தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இவருக்கு தட்சணையாக பணம் கொடுத்தால் பத்து மடங்கு திரும்ப கிடைக்குமாம்!!

சாய்பாபா இந்த பூவுலகில் இருந்த காலத்தில் அவர் ஷிரடியில் பல காலம் தங்கி இருந்தார் என்பது நாம் அறிந்ததே. அவர் அப்படி தங்கி இருந்த காலத்தில் பாபாவை சந்தித்து அவரின் அருள் பெற பலர் வருவது வழக்கம். அப்படி வருபவர்களிடம் அவரவர் சக்திக்கு ஏற்றவாறு அவர்களிடம் பாபா காணிக்கை வாங்குவது வழக்கம்.

துறவியான சாய் பாபா ஏன் இப்படி மக்களிடம் காணிக்கை வாங்குகிறார். இந்த பணத்தை வைத்து அவர் அப்படி என்ன தான் செய்ய போகிறார் என்ற சந்தேகம் அப்போது பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் பெற்ற பணத்தை ஒருநாளும் தனக்காக சேர்த்துவைத்தது கிடையாது. ஏதோ ஒரு இறைபனிக்காக அவர் அந்த காசை செலவிட்டுக் கொண்டே இருந்தார்.

ஒருகட்டத்தில் பாபாவை சந்திக்க வேண்டுமானால் நிச்சயம் குரு தட்சணை வைத்தே ஆகவேண்டும் என்றொரு நிலைகூட வந்தது. இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. சில நேரங்களில் சிலரிடம் பாபா தட்சணையை மறுக்கவும் செய்தார். கர்வத்தோடு வரும் பணக்காரர்களிடம் அவர்கள் கொண்டு வரும் அனைத்து பணங்களையும் தட்சணையாக பெற்று அவர்களின் கர்வத்தை அழிக்கவும் செய்தார். இப்படி பாபா, தன்னுடைய பக்தர்களிடம் பணம் பெற்றதற்கு பின் பல ரகசியங்கள் ஒளிந்திருந்தது.

ஒருமுறை மிகவும் கஷ்டத்தோடு வந்த ஒரு பெண்மணியிடம் பாபா ஆறு ருபாய் தட்சணை பெற்றார். இதன் மூலம் அந்த பெண்ணிடம் இருந்த பொறாமை, சூது