து வெளிப்படும் விஷக் காற்றைக் கண்டு அனைவரும் ஓடி ஒளிந்தனர். உலகத்திலுள்ள அனைத்து ஜீவ ராசிகளையும் காத்திட எண்ணிய சிவபெருமான் கடும் விஷத்தைப் பருகிய காலமே பிரதோஷகாலமாயிற்று. ஒவ்வொரு மாதந்தோறும் கிருஷ்ணபட்ச - சுக்லபட்ச பிரதோஷத்தன்றும் பகலில் உபவாசம் (உப சமீப வாசம் = உணவினைத் தவிர்த்து, நிர்ஜலமாக, கடவுளின் அருகாமையிலேயே (உடலாலும், உள்ளத்தளவிலும்) இருந்து அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு முன் (பிற்பகல் 4.30 மணிக்கு மேலாக) சாம்ப சிவ மூர்த்தியை, ரிஷபாரூடராகத் தரிசனம் செய்திடல் வேண்டும். உங்கள் அபிலாஷைகள் அனைத்தையும் ஈடேற்றித் தந்தருள் புரிந்திடுவார். பிரதோஷ வழிபாட்டுப் பலா-பலன்களை சிலாகித்துக் கூறாத புராணங்களும், இதிகாசங்களும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு உயர்ந்த பலன்களைத் தரவல்லது. நமக்குத் தேவை - பக்தியுடன்கூடிய நம்பிக்கை மட்டுமே!

புரட்டாசி 19 - (5-10-2025): ஸ்ரீநடராஜர் அபிஷேகம்.

புரட்டாசி 20 - (6-10-2025): பௌர்ணமி பூஜை. "இந்தப் பூஜையை கிரமமாகச் செய்து முடிப்போர்க்கு, சகலவித அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுத்தருள்வேன்!!" என்று ஸ்ரீசத்திய நாராயண ஸ்வாமியே சத்தியப்ரமாணம் செய்ததினாலேயே தான் இவ்விரதத்திற்கு சத்தியநாராயண விரதம் எனும் காரணப்பெயராக அமைந்தது. இவ்விரதத்தைக் கைக்கொள்ளும் அனைத்து பக்த கோடிகளும் சகல நன்மைகளையும் பெற்று,திவ்ய தம்பதியராய் பரிமளிப்பர். மேலும், இன்றைய தினம் வளர்பிறை சதுர்த்தசி ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு உகந்ததும் அவர் அவதரித்த திதி ஆகும். இன்றைய தினம் கௌமதி ஜாகர விரதம். இந்த விரதத்தை பக்தி சிரத்தையுடன் கைக்கொண்டால், அதாவது இன்றைய பௌர்ணமி இரவு முழுவதும் கண்விழித்திருந்து, ஸ்ரீலட்சுமி பூஜை பக்தி - சிரத்தையுடன் செய்தால், நீங்கள் லட்சுமி கடாட்சத்தைத் தேடிச் செல்ல வேண்டாம். மாறாக, ஸ்ரீலட்சுமிதேவியின் அருளுக்குப் பாத்திரராவீர்கள். சகல ஐஸ்வர்யங்களும் உங்கள் இல்லத்தை அலங்கரிக்கப் போவது திண்ணம்.

