நவராத்திரி!
*கொலு என்றால் அழகு என்று பொருள். கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். பெரும்பாலும் இந்தியாவின் தென் பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் பகுதிகளில் இவ்வழிபாட்டு முறை நடைபெறுகிறது..
*இப்பண்டிகை பொதுவாக தமிழ்மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையை அடுத்து வரும் பிரதமை திதியிலிருந்து10நாட்கள் கொண்டாடப்படுகிறது. மற்றொரு விளக்கமாக மனிதன் படிப்படியாக தன்னிலையில் கடந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த கொலுப்படிகள் அமைக்கப்படுகிறது.
*நவராத்திரி கொலு என்பது அன்னை சக்தி தேவியின் சிறப்பையும் வீரத்தையும் பாராட்டும் விதமாக இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை வைத்து கொலு வைப்பதுதான் சிறப்பு. அவரவர் வசதிப்படி முப்பெரும் தேவியர்களைக் குறிக்கும் மூன்று படிகளாகவும், சக்தியின் சக்கரத்தைக் குறிக்கும் ஐந்து படிகளாகவும், சப்தமாதர்களை ஏழு படிகளாகவும், நவகிரகங்களை குறிக்கும் ஒன்பது படிகளாகவும் வைக்கலாம்.
*நவராத்திரியில் வைக்கப்படும் பொம்மைகளை எப்போதும் கிழக்கு திசையை பார்த்தபடியே எடுக்க வேண்டும்.
- எஸ்.சுரேந்திரன், சென்னை.