தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிறப்பு வாய்ந்த மகாபலிபுரம்

பல்லவர்கள் யார்?

இலங்கைக்கு அடுத்துள்ள மணி பல்லவத் தீவில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்களான சேரன், சோழன், பாண்டியன் போன்று தொண்டை மண்டலப் பகுதியை ஆண்டவர்கள் பல்லவர்கள். இவர்களை பஹலவர்கள் என்றும் அழைப்பர்.

தலைநகரம்

பல்லவர்கள், காஞ்சிபுரத்தை தலைநகரமாகக்கொண்டு சிறப்பாக ஆட்சிசெய்தனர். இந்த நகரத்திற்கு அருகில் கடற்கரை அமைந்ததால், கடல் வர்த்தகம் மேன்மையுடன் நடைபெற்றது. இயற்கைச் சூழலில் மாமல்லபுரத்தில் துறைமுகம் அமைந்தது பல்லவ மன்னர்களுக்கு பேருவுவகையாகத் திகழ்ந்தது. கடற்கரை கோயில்களுக்கும், சிற்பக்கலைகளுக்கும் அழியாத கலைத்திறனை வெளிப்படுத்தும் உன்னத படைப்பாகும். இவைகள் பொன்னேட்டில் பதிக்கப்பட்டன. வாணிபத்திற்கும் மட்டுமல்லாமல் பன்னாட்டு அறிஞர்கள் பல்லவர்களின் சிற்பக்கலை நுட்பத்தைக் காண இங்கேதிக் விஜயம் செய்துள்ளார்.

அரசு சின்னம்

சிங்கம், காளை மற்றும் கட்வங்கம் என்னும் ஆயுதச் சின்னங்கள் அரசு சின்னமாக அரசர்கள் பயன்படுத்தினர். இரண்டாம் நரசிம்மர் சிங்கத்தையும், நந்திவர்மன் காளையையும், முதலாம் பரமேஸ்வரர் கட்வங்கம் என்ற சின்னத்தையும் பயன்படுத்தினர்.

கட்வங்கம்

சிவபெருமானின் உக்ர தோற்றம். சிவனிடம் உள்ள ஆயுதங்களில் ஒன்று. இது எவ்வாறு இருக்கும் எனில், எலும்பினால் செய்யப்பட்ட தண்டுப்பகுதியும், முன்புறம் (கைத்தடி போன்று கை பிடிக்கும் இடத்தில்) தலையில் மண்டை ஓடு பொறிக்கப்பட்ட ஓர் ஆயுதமாகும். பொதுவாகபைரவர் கையில் வைத்திருப்பர். இவ்வாயுதம் உணர்த்தும் தத்துவம், மனித வாழ்க்கையில் நிலையாமைத் தன்மையையே குறிக்கும்.

மகேந்திரவர்மன்

சிம்ம விஷ்ணுவின் மகன், முதலாம் மகேந்திரவர்மன். சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி, காஞ்சியின் மீது முற்றுகையிட்டார். இவரிடம் போரிட்டு வெற்றி பெறாமல் தந்திரமாகத்தப்பித்தார், மகேந்திரவர்மன். கடற்கரைக்கு அருகில் மலைகள் இல்லை. ஆனால், கடற்கரையின் அருகே பாறைகள், சிறிய குன்றுகள் உள்ளன. பாறைகளை வெட்டி கோயில் படைத்தனர்.

குடைவரைக் கோயில்கள்

மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில்தான், முதன்முதலில் குடைவரைக்கோயில்கள் கட்டமைப்புக்கு அஸ்திவாரம் இட்டார்.

பட்டப்பெயர்கள்

சித்திரகாரப்புலி, சங்கீரண கதி, சத்ரு மல்லன், அவனிபாஜன் என்ற பட்டப் பெயர்களுடன் திகழ்ந்தவர், பரிவாதினி என்ற வீணை வாசிப்பில் வல்லவர். சிந்தனைக்கு விருந்தாகக்கடற்கரையில் உள்ள பாறைகளின் மீது மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்மன் யானையை வரைந்தான். பாறையில் வரைந்த யானையின் அழகைக் கண்டு ரசித்தவர். ஏன் பாறைகளை வெட்டி அழகுமிக்க சித்திரங்கள் பொறிக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியவுடன், சித்திர வேலைப்பாட்டுடன் குகைக்கோயில்கள் கட்ட செயலாற்றத் தொடங்கினார்.

