தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார்த்திகை மாதம்!

Advertisement

கறுத்த வானில் பெய்திடுமா மாமழை!! தழைத்திடச் செய்யுமா நம் வாழ்வை?

அக்னி கிரகம் (நெருப்புக் கோள்) என ஜோதிடக் கலை விவரிக்கும் சூரிய பகவான், மற்றொரு நெருப்புக் கோளான செவ்வாயின் ஆதிக்கத்திலுள்ள விருச்சிக ராசியைக் கடக்கும் சுமார் ஒருமாத காலத்தையே கார்த்திகை மாதம் என்றும், விருச்சிக மாதம் என்றும் நமது புராதன ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. துலாம் ராசியில், தனது வீரியத்தைத் தானே குறைத்துக் கொண்ட சூரிய பகவான், மீ்ண்டும் தனது பூரண வீரியத்தைப் பெற்று வலம் வரும் மாதமே, கார்த்திகை மாதம் எனவும், விருச்சிக மாதம் எனவும் ஜோதிடக் கலை விவரிக்கின்றது.

இதன் விளைவாக, இந்தக் கார்த்திகை மாதத்தில் சூரியனின் வெப்பம் சற்று அதிகமாகவே இருக்கும். ஏற்கெனவே விருச்சிக ராசியில் மற்றொரு அக்னிக் கிரகங்களாகிய சூரியனும், செவ்வாயும் அமர்ந்திருப்பதால், இம்மாதம் முழுவதும் வெயிலின் தாபம் கடுமையாகவே இருப்பதை அனுபவத்தில் உணர்ந்து கொள்ள முடியும். பலருக்கு, சரும சம்பந்தமான உபாதைகள், தலைவலி, கிறுகிறுப்பு ஆகியவை உடலை வருத்தும். ரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் கூடியவரையில் அதிக உழைப்பை குறைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

ஜோதிடக் கலையும், மருத்துவக் கலையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவைகளாகும். கூடியவரையில், வயோதிகர்கள், ரத்த அழுத்தம் உடையவர்கள், பெண்மணிகள், நிரந்தர உடல் உபாதைகளுக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆகியோர் உடல் நலனில் கவனமாக இருத்தல் வேண்டும்.கடின உழைப்பு, இரவில் நீண்ட நேரம் கண்விழித்திருத்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும். குறித்த நேரத்தில் உண்பது, உறங்கச் செல்வது, தினமும் சிறிது நேரமாவது ஓய்வெடுத்தல் ஆகியவை உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்.

இதனை, "சூரிய சித்தாந்தம்", "பிருஹத் ஸம்ஹிதை", "ஜோதிட அலங்காரம்" போன்ற மிகப் புராதன ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. குறிப்பிட்ட நோய்களுக்கு, "சில குறிப்பிட்ட மாதத்தில் சிகிச்சை தொடங்குவதைத் தவிர்த்தல் வேண்டும்..." எனக் கூறுகிறது, பிரசித்தி பெற்ற "ஜோதிட பாரிஜாதம்", "அஷ்டாங்க ஹிருதயம்" போன்ற ஒப்புயர்வற்ற ஜோதிடக் கிரந்தங்கள்! விருச்சிகம், சூரிய பகவானுக்கு பகை ராசியாகும். அதாவது, உஷ்ண கிரகமான சூரியன், மற்றொரு அக்னி கிரகமான (நெருப்புக் கோள்) செவ்வாயின் ஆதிக்கத்திலுள்ள விருச்சிக ராசியைக் கடக்கும்போது, விருச்சிக ராசியில் பிறந்துள்ள அன்பர்கள், அதிக வெப்பத்திற்கு ஆளாகிறார்கள் என்பது கருத்து.

