தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அக்னிக்கு வரமருளிய வரகுணமங்கை விஜயாசனப் பெருமாள்

நவ திருப்பதிகள்

Advertisement

தென் மாவட்ட தாமிரபரணி ஆற்றங் கரையில், வடபுறம், தென்புறம் என இருகரை ஓரங்கள் உள்ளன. அவற்றில் வடகரையின் ஓரமாக, ஆறு திவ்ய திருத்தலங்களும், தென்கரையின் ஓரமாக, மூன்று திவ்ய திருத்தலங்களும் உள்ளன. இவையே 108 வைணவ திவ்ய ஷேத்திரத்தில் ``சந்திரனுக்கு’’ உரிய நவகிரகத் தலம். திருமால் நின்ற கோலத்தையும், கிடந்த கோலத்தையும் நாம் கண்டு ரசித்தோம் என்றால், தாமிரபரணி ஆற்றுக் கரை ஓரமுள்ள ``விஜயாசனப் பெருமாள்’’ தெய்வீகமாக அருள் புரிந்து வருகிறார். ஸ்ரீவிஜயாசனப் பெருமாள் கோயில், நத்தம் என்னும்

இடத்தில் உள்ளது.

திருமாலின் அற்புதக் காட்சி

கருவறையில் கம்பீரமாக விஜய கொடி விமானத்தின் கீழ் ஆதிசேஷன் குடை பிடிக்க, எம்பெருமாள் வெற்றி ஆசனத்தில் அமர்ந்த கோலத்தில் நமக்கு காட்சி தந்து, விஜயம் வழங்குகிறார். வலக்கரத்தால் தம் திருவடியைக் காட்டி சரண் அடைந்தால் நன்மைகள் யாவும் பெற்று சிறப்புடன் வாழ்வீர் என அபயவரதம் காட்டி, இடக்கரத்தால் அரவணைத்து அருள் கடாட்சம் தருகிறேன் என்று, தன் இரு தேவிமார்களுடன் அமர்ந்திருக்கிறார். இக்காட்சியைக் காணுகின்ற நமக்கு சொர்க்கலோகத்தில் இருப்பது போன்ற ஒரு நிறைவான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், 1200 ஆண்டுகளுக்கு முன்பாக இக்கோயில் கட்டப்பட்டதுள்ளதாக கூறப்படுகிறது.

சந்திரனின் பெற்றோர் யார்?

அத்தி மகரிஷி - அனுசுயா தம்பதிகளின் மகனாக பிறந்தார், சந்திரன். நவகிரகங்களில் சந்திரன் ஒரு கிரகம். சோமன் என்ற பெயரும் உண்டு. சோமன் என்பதற்கு தெய்வீக தேன், அமிர்தம் என்னும் சிறப்புப் பொருளாகப் போற்றப்படுகிறது. ‘திரிஜென்மி’ சிறப்புப் பெயர் பெற்றவர். சிவபெருமான் தலையில் ‘பித்த பிறை சூடியப் பெருமானாக் காட்சி தருகிறார். இதனால் திரிஜென்மி என்ற சிறப்பு பெயரும் நிலைத்தது. சந்திரலேகத்தை ஆட்சி செய்யும் சிறப்பு பெற்றவன்.

சந்திரன் வளர்வதற்கு காரணம் என்ன?

அழகில் மற்றவரை கவர்ந்து வசீகரமாக இழுக்கும் தன்மை உடையவன். பிரம்மனின் புத்திரரான தர்ஷன், இவருக்கு 27 மகள்கள் பிறந்தனர். இவர்களே 27 நட்சத்திரங்கள் ஆவார். மகள்கள் அனைவரும் சந்திரன் அழகைக் கண்டு மயங்கினர். ஆனால், சந்திரன் ரோகிணியின் மென்மையான கவர்ச்சியில் மதி மயங்கி மனதைப் பறி கொடுத்து, காதல் வயப்பட்டு இருந்தான்.