நரசிம்மவர்மன்

மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்மன். இவர் மல்யுத்த வீரன். இவருக்கு “மாமல்லன்” என்ற சிறப்புப் பட்டப் பெயரும் உண்டு. எனவே, மாமல்லபுரம் என்ற துறைமுகம் ஏற்படுத்தி, இவரின் பெயரையே சூட்டினார். இவரின் சேனைப் படைத் தளபதி பரஞ்சோதி துணையுடன் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை போரில் வென்று வாதாபி கொண்டான் என்று பாராட்டும் புகழும் பெற்றவர். படைத்தளபதி பரஞ்ஜோதி 63 நாயன்மார்களில் ஒருவராவார். சிறுத் தொண்டரே பரஞ்சோதியார் ஆவார்.

1. குகைக்கோயில்கள் 2. தேவர்கள் 3. கற்சிலைகள் என்பன.

குகைக்கோயில்கள்

தந்தை மகேந்திரவர்மரை போலவேநரசிம்மவர்மரும், குகை கோயில்களை அமைத்தார். இருவர் கோயில்களுக்கும் வித்தியாசம் என்ன என்று கேட்டால், நரசிம்மவர்மன் குகைகளில் கோயில்களில் இவரின் விருதுப் பெயர்கள் மற்றும் ஓவிய வேலைப்பாடு மிகுதியாக காணப்படும். மகிஷாசுர மண்டபம், வராக மண்டபம், திரிமூர்த்தி மண்டபம் என்ற இம்மூன்று மண்டபங்களை நரசிம்மர் வடிவமைத்தார்.

கடற்கரை மண்டபத்தூண்களில் காணப்படும் வேலைப்பாடுகள், வாதாபி தூண்களிலும் ஒன்று போல ஒத்திருக்கும். மேலும்,வாதாபி சிற்பக்கலை, மாமல்லபுரத்தில் குகைக்கோயில், சுவர்களில் புராண செய்திகள் கூறும் ஓவியங்களை நாம் பார்க்கலாம். வராக அவதாரம், வாமன அவதாரம் ஆகிய இரண்டும் ஈரிடத்து குகை கோயில்களிலும் ஒன்று போலவே காணப்படுகிறது.

வராக குகை

இக்குகையில் விஷ்ணுவின் வராக அவதாரத்தை சித்தரிக்கும் புடைப்புச்சிற்பங்கள் உள்ளன. நேர்த்தியாகவும் காண்போரை கவரக்கூடியதாக உள்ளது.

மகிஷாசுர மண்டபம்

மகிஷாசுர மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடு பெருமைக்குரியது. துர்க்கை தன் வாகனமான சிம்மத்தின் மீது அமர்ந்து, எருமைத்தலை கொண்ட

அசுரன் மீது அம்புகளை பொழிகின்றாள். அவளைச் சுற்றிலும் அவள் படைகள் சூழ்ந்து இருக்கின்றன. அசுரனை சுற்றிலும் அவன் படைகள் இருப்பது போன்ற காட்சியைச் செதுக்கியது பல்லவரின் தனிச்சிறப்பு. சிற்ப கலைத் திறனுக்கு ஓர் எடுத்துக் காட்டானவை.

திரிமூர்த்தி குகை

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் நினைவுச் சின்னமாக இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. மிக அற்புதமான சிற்பங்கள் உள்ளன. தெய்வங்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே புராண மோதல்களை விளக்கும் இடமாக உள்ளது.

மண்டபங்கள்

மண்டபங்கள் என்பது மண்டபங்கள் அல்ல இவைகள் கோயில்களாகும். ஒவ்வொரு மண்டபத்திலும் இறைவன் இருக்க வேண்டிய மூலஸ்தானம் ஆகும். ஆனால், சில இடங்களில் வெறுமையாக காணப்படுகின்றது. ஒருவேளை இவ்விடத்தில் சிவலிங்கம் இருந்திருக்கலாம். இப்பொழுது வேலைப்பாடு மட்டுமே காணப்படுகின்றது.

ஒற்றைக்கல் கோயில்கள்

மகேந்திரவர்மன் குகைக்கோயில்களை அமைத்தான் என்றால் அவரை பின்பற்றியே நரசிம்மவர்மன், கல்லையே கோயிலாக அமைக்கும் புதிய வேலைப்பாட்டியில் இறங்கினார். பெரும் வெற்றி பெற்றார். பாமர மக்கள் கோயில்கள் என்பவற்றை பாண்டவர் தேர்கள் என்றும் பெயரிட்டனர்.

