தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாண்டவதூதப் பெருமாள்

*திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று, திருப்பாடகம். ‘பாடு’ என்றால் ‘மிகப் பெரிய’; ‘அகம்’ என்றால் ‘கோயில்.’ எனவே இது திருப்பாடகம், பெரிய கோயில், என்றானது.

Advertisement

*கிருஷ்ணன் பாண்டவர் தூதனாக துரியோதனன் சபைக்குச் சென்றபோது, துரியோதனனின் சதியால் தன் ஆசனத்துடன் பாதாளத்தில் விழ, அப்போது கண்ணன் எடுத்த விஸ்வரூப திருக்கோலமே இக்கோயில் மூலவர் உருவம்.

*இந்த விஸ்வரூப கோலத்தை ஜனமேஜெய மகாராஜாவுக்கு கிருஷ்ணன் காட்டியருளி நிலைகொண்டது இக்கோயிலில்தான்.

*கருவறை விமானம் பத்ரவிமானம் என்றும் வேதகோடி விமானம் என்றும் போற்றப்படுகிறது.

*இன்னார் தூதன் என நின்றான் என்றும், குடை மன்னரிடை நடந்த தூதர் என்றும் திருமங்கையாழ்வார் இக்கண்ணனைப் போற்றிப் பாடியுள்ளார்.

*கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் 25 அடி உயரத்தில் பிரமாண்டமான வடிவத்தில் என்றும் மாறா புன்னகை திருமுகத்தில் தவழ, கிழக்கு நோக்கி பெருமாள் சேவை சாதிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டுமே இத்தனை உயர (25அடி) பெருமாள் அருள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

*மணவாளமாமுனிகள் இங்கு எழுந்தருளி பெருமாளை மங்களாசாஸனம் செய்தருளியுள்ளார்.

*கம்பீரமாகத் திகழும் திருமாலின் திருமார்பில் பிராட்டியும், வீற்றிருக்கிறாள். நிலவறையை பெயர்த்து தலைக்கு மேல் வைத்தால் எப்படி இருக்குமோ அதேபோன்று தோற்றமளிக்கிறது கருவறை.

*உற்சவமூர்த்தியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி, பூதேவிக்குப் பதிலாக இத்தலத்தில் ருக்மிணி, சத்யபாமா வீற்றிருப்பது வித்தியாச அற்புதம். ஆண்டாள், நர்த்தன கண்ணன், சுதர்சனர் ஆகியோரையும் கருவறையில் தரிசிக்கலாம்.

*சந்திரனின் மனைவியான ரோகிணி கிருஷ்ணனை நோக்கித் தவமிருந்து சந்திரனை மணமுடித்த தலம் இது. ஆகவே, இது ரோகிணி நட்சத்திரக்காரர்களின் பரிகாரத் தலம்.

*ரோகிணி நட்சத்திரத்தன்று இங்கு ரோகிணி தீபம் ஏற்றி, அது அணையும்வரை அடி பிரதட்சிணம் செய்து கண்ணனுக்கு முறுக்கு, வெண்ணெய், சீடை நிவேதித்து விநியோகித்தால் உத்யோகத்தடை, திருமணத்தடை நீங்குகின்றன.

*தனக்கு ஞானம், சக்தியளித்து விஸ்வரூப தரிசனமளித்த கண்ணனை, ரோகிணி தினமும் சூஷ்மவடிவில் வழிபடுவதாக ஐதீகம்.

*கிருஷ்ணர் தன் கால் கட்டைவிரலை அழுத்தி விஸ்வபாத யோகத்தைப் பரப்பியதால் இது கிருஷ்ண பூமி என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் அங்க பிரதட்சிணம் செய்தால் உடலின் 72,000 நாடிகளும் சுத்தி பெறும் என்கிறார்கள்.

*திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோர் இவரை மங்களாசாஸனம் செய்துள்ளனர்.

*ராமானுஜரிடம் வாதப் போரிலே தோற்ற யக்ஞ மூர்த்தி என்பவர் ராமானுஜரின் ஆற்றலை உணர்ந்து அவருடைய சீடராகி அருளாளப் பெருமான் என்றழைக்கப்பட்டார். இவருக்கு தனி சந்நதி ஒன்று உள்ளது.

*புதன்கிழமை, சனிக்கிழமை, அஷ்டமி திதி, ஆங்கில மாத எட்டாம் தேதிகளில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.

*பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தேவர்களுக்கும் வேண்டியதைத் தரும் இறைவன் என்று பாண்டவ தூதனைப் புகழ்கிறார்.

Advertisement

Related News