தர்ஷன், 27 பெண்களையும் சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். சந்திரன், ரோகிணியின் மீது காதல் கொண்டு அவளுடன் வாழ்ந்தான். மற்ற பெண்கள், தந்தையிடம் சென்று தங்கள் மனவருத்தத்தை கூறினர். அதனால், சினம் அடைந்த தர்ஷன், என் மற்ற மகளை சமமாக நடத்தாததால் நீ பதினைந்து நாள் தேய்ந்து அழகை இழந்து. மீண்டும் 15 நாள் வளர்ந்து அழகு பெறுவாய் என்று சபித்தார். அதன்படி தேய்பிறை, வளர்பிறை பௌர்ணமியானான்.

சந்திரனின் பெயர்கள்

சோமன், சோமநாதன், சந்திரன், மதி, திங்கள், குமுதன், விது, ராஜ்நீஷ், ``ராஜ்’’ என்றால் இரவு ``நீஷ்’’ என்றால் தெய்வம். மனிதர்களுக்கும் சந்திரனுக்கும் மனரீதியாக தொடர்பு உண்டு. ஒருவரின் மனம், உணர்வுகள், ஆரோக்கியம், அழகு ஆகியவை பிரதானமாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் மட்டும், தாயிற் சிறந்த உறவு காரணமாக இருப்பவனே சந்திரன்.

புராண செய்திகள்

முன்னொரு காலத்தில், ரேவா நதிக்கரை ஓரம் உள்ள காட்டில் ``வேதவித்’’ என்ற முனிவர் தன் பெற்றோருடன் வசித்து வந்தார். வயது முதிர்ந்த பெற்றோர்கள், இன்பமுடன் இருக்க தன் வாழ்வை துறந்தான். பெற்றோருக்கு சேவைகளைச் செய்து பேரின்பம் அடைந்தான். காலம் கடந்தது.. இயற்கையின் விதிப்படி பெற்றோர்கள் மரணத்தைத் தழுவினர். வேதவித் தனிமையில் வாடினான். திருமாலை நோக்கி தவம் செய்ய விரும்பினான்.

இப்பொழுது அசரீரி தோன்றியது. ‘சக்யம், மகேந்திரம்’ என்னும் இரு மலைகளுக்கு இடையே இருக்கின்ற இடம் ``வரகுணமங்கை’’ என்னும் தலமாகும். அங்கு, சென்று திருமாலை நினைத்து மந்திரத்தை உச்சரித்து தவம் இருந்தால், அருள் கடாட்சம் கிடைக்கும் என்றுகூறி ஒலி மறைந்தது. அதன் பின்பு வேதவித், ஆசனத்தில் அமர்ந்து கடுமையாக மந்திரங்கள் உச்சரிதான்.திருமால் மகிழ்ந்து வேதவித் முன்தோன்றி முக்தி கொடுத்தார். அத்தலமே இவ்விடம் ஆகும்.

மீனவன் ஆன்மா ஜோதியாதல்

சுமார் 1000 வருடங்களுக்கு முன், உரோமேசர் முனிவர் காட்டில் வாழ்ந்து வந்தார். விஷ்ணுவின் தீவிரமான பக்தர். எம்பெருமான் தரிசனம் காண கடுமையாகத் தவம் செய்தார்.

வைகுண்டத்தில் விஷ்ணு, மகாலட்சுமியிடம் தன் பக்தன் விடாமல் தவம் இருக்கிறான். அவனுக்கு அருள் புரிந்து தரிசனம் தரவேண்டும் என்றார். மேலும், நவக்கிரகங்களில் சந்திரன் தலம் உருவாக நேரம் கூடிவிட்டது. தயவு காட்டுங்கள் பிரபோ என்றார். அதற்கு, நிச்சயமாக செய்கிறேன் என்ற விஷ்ணு, உரோமேசர் முன்பு தோன்றினார்.

