தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருமணத் தடைக்கான காரணங்கள்!

செவ்வாய் தோஷம் மற்றும் ராகு - கேது தோஷங்கள் மட்டும் திருமணத்தடையை ஏற்படுத்துவதில்லை. நம் பாரம்பரிய ஜோதிடத்தில் இன்னும் பல தோஷங்கள் உள்ளன அவை, களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், நட்சத்திர தோஷம், பலதார தோஷம் போன்றவையும் திருமணத்திற்கு தடையை ஏற்படுத்துவதற்கான காரணமாக அமைகிறது. பொதுவில் சில நட்சத்திரங்களின் பெயர்களை கூறி, உதாரணமாக, மூலம், ஆயில்யம், கேட்டை போன்ற நட்சத்திரங்களுக்கு தோஷங்கள் உண்டு எனவும், திருமணம் செய்தால் ஆபத்து உண்டு என்பது போலவும், அவரவர்களாகவே, முடிவு செய்து திருமணத்தை தள்ளிப் போடுகின்றனர். இன்றைய வளரும் வயதின் அட்சய லக்ன ராசிகளுக்கு அத்தோஷங்கள் வேலை செய்யாது என்பதை உணர வேண்டும். உதாரணமாக, ஒரு ஜாதகத்தில் களத்தர காரகன் என்று சொல்லக்கூடிய சுக்கிர பகவான் பலவீனப்பட்டால், களத்திர தோஷம் என்பார்கள். ஆனால், நமது திருமண வயது காலத்தில், அட்சய லக்னத்திற்கு களத்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஏழாம் பாவகத்தின் அதிபதி பலவீனப்பட்டிருந்தால் மட்டுமே களத்திர தோஷம் என்று எடுத்துக் கொள்ளலாம். நமது அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில், தனிப்பட்ட கிரகங்களுக்கு தோஷங்களை பொருத்தி பலன் காண்பதில்லை.

அட்சய லக்னத்திற்கு மாங்கல்ய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய, எட்டாம் பாவகத்தின் நிலை சரியில்லை என்றால் மட்டுமே, மாங்கல்ய தோஷம் என்று கொள்ளலாம். அட்சய லக்னத்திற்கு ஏழாம் பாவகத்தோடு, வேறு சில பாவகங்களில் நிலையை பொறுத்து, இரண்டுக்கும் மேற்பட்ட திருமண யோகத்தை ஏற்படுத்தி விடும் என்பதை அறியலாம்.இவை மட்டும் திருமணத் தடைக்கு காரணம் கிடையாது. ஒரு வரன் பார்க்கும் முன்பு, அவரவர் ஜாதகங்களின் வினைப்பயன் என்ன என்பதை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற் போல், வரன் அமைத்தால் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். மாறாக, தனக்குத்தானே (அட்சய லக்ன அதிபதி) மற்றும் அவர்களது தாயார் (சந்திரன்), தந்தையார் (சூரியன்), சகோதர சகோதரிகள் (செவ்வாய்), மாமன் மாமி (புதன்), கிரகங்களே உறவுகளாக மாறி அவர்கள் மூலமாக, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி திருமணத் தடைகளை உண்டு பண்ணுகிறது. அதை களைவதற்கு அட்சயம் லக்ன பத்ததி ஜோதிடம் உங்களுக்கு பேருதவி செய்யும். எவ்வாறெனில், உங்களது அட்சய லக்னத்தின் படி, ஜாதக அமைப்பில் உள்ள கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் சுப நிகழ்வாகவும், சரியான நிலையில் இல்லை என்றால் அசுப நிகழ்வாகவும் அமையும் என்பதை கண்ணாடி போல் காண்பித்து விடும். அட்சய லக்ன கிரக அமைப்பு படி, வாழ்க்கை அமைத்துக் கொண்டால், வாழ்வு சிறப்பு பெறும்.

 

Related News