தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பனை ஓலைகளில் எழுதி காத்த மகான்

14 மகான்

Advertisement

உடுப்பி அஷ்ட மடங்களில் மிக முக்கிய மடம் ``பலிமார் மடம்’’. ஏறக்குறைய 31 சந்நியாச பீடாதிபதிகளை கொடுத்துள்ளது இந்த மடம். இம்மடத்தின் முதல் பீடாதிபதி ``ஸ்ரீ ரிஷிகேஷ தீர்த்தர்’’ (Shri Hrshikesha Teerthar). இவரைப் பற்றிதான் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்.

நற்பண்புகளை கடைப்பிடித்த மகாஞானி ஸ்ரீ ரிஷிகேஷ தீர்த்தரும், மத்வரின் நேரடி சீடர் என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கு எவ்வித ஆதாரமும் சரிவர கிடைக்கவில்லை. ஆனால், ரிஷிகேஷ தீர்த்தர், மத்வ துறவி களிலே மிகவும் மூத்தவர் என்று குறிப்பிடுகிறது, ``மத்வ விஜயம்’’ என்னும் நூல். இதனை இயற்றியவர், நாராயண பண்டிதாச்சார்யா ஆவார். அதே போல், மத்வரின் சிறந்த சீடர் என்ற பெருமையை, ஸ்ரீ ரிஷிகேஷ தீர்த்தர் பெற்றிருந்தார் என்றும் அந்நூல் தெரிவிக்கிறது. நாராயண பண்டிதாச்சார்யா, ஸ்ரீ ரிஷிகேஷ தீர்த்தரைப் பற்றி மேலும் குறிப்பிடுகையில்;

``வசீக்ருதஹ்ருஷிகாஷ்ச’’(Vasikrutahrushikasha)

என்னும் மந்திரத்தோடு ஒப்பிட்டு, ரிஷிகேஷ தீர்த்தருக்கு புகழாரம் சூட்டுகிறார்.அதன் விளக்கம்: ``ஹ்ருஷிகா’’ என்றால் புலன்கள். யாருமே கட்டுப்படுத்த முடியாத அந்த புலன்களை, தன் தவவலிமையால், ஸ்ரீ ரிஷிகேஷ தீர்த்தர் மிக கடுமையாக கடைப்பிடித்து, கட்டுப் படுத்தியிருக்கிறார். சுய ஒழுக்கம் என்பது ஒவ்வொரு தனிநபரும் கடைபிடிக்க வேண்டிய ஓர் நற்பண்பாகும். அதிலும், ஒரு துறவிக்கு சுய ஒழுக்கம் என்பது இன்றியமையாதது அல்லவா!

ஸ்ரீ ரிஷிகேஷ தீர்த்தர் உட்பட மத்வரின் அனைத்து சீடர்களும் தங்கள் புலன்களின் மீது அதீத எச்சரிக்கையையும், கட்டுப்பாட்டையும் கொண்டிருந்தார்கள். இத்தகைய மாபெரும் பெருமை மத்வ சாம்ராஜ்யத்திற்கே உரித்தானது.

அழகிய ராமர்

மத்வர், தனது சீடர்கள் ஒவ்வொருவருக்கும் தான் பூஜை செய்துவரும் விக்ரகங்களை கொடுத்து, அந்த விக்ரகங்களுக்கு அவர்களை பூஜை செய்ய உத்தரவிடுவார். அவ்வாறு, ஸ்ரீ ரிஷிகேஷ தீர்த்தருக்கும், சாநித்திய மிக்க சீதா, ஆஞ்சநேயர் மற்றும் லட்சுமணனுடன் அழகிய ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி ஆகிய விக்ரகங்களை வழங்கினார். இந்த விக்ரகங்கள், சுமார் ஏழு நூற்றாண்டுகளாக, ஸ்ரீ ரிஷிகேஷ தீர்த்தரின் வழியில் வந்த பலிமார் மடாதிபதிகள் இன்றும் இடைவிடாது பூஜித்து வருகிறார் என்பது பகவானின் அனுக்கிரகத்தை தவிர, வேறு என்னவாக இருக்க முடியும்!

ரிஷிகேஷ தீர்த்தருக்கு, மத்வர் கொடுத்த ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்றுகூட சொல்லலாம். அத்தகைய அழகோ.. அழகு! ராமச்சந்திரமூர்த்தியின் மலர்ந்த புன்னகையுடன் கூடிய அவரது தாமரை முகத்தின் அழகைக் காணும் போது, ஹாஹா... இரண்டு கண்கள் போதாது! ராமச்சந்திரமூர்த்தியின் தாமரை முகம், அக்ஞானம் என்னும் நமது சம்சார சாகரத்தை தடுத்து, ஞானத்தை தரும் திறன் கொண்டது என்பதில் துளிக்கூட சந்தேகமில்லை.