அவருக்கு அருட்கடாட்சம் வழங்கினார். திருமாலின் அருள் பெற்ற உரோமேசர் முனிவர், தன் சீடன் சத்தியவானுடன் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் சத்தியவான், தாமிர பரணி ஆற்றின் கரையில் ஆகநாசதீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருக்கும் பொழுது, எதிர் கரையில் மீனவன் ஒருவன் மீன்களைப் பிடித்து கரையோரம் உலர்த்தி வருவதைக் கண்டான்.

நீரில் வாழும் மீன்களை துன்பப்படுத்துகிறானே? உயிர்களை கொள்ளலாமா? இவனுக்கு நரகம் அல்லவா கிடைக்கும் என்று எண்ணினார். அப்போது ஒரு விபரீதம் நடந்தது. மீனவன் பாதத்தை அரவம் தீண்டியது. அக்கணமே மீனவன் வாயில் நுரை தள்ள, சற்று நேரத்தில் மரணம் அடைந்தான். அச்சமயம், ஆன்மா ஜோதியாக மேல் நோக்கி சொர்க்கம் செல்வதைக் கண்டு வெலவெலத்து போனான் சீடன்.

உயிர்களை கொன்று குவித்தவனுக்கு எவ்வளவு எளிதாக முக்தி கிடைத்துவிட்டதே என குழம்பி நின்றான். அக்காட்சியை தன் குருவிடம் நடந்ததை எடுத்துரைத்தான். பாவம் செய்தவனுக்கு முக்தி கிடைக்குமா? என்று குருவினிடம் கேட்க; உரோமேசர் சிரித்துக் கொண்டு,``சீடனே.. மீனவன் முற்பிறவியில் விதர்ப்ப நாட்டின் மன்னன். ஒழுக்கத்தில் நல்லவன். தானதர்மம் செய்யக் கூடியவன். கர்மத்தின் காரணமாக, கூடா நட்புகொண்டு தீய செயல்களில் ஈடுபட்டான். கர்மாவினை தொடர்ந்ததால் இப்பிறவியில் மீனவனாக பிறந்தான். தன் பாவம் நீங்க, அவன் முற்பிறவியில் செய்த புண்ணிய - தானதர்மங்கள் இப் பிறப்பில் அவனுக்கு துணை நின்றது. வரகுணமங்கை விஜயாசன பெருமாள் அருளால் முக்தி கிடைக்க, ஆன்மா, ஜோதியாக திருமாலின் திருவடிகளை அடைந்தது.உரோமேசர் முனிவர், விதர்ப்ப நாட்டு மன்னரின் முற்பிறவி ரகசியத்தை தன் ஞானக்கண்ணால் கண்டு, சீடனுக்கு எடுத்துக் கூறிய தலம், இந்த தலமாகும்.

தேவ அசுர போர்

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே சண்டை ஏற்படுவது எப்பொழுதும் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. அக்னிதேவனும் இந்த சண்டையில் ஈடுபட்டு, ஏராளமான அசுரர்களை அழித்தான். தாரகன், கமலாட்சன், பராசு, விரோசனம் ஆகிய அசுரர்கள், தேவர்களுக்கு பயந்து கடலில் ஒளிந்து கொண்டனர். தேவர்கள் மனநிம்மதி அடைந்தனர். அசுரர்கள் ஒளிந்தார்கள் என இருந்தாலும், எதிர்பாராத நேரத்தில் எதிர்பட்டு தேவர்களுக்கு துன்பத்தை அளித்தனர். கடலில் மறைந்த அசுரர்களை எப்படி வெளியே கொண்டு வருவது என இந்திரன் யோசித்தான்.