தர்மராசர் தேர்

சிவனுக்கு உரிய கோயிலாகும். இது மூன்று தளங்கள் கொண்ட விமானம். மூன்றிலும் உண்ணாழிகள் உள்ளன. உண்ணாழி என்பது கோயிலில் உள்ள கருவறை அல்லது கர்ப் கிரகமாகும். சுவரை சுற்றிலும் பல்வேறு கடவுள் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. தூண்கள் அடியில் சோமஸ் கந்தச் சிலைகள் செதுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பக்கச் சுவற்றில் நரசிம்மவர்மன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்ப (கலசம்) வளர்ச்சி போல காஞ்சி உள்ள கைலாசநாதர் கோயில் கும்பமாகும். இதனுடைய வளர்ச்சியே தஞ்சை பெரிய கோயிலில் கும்பமாகும். இம்மூன்றையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர் அறிந்துகொள்வர்.

பீமசேனன் தேர்

திருமாலுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும். மேற்கூரை அமைப்பு சாளர அமைப்பும் பௌத்த சமயக்கலை வளர்ச்சி தென்னாட்டில் பரவி இருந்ததை இந்த விமானத்தில் காணலாம். சிங்கங்கள் தூணுக்கு அடியில் உள்ளன. இக்கோயில் அமைப்பை ஒட்டியே சிதம்பரம் ஆயிரம் கால் மண்டபம் அமைந்துள்ளது.

அர்ஜுனன் தேர்

தர்மராஜர் பெயரை போன்று இதுவும் சிவன் கோயிலாகும். விமானம் 4 நிலைகளில் உள்ளது.

சகாதேவன் நகுலன் தேர்

பண்டைக் கால பௌத்த தைத்தீயத்தைப் பின்பற்றியே காணப்படுகின்றது. இது போன்ற பெரிய துர்கையின் கோயிலில் ஒன்று சாளுக்கிய நாட்டிலும்``அய்ஹோனே” என்னும் இடத்திலும் இருக்கிறது. சகாதேவன் தேர் அமைப்பை உடைய விமானங்கள் பல தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்பட்டன. அவற்றுள் ஒன்று திருத்தணிகையில் உள்ளது.

இந்த கோயிலின் முன்புறம் தெய்வங்களுக்குரிய வாகனங்களும் கல்லில் அமைந்துள்ளன. அவை நந்தி, சிங்கம், யானை என்பதாகும். சிவபெருமான், துர்க்கை,இந்திரன் ஆகியவர்களுடைய வாகனங்களும் இங்கே உண்டு.

திரௌபதி

இதுபோன்ற கோயில் காண கிடைத்தால் அருமை. தமிழ்நாட்டில் தேவதைகளுக்கு இருக்கும் சிறு கோயில்கள் போலவே அமைந்துள்ளன. துர்க்கா சிலையில் அமைந்துள்ள வேலைப்பாடு பல்லவர் சிற்பக்கலையை நன்கு விளக்குகிறது. இங்குள்ள கல் சிங்கம் நந்தி ஆகியவை இந்த கோயிலின் தமிழகத்தின் பண்பாட்டைடு சிறுகோயில்களை நினைப்பூட்டுகின்றது.

கற்சிற்பங்கள்

பாறைகளின் மீது புராணக் கதைகள் வாயிலாக விளக்கும் முறை நந்திவர்மன் பெயர் பெற்றவன். இதற்கு மகிஷாசுர மண்டபத்து குகைச் சிற்பங்கள் இருப்பதைக் காணலாம்.

கோவர்த்தன மலை

கண்ணன் அவன் அருகில் பலராமனும் பெரியவர்களாக தெய்வத் தன்மையுடன் காணப்படுகின்றனர். ஏனைய சிறியவர்களாக காண்கின்றனர். மக்களும் கவலைகொண்ட முகமும் சிறிது தெளிவடைந்த மன நிலையில் உள்ள சிற்பம் நன்கு உணர்த்துகின்றன. இடையர் வாழ்க்கையைக் குறிக்கும் சில காட்சிகளும் சிற்பமாக அழகாக வடித்து இருக்கின்றனர். இந்திரனின் கோபம் மழையாகப்பொழிய கண்ணன் ஒரு மலையைச் சுண்டு விரலால் தூக்கிப் பிடிக்கிறான். அம் மலைக்கு அடியில் அனைத்து உயிரினங்களும் நிற்பது போன்று காட்டி இருப்பது மிகவும் வியக்க தக்கதாகும். ஒருவன் பால் கறக்கிறான். ஒரு பசு தன் கன்றை நக்குகிறது. சிற்பி மிக நேர்த்தியாகச் காட்சிகளைக் செதுக்கி இருப்பது மிக அழகானது.

