தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பரிவர்த்தனை யோகம்

இரண்டு கிரகங்கள் தம்முடைய சொந்த வீடுகளை மாற்றி இயங்கும் தன்மை அமையும்போது ஆட்சி, உச்சம் பெறுவதற்கு இணையாக பலன்களை தருகின்றன. இவற்றை வைத்து கிரகங்கள் எப்படி இயங்குகின்றன? எப்படி பலம் பெறுகின்றன என்ற ஒரு சிந்தனைக்குள் சென்றாலும் குழப்பமே மிஞ்சும். ஆம், அப்படி கிரகங்கள் ஒவ்வொன்றும் பரிமாற்றம் பெற்று இயங்கும் தன்மையை பரிவர்த்தனை யோகம் எனச் சொல்லுகிறோம். அவற்றிலிருந்து இன்னும் அதிகப்படியான பலன்களை அறியலாம். ஒருவருடைய ஜாதகத்தில் ஏராளமான கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றிருப்பது பரிவர்த்தனை யோகமாகும்.

பரிவர்த்தனை யோகத்தின் அமைப்பு

பரிவர்த்தனைகளில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் சுப கிரகங்கள் பரிவர்த்தனை, அசுப கிரகங்கள் பரிவர்த்தனை, சுப - அசுப கிரகங்கள் பரிவர்த்தனை என்றும் சொல்லலாம். சுப கிரகங்கள் பரிவர்த்தனை எப்பொழுதும் ஜாதகருக்கு சுப பலன்களை வாரி வழங்கும் தன்மையாக உள்ளது. அசுப கிரகங்கள் பரிவர்த்தனை பெறும் ஜாதகருக்கு கிடைக்கும் பலன்கள் யாவும் அசுப பலன்களை தருகின்றன. அசுப - சுப கிரகங்கள் / சுப - அசுப கிரகங்கள் பலன்கள்யாவும் முழுமையான சுபம் இல்லாததாகவும் முழுமையான அசுபமாகவும் உள்ளது மிகவும் வியப்புக்குரியதாக இருக்கிறது. மேலும், பரிவர்த்தனை செய்யும் கிரகங்கள் யாவும் வேறு பார்வைகள் இருந்தாலும் சப்தமமாக ஒருவரை பார்த்துக் கொள்வதிலும் நின்ற வீடுகளின் பலன்களை செய்வதிலும் அதுமட்டுமின்றி சில இடங்களில் (4ம்) நான்காம், பத்தாம் பார்வையாலும் (10ம்) பரிவர்த்தனை பெற்று இயங்குகின்றன. இந்த பரிவர்த்தனை அமைப்புகளிலும் கிரகங்கள் மறைவிடங்களுக்குள் சென்றாலும் இயங்கும் அமைப்பைக் கொண்டுள்ளது. உதாரணமாக, 7-ல் உள்ள கிரகம் 12-ம் இடத்திலும். 12-ம் இடத்தில் உள்ள கிரகம் 7-ம் இடத்திலும் பரிவர்த்தனை பெறும் பொழுது, 12-ம் பாவகமும் இயங்கும் அமைப்பைக் கொண்டுள்ளது. பொதுவாக, மறைவு ஸ்தானங்களில் உள்ள கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றால் இன்னும் சிறப்பாக வேலை செய்கின்றது.

பொதுவான பலன்கள்

* இயங்கிக் கொண்டே இருப்பது ராஜயோக அமைப்பாக சொல்லப்படுகின்றது. இந்த பரிவர்த்தனை பெற்ற ஜாதகர் சாதாரணமாக இருப்பார். திடீரென்று அசுர வளர்ச்சியை பெற்று வேறு ஒரு நிலையில் இருப்பார்.

* சில நேரங்களில் அசுப கிரகங்கள் பரிவர்த்தனை பெற்று அசுப தன்மையை இழந்து ஜாதகருக்கு சுப பலன்களை தரும் அமைப்பாக இருக்கின்றது.

* அசுப கிரகப் பரிவர்த்தனை ஏற்பட்டால் சிலருக்கு விபரீத ராஜயோகம் ஏற்படுகின்றது.

* ஜாதகர் எதையும் புதிய கோணத்தில் சிந்திக்கும் அமைப்பை உடையவராக இருப்பார். அவரின் எண்ணமே அவருக்கு பல விஷயங்களில் எதிர்பாராத வெற்றிகளை தேடித்தரும்.

வித்தியாசமான பரிவர்த்தனை யோகப் பலன்கள்

*ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் (2ம்), பதினொன்றாம் அதிபதியும் (11ம்) பரிவர்த்தனை பெற்றால். ஜாதகருக்கு லட்சுமி கடாட்சத்தை வாரி வழங்கும் அமைப்பாக இருக்கும். ஜாதகர் பொருள் ஈட்டுவதில் திறமையானவராகவும் மிகுந்த யோகக்காரராகவும் இருப்பார். இவர் தொடங்கும் தொழில்கள் அனைத்தும் வெற்றியைத் தரும்.

* ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் (2ம்), ஒன்பதாம் அதிபதியும் (9ம்) பரிவர்த்தனை பெற்றால் அதனை லட்சுமி யோகம் என்று சொல்வார்கள். இந்த லட்சுமி யோகத்தில் பிறந்தவர்களை பணம் தேடிவரும் என்பார்கள். இவர்களிடம் பண ஈர்ப்புச் சக்தி உண்டு.

* ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதியும் (9ம்), பத்தாம் அதிபதியும் (10ம்) பரிவர்த்தனை பெற்றால், அந்த ஜாதகர் தர்மங்கள் செய்பவனாகவும் கோயில், குளங்கள் கட்டுபவனாகவும் இருக்கிறான். இதனை தர்மகர்மாதிபதி யோகத்திற்கு இணையாகச் சொல்கிறார்கள். கோயில் கட்டுவதிலும் குளங்கள் வெட்டுவதிலும் தன் தனத்தை தானமாகக் கொடுப்பர்.

* ஜாதகத்தில் பொதுவாக பதினோராம் அதிபதி (11ம்) ஆறாம் இடத்தில் (6ம்) அமரக்கூடாது எனச் சொல்லப் படுகிறது. ஆனால், பதினோராம் அதிபதி ஒரே கிரகமாக இருந்தால் அதுவும் அசுப கிரகமாக இருந்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இவர்களுக்கு பெரிய வெற்றி ஏற்படும் பொழுது உடல் சுகவீனம் ஏற்படும். நன்றாக இருக்கும்பொழுது வெற்றி ஏற்படாது.

* ஜாதகத்தில் சிலருக்கு நான்காம் அதிபதியும் (4ம்) பத்தாம் அதிபதியும் (10ம்) பரிவர்த்தனை பெறுவதும் திடீரென எதிர்பாராத பணவரவை ஏற்படுத்தும். அதற்கு திசா- புத்திகளும் கோச்சார கிரகங்களும் துணை நிற்கும் அமைப்பாக இருக்கும்.

Related News