தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வட்டி ஒரு கொடுமை

வட்டி ஒருபோதும் நல்வாழ்வைத் தராது. அது ஒரு பொருளாதாரச் சுரண்டல். உயிரை வாட்டும் நெருப்பு. வாழ்வை நாசமாக்கும் நஞ்சு. ஏழைகளின் உதிரத்தை உறிஞ்சும் சமூகத் தீமை. அதனால்தான் இஸ்லாமிய வாழ்வியல், வட்டி வாங்குவதையும் வட்டி அடிப்படை யிலான பொருளாதாரத்தையும் பெரும் பாவம் என்கிறது. வட்டியில்லாப் பொருளியலை அது முன்வைக்கிறது.

“வட்டியை விட்டுவிடுங்கள். இல்லையேல் உங்களுக்கு எதிராக இறைவனிடமிருந்தும் இறைத்தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என எச்சரிக்கிறது குர்ஆன். இதிலிருந்து இந்தச் சமூகத் தீமையை இஸ்லாம் எந்த அளவுக்குக் கடினமாகப் பார்க்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

குர்ஆன் கூறுகிறது

“இறைநம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் உண்மையில் இறைநம்பிக்கையாளராக இருப்பின் இறைவனுக்கு அஞ்சுங்கள். (உங்களுக்கு வரவேண்டிய) வட்டி பாக்கிகளை விட்டுவிடுங்கள். ஆனால், அவ்வாறு நீங்கள் செய்யாவிடின் இறைவனிடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் உங்களுக்கு எதிராகப் போர் அறிவிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இப்போதும் கூட நீங்கள் பாவமன்னிப்புக் கோரி வட்டியைக் கைவிட்டுவிட்டால் உங்களுடைய மூலதனம் உங்களுக்கே உரியது. நீங்கள் அநீதி இழைக்கக் கூடாது; உங்கள் மீதும் அநீதி இழைக்கப்படக் கூடாது.” (குர்ஆன் 2: 278-279)

“வட்டியும் வியாபாரம் போலத்தானே” என்னும் வாதத்தை இஸ்லாமிய வாழ்வியல் ஏற்றுக் கொள்வதில்லை. வியாபாரம் செய்து நாம் பணத்தை ஈட்டலாம். ஆனால், பணத்தையே வியாபாரப் பொருள் ஆக்குவதை இஸ்லாம் தடை செய்கிறது.

வியாபாரம் என்பது இலாபம், இழப்பு இரண்டையுமே உள்ளடக்கியுள்ளது. ஆனால், வட்டியில் இலாபம் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது. “நீ எப்படியாவது சாவு... எனக்குக் குறிப்பிட்ட தேதியில் வட்டி வந்துவிட வேண்டும்” என்றுதான் ஒப்பந்தம் போடப்படுகிறது.

ஒரு வியாபாரி வணிகத்தில் ஈடுபடும்போது பொருள்களைக் கொள்முதல் செய்தல், அவற்றைச் சந்தைக்குக் கொண்டுவருதல், மக்களுக்குக் கிடைக்கச் செய்தல் என்று ஏராளமான உழைப்பை வெளிப்படுத்துகிறார். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபடுகிறார். உரிய லாபம் பெறுகிறார்.

ஒருவேளை, பொருள்கள் எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை. ஏதோவொரு காரணத்தால் கொள்முதல் செய்த பொருள்கள் வீணாகி விட்டன அல்லது கொள்ளை போய்விட்டன என்றால் அந்த இழப்பையும் அவர்தான் தாங்கிக் கொள்ள வேண்டும். ‘ரிஸ்க்’ எனும் இடர் நிறைந்தது வணிகம். ஆனால், வட்டியில் இவையெல்லாம் ஒன்றுமில்லை. லாபம் ஒன்றே குறி. இதை எப்படி அனுமதிக்க முடியும்?

இன்று நான்கு உயிர்கள் தீயில் எரிந்து கருகியதும் எல்லோரும் வட்டியின் தீமை குறித்துப் பக்கம் பக்கமாய் எழுதுகிறார்கள்.... பேசுகிறார்கள். ஆனால் இறைவனின் தூய வழிகாட்டுதல் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த வட்டி எனும் கொடுமையை முற்றாகத் தடை செய்துவிட்டது. ஆம்...இஸ்லாமிய மார்க்கம் மனித இயல்புக்கேற்ற மகத்தான வாழ்வியல் நெறி ஆகும்.

இந்த வார சிந்தனை

“இறைநம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காய்ப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள். இறைவனுக்கு அஞ்சுங்கள். நீங்கள் வெற்றிபெறக் கூடும்.”

(குர்ஆன் 3: 130)

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

Related News