பனை ஓலைகளில் கிரந்தங்கள்

ஸ்ரீ மத்வாச்சாரியாரின் `சர்வமூல கிரந்தங்களை’, பனை ஓலைகளின் மூலம், தன் கைகளினாலே எழுதி, அவற்றை பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த மாபெரும் ஞானி, ஸ்ரீ ரிஷிகேஷ தீர்த்தர். அந்த பனை ஓலைகளில் எழுதிய கையெழுத்துப் பிரதிகளை, இன்றும் பலிமார் மடத்தில் காணலாம். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா! எமக்கும் அப்படித்தான் இருந்தது. அதுமட்டுமா.. சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ரிஷிகேஷ தீர்த்தர் கையால் எழுதப்பட்ட ஓலையை, இன்றுவரை பலிமார் பீடாதிபதிகள் பாதுகாத்து வருகின்றார்கள். அதற்காக, நிச்சயம் அனைத்து பலிமார் மடம், பீடாதிபதிகளின் பாதங்களை மானசீகமாக தொட்டு நமஸ்கரிக்க வேண்டும்.

தற்போது, பலிமார் மடத்தின் பீடத்தை அலங்கரித்து வருபவர், ``ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தர்’’ ஆவார். இவரின் சத்சங்க சாதனைகளை சொல்லிமாளாது. பலிமார் மடத்தின் 28வது பீடாதிபதியான ``ஸ்ரீ வித்யாமான்ய தீர்த்தரின்’’ அபிமான சீடர்தான், ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தர். இவரின் பூர்வாஸ்ரம பெயர் `ரமேஷ தந்திரி’. மத்வரின் துவைத சித்தாந்தம் இவரை ஈர்க்க, வித்யாமான்ய தீர்த்தரிடத்தில் சீடராக இணைந்தார்.

வைர கவச்சம்

காலையில் சமஸ்கிரத கல்லூரியில் படிப்பு, மாலையில் வித்யாமான்ய தீர்த்தரிடத்தில் `வேதாந்தம்’, `இலக்கணம்’, `சுமத்வ விஜயம்’, `தாத்பர்ய நிர்ணயம்’ போன்ற பாடங்களை கற்றுத்தேர்ந்தார். பின்னர், தான் சந்நியாசியாக வேண்டும் என்கின்ற விருப்பத்தை வித்யாமான்ய தீர்த்தரிடத்தில் தெரிவிக்க, ரமேஷ தந்திரிக்கு ``ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தர்’’ என்னும் பெயர் சூட்டி, சந்நியாசம் வழங்கினார். இவரின் 2002 - 2004 ஆண்டு உடுப்பி பர்யாயம் காலத்தில், உடுப்பி கிருஷ்ணருக்கு ``வைர கவச்சம்’’ சாற்றி அழகு பார்த்தார். ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தருக்கு திருப்பதி திம்மப்பன் மீது அளவு கடந்த பக்தி, அன்பு எல்லாம். ஆகையால், பலிமார் மடத்தின் கிளைகள் எங்கெல்லாம் புதியதாக ஆரம்பிக்கப்படுகிறதோ.. அங்கெல்லாம் `வெங்கடாஜலபதி’ பெருமாளை பிரதிஷ்டை செய்ய எண்ணினார்.

வெங்கடாஜலபதி பிரதிஷ்டை

ஸ்ரீரங்கத்தை அடுத்த ஜம்புகேஸ்வரர் கோயில்கொண்டுள்ள திருவானைக்காவலில் கொண்டையம்பேட்டை என்னும் இடத்தில் காவேரி கரை ஓரத்தில் ``மகான் ஸ்ரீ ராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனம்’’ இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இம்மடம், கவனிப்பாரற்ற நிலையில் இருந்தது. அப்போது, இந்த இடத்திற்கு விஜயம் செய்த ஸ்ரீ வித்யா திஷா தீர்த்தர், உடனடியாக புதுப்பிக்க உத்தரவிட்டார். மேலும், இங்கு சிறிய அளவிலான வெங்கடாஜலபதியையும் பிரதிஷ்டை செய்ய ஆணையிட்டார். இன்று இங்கு ராகவேந்திரரின் ஜெயந்தி, ஆராதனை, அனுமன் ஜெயந்தி, புரட்டாசி வழிபாடு என சிறப்பாக இயங்கிவருகிறது.

