ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்திற்கு செலுத்தும் நாமங்கள்
இந்த முறை மூன்று நாமங்களை
சேர்த்துப் பார்க்க இருக்கிறோம்.
ஸ்ரீ மத் வாக்பவ கூடைக ஸ்வரூப
முக பங்கஜா
கண்டாத கடிபர்யந்த மத்ய கூட
ஸ்வரூபிணீ
ஸக்தி கூடைகதாபந்ந கட்யதோ
பாகதாரிணீ
இதற்கு முன்னர் இரண்டிரண்டு நாமங்கள் சேர்த்துப் பார்த்தோம். இந்த முறை மூன்று நாமங்கள் பார்ப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இதற்கு முந்தைய நாமம் வரைக்கும் இருக்கின்ற விஷயம் பண்டாசுர வதம் சம்பந்தமானது. பண்டாசுர யுத்தத்தில் தொடங்கி அந்த சைன்னியத்தை சொல்லி, பண்டாசுர வதத்தைச் சொல்லி, தேவர்கள் ஸ்துதி செய்ததைச் சொல்லி அம்பாளினுடைய பிரபாவத்தோடு அந்த சரித்திரமாகவே அமைந்து விட்டது. லலிதா சஹஸ்ரநாமத்தின் மாதா என்கிற முதல் மூன்று நாமத்தில் தொடங்கி, பிறகு சிதக்னி குண்ட சம்பூதா என்று வந்து, பிறகு கேசாதி பாதாந்த அங்கங்கள் வர்ணனைக்கு வந்து, பிறகு பண்டாசுர யுத்தம் வந்து, தேவர்கள் ஸ்துதி வரையிலும் நாம் பொதுவாக ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். இதுவரையிலும் வந்த நாமங்கள் அனைத்துமே அம்பாளின் ஸ்தூல ரூப வர்ணனையைச் சொல்லியது.
இந்த ஸ்தூல ரூப வர்ணனையைப் பார்க்கும்போதே, இந்த சாதகனுக்குள் என்னென்ன நடக்கின்றது என்று பார்த்துக் கொண்டேதான் வந்தோம். இந்த ஸ்தூல ரூபத்திற்குள்ளேயே சூட்சுமமான வேலையும் நடக்கின்றது என்று பார்த்தோம். அதற்கடுத்ததாக இப்படி ஸ்தூல ரூபத்தில் இருந்து கொண்டு, சூட்சுமமாக வேலை பார்க்கின்ற அந்த வஸ்துவானது… நமக்குள் சூட்சுமமாக ஏற்கனவே இருக்கிறது. முதலில் அது ஸ்தூல ரூபத்தில் துவைத பாவத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு அது சூட்சுமமாக வேலை பார்க்கிறது. அங்கு ஒரு சம்பந்தம் வருகின்றது. அங்கு விசிஷ்டாத்வைதம் இருக்கிறது. அதற்கடுத்து சூட்சுமமாக உள்ள வஸ்துதான் ஸ்தூலமாக இருக்கிறது. ஸ்தூலமாக இருக்கிற வஸ்துதான் சூட்சுமமாக இருக்கிறது. ஆக மொத்தம் இருக்கிற வஸ்து ஒன்றுதான். அத்வைத பாவம்.
Starting with ஸ்தூலம் slowly proceeding towards சூட்சுமம். ஸ்தூலத்தில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த சாதகன் சூட்சுமமாக நகர்கிறான். இப்போது இதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமெனில், from known to unknown. Known என்கிற ஸ்தூலத்தில் ஆரம்பித்து unknown என்கிற சூட்சுமத்திற்கு போகிறது. ஆனால், known ல் இருப்பவனை கொண்டு போய் un known ல் வைத்தால் அவனுக்கு எதுவுமே புரியாது. உண்மையில் சொல்லப் போனால் known ல் பார்த்த விஷயத்திற்கும் unknownல் பார்த்த விஷயத்திற்கும் வித்தியாசமில்லை. இது வேறு, அது வேறு என்று நினைத்துக் கொள்வான். Known is not different from unknown. ஆகவே, இந்த knownக்கும் unknownக்கும் இடையில் சூட்சுமமான சம்பந்தத்தை காண்பித்துக் கொடுக்க வேண்டும். அந்த சூட்சுமமான சம்பந்தத்தை இந்த மூன்று நாமாக்கள் நமக்கு காண்பித்துக் கொடுக்கின்றது.