இதனை மிகப் புராதன ஜோதிட நூல்களும், ஆயுர்வேத நூல்களும் விவரித்துள்ளன. குறிப்பாக,விருச்சிக லக்னத்திலும், விருச்சிக ராசியிலும், ஜனன காலத்தில் லக்னத்திலிருந்து 8-ம் இடத்தில் சூரியனும் இருக்கும் ஜாதகர்கள், இம்மாதம் முழுவதும் உடல்ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம் என்பதை "சுஸ்சுருதர் ஸம்ஹிதை" என்ற மிகப் புராதன அறுவை சிகிச்சைநூலும் வலியுறுத்துகிறது.சூரிய பகவானின் நீச்ச ராசியான (பலம் குறைதல்) துலாம் ராசியை விட்டு, பகை ராசியான விருச்சிகத்தில் பிரவேசிக்கும்போது, சூரிய பகவானின் சக்தி மிகவும் அதிகமாக இருப்பதை, "சூரிய சித்தாந்தம்", "ஆதித்திய ஹிருதயமும்"பாஸ்கர சித்தாந்தம்" எனும் மிகப் பழமையான ஜோதிட நூலும் விவரித்துள்ளன.

இதனை "பிருஹத் ஸம்ஹிதை", "அஷ்டாங்க ஹிருதயம்" எனும் பிரசித்திப் பெற்ற ஆயுர்வேத நூல்களும் கூறுகின்றன. இதனால், நமது உடல் ஆரோக்கியத்திற்கும், சூரிய பகவானின் சக்திக்கும் உள்ள நேரிடைத் தொடர்பினை அறிந்துகொள்ள முடிகிறது. சென்ற காலங்களில், ஆயுர்வேத வைத்தியத்தில் பிரசித்திப் பெற்ற சித்த மகா புருஷர்கள் குறிப்பிட்ட பல வீரியம் நிறைந்த மூலிகைகளைப் பறிப்பதற்கு, துலாம் மாதத்தைத் தவிர்த்தனர்! இதிலிருந்து சூரியனுக்கும், மூலிகைகளுக்கும் இடையே இருந்த தொடர்பினை உணர்ந்து கொள்ளலாம்.

அதாவது, பல மூலிகைகளுக்கு நோய் தீர்க்கும் சக்தியை அளிப்பதே சூரிய பகவான்தான் என்ற உண்மையை தமிழகத்தின் சித்த மகா புருஷர்கள், தங்களின் நூல்களில் விவரித்துள்ளனர். சூரிய பகவானின் சக்தி அதிகமாக உள்ள நாட்கள், நேரம் ஆகியவற்றின்போதுதான், பல மூலிகைகளைப் பறிக்க வேண்டும் - அதுவும் ஒவ்வொரு மூலிகைக்கும் ஒரு ஸ்லோகம் உள்ளது. அதைச் சொல்லிய பிறகே பரிக்க வேண்டும் என்பது நியதி என்பதையும் தங்கள் சுவடுகளில் அம்மகான்கள் விவரித்துள்ளனர்.

எளிய சிகிச்சை முறைகளினால், குணப்படுத்த இயலாத தொழுநோய், காச நோய்,இதய நோய்கள் ஆகியவற்றைக்கூட குணப்படுத்தக்கூடிய சிகிச்சை முறைகள் உள்ளதை போகர், அகத்தியர், காகபுஜன்டர் சித்த மகா புருஷர்களின் உபதேசங்களிலும் கிடைக்கப்பெறுகிறோம். இவற்றையே, "சித்த வைத்தியம்" என பெரியோர்கள் போற்றி வருகின்றனர். காலத்தின் கொடுமையினால், அம்மகா புருஷர்கள் அருளியுள்ள பல மூலிகைகளை நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியாமற் போய்விட்டது. காரணம், அக்காலத்தில் நூல்கள் அச்சிடும் முறை இல்லாமல் போய்விட்டதேயாகும்.

குருவினிடமிருந்து, சிஷ்யர்கள் உபதேசங்களின் மூலம்தெரிந்துகொள்ள முடிந்த முறையே அக்காலத்தில் இருந்து வந்தது. அதனால், பல மூலிகைகளையும், சிகிச்சை முறைகளையும் நாம் அறிந்துகொள்ள முடியாமலேயே, அரிய பொக்கிஷங்களான அவற்றை நாம் இழந்துவிட்டோம் நிரந்தரமாகவே! இருப்பினும், விலை மதிக்க இயலாத அரிய பல ஓலைச் சுவடிகள் இன்றும் பல திருக்கோயில்களிலும், புராதன மடங்களிலும் பாதுகாக்கப்பட்டு வைத்துள்ளனர். இவையனைத்தும், நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள விலை மதிப்பிட இயலாத பொக்கிஷங்களாகும். அம்மூலிகைகளும், சிகிச்சை முறைகளும் ஜோதிடக் கலையுடன் இணைந்துள்ளவைகளேயாகும்.

