ஏன்? எதற்கு ? எப்படி?

?ஏழரை சனி நடக்கும்போது திருமணம் செய்வது சரியா? - த.நேரு, வெண்கரும்பூர். சரியே. ஏழரை சனிக்கும் திருமணத்தை நடத்துவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. எந்தவிதமான தயக்கமோ சந்தேகமோ இன்றி தாராளமாக ஏழரை சனி நடக்கும் காலத்தில் திருமணத்தை நடத்தலாம். பயம் தேவையில்லை. ?கோயிலுக்கு சென்றுவிட்டு நேராக வீட்டிற்குத்தான் வரவேண்டும் என்று கூறுவது ஏன்? - வண்ணை...

தெளிவு பெறுவோம்

By Porselvi
04 Nov 2025

?பாவைநோன்பை யார் யார் செய்யலாம்? - கே.முருகன். பெயரிலேயே விடையும் உள்ளதே. பாவை நோன்பு என்பது மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். கன்னிப் பெண்கள் விடியற்காலையில் நீராடி ஆண்டாள் இயற்றிய திருப்பாவைப் பாடல்களையும், மாணிக்கவாசகர் பெருமான் இயற்றிய திருவெம்பாவைப் பாடல்களையும் பாடி, இறைவனை வழிபட்டு, இந்த நோன்பினை மேற்கொள்வார்கள். இந்த நோன்பின்...

எந்தெந்த காலங்களில் சிவ தரிசனம் செய்யலாம்?

By Gowthami Selvakumar
31 Oct 2025

?பலிபீடம் ஏன் இருக்கிறது? அதன் தேவை என்ன? - சரண்யாகுமரன், தாம்பரம். பலிபீடம் என்பது ஆலயத்தின் நுழைவில் கொடிமரத்திற்கு முன்புறம் அமைந்திருக்கும். இங்கே வழிபாட்டின் போது தேவதைகளுக்கான ``அவி’’ அதாவது நிவேதனம் சாதிப்பார்கள். இது பெரும்பாலும் எல்லாக் கோயில்களிலும் இருக்கும். மூன்று அடுக்கு அமைந்து அதன் மேல் புறம் தாமரை மலர் போல விரிந்தபடி இந்த...

எல்லா கிரக தோஷங்களும் நிவர்த்தியாக தினசரி வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும்?

By Gowthami Selvakumar
30 Oct 2025

?ஆலயங்களில் மூலவரைத்தவிர, பிராகாரங்களில் என்னென்ன தெய்வங்கள் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன? மூலவரை மட்டும் வழிபட்டால் போதுமா? - கே. பிரபாவதி. மேலகிருஷ்ணன் புதூர். ஆலயங்களில் மூலவரைச் சுற்றி, அந்தந்தத் தெய்வங்களுக்கு உண்டான ஆகமங்களில் சொல்லப்பட்டபடி, சுற்றுப்புறத் தெய்வங்கள் - கோஷ்ட தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும். முதலில் இவர்களை எல்லாம் வலம்வந்து தரிசித்து, அதன் பிறகே மூலவரின்...

ஜீவ காருண்யம் என்றால் என்ன?

By Gowthami Selvakumar
28 Oct 2025

?குடியிருக்கும் வீட்டில் நாவல்பழ மரம் வளர்க்கக் கூடாது என்று சொல்கிறார்களே, ஏன்? - பா.பாலசுப்ரமணியன், தூத்துக்குடி. நாவல் மரம் என்பது மருத்துவக் குணங்கள் அதிகம் கொண்டது என்றாலும், அதனை வீட்டில் வளர்ப்பதில்லை. பண்ணைத் தோட்டங்கள், நிலங்கள், வயல்வெளிகளில் வளர்த்தார்கள். அது அளவில் பெரியது என்பதாலும், வளர்வதற்கு அதிகப்படியான இடம் தேவை என்பதாலும், அந்த மரமானது அதிகப்படியான...

செல்வத்தைப் பெருக்க இணைய தளங்களில் பல்வேறு வழிமுறைகள் சொல்லப்படுவது சரிதானா?

By Gowthami Selvakumar
27 Oct 2025

?விநாயகருக்கு கொழுக்கட்டையை எப்பொழுது வேண்டுமானாலும் படைத்து வழிபடலாமா? - பொன்விழி, அன்னூர். தாராளமாக. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு அந்த முழுமையை அதாவது பூரணத்தை தனது உள்ளே அடக்கியிருக்கும் கொழுக்கட்டையை எப்பொழுது வேண்டுமானாலும் படைத்து வழிபடலாம். அதன் மூலம் இறங்கிய பணியில் நாமும் முழுமையான வெற்றியை அடைய இயலும். ?கட்டிடங்கள் இடிந்து விழுவது போலவும் அதில்...

?காதுகுத்தி கடுக்கண் போடுகின்றார்கள், என்ன காரணம்?

By Lavanya
25 Oct 2025

- கணேசன், சென்னை. காதுமடலில் குத்துவது என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நல்ல விஷயங்களை மட்டுமே காது கேட்க வேண்டும் என்பதற்கான ஒரு கௌரவமாகவே, காதுக்கு பொன்னாலான கடுக்கன் (கர்ண பூஷணம்) போடுகிறார்கள். நல்ல விஷயங்களைக் கேட்கின்ற காதுக்கு செய்யப்படும் உபசாரம் அது. ?கடைசி நினைவு பகவானைப் பற்றியதாகவே இருக்க...

பிள்ளையார் கண் திறந்தாரா, இல்லையா?

By Porselvi
24 Oct 2025

பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர், தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்… தஞ்சாவூர், திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார் ஸ்வாமிகள். வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள், தங்கள் குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து, ஆசிபெற்றுச்...

ஸ்ரீரங்கநாதருக்கு தீபாவளி சீர்!

By Porselvi
18 Oct 2025

தீபாவளி என்றாலே மாப்பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான். புது மாப்பிள்ளை என்றால் கேட்கவே வேண்டாம். அதில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் ஸ்ரீரங்கநாதரும் அடங்குவார். ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது. தீபாவளிக்கு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம் மேளதாளத்தோடு பெருமாளுக்கு சாத்தப்படும். மேலும், கோயில் சிப்பந்திகளுக்கும் நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள்...

தெளிவு பெறுவோம்

By Porselvi
15 Oct 2025

?மகான்களின் சமாதியை எப்படி வணங்க வேண்டும்? - வண்ணை கணேசன், சென்னை. இறைவனின் திருத்தலங்களை வணங்குவது போலவே பக்திச் சிரத்தையுடன் அமைதியாக வழிபட வேண்டும். சமாதி என்று நாம் சொன்னாலும், சமய மரபில் இந்த இடங்களை பிருந்தாவனம் என்றும் திருவரசு என்றும் சொல்வார்கள். இந்த இடங்களில் அந்த மகான்களின் அதிர்வலைகள் இருக்கும். தியானம் செய்யும் பொழுது...