தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஞ்ஞானத்தை நிர்மூலம் செய்யும் நாமங்கள்

மஹா பாசுபதாஸ்த்ராக்னி நிர்தக்தா ஸூர ஸைநிகா,
 
காமேஸ்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டஸூர சூன்யகா
இந்த முறை மேலே சொன்ன இரண்டு நாமங்களைச் சேர்த்துப் பார்க்கப் போகிறோம்.
பண்டாசுரனுடைய யுத்தத்தின் முடிவை பார்த்துக் கொண்டே வருகின்றோம். கிட்டத்தட்ட பண்டாசுர யுத்தத்தின் முடிவான இடத்திற்கு வந்திருக்கிறோம். இந்த இடத்தில்தான் இந்த இரண்டு நாமங்கள் வருகின்றன.
பண்டாசுரனுடைய மந்திரிகள் உட்பட அனைவரும் அழிந்து விட்டனர். இப்போது பண்டாசுரன் மட்டும் தனியாக இருக்கிறான். சிறிய படை மட்டும் இருக்கிறது. அம்பாளும், அம்பாளைச் சுற்றிலும் சக்தி சைன்னியம் இருக்கிறது.
இதை அப்படியே மனக்கண்ணில் நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
அதற்கு முன்பு வேறொரு தத்துவ விஷயத்தையும் பார்ப்போம்.
இந்த பண்டாசுரன் என்பவன் இந்த ஜீவாத்மாவிற்கு இருக்கக்கூடிய மூல அஞ்ஞானம். மூல அவித்யா. எதனால் இத்தனை ஜென்மாக்கள். எதனால் இத்தனை கர்மா உண்டாகின்றதோ அதற்குக் காரணமான மூல அவித்யாகவே இங்கு பண்டாசுரன் என்கிற உருவத்தில் நடுவில் இருக்கிறது. அவனைச் சுற்றிலும் இருக்கக் கூடிய சைன்னியங்களெல்லாம் அந்த மூல அவித்யையால் உண்டான அஞ்ஞான விருத்திகள். இதற்கு முன்பு எல்லாமே முடிந்து கொண்டேதான் இருந்தது. ஆனாலும், கடைசியாக விருத்திகள் இருக்கின்றது. இப்படி கடைசியாக இருக்கக் கூடிய இந்த விருத்திகளைத்தான் சாஸ்திரங்கள் வாசனை என்று சொல்கின்றன. எல்லாமே போனால் கூட அந்த வாசனை கொஞ்சம் இருக்கும். அந்த வாசனைதான் இப்போது இருக்கக்கூடிய அஞ்ஞான விருத்திகள். இதைத்தான் வாசனா மலம் என்றும் சொல்வார்கள். மலம் என்றால் அசுத்தம்.
சைவ சித்தாந்தத்தில் ஒரு உதாரணம் சொல்வார்கள். அதாவது ‘இங்குலி வாங்கிய கலம்’ என்பார்கள். சமையல் அறையில் பெருங்காயம் வைத்திருக்கிறோம் அல்லவா? அந்தப் பெருங்காயத்தை ஒரு டப்பாவில் வைத்திருக்கிறோம். பெருங்காயம் தீர்ந்து விட்டாலும் கூட, அந்த டப்பாவில் பெருங்காயத்தின் வாசனை அப்படியே இருக்கும். இதைத்தான் நாம் வாசனை என்கிறோம்.
இப்போது இந்த அஞ்ஞான விருத்திகள் சுற்றிலும் இருக்கிறது. அதற்கு வாசனா மலம் என்று பெயர். நடுவே மூல அஞ்ஞானம் பண்டாசுரன் இருக்கிறான்.
அம்பாள் இப்போது என்ன செய்ய வேண்டுமெனில், கடைசியாக உள்ள இந்த வாசனா மலத்தை அழிக்க வேண்டும். பிறகு, மூல அஞ்ஞானமான பண்டாசுரனை வதம் செய்ய வேண்டும். இது இரண்டும்தான் நடக்க வேண்டும். ஏனெனில், இந்த இரண்டுமே இந்த ஜீவாத்மாவோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது. ஏனெனில், ஜென்ம ஜென்மாந்தரமாக இந்த ஜீவாத்மா கடந்து வந்ததனால் அவ்வளவு எளிதில் அது போகவில்லை.