ஏனெனில், இதற்கு முன்னால் உள்ள நாமங்கள் அனைத்தும் அம்பிகையினுடைய ஸ்தூல ரூபம். இதற்கு பின்னால் வரக்கூடிய சில நாமங்கள் அம்பிகையினுடைய சூட்சும ரூபம். மந்திர ரூபம். இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மூன்று நாமங்களும் ஸ்தூலத்தையும் சூட்சுமத்தையும் தொடர்புபடுத்துகிறது. அதனால்தான் இந்த மூன்றையும் சேர்த்துப் பார்க்கிறோம். எப்படி தொடர்புபடுத்துகிறது என்பதையும் நாம் நுட்பமாக சென்று அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்னால் நாமங்களில் ஸ்தூலமாக அம்பாளை பார்த்தோம் அல்லவா? இனி வரக்கூடிய நாமாக்களில் சூட்சுமமாக மந்திரமாக அம்பாளின் ரூபமாக பார்க்கப் போகிறோம்.
இந்த மூன்று நாமாக்களும், மந்திரம் என்கிற சூட்சுமத்தை அம்பாள்… அம்மா… என்கிற ஸ்தூலத்தில் வைத்துப் பார் என்று சொல்கிறது. எப்படிப் பார்ப்பது என்பதையும் நாமாவே சொல்லிக் கொடுக்கிறது.
இந்த ஸ்தூலத்திற்கும் சூட்சுமத்திற்கும் அதாவது known to unknown ஐ எப்படி குருநாதர் கொடுக்கிறார் எனில், மந்திர உபதேசம் மூலமாக கொடுக்கிறார். என்ன மந்திர உபதேசம்? இது முழுக்கவே லலிதா சஹஸ்ரநாமமாக இருப்பதால், அம்பாள் விஷயமாக இருப்பதால், அம்பாளினுடைய விஷயம் எது மேலான மந்திரமெனில், வித்யா. அந்த வித்யா என்பது பஞ்சதசாக்ஷரி. இதைத்தான் குரு கொடுக்கிறார். அப்படிக் கொடுக்கும் சீடனுக்குள் என்ன மாற்றம் நடக்கிறதெனில், சீடனுக்கு ஸ்தூல சூட்சும பேதம் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. இந்த known, un known differenciation கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது.
ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்திற்கும், known லிருந்து, un knownக்கு, பேதத்திலிருந்து அபேதத்திற்கு அவன் பயணப்படுகிறான். இதெல்லாம் எப்படி நடக்கிறதெனில், குருவினுடைய மந்திர உபதேசத்தினால் நடக்கிறது. பஞ்சதசாக்ஷரியின் மூலம் நடக்கின்றது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில், குருவினுடைய வாயிலிருந்து என்ன வந்தாலும் அது மந்திரம்தான். அதுவே பஞ்சதசிதான். வித்யா மார்க்கத்தில் பஞ்சதசியை குரு கொடுப்பார்மந்திரத்தை அதை இல்லையென்று சொல்லவில்லை. இதையெல்லாம் தாண்டி குருவினுடைய வாக்கிலிருந்து என்ன வந்தாலும் அது பஞ்சதசிதான். அது மந்திரம்தான். குரு சொல்லக் கூடிய எதுவானாலும் அது மந்திரம்தான்.
இப்போது இந்த சீடனுக்குள் செல்கிறது. இது அவனுக்குள் சென்று என்ன மாற்றத்தை கொண்டு வரும். (அந்த பஞ்ச தசாக்ஷரியை இங்கு வெளிப்படையாக சொல்ல முடியாது). ஏனெனில், குரு சிஷ்ய ரகசியமாக வந்து கொண்டேயிருக்கிறது. பாஸ்கரராயர் வரிவஸ்யா ரகசியம் செய்திருக்கிறார். பஞ்ச தசாக்ஷரியின் விரிவாக்கம்தான் த்ரிசதி. சங்கர பகவத் பாதரே த்ரிசதிக்கு வியாக்கியானம் செய்திருக்கிறார். அப்படியெல்லாம் பார்க்கப்போனால் பஞ்சதசாக்ஷரிக்கு நிறைய ஆச்சார்யார்கள் நமக்கு நிறைய விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்கள். இப்போது இந்த பஞ்சதசாக்ஷரியை குரு கொடுத்தவுடனே சிஷ்யனுக்குள் என்ன செய்யுமெனில், மிகக் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும். மிக எளிமையான விஷயம்தான் ஆனால், ஆழமான விஷயம். (சுழலும்...)
ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா