தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார்த்திகை மாத சிறப்புகள்!

* கார்த்திகை மாதம் தீபங்களின் மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் இறை வழிபாடு செய்வதன் மூலம் செல்வம், மகிழ்ச்சி, திருமண பாக்கியம், மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. காந்தள் பூக்கள் பூக்கும் காலமாகவும், கரு மேகங்கள் சூழ்ந்து மழை பொழியும் காலமாகவும் இது அமைகிறது.

Advertisement

* கார்த்திகை மாதம் என்பது தீபங்களை ஏற்றி வழிபடக்கூடிய சிறப்பு வாய்ந்த மாதமாகும். வீடுகளில் விளக்கேற்றி மகாலட்சுமியை வணங்குவது சிறந்தது.

* கார்த்திகை மாதத்தின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபம் ஐயப்பனுக்கு மாலை அணியும் மண்டல விரதத்தின் ஒரு பகுதியாகவும் நடைபெறுகிறது.

* கார்த்திகை மாதத்தில் முப்பது நாட்களும் அதிகாலை நீராடி சிவ பெருமானையும் மகாவிஷ்ணுவையும் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

* கார்த்திகை தீபத்தன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருபத்தேழு நட்சத்திரங்களை மையமாக வைத்து மடக்கு தீபாராதனை நடைபெறும். மேலும், நெல்லிக்கனி பிரசாதம் சிறப்பு வாய்ந்தது.

* கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது.

* கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்வது, அசுவமேத யாகம் செய்த பலனை ெகாடுக்கும்.

* கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும் இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கு ஏற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

* கார்த்திகை மாத முதல் நாளில் முடவன் முழுக்கு எனப்படும் காவிரியில் நீராடினால் ஐப்பசி மாதத்தில் நீராடும் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.

* கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாக புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாக தோன்றியவர் என்பதால் கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன் நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும்.

* துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்து பூஜித்து, துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாதப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

* கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் உமா மகேஸ்வர விரதம் இருந்தால் தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும்.

* கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று நாயுருவி வேரினை பறித்து வீட்டுக்கு எடுத்து வந்து வைத்தால் தன லாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

* கார்த்திகை மாதம் தீபங்களின் மாதமாக கொண்டாடப்படுகிறது. காந்தள் பூக்கள் பூக்கும் காலமாகவும், கரு மேகங்கள் சூழ்ந்து மழை பொழியும் காலமாகவும் இது அமைகிறது.

* தீபங்களை ஏற்றி வழிபடக்கூடிய சிறப்பு வாய்ந்த மாதமாகும். வீடுகளில் விளக்கேற்றி மகாலட்சுமியை வணங்குவது சிறப்பான பலன்களை தரும்.

* கார்த்திகை மாதத்தில் முப்பது நாட்களும் அதிகாலை நீராடி சிவ பெருமானையும், மகாவிஷ்ணுவையும் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் அனைத்து வித நன்மைகளும் மகிழ்ச்சிகளும் கிடைக்கும்.

* கார்த்திகை தீபத்தன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருபத்தேழு நட்சத்திரங்களை மையமாக வைத்து மடக்கு தீபாராதனை நடைபெறும்.

* கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டிற்கு உகந்தது.

* கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்வதால், ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலன் கிட்டும்.

* கார்த்திகை மாத முதல் நாளில் முடவன் முழுக்கு எனப்படும் காவேரியில் அன்று நீராடினால் ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.

* கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாக புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால் கார்த்திகை ஏகாதசி அன்று துளசி செடியுடன் நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும்.

* நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்து பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

Advertisement

Related News