இப்போது இவை எல்லாவற்றையும் போக்கடிப்பதற்கு அம்பாள் கையில் இருப்பது என்னவெனில், சுவாமியினுடைய மகா பாசுபதாஸ்திரமான சிவ பெருமானுடைய அஸ்திரத்தை அம்பாள் கையில் எடுக்கிறாள். அந்த அஸ்திரத்தை எடுத்து அம்பாள் விடுகிறாள். இந்த ஒரே அஸ்திரத்தினால் சுற்றியிருக்கக் கூடிய ஒட்டுமொத்த சைன்னியமும் சாம்பலாகிப் போயிற்று. அந்த மொத்த சைன்னியத்தையும் இந்த ஒரு அஸ்திரம் எரித்து விட்டது. இப்போது முற்றிலும் வாசனா மலமானது துடைத்தெறியப் பட்டுவிட்டது. இப்படி துடைத்தெறிவதற்கு அம்பிகை உபயோகப்படுத்திய அஸ்திரத்தின் பெயர் மகாபாசுபதாஸ்திரம். அந்த மகா பாசுபதாஸ்திரம் சிவ பெருமானுடையது.
இப்போது மேலே பார்த்த விளக்கம்தான் இங்கு மஹா பாசுபதாஸ்த்ராக்னி நிர்தக்தா ஸூர ஸைநிகா… நாமமாக உள்ளது.
மகாபாசுபதத்திலிருந்து வரும் அக்னியால் பண்டாசுரனுடைய சைன்னியத்தைப் பொசுக்கியவள்.
இதற்கு அடுத்ததாக வரும் நாமமாக … காமேஸ்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டஸூர சூன்யகா வருகிறது.
இப்போது பண்டாசுரன் மட்டும்தான் இருக்கிறான். பண்டாசுரனை மட்டும் இப்போது சம்ஹாரம் செய்ய வேண்டும்.
எப்போதுமே ராம, ராவண யுத்தமாக இருக்கட்டும். முருகன் சூரபத்மனை அழிப்பதாக இருக்கட்டும், சுவாமியிடம் உள்ள மேலான அஸ்திரத்தை எடுப்பார். சூரபத்மனை அழிப்பதற்குத்தான் சுவாமி வேல் எடுப்பார். ராவணனை அழிப்பதற்குத்தான் ராமர் கடைசியில் நாராயண அஸ்திரத்தை எடுப்பார். எல்லா புராணங்களிலுமே அப்படித்தான் வரும். எல்லா அஸ்திரங்களையும் போட்டுக் கொண்டே வந்துவிட்ட பிறகு, கடைசி யாக எடுக்கும் அஸ்திரமானது மிகப் பெரிதாக இருக்கும்.
அம்பாளை பொறுத்தவரையில் இருப்பதிலேயே உயர்வான அஸ்திரம் எதுவெனில், நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். நாம் லலிதா என்று  அம்பாளை சொல்கிறோம். அது சிவசக்தி சொரூபம். அந்த சிவசக்தி ஐக்கிய சொரூபம் என்பது ஒன்றுதான். ஒரே பொருள்தான். ஆனால், நமக்காக காமேஸ்வர காமேஸ் வரியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. காமேஸ்வரனாக ஞானமாகவும் காமேஸ்வரியாக காருண்யமாகவும் வெளிப்படுத்திக்கொள்கிறது.
இப்போது அம்பாளை பொறுத்த வரையிலும் எது உயர்ந்த அஸ்திரமெனில், காமேஸ்வர அஸ்திரம்தான் உயர்ந்த அஸ்திரம்.
சுவாமியை பொறுத்தளவில் எது உயர்ந்ததெனில், அம்பாளின் அஸ்திரம்தான் உயர்ந்தது என்று சொல்வார்.
இப்போது இங்கு காருண்யம்தான் வேலை பார்த்து ஜீவாத்மாவினுடைய அஞ்ஞானத்தை அழிக்கின்றது. வேலை பார்ப்பது யாரெனில் காருண்யம். ஆனால், அந்த அஞ்ஞானத்தை அழிக்க வேண்டுமெனில் என்ன வேண்டும்? அங்கு ஞானம் வேண்டும். அதனால் அம்பிகை என்ன செய்கிறாளெனில் தன் பெயரில் இருக்கக்கூடிய அஸ்திரத்தை உபயோகப்படுத்தவில்லை. லலிதாஸ்திரம் என்றோ அல்லது காமேஸ்வரி அஸ்திரம் என்றோ இல்லை. ஏன் இல்லை… என்றால் அம்மா என்றாலே அங்கு முழுக்க முழுக்க காருண்யம் அல்லது அன்பு. அங்கு அவள் பெயரில் ஒரு அஸ்திரம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில், அஸ்திரம் என்றாலே ஒரு விஷயத்தைப்போய் அழிக்கப்போகின்றது. அம்மா என்றைக்குமே ஒரு விஷயத்தை அழிக்க மாட்டாள் அல்லவா? அதனால் இங்கு ஞானம் என்கிற அஸ்திரத்தைத்தான் உபயோகப்படுத்த வேண்டும். அந்த ஞானம் என்கிற அஸ்திரம் யார்? அங்கு ஞானமாக இருப்பவர் யாரெனில் காமேஸ்வரர். அந்த காமேஸ்வரர் பெயரில்தான் அஸ்திரமே இருக்கிறது. அதற்காக அவர் அழிப்பாரா என்றால், அஞ்ஞானத்தை ஞானத்தால் அழிக்கவே வேண்டும். ஆனால், அதைச் செய்வது யாரெனில் காருண்ய ரூபமாக இருக்கக் கூடிய அம்பாள்.
அதனால் இப்போது அவள் வைத்திருக்கக் கூடிய உயர்ந்த அஸ்திரம் என்பது, சுவாமி வைத்திருக்கக் கூடிய ஞான சொரூபமான அஸ்திரம். அந்த ஞான சொரூபமாக இருக்கக் கூடிய காமேஸ்வராஸ்திரத்தை பிரயோகம் செய்த உடனே, அது நேராகச் செல்கிறது. இங்கு இந்த அஸ்திரத்தின் பிரபாவத்தைச் சொல்லால் உரைக்க முடியாது. இதற்கு முன்னால் நாம் பார்த்த பாசுபதாஸ்திரத்தின் பிரபாவத்தையே சொல்ல முடியாது என்றால், இதனுடைய பிரபாவத்தை சொல்லவே முடியாது. ஏனெனில், இது பாசுபதாஸ்திரத்தையும் தாண்டி, அம்பாளிடம் மட்டுமே பிரத்யேகமாக இருக்கக்கூடிய இந்த காமேஸ்வரா அஸ்திரம். இது நேராகச் சென்று பண்டாசுரனை அழித்து
சம்ஹாரம் செய்துவிடுகின்றது.
இங்கு ஒரு கேள்வி வரலாம். முதலிலேயே இந்த காமேஸ்வராஸ்திரத்தை போட்டிருந்தால் எல்லாம் முடிந்திருக்குமே என்று. ஆனால், இது ஜீவாத்மாவிற்குள் நடக்கக் கூடிய அவன் ஜென்ம ஜென்மாந்திரமாக கடந்து வரும் step by step process ஆகும். முதல் படியிலேயே பண்டாசுரனை அழித்தால் அந்த ஜீவாத்மா தாங்க வேண்டுமல்லவா? இப்போது எதனால் அம்பாள் காருண்யம் என்பது இங்கு புரியும். step by step process ஆக எப்படி கொண்டுபோக வேண்டுமென்பது அம்பாளுக்குத்தான் தெரியும். அதைச் செய்வதால்தான் காருண்ய சொரூபியாக இருக்கக்கூடிய அம்பாள் இந்த  யுத்தத்தை நடத்துகிறாள்.
இந்த காமேஸ்வரா அஸ்திரத்தை போட்டவுடனே, மூல அவித்யாவான… மூல அஞ்ஞானமாக இருக்கக் கூடிய பண்டாசுரன் வதம் செய்யப்பட்டு விட்டான். இப்போது பண்டாசுரன் அங்கு இல்லை.
அம்பிகையின் நகரத்திற்கு நகரம் என்று பார்த்தோம். பண்டாசுரனுடைய நகரத்திற்கு சூன்யகம் என்று பெயர். சூன்யக நகரத்திற்கு ஒன்றுமே இல்லை என்று அர்த்தம். இந்தப் பெயரே அஞ்ஞான விருத்திகள் என்று ஒன்று இல்லை என்பதை காண்பித்துக் கொடுக்கின்றது. ஆத்ம ஞானம் மட்டும்தான் முதலில் இருந்தது. இப்போதும் ஆத்ம ஞானம் மட்டும்தான் இருக்கிறது. இனி ஆத்ம ஞானம் மட்டும்தான் இருக்கும். அப்போது இந்த அஞ்ஞானம் என்பது ஒன்றுமே இல்லாமல் இருப்பது மாதிரி தெரிந்து, மீண்டும் ஒன்றுமே இல்லாமல் போகின்றது. இப்படி ஒன்றுமே இல்லை என்று காண்பிப்பதற்கு பெயராகத்தான் அவனுடைய பட்டினத்திற்கு சூன்யகம் என்று பெயர்.
முதலில் சைன்யம் போயிற்று. பிறகு பண்டாசுரன் சென்றான். இப்போது பண்டாசுரனும் சென்று சேர்ந்தான். சைன்யக நகரமும் எரிந்து சாம்பலாயிற்று.
இப்போது மொத்தமாக இருந்த இந்த ஜீவாத்மாவிடமிருந்த அஞ்ஞான விருத்திகள் என்று சொல்லக் கூடிய அந்தக் கடைசியாக இருந்த வாசனா மலம், இவற்றிற்கு காரணமாக இருந்த மூல அவித்யா, இந்த அவித்யாவிற்கு இடமாக இருந்த அந்த சூன்யகம் என்ற ஒன்றுமில்லை என்று சொல்லக் கூடிய அந்த நகரம். இவை அனைத்துமே முடிந்து போயிற்று.
இந்த இடத்தில் தத்துவார்த்தமாக ஒரு விஷயத்தைப் பார்க்கப் போகின்றோம்.
வேதாந்தத்தின் சாரமாக ஒரு விஷயத்தை பார்க்கப் போகிறோம். வேதாந்தம் எல்லாம் ஒன்று. எல்லாம் ஒன்று. நேதி… நேதி… இது இல்லை… இது இல்லை… என்று ஒவ்வொன்றையுமே கழித்துக் கொண்டே போகும்போது கடைசியில் எது இருக்கிறதோ... அது ஒன்றுதான் மிஞ்சும் என்று வேதாந்தம் சொல்கிறது.
இப்போது கடைசியாக அந்த ஒன்றுதான் இருக்கிறது என்று சொல்கிறீர்களே? அதற்கு முன்னால் இது இல்லை… இது இல்லை… என்று சொல்லிக் கொண்டே போகிறீர்களே. இப்போது பௌத்தம் என்ன சொல்கிறதெனில், எதுவுமே இல்லை என்று சொல்கிறது. பௌத்தம் சூன்ய வாதத்தைத்தான் சொல்கிறது. எதுவுமே இல்லை என்று தெரிந்து கொள்வதுதான் ஞானம் என்று சொல்கிறது. ஆனால், வேதாந்தம் என்ன சொல்கிறதெனில், எதுவுமே இல்லை என்று தெரிந்து கொள்வதற்கு ஞானம் இருக்க வேண்டிய அவசியமில்லைப்பா. இது எதுவுமே இல்லை என்று சொன்னதற்கு பிறகு, ஒன்று இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்குத்தான் ஞானம் வேண்டும் என்று வேதாந்தம் சொல்கிறது. இந்த இடத்தில்தான் பௌத்தத்திற்கும் வேதாந்தத்திற்கும் பெரிய ஒரு வித்தியாசம்
வருகின்றது. (சுழலும்)
Advertisement
Advertisement