இந்திரன், அக்னியை அழைத்து; ``அசுரர்களை அழிக்க வேண்டும். கடலில் ஒளிந்து கொண்டவர்களுக்கு அரணாக நின்று தேவர்களை காப்பாற்று. கடலில் உள்ள நீர் வற்றி போகும் படி செய்’’ என ஆணையிட்டான். இந்திரனின் கட்டளையில் அக்னிபகவானுக்கு விருப்பம் இல்லை. கடலில் உள்ள பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் யாவும் அழிந்துவிடுமே? இது அதர்மம் அல்லவா? என சிந்தித்தார். அதனால் இப்பாவச் செயல் தன்னால் செய்ய முடியாது என உரைத்தார். மதியிழந்த இந்திரன், ஆக்ரோஷமாக அக்னிதேவன் மீது வெகுண்டு பூமியில், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வரகுணமங்கை தலத்தில் மனிதனாக பிறப்பாய் எனச் சாபம் கொடுத்தான்.

அக்னி தீர்த்தம் தோன்றியது எவ்வாறு?

பூமியில் மனிதனாக பிறந்த அக்னிதேவன், வரகுணமங்கை இடத்தில் அக்னிதீர்த்தத்தை ஏற்படுத்தினார். அதில் நீராடி, விஜயாசன பெருமாள் மீது பக்தியுடன் தவம் இருந்து பூஜித்து வந்தார். திருமால், அகம் மகிழ்ந்து அக்னிக்கு முன் விஜயாசன பெருமாளாகத் தோன்றினார். அக்னிதேவன், திருமாலை வணங்கினார். திருமால், பாவ விமோசனம் அளித்தார். தலத்தின் சிறப்புஉற்சவர், தன்னை நாடிவரும் பக்தர்களின் துன்பத்தை களைந்ததால் ``எம்கடர்கடிவான் பெருமாள்’’ என சிறப்பிக்கப்படுகிறார்.

மேலும், நம்மாழ்வார் பாசுரம் பாடிய தலம்

“புளியங்குடிக் கிடந்து

வரகுண மங்கையிருந்து

வைகுந்தத்துள் நின்று

தெளிந்த வென் சிந்தையகங் கழியாதே

என்னை யாள்வாய்!

எனக்கருளி

நளிர்ந்த சீருலக மூன்றுடன் வியப்ப

நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப

பளிங்கு நீர் முகிலின்

பவளம் போல் கனிவாய்

சிவப்ப நீ காண வாராயே”

சந்திரன் பரிகார பலன்

யோக நரசிம்மருக்கு பிரதோஷமாக சிறப்பு பூஜையும், திருமஞ்சனம் வைபவமும் நடைபெறும். ஒன்பது வாரங்கள் நெய்தீபம் ஏற்றி வணங்கினால், எண்ணியது கைகூடும் என்பது ஐதீகம்.

பிரார்த்தனை

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று எண்ணுவோர், இத்தலத்திற்கு வந்து இறைவனை பிரார்த்தித்தால், குழந்தைப் பாக்கியம் கிட்டும். பிள்ளைகள், கல்வியறிவில் முதன்மை பெற, இவரை வணங்கினால் நினைவாற்றல் பெருகும். தடையின்றி கல்விப் பெறலாம்.

நேர்த்திக் கடன்

நினைத்ததை கை கூடிய பின்பு,

திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றினால் நல்லது.

மூலவர்: விஜயாசன பெருமாள்.

உற்சவர்: எம்இடர்கடிவான்.

தாயார்: வரகுணவல்லி, வரகுணமங்கை.

தீர்த்தம்: அக்னி, தாமிரபரணி.

விமானம்: விஜயகோடி.

நடை திறக்கும் நேரம்: காலை 9:00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2:00 முதல் மாலை 5:30 மணி வரை திறந்திருக்கும்.

எப்படி செல்வது: திருநெல்வேலியில் இருந்து சுமார் 21 கி.மீ., பயணித்தால் இத்திருத்தலத்தை அடையலாம்.

பொன்முகரியன்

 

Advertisement

Related News