தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நரசிம்மரை கொடுத்த மத்வர்!

12 மகான்

Advertisement

அதமார் என்னும் கிராமம்

இந்த தொகுப்பில் நாம் காணும் மகான் ``ஸ்ரீ நரசிம்ம தீர்த்தர்’’, இவர் உடுப்பி அஷ்ட மடங்களில் ஒன்றான அதமார் மடத்தின் முதல் சந்நியாச பீடாதிபதியாவார். இவருக்கு சந்நியாச தீட்சை கொடுத்தவர், ஸ்ரீ மத்வாச்சாரியார். அதமார் மடம், உடுப்பியின் தேரடி தெருவின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. இந்த மடத்தின் பிரதான மடம், அதமார் என்று அழைக்கப்படும் கிராமத்தில் உள்ளது. அதமார் மடத்தின் மூல சமஸ்தான விக்ரகம், ஸ்ரீ நரசிம்மமூர்த்தி ஆவார். இந்த நரசிம்மமூர்த்தியை மத்வர், ஸ்ரீ நரசிம்மதீர்த்தருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், நான்கு கரங்களுடன் கூடிய கலியமர்த்தன கிருஷ்ணர் விக்ரகத்தையும் மத்வர், பரிசாக அளித்ததாக நம்பப்படுகிறது.

சுமத்வ விஜயம் கூறும் உண்மை

``கலியமர்த்தன கிருஷ்ணர்’’ என்றால், கிருஷ்ணர் பகவான் ஒரு காலை பாம்பின் மீது வைத்தும், மற்றொரு காலை உயர்த்தி நடனமாடும் தோரணையில் இருப்பதே ஆகும். இன்றும்கூட, ஸ்ரீ விஷ்வபிரிய தீர்த்தர் மற்றும் ஸ்ரீ ஈஷாபிரிய தீர்த்தர் ஆகிய அதமார் மடத்தின் பீடாதிபதிகள், இந்த விக்ரகங்களுக்கு பூஜைகள் செய்வதை நம்மால் பார்க்க முடியும். தற்போதுள்ள ஸ்ரீ விஷ்வபிரிய தீர்த்தர், 1972 - ஆண்டு, ஜூன் 2 - ஆம் தேதி, தனது 15வது வயதில் தன் குருவான ஸ்ரீ விபுதேஷ தீர்த்தரிடத்தில் சந்நியாச தீட்சை பெற்றார்.

ஸ்ரீ நரசிம்ம தீர்த்தரின் பூர்வாஷ்ரமத்தின் பெயர் இன்னும் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றது. இவரின் சீடர், ``ஸ்ரீ கமலக்ஷண தீர்த்தர்’’ ஆவார். நரசிம்ம தீர்த்தர் பல ஆண்டு காலம் அதமார் மடத்தை நிர்வகித்தும், பல புனித யாத்திரைகளுக்கு சென்றும், துவைத தத்துவத்தை விஸ்தரிப்பு செய்தார் என்று மத்வ நூலான ``ஸ்ரீ சுமத்வ விஜயம்’’ என்னும் நூல் கோடிட்டு

காட்டியுள்ளது.

கஜபதி ராஜ்ஜியம்

மேலும், தனது தபஸ் சக்தியால் (தவ வலிமையால்) பல அற்புதங்களை செய்துள்ளதாக அந்நூல் தெரிவித்துள்ளது. தனது கடைசி காலத்தில், ஸ்ரீ கமலக்ஷண தீர்த்தருக்கு ஆசிரமத்தைக் கொடுத்துவிட்டு, மீண்டும் வட இந்தியாவிற்கு யாத்திரைக்கு சென்றார். ஸ்ரீ நரசிம்ம தீர்த்தர்தான் ஸ்ரீ நரஹரி தீர்த்தர் (கஜபதி ராஜ்ஜியத்திலிருந்து மூல சீதா ராமரின் விக்ரகத்தை கொண்டு வந்த ஸ்ரீ பத்மநாப தீர்த்தரின் வாரிசு) என்றும் சிலரால் நம்பப்பட்டு வருகிறது. ஆனால், அவர்கள் இருவரும் ஸ்ரீ மத்வாச்சாரியாரின் சிஷ்யர்களாக இருந்த வெவ்வேறு நபர்கள்தான் என்று கூறும் வலுவான பாரம்பரியம் மற்றும் சான்றுகள் உள்ளன.

