தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆடிப் பாடி வரவேற்போம் ஆடியை...

தமிழில் மாதங்கள் மொத்தம் 12. அதில் மிக முக்கியமானதாகவும் ஆன்மிக தொடர்புடையதாகவும் கருதப்படுகிற பக்தி மயமான மாதமாக ஆடி மாதம் விளங்குகின்றது. அப்படி மற்ற மாதங்களுக்கு இல்லாத பெருமையும் சிறப்பும் இந்த ஆடி மாதத்துக்கு மட்டும் உண்டு. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை, அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாதம் சூரியன் வடக்கிலிருந்து தெற்குத் திசை நோக்கி செல்லும் காலம் ஆகும். ஆடி மாதம் மழை பொழிவின் தொடக்கத்தை குறிப்பதால், தமிழர்கள் ஆடிப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அந்த மாதம் முழுவதும் திருவிழாக்களுக்கும் இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தட்சிணாயன புண்ணிய காலம்

தட்சிணாயன புண்யகாலத்தின் முதல் மாதமான ஆடி என்பது சூரியபகவான் தனது திசையை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மாற்றும் காலம். எனவே இந்த மாதம் பாரம்பரியமாக தட்சிணாயனத்துடன் தொடர்புடையது, இது தெற்கு நோக்கிய தருணம். இந்த காலம் இந்து தெய்வங்கள் மற்றும் தேவர்களின் இரவாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இருள், எதிர்மறை மற்றும் தீய சக்திகளின் ஆற்றல் வலுவடையும் என்று கூறப்படுகிறது.

ஆடி செவ்வாய்க்கிழமை

ஆடி வெள்ளிக்கிழமை போலவே ஆடி மாத செவ்வாய்க் கிழமை அம்மனுக்கு உகந்த நாள் ஆகும். அன்றைய தினம் அம்மனுக்கு விமரிசையாக பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். அன்னையின் அருளாசிகளைப் பெற பெண்கள் விரதம் இருந்து வழிபடுவார்கள். ஆடி மாதத்தில் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும், அம்மன் கோயில்களுக்கு சென்று, பெண்கள் வழிபட்டால், எண்ணிய காரியம் ஈடேறும். இந்நாளில், பெண்கள் அதிகாலையில் குளித்து, குலதெய்வ வழிபாடு நடத்திய பின், துர்க்கை அம்மன், முருகன் கோயில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆடி - செவ்வாய்க் கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்களகௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும், விசேஷ பலன்கள் கைகூடும். இந்த பூஜைக்கான விக்ரகம் வெள்ளியில் கிடைக்கும். ஆடி மாதம் ஐந்து செவ்வாய்க்கிழமை ஐந்து வருடங்கள் வரை தொடர்ந்து இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும். கடைசி நாளன்று ஐந்து சுமங்கலிகளுக்கு தங்களால் இயன்ற அளவிற்கு தானம் வைத்து தாம்பூலம் அளிக்க வேண்டும்.

ஆடி வெள்ளிக்கிழமை

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் முன்னோர்களை நினைத்து வழிபட உகந்தவை. இந்நாட்களில் காலையில் நீராடிவிட்டு வேப்ப மரத்தை வழிபடுவது வழக்கம். மரப்பட்டையில் மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி, அகல் விளக்கை ஏற்றி வைத்து பூஜை மேற்கொள்வார்கள். இது எளிமையான பூஜை ஆகும். ஆடி வெள்ளி, சக்தி வடிவான அம்மனுடன் தொடர்பு உள்ளதன் காரணமாக, மாதம் முழுவதும் ஐந்து வெள்ளிக் கிழமைகளில் கொண்டாடப்படும் பூஜை மற்றும் வழிபாடுகள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அம்மனை வழிபட்டு அவளின் அருளாசிகளைப் பெறுகிறார்கள். அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

ஆடிப்பூரம்

ஆடிப் பூரம் ஆண்டாள் அவதரித்த தினமாகக் கருதப்படுகிறது. அன்று ஆண்டாளுக்கும் அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் பெரும்பாலான அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளையல் சாற்றி பூஜை மேற்கொள்வார்கள். பிறகு அதனை அடுத்த நாளில் சுமங்கலிப் பெண்களுக்கு அளிப்பார்கள். ஆடித் திங்களில் பூர நாள் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். சித்தர்களும், முனிவர்களும் இந்நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப் பூர நாளில் ஆண்டாளாக

அவதரித்தாள்.

ஆடிப் பெருக்கு

ஆடிப் பெருக்கு என்பது உயிர் வாழ அவசியமான தண்ணீரின் தாகம் தீர்க்கும் மற்றும் பிற உபயோகங்களின் பண்புகளை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. இது அனைத்து மனித இனத்திற்கும் கிடைத்த இயற்கையின் பரிசாக கருதப்படுகிறது. ஆடி மாதம் தமிழகத்தில் பருவமழையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பருவமழை காலங்களில் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும். அதனைக் கொண்டாடுவதே ஆடிப் பெருக்கு ஆகும். விவசாயத்தை காத்து வரும் காவிரித்தாயை வணங்கும் வகையில் ஆடி மாதம் பதினெட்டாம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

ஆடி மாத சிறப்புகள்

* ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

* இந்த மாதம்தான் நதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும். எனவே புனித நதிகளில் நீராடுவது விசேஷம்.

* ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். ஆடி மாதம் விவசாயத்திற்கு ஏற்ற மாதம் ஆகும்.

* ஆடி மாதம் காவல் தெய்வம் அல்லது எல்லை தெய்வங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

* அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் மற்றும் தீ மிதி திருவிழா என்னும் விசேஷத்தையும் விமரிசையாக இந்த மாதம்தான் மேற்கொள்வார்கள்.

* ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

* கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்று கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப் படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

* ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாத உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

* ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

* ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

குடந்தை நடேசன்

Related News