தவக்கோலம்

அர்ச்சுனன் தபசு, ஒற்றைப் பாறைககல்லில் செதுக்கப்பட்டு இருக்கின்ற நிலையை காண்கின்ற பொழுது நமக்கு வியப்பை உண்டாக்குகின்றன. மகாபாரதத்தில் அர்ஜுனன் குருசேத்திரப் போரில் வெற்றி பெற சிவபெருமானின் ஆயுதமான பாசுபதாஸ்திரம் பெறுவதற்காகக் கடுமையாகத் தவம் செய்யும் காட்சி. மலைமீது இருந்து தண்ணீர் கீழே விழுந்து, நாகர் மகிழ்ச்சியோடு நீராடுகிறான். பிராமணன் ஒருவர் தண்ணீர் குடத்தை தோள் மீது சுமந்து செல்கிறான். ஆற்றிற்கு மேற்புறமும் இரண்டு அன்னப்பறவைகள் ஆற்றில் விழுந்து நீராடி மகிழ்கின்றன.

கீழ்ப்புறம் ஒரு சிறிய பெருமாள் கோயில், சுற்றிலும் முனிவர் பலர் தவத்தில் இருக்க, இவர்களைப் பார்த்து பூனை ஒன்று, பின்னால்கள் மீது நின்று முன்னங்கால்களை தலைக்கு மேல் தூக்கச் செய்து யோக நிலையில் இருக்க அதனைக் கண்டு எலிகள் அச்சம் நீங்கி அன்பு கொண்டு அதனை பணிதல் நகைச்சுவைச் சித்திரம் பாறையில் செதுக்கு இருப்பது பல்லவன் கைவண்ணம்.

ராஜசிம்மன் கடற்கரையோரம் மூன்று கோயில்கள் கட்டினார்.

1. சத்திரிய சிகாமணி பல்லவேச்சுரம்,

2. ராஜசிம்ம பல்லவேச்சுரம்,

3. பள்ளிகொண்டருளிய தேவர் கோயில்.

முதல் இரண்டு கோயில்களும் கடல் களில் மூழ்கியது. ஆனாலும் பலிபீடம் கொடிமரம் இன்றும் உள்ளன.

தல சயனம்

இப்பொழுது உள்ள பள்ளிகொண்ட தேவர் கோயிலில் தல சயனம் என்று அழைக்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வாரால்மங்கல சாசனம் பாடப்பட்டுள்ளது. 108 திவ்ய தேச ஸ்தலங்களில் ஒன்று. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு சென்று வழிபட்டால் எளிதாக மங்கலம்கூடி வரும் என்பது ஐதீகம். திருமால் கோயிலுக்கு முன்பாக சிவன் கோயில் ஒன்றும் உள்ளது.

புலிக்குகை

மாமல்லபுரம் செல்லும் வழியில் சாலுவன் குப்பம் என்ற இடத்தில் செதுக்கப்பட்ட ஒரு அற்புதமான குகை. உண்மையில் இங்கே புலி சிற்பங்கள் எதுவும் கிடையாது. “யாளிக்குகை” அல்லது “சிம்மக் குகை” என்பதே பொருத்தமாகும். இம்மண்டபத்தை சுற்றி11 சிம்மத் தலைகள் அரைவட்ட அமைப்பில் பிரம்மாண்டமான பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்களாகும். புலிக்குகை மேடையில் மன்னன் அமர்ந்து கலை நிகழ்ச்சி, உற்சவம் நடைபெறும் போது காணும் இடமாகும் என்று கல்வெட்டில் “திருவெழுச்சில்” எழுதப்பட்டுள்ளது.

வெண்ணெய்ப் பந்து

சிறிய குன்றின்மீது ஒரு கருங்கல் உருண்டை வடிவத்தில் கீழே விழும் நிலையில் உள்ளது. இது கிருஷ்ணன், யசோதைக்கு தெரியாமல் பானையில் இருந்து வெண்ணெயை திருடியதை நினைவு கூரும் வகையில் இக்கல் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாறை வெடிப்பு

கடற்கரையில் பாறைகளின் மீது உப்பு காற்றும் மற்றும் மாசும் படிவதால் கற்கள் துளைகள் உண்டாகுகின்றன. விளிம்பு பகுதி மழுங்கி ஒரு குலைந்து சீர் அழிந்து போகின்றது.

யுனெஸ்கோ

அரசு, மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள் மற்றும் கடற்கரை பகுதியில் தொல்பொருள் சுற்றளவு மற்றும் யாத்திரைத்தளமாகும். இத்தலம் யூனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக 1984 - ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

பொன்முகரியன்

 

Related News