ஒரு முறை ஸ்ரீ மத் மத்வாச்சாரியார், பத்ரிக்ஷேத்திரத்திற்குச் சென்று தனது குருவான வேதவியாசரை சந்திக்கிறார். அப்போது, வேதவியாசர், தனது பிரம்மசூத்திரத்திற்கு விளக்கம் (பாஷ்யம்) எழுதும்படி அறிவுறுத்துகிறார். அவரின் ஆணைக்கு இணங்க, தென்னிந்தியாவிற்கு மத்வர் திரும்பியதும், அத்வைத தத்துவத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய அறிஞர்களான ஷோபனா பட்டா மற்றும் ஷ்யாமா சாஸ்திரி ஆகியோருடன் விவாதங்களை நடத்துகிறார்.

இஸ்லாமிய மன்னன்

இதில், மத்வர் வெற்றியடைகிறார். அப்போது விவாதித்த இரண்டு அறிஞர்களும், மத்வரால் ஈர்க்கப்பட்டு சந்நியாசத்தை எடுத்துக் கொண்டு, அவருடைய சீடர்களானார்கள். ஷோபனா பட்டாதான் பிற்காலத்தில், புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாப தீர்த்தராகவும், ஷ்யாமா சாஸ்திரிதான் ஸ்ரீ நரஹரி தீர்த்தராகவும் ஆனார்கள். உடுப்பிக்கு மத்வர் திரும்பியதும், மத்வாச்சாரியார் பல்வேறு படைப்புகளை எழுதத் தொடங்கினார் ``துவைத சித்தாந்தம்’’ எனப்படும் புதிய தத்துவத்தை நிறுவினார். அந்த சமயத்தில், வட இந்தியாவிற்கு தனது இரண்டாவது பயணத்தை மேற்கொண்டார், மத்வர்.

அப்போது, டெல்லியில் உள்ள ``ஜலாலுதீன் கில்ஜி’’ யைச் சந்தித்து, உருது மொழியில் பேசியும், கங்கை நதியில் நடப்பது போன்ற பல்வேறு அற்புதங்களைச் செய்துக்காட்டினார். இதனைக் கண்ட ஜலாலுதீன் கில்ஜி, மெய்மறந்து மத்வரையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தார். அன்று முதல் ஜலாலுதீன் கில்ஜியும் மத்வரின் பக்தரானார் என்பது தனி வரலாறு.

முக்கிய பீடாதிபதிகள்

அதமார் மடத்தின் மிக முக்கிய மூன்று மடாதிபதிகளைப் பற்றி பார்ப்போம்.

1) ஸ்ரீ விபுதேஷ தீர்த்தர்.

2) ஸ்ரீ விஸ்வப்ரிய தீர்த்தர். (தற்போதுள்ள ஸ்வாமிஜி)

3) ஸ்ரீ ஈஷப்ரிய தீர்த்தர். (ஜூனியர் ஸ்வாமிஜி)

ஸ்ரீ விபுதேஷ தீர்த்தர்

1928 - ஆம் ஆண்டு, ஸ்ரீ விபுதேஷ தீர்த்தர் பிறந்தார். தனது குழந்தைப் பருவத்தில், மகாத்மா காந்தியின் உரைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். அதே சமயத்தில், மத்வரின் துவைத கொள்கை பிடித்துப்போக, 1945 - ஆம் ஆண்டு, அப்போதைய பலிமார் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ரகுமான்ய தீர்த்தரின் வழிகாட்டுதலின் கீழ், துறவுப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். ``மீமாம்சம்’’, ``வேதாந்தம்’’ போன்ற பல பாடங்களில் விபுதேஷ தீர்த்தருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. சமஸ்கிருதம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றார்.

மேலும், விபுதேஷ தீர்த்தர் ஒரு சமஸ்கிருதப் பள்ளி ஒன்றையும் நிறுவினார். பின்னர் அப்பள்ளி, மடத்திற்குள் ஒரு தொடக்கப் பள்ளியாகவும், வேதப் பள்ளியாகவும் உள்ளடக்கி விரிவடைந்தது. மேலும், உடுப்பியில் ``ஸ்ரீ பூர்ணபிரஜ்னா’’ என்னும் கல்லூரியை நிறுவினார். அவரது தலைமையின் கீழ், 35க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்று செழித்து வளர்ந்துள்ளது.

சமூகம் மற்றும் கல்வியின் முன்னேற்றத்திற்கு, ஸ்ரீ விபுதேஷ தீர்த்தர் முக்கியத்துவம் கொடுத்தார்.

இன்று பூர்ணபிரஜ்னா கல்வி நிறுவனங்களின் வெற்றியில் அவரது பங்கு மகத்தானது. அதே போல், தற்போதுள்ள உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்காக, ஒரு அற்புதமான வெள்ளி ரதத்தை செய்து கொடுத்திருக்கிறார். மிக முக்கியமாக, தேச சேவைக்காகவும், தேசத்திற்காக நிதி திரட்டுவதற்காகவும் விபுதேஷ தீர்த்தர், பல வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ விஸ்வப்ரிய தீர்த்தர்

ஸ்ரீ விபுதேஷ தீர்த்தருக்கு பின், அதமார் மடத்தின் பீடாதிபதியாக தற்போதுவரை இருப்பவர், ஸ்ரீ விஸ்வப்ரிய தீர்த்தர் ஆவார். ஸ்ரீ குருராஜா முச்சிந்தயா மற்றும் ஸ்ரீமதி லட்சுமி ஆகியோருக்கு ஐந்தாவது குழந்தையாக ஜூன் 30, 1958 அன்று புட்டிகே அருகே உள்ள முதுபிதாரேயில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர், ராகவேந்திர முச்சிந்தயா ஆகும். 1966 - ஆம் ஆண்டு, திருமலையில் உபநயனம் செய்து கொண்டு, புட்டிகேயில் உள்ள ஒரு பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பெற்று, ஜூன் 1, 1972 அன்று, அதமார் பர்யாயம் சமயத்தில், தனது குருவான ஸ்ரீ விபுதேஷ தீர்த்தரிடத்தில் சந்நியாச மேற்றுக் கொண்டார்.

அதன் பின், ஸ்ரீ சுகுனேந்திர தீர்த்தர் (புட்டிகே மடம்), ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தர் (பலிமார் மடம்) மற்றும் ஸ்ரீ வித்யேச தீர்த்தர் (பண்டாரகெரே மடம்) ஆகியோருடன் இணைந்து, சாஸ்திரங்களைப் படிப்பதற்காக, பலிமார் மடத்தின் அப்போதைய பீடாதிபதி ஸ்ரீ வித்யாமான்ய தீர்த்தரிடத்தில் பயின்றார்.

1984 - ஆம் ஆண்டு, ஸ்ரீ விஸ்வப்ரிய தீர்த்தர், அதமார் என்னும் இடத்தில் ``நியாய சுதா’’ என்னும் மிக உயரிய துவைத வேதாந்தத்தை கற்றுத்தேர்ந்தார். தனது வாழ்நாள் முழுவதும் ஸ்ரீ ஸ்வாமிகள், சாஸ்திரம் பற்றிய தனது ஆழ்ந்த அறிவை ஏராளமான மதிப்பிற்குரிய அறிஞர்களுடன் பகிர்ந்துக் கொண்டு வருகிறார். உடுப்பி கோயிலின் மையமாக இருக்கும் ``கனக கோபுரத்தை’’ தனது இரண்டாவது பர்யாயத்தின் போது ஸ்ரீ விஸ்வப்ரிய தீர்த்தர் கட்டி முடித்தார்.

ஸ்ரீ ஈஷப்ரிய தீர்த்தர்

ஸ்ரீ விஸ்வப்ரிய தீர்த்தர், தனக்கு பின் ஸ்ரீ ஈஷப்ரிய தீர்த்தர்தான் என்பதனையும் அறிவித்துவிட்டார். 1985 - ஆம் ஆண்டு, மார்ச் மாதம், 20 - ஆம் தேதி, ஹிரியாட்காவிற்கு அருகிலுள்ள ஷிரூர் என்னும் கிராமத்தில், ஸ்ரீ எஸ்.சந்திரசேகர் மற்றும் ஸ்ரீமதி கௌரி ஆகியோருக்கு நான்காவது மகனாக பிறந்தார், ஸ்ரீ ஈஷப்ரிய தீர்த்தர். தனது பள்ளிப்படிப்பை ஷிமோகாவில் உள்ள தீர்த்தஹள்ளியில் பயின்றார். 2006 - ஆம் ஆண்டு, ஷிமோகாவில் உள்ள ஜவஹர்லால் நேரு தேசிய பொறியியல் கல்லூரியில், இயந்திர பொறியியலில் (Mechanical Engineering) இளங்கலைப் பொறியியல் (BE) பட்டம் பெற்றார். சிறுவயதிலிருந்தே, ஆன்மிகத்தில் பெரிதும் நாட்டம் கொண்டவர். ``சமஸ்கிருத இலக்கணம்’’, ``மகாபாரத தாத்பர்ய நிர்ணயம்’’, ``விஷ்ணு தத்வ நிர்ணயம்’’, ``அமரகோசம்’’ போன்ற வேதாந்த நூல்களை படித்துத் தேர்ந்தார்.