கார்த்திகை மாதத்தின் புண்ணிய தினங்கள்!

கார்த்திகை 1 (17-11-2025) - திங்கட்கிழமை :

பிரதோஷம். முடவன் முழுக்கு. காவிரி ஸ்நானம் பாவங்கள் அனைத்தையும் போக்கும். தலைக்காவேரி ஸ்நானம் பரம புண்ணியத்தை அளிக்கும். சாஸ்திர நியமப்படி ஐப்பசி மாதம் முழுவதும் காவிரி நதியில், கங்கை நதி சங்கமிப்பதாக ஐதீகம், இம்மாதத்தில் காவிரியில் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் கிட்டும். அவ்வாறு ஐப்பசி மாதத்தில் நீராட முடியாவிடினும், கார்த்திகையிலாவது காவிரி ஸ்நானம் செய்யவேண்டியது அவசியம். ஏனெனில், எந்தத் தாயானாலும், தான் பெற்ற பிள்ளை அங்கஹீனமுடையவனாக இருந்தாலும், அவனை அரவணைப்பாள்தானே? இன்றைய தினத்தில்தான்அன்னை காவிரித் தாய், ஒரு முடவனுக்காக அவனது பக்தி கண்டு இரங்கி வந்து இன்னருள் புரிந்த திருநாள். ஆகையால்தான் இந்நன்னாளிலாவது காவிரி ஸ்நானம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

"ஹரியும் ஹரனும் ஒண்ணு! இதையறியாதவர் வாயில் மண்ணு" எனும் மூதுரைக்குக் கட்டியம் கூறுவதுபோல், ஜோதி ஸ்வரூபிகளான ஹரியும் ஹரனும் ஹரி ஹர இரு ஜோதிஸ்வரூபிகளும் இணைந்து ஹரி ஹர புத்திரராக அவதரித்து, கலியுகக் கண்ட தெய்வமாக கலியுக வரதனாக, நாம் விரும்பியதைக் கொடுக்கும் காமதேனுவாக, கல்பவிருக்ஷமாக, இன்றளவும் அருள்பாலித்தருளும் ஸ்ரீ ஐயப்பனை காண இம்மாதத்தின் முதல் தேதியன்று, நேர்த்தியுடன் பய பக்தியுடன் மாலையணிந்து, ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியைக் தரிசிக்க, சுமார் ஒரு மண்டலக் காலம் விரதமிருந்து, காலையில் உணவேதும் உண்ணாமலிருந்து, மதியத்திற்கு மேல் ஐயப்ப ஸ்வாமிக்கு பூஜைகளை பக்தி சிரத்தையுடன் முடித்து, ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்வித்த பிறகு, பிரசாதத்தை ஏற்கவேண்டும்.

இரவு நேரத்தில் பால் பழம் ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்வித்த பிறகு அந்தப் பிரசாதங்களை மட்டுமே உண்ணல் வேண்டும். இக்காலகட்டங்களில், நமது உள்ளுணர்வுகளை அதிகளவில் பாதிக்கும் தூண்டும் லகிரி வஸ்துக்களையும் (புகையிலை, வெற்றிலை பாக்கு, புகை பிடித்தல் இத்யாதி வகையறாக்கள்), மசாலாப் பொருட்களையும், காய் கறிகளாகிய பூண்டு, வெங்காயம், முருங்கைக்காய், கத்தரிக்காய், சுரைக்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளைத் தவிர்த்து, சாத்வீகக் காய்கறிகளாகிய வெண்டைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும். அசைவத்தைப் பற்றி மனதளவிலும் நினையாமை வேண்டும். கட்டுக்கோப்பான பிரம்மச்சரிய விரதத்தைக் கடைபிடித்தல் மிக, மிக அவசியம்.

கார்த்திகை 2 (18-11-2025) - செவ்வாய்க்்கிழமை:

மாத சிவராத்திரி இன்று உபவாசமிருந்து, சிவ பெருமானைப் பூஜிப்பது அனைத்து பாவங்களையும் போக்கும். மேலும், இன்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அவதரித்த, ஸ்வாதி நட்சத்திரம். இன்றைய தின மாலை நேரத்தில், ஸ்வாமிக்கு துளசி தளங்களினால் அர்ச்சித்து, பானகம் அமுது செய்வித்து, 9 முறைகள், நரசிம்ம கராபலங்கம் சொல்லி, அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று பானகத்தை பக்த கோடிகளுக்கு விநியோகம் செய்தால், நம் கஷ்டங்கள் அனைத்தும் விலகிடும்.

கார்த்திகை 3 (19-11-2025) - புதன்்கிழமை :

சர்வ அமாவாசை இன்று பித்ருக்களைப் பூஜித்தால், குலம் வளரும். குடும்பம் செழிக்கும், பாவங்கள் அகலும்.

கார்த்திகை 5 (21-11-2025)- வெள்ளிக்கிழமை : திருமாலின் தசாவதாரங்களில் கடைசி அவதாரமாகிய கல்கி அவதாரத்திற்கு நிகரானதாகவும், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் மிக முக்கியமாக பங்காற்றும் லக்னத்தில் ஏற்படும் தோஷங்களை நீக்கி, பரிபூரண நலன்களைஅளித்தருள வல்லதுமாகிய இன்றைய தினத்தின் திரிபுர பைரவி ஜெயந்தி நன்னாள்.

கார்த்திகை 5 (21-11-2025) - வெள்ளிக்கிழமை :

முதல், கார்த்திகை 16 (2-12-2025) - செவ்வாய்க்கிழமை வரை ஸ்ரீ லக்ஷ்மி விரதம். கலசம் வைத்து, ஸ்ரீ லக்ஷ்மியை ஆவாகனம் செய்து, பூஜித்து, தினமும் ஒரு சுமங்கலிக்காவது, வெற்றிலை பாக்கு, கண்ணாடி வளையல், மஞ்சள் குங்குமம், புடவை அல்லது ரவிக்கைத் துண்டு கொடுத்து, இவ்விரதத்தைக் கடைப்பிடித்தால், உங்கள் சந்ததியினர் கல்வி கேள்விகளில் சிறந்தும், நல்லறிவுடனும், இளமை, அழகுடனும், பொறுமை, துணிவு, ேநாய் நொடியற்ற வாழ்க்கையுடன் விளங்குவர், இழந்த செல்வம் மீண்டும் உங்களை வந்தடையும்.

கார்த்திகை 6 (22-11-2025) - சனிக்கிழமை : நவகிரக தோஷங்களனைத்தையும் ஒருங்கே போக்கிடும் முக்கியமாக சனி தோஷத்தை முழுமையாகப் போக்கிட உதவிடும்"திந்த்ரிணீ கௌரி விரதம்". இவ்விரதத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள், தாம்பூலத்துடன் கூடிய (வெற்றிலை பாக்கு, மஞ்சள்), கண்ணாடி வளையல்களை வாங்கி, கோயிலுக்குச் சென்று, சுமங்கலிப் பெண்மணிகளுக்கு தலா நான்கு வளையல்கள் வீதம் தானம் செய்வித்தால், விரதத்தைக் கடைப்பிடித்த முழுப் பலன்களும் உங்களை வந்தடையப் போவது திண்ணம், அதனால் அபரிமிதமான நற்பலன்களுடன் கூடிய மகிழ்ச்சியான இல்வாழ்க்கை அமையப்பெறுவீர்கள்.