புரட்டாசி 21 - (7-10-2025) : அப்பைய்ய தீட்சிதர் ஜெயந்தி. அத்வைதத்தில் சமர்த்தராக இருப்பினும், ஹரியும் ஹரனும் ஒன்று என்பதை உணர்ந்து, அதைப் பாமர மக்களுக்கு போதித்தவர். மேலும், சிவன், விஷ்ணு, அம்பிகை தெய்வங்களில் ஒரு பேதமுமில்லை என்பதை விளக்கி மதங்களை இணைத்திட வித்திட்டார். வடமொழியில் புலமை பெற்றிருந்த இவர் நூற்றிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். "ஆத்மார்ப்பண ஸ்துதி" எனும் நூல், ஸ்தோத்திரங்களுக்கெல்லாம் மணிமகுடமாகத் திகழ்கிறது, ெபரிய மகாராஜாக்களால் மட்டுமே செய்யப்படும்"விச்வஜித்" எனும் யாகத்தைத் திறம்படச் செய்து, வான்புகழ் கொண்டார். இந்த யாகத்தைச் செய்பவர், தம்மிடத்திலுள்ள அனைத்து செல்வங்களையும் வறியோர்க்குத் தந்துவிடவேண்டுமென்பது, எழுதப்படாத சட்டம்! தீட்சிதர், அந்த யாகத்தைச் செய்து, தன்னிடமிருந்த செல்வங்களனைத்தையும் "இல்லை" எனாது அனைவருக்கும் கொடுத்தார். தீட்சிதர், சிதம்பரத்தில் வாஜபேய யாகம் நடாத்தியபோது, பூர்ணாகுதியின்போது, அரசரானவர், அவருக்குக் குடை பிடித்து பெருமை சேர்த்தார். வாசக அன்பர்கள் இந்நன்னாளில், உங்கள் வீட்டுப் பூஜையறையில் ஒரு மண் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து மனத்தளவில் நினைந்துருகி வணங்கினாலே போதும். நம்மிடமுள்ள பேதங்களனைத்தும் விலகிடும். நாமனைவரும் ஒருதாயின் பிள்ளை என்பதை உள்ளத்தளவில் உணர்ந்து, அதன்படி நடப்போம்.

புரட்டாசி 22 - (8-10-2025): குரு பகவான், அதிசாரமாக மிதுன ராசியிலிருந்து, கடக ராசியில் பிரவேசிக்கிறார்.

புரட்டாசி 23 - (9-10-2025) : சந்திரோதய கௌரி விரதம் - இவ்விரதத்தை பக்தி சிரத்தையுடன் கடைப்பிடித்தால், திருமணத் தடைகள் அனைத்தும் விலகி, நல்ல இல்வாழ் துணை அமைவது திண்ணம்.நோய் நொடியற்ற நீண்ட நல்வாழ்வும், மன அமைதியும் ஏற்படும்.

புரட்டாசி 24 - (10-10-2025) : கிருத்திகை விரதம். - சங்கட ஹர சதுர்த்தி.

புரட்டாசி 27 - (13-10-2025): ஈஸ்வராஷ்டமி. இந்தத் தினத்தில் காலையில் ஸ்ரீசிவபெருமானையும், மாலை வேளையில் அதாவது சூரிய அஸ்தமனத்தில் ஸ்ரீபைரவரையும் தரிசனம் செய்து வழிபட்டால், காலங்காலமாக நிலவி வந்த சகோதர பகை நீங்கி, பாசவெள்ளத்தில் மூழ்குவர். மேலும், கோபத்தினால் செய்த தன்னையறியாமல் செய்த பாபங்கள் அனைத்தும் தீயினிற் தூசாகும். நன்மை பெருக்கெடுத்தோடும்.

புரட்டாசி 28 - (14-10-2025) : ஸ்ரீராதா ஜெயந்தி. ராதா - கிருஷ்ணரின் ஸ்லோகங்களைச் சொல்லி வணங்க, ஹரி பக்தி மேம்படும். உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் ஹரியைக் காண்பார்கள். "வாயு ஜீவோத்தமா! ஹரி சர்வோத்தமா!" என்கிற உன்னத நிலை எய்துவார்கள். இவர்களைக் கண்ட மாத்திரத்தில், உலகிலுள்ள அனைத்து உயிர்களும் இரு கரம் கொண்டு வணங்குவர்.

இனி, ஒவ்வொரு ராசியினருக்கும், இம்மாத கிரக பலன்களை ஆராய்ந்து பார்ப்போம். எந்தெந்த ராசியினருக்கு, பரிகாரம் அவசியமோ, அவற்றை மிகத் துல்லியமாக் கணித்துப் பார்த்து, தக்க பரிகாரங்களையும் எமது வாசக அன்பர்களின் நலனைக் கருதி, கூறியிருக்கிறோம். இப்பரிகாரங்கள் அனைத்தும், பராசரர், வசிஷ்டர், அகத்தியர், வராக மிகிரர் போன்ற மகான்கள் அருளியவை. தவறாது பலனளிப்பவை.

 

Advertisement