2014 - ஆம் ஆண்டு, ஜூலை 19 ஆம் தேதி, குஞ்சருகுரியில் உள்ள ஸ்ரீ துர்கா தேவி கோயிலில், ஸ்ரீ ஈஷப்ரிய தீர்த்தருக்கு பிரம்மாண்டமாக பட்டாபிஷேக விழா நடைபெற்றது. இதில், பலிமார் மடத்தை சேர்ந்த ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரும், ஸ்ரீ விஸ்வப்ரிய தீர்த்தரும் இணைந்து, ஸ்ரீ ஈஷப்ரிய தீர்த்தருக்கு சந்நியாச தீட்சையை வழங்கினார்கள். மேலும், பலிமார் மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்த ஸ்வாமிஜியின் வழிகாட்டுதலின் கீழ், ஸ்ரீ ஈஷப்ரிய தீர்த்தர், சாஸ்திர அத்யாயனத்தைத் தொடக்கி,தற்போதுவரை பயின்று வருகிறார்.

அதோடு, பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, கவலை கொண்ட ஸ்ரீ ஈஷப்ரிய தீர்த்தர், பிளாஸ்டிக் இல்லாத மாற்று வழிகள் சிலவற்றை மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறார். இத்தகைய மகான்களின் குருவாக ஸ்ரீ நரசிம்ம தீர்த்தர் இருந்திருக்கிறார் என்பதில் அனைவருமே பெருமைக் கொள்ள வேண்டும். ஸ்ரீ நரசிம்ம தீர்த்தர், அதமார் மடத்தையும் தான் தாங்கி வந்த பீடத்தையும், ``ஸ்ரீ கமலேஷ்ண தீர்த்தரிடம்’’ ஒப்படைத்த பிறகு, அவர் பாகீரதி ஆற்றின் அருகே பிருந்தாவனமானார் என்று கூறப்படுகிறது.

ஆனால், இதற்கான சான்றுதல்களோ அல்லது அவரின் மூல பிருந்தாவனமோ ஏதும் காணப்படவில்லை. ஆராய்ச்சியில் மட்டுமே இன்னும் இருந்து வருகிறது.ஸ்ரீ நரசிம்ம தீர்த்தரின் ஆராதனை, சைத்ர சுத்த பஞ்சமி அன்று அனுசரித்து வருகிறது.

ஸ்ரீ அதமார் மடத்தின் குருபரம்பரை

1. ஸ்ரீ நரசிம்ம தீர்த்தர்.

2. ஸ்ரீ கமலக்ஷண தீர்த்தர்.

3. ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தர்.

4. ஸ்ரீ வித்யாதிஷ தீர்த்தர்.

5. ஸ்ரீ விஸ்வபதி தீர்த்தர்.

6. ஸ்ரீ விஸ்வேச தீர்த்தர்.

7. ஸ்ரீ வேதநிதி தீர்த்தர்.

8. ஸ்ரீ வேதராஜ தீர்த்தர்.

9. ஸ்ரீ வித்யாமூர்த்தி தீர்த்தர்.

10. ஸ்ரீ வைகுண்டராஜ தீர்த்தர்.

11. ஸ்ரீ விஸ்வராஜ தீர்த்தர்.

12. ஸ்ரீ வேதகர்ப்ப தீர்த்தர்.

13. ஸ்ரீ ஹிரண்யகர்ப்ப தீர்த்தர்.

14. ஸ்ரீ விஸ்வாதிஷ தீர்த்தர்.

15. ஸ்ரீ விஸ்வவல்லப தீர்த்தர்.

16. ஸ்ரீ விஸ்வேந்திர தீர்த்தர்.

17. ஸ்ரீ வேதநிதி தீர்த்தர்.

18. ஸ்ரீ வதீந்திர தீர்த்தர்.

19. ஸ்ரீ வித்யாபதி தீர்த்தர்.

20. ஸ்ரீ விபூதபதி தீர்த்தர்.

21. ஸ்ரீ வேதவல்லப தீர்த்தர்.

22. ஸ்ரீ வேதவந்திய தீர்த்தர்.

23. ஸ்ரீ வித்யேஷா தீர்த்தர்.

24. ஸ்ரீ விபுதவல்லப தீர்த்தர்.

25. ஸ்ரீ விபுதவ்ஸ்ந்த்வ தீர்த்தர்.

26. ஸ்ரீ விபுதவர்ய தீர்த்தர்.

27. ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர்.

28. ஸ்ரீ விபுதாதிராஜ தீர்த்தர்.

29. ஸ்ரீ விபுதப்ரியா தீர்த்தர்.

30. ஸ்ரீ விபுதாமான்ய தீர்த்தர்.

31. ஸ்ரீ விபுதேஷ தீர்த்தர்.

32. ஸ்ரீ விஸ்வப்ரியா தீர்த்தர்.(தற்போதைய சுவாமிஜி)

33. ஸ்ரீ ஈஷப்ரிய தீர்த்தர்.

(இளைய சுவாமிஜி)

ரா.ரெங்கராஜன்

Advertisement

Related News