கார்த்திகை 07 (23-11-2025) - ஞாயிற்றுக்கிழமை :

சொந்தத் தொழிலில் ஒரு வகை தேக்க நிலை எவ்வித முன்னேற்றமின்மை, தொட்டதெல்லாம் ஏதோ ஒருவகை தடை தடங்கல்கள் இவையனைத்தையும் போக்கிடும், "அபியோக திருதியை". உங்கள் வீட்டில் பூரண கும்பம் (கலசம்) வைத்து, அம்பாளை எழுந்தருளச் செய்து, பூஜித்து, சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துண்டு கொடுத்து, உங்கள் வீட்டிற்கருகாமையிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று மண் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து, அம்பாளை வழிபட்டால், தொழிலில் ஏற்பட்டுவந்த அனைத்து விதத் தடங்கல்களும் விலகிடும். மேலும் எதிர்பாராத தன லாபம் புதையல் வடிவிலோ அல்லது உங்களுக்குத் தெரியாத மூதாதையர் சொத்து ஒன்று திடீரென்று உங்களை வந்தடைந்து உங்களை இன்ப அதிர்ச்சியிலாழ்த்தும்.மூர்க்க நாயனார் முக்தியடைந்த நாள்.

கார்த்திகை 8 (24-11-2025) - திங்கட்்கிழமை :

சிறப்புலி நாயனார் முக்தி பெற்ற திருநாள்.

கார்த்திகை 10 (26-11-2025) - புதன்கிழமை :

சஷ்டி விரதம். ஸ்ரீ முருகப் பெருமானைப் பூஜிப்பது அவனருளைப் பெறச் செய்யும். "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்...?" என்றொரு மூதுரை உண்டு. அதற்கு பொருள், சஷ்டியில் விரதமிருந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு, அகப்பையாகிய கருவறையில் அழகான, அறிவொளி வீசும் முகத்துடன்கூடிய முருகப் பெருமானே அவதரித்ததைப் போன்ற பேரழகுக் குழந்தைப் பேறு வாய்க்கப் பெறுவர் என்பதே இதன் அர்த்தம். நமக்குத் தேவை பக்தியுடன் கூடிய நம்பிக்கை மட்டுமே!

கார்த்திகை 15 (1-12-2025) - திங்கட்கிழமை:

ைகசிக ஏகாதசி, இன்று உபவாசம் இருந்து, பகவானைப் பூஜிப்பது அனைத்து பாவங்களையும் போக்கி, நல்வாழ்வைப் பெறச் செய்யும். இன்றைய தினத்தில் விரதமிருந்து, கைசிக புராணத்தைக் கேட்டாலும், வாசித்தாலும், நினைத்தாலுமே 54 வகையான பாபங்கள் விலகி ஓடிடும்.

கார்த்திகை 16 (2-12-2025) - செவ்வாய்க்கிழமை :

பிரதோஷம் மாலையில் ஆலய தரிசனம் பரம புண்ணியத்தைத் தரும். குலம் குடும்பம் செழிக்கும். மேலும், இன்று செவ்வாய்க் கிழமை! இன்றைய தினத்தில் செவ்வாயின் ஆட்சி வீடாகிய மேஷ ராசிக்கு சந்திர பகவான் அடியெடுத்து வைக்கும் முதல் நட்சத்திரமாகிய அஸ்வினி நட்சத்திரமும் கூடிவருவது மிக, மிக அபூர்வமானதொன்று. இந்நன்னாளை "பௌமாஸ்வினி" என்று சிலாகித்துக் கூறுவர் பெரியோர். இந்நன்னாளில் அஸ்வினி நட்சத்திரமும் கூடுவதாலேயே இப்பெயர்க்காரணமாயிற்று! இப்புண்ணிய தினத்தன்று ஸ்ரீ லட்சுமி நரிசிம்மரை மனமுறுகிப் பிரார்த்தித்தோமேயானால், ஜனன ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள செவ்வாய் தோஷம் விலகிடும். உடலில் ஏற்படும் ரத்த சம்பந்தமான வியாதிகள் உங்களை அணுகாவண்ணம் காத்தருள்வது மட்டுமல்லாது, உடற் பிணிகள் நீக்கி அருள் மழை பொழிந்திடுவார், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி!