அதே போல், சென்னை அண்ணாநகரில் பலிமார் மடம் உள்ளது. இங்கும் வெங்கடாஜலபதி பிரதிஷ்டை ஆகியிருக்கிறார். சுமார் ஆறடியில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இதோ.. புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் சிறப்பு அலங்காரம் இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இவையெல்லாமே.. குருமார்களின் ஆசிகள்.

பிருந்தாவனம் பிரவேசம்

இத்தகைய மாபெரும் குருவான ஸ்ரீ ரிஷிகேஷ தீர்த்தர், தனது வாழ்நாள் முழுவதும் மத்வருக்காகவும், துவைத தத்துவங்களை மக்களிடையே சேர்ப்பதிலும் தன்னையே அர்ப்பணித்தார். விரோதி சம்வத்சரத்தில், மகா சுத்த சப்தமி (ரத சப்தமி) நாளில், கங்கா, யமுனா, சரஸ்வதி என்னும் மூன்று நதிகளும் ஒருமித்த ஒரே இடத்தில் சங்கமம் ஆகும் பிரயாகராஜ் (Prayagraj) திரிவேணி சங்கமம் இடத்தில், பகவானை தியானித்து, ஸ்ரீ ரிஷிகேஷ தீர்த்தர், ஆண்டவனிடத்தில் இரண்டறகளந்தார். தனியாக இவருக்கு பிருந்தாவனம் இருப்பதாக தெரியவில்லை.

``விரோதிமாக்ஹார்ஜுனஸப்தமிதிதௌ

வரோ ஹ்ரீஷிகேஷமுனிஸ்தபஸ்விநாம்

புருப்ரபோதார்யகாரப்ஜஸம்பவோ

தாரஸுதேஷாங்ஹரிஸரோஜமேயிவான்’’

மத்வ மகானின் பயணம் தொடரும்...

பலிமார் மடத்தின் குரு பரம்பரை

01. ஸ்ரீ ரிஷிகேஷ தீர்த்தர்.

02. ஸ்ரீ சமத்மேஷ தீர்த்தர்.

03. ஸ்ரீ சம்பவ தீர்த்தர்.

04. ஸ்ரீ அபராஜிதா தீர்த்தர்.

05. ஸ்ரீ வித்யாமூர்த்தி தீர்த்தர்.

06. ஸ்ரீ ராஜராஜேஸ்வர தீர்த்தர்.

07. ஸ்ரீ நிதி தீர்த்தர்.

08. ஸ்ரீ விதேச தீர்த்தர்.

09. ஸ்ரீ வல்லப தீர்த்தர்.

10. ஸ்ரீ ஜகத்பூஷண தீர்த்தர்.

11. ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தர்.

12. ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர்.

13. ஸ்ரீ சுரேச தீர்த்தர்.

14. ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர்.

15. ஸ்ரீ ரகுநந்தன தீர்த்தர்.

16. ஸ்ரீ வித்யாபதி தீர்த்தர்.

17. ஸ்ரீ ரகுபதி தீர்த்தர்.

18. ஸ்ரீ ரகுத்தம தீர்த்தர்.

19. ஸ்ரீ ராமபத்ர தீர்த்தர்.

20. ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர்.

21. ஸ்ரீ ரகுபுங்கவ தீர்த்தர்.

22. ஸ்ரீ ரகுவர தீர்த்தர்.

23. ஸ்ரீ ரகுபிரவீர தீர்த்தர்.

24. ஸ்ரீ ரகுபூஷண தீர்த்தர்.

25. ஸ்ரீ ரகுரத்ன தீர்த்தர்.

26. ஸ்ரீ ரகுப்ரியா தீர்த்தர்.

27. ஸ்ரீ ரகுமான்ய தீர்த்தர்.

28. ஸ்ரீ ரகுவல்லப தீர்த்தர்.

29. ஸ்ரீ வித்யாமான்ய தீர்த்தர்.

30. ஸ்ரீ வித்யாதிஷ தீர்த்தர்.

(தற்போதைய ஸ்வாமிஜி)

31. ஸ்ரீ வித்யா ராஜேஸ்வர தீர்த்தர்.

(இளைய ஸ்வாமிஜி)

ரா.ரெங்கராஜன்

Advertisement

Related News