கார்த்திகை 17 (3-12-2025) - புதன்கிழமை:

ஸ்ரீ அண்ணாமலை தீபம் பரணி தீபம். மேலும், இன்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அவதரித்த, வளர்பிறை சதுர்த்தசி திதி. மேலும், இன்று அனங்க திரயோதசி இன்றைய தினத்தில், மகாவிஷ்ணுவை துளசி தளத்தினால் அர்ச்சித்து, லட்சுமி தேவியை பன்னீர் ரோஜா மலர்களால் அர்ச்சிக்க, சகல அஷ்ட ஐஸ்வர்யங்களும் உங்களை வந்தடையும். இந்தத் தினத்தில் ரதிதேவி மன்மதனை மனத்தளவில் நினைத்து வணங்கினால், தம்பதிகள் ஒற்றுமையுடனும், பரஸ்பர அந்நியோன்யத்துடனும் ஈறுடல் ஓருயிராக வையகத்தில் பரிமளிப்பர். திருமணமாகாத கன்னியருக்கு நல்ல வரன் அமையப்பெறுவது திண்ணம்.

கார்த்திகை 18 (04-12-2025) - வியாழக்்கிழமை :

சர்வாலய தீபம். வைகானச தீபம். ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம். கணம்புல்ல நாயனார் முக்தியடைந்த நாள், நம்பிள்ளை திருநட்சத்திரம், கிடாம்பி நாயனார் திருநட்சத்திரம்.

கார்த்திகை 19 (5-12-2025) - வெள்ளி்்க்கிழமை :

சர்வாலய தீபம். பாஞ்சராத்ர விஷ்ணு தீபம். பிரதமையில் தொடங்கி அடுத்த முப்பது நாட்களும் 24 மணிநேரங்களிலும் எரியக்கூடிய அணையா விளக்கை ஏற்றி, கடைசி நாளில், வேதம் படித்த அந்தணரை வரவழைத்து, உணவு பரிமாறி, மண் அகல் விளக்கில் நெய் எரியும் தீபத்துடன் ரூ101 தட்சிணையாகக் கொடுத்து, வணங்கினால், நெடுநாட்களாக நோய்வாய்ப்பட்டு, தீராத நோயினால் அவதிகள் தீரும் என விரத சூடாமணி கட்டியம் கூறுகிறது.இந்நன்னாளில் வீடுகளில் தீபமேற்ற, லட்சுமி கடாட்சம் உண்டாகும், உங்களின் அபிலாஷைகள் அனைத்தும் ஈடேறும். திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்.

கார்த்திகை 20 (6-12-2025) - சனிக்்கிழமை :

ஸ்ரீ பரசு ராமர் அவதார தினம்.

கார்த்திகை 22 (8-12-2025)திங்கட்கிழமை :

சங்கட ஹர சதுர்த்தி - இன்று ஸ்ரீ விநாயகப் பெருமானைப் பூஜிப்பது, பரம புண்ணியத்தைத் தரவல்லது. தடங்கல்கள் அனைத்தும் விலகி ஓடிடும்.

கார்த்திகை 25 (11-12-2025) - வியாழக்கிழமை பகல் 1.55 முதல்,

கார்த்திகை 26 (12-12-2025) - வெள்ளிக்கிழமை பிற்பகல் 2,55 வரை: சங்கராஷ்டமி. சொந்தத் தொழில் ஏற்பட்டுவந்த சுணக்கம் நீங்கிடும்.

கார்த்திகை 27(13-12-2025) - சனிக்கிழமை:

மெய்ப்பொருள் நாயனார் முக்தியடைந்த திருநாள்.

கார்த்திகை 27 (13-12-2025) - சனிக்்கிழமை :

ஆனாய நாயனார் முக்தி பேறு பெற்ற நாள்.

கார்த்திகை 29 (15-12-2025) - திங்கட்்கிழமை :

ஏகாதசி - இன்று உபவாசமிருப்பது, அனைத்து பாவங்களையும் போக்கிவிடும்.

கார்த்திகை 1 (17-11-2025) சனி பகவான் வக்கிரகதி நிவர்த்தி

கார்த்திகை 2 (18-11-2025) சுக்கிரன், விருச்சிக ராசிக்கு மாறுதல்.

கார்த்திகை 20 (6-12-2025) புதன், விருச்சிக ராசிக்கு மாறுதல்.

கார்த்திகை 20 (6-12-2025) செவ்வாய், தனுசு ராசிக்கு மாறுதல்.

 

A.M.ராஜகோபாலன்

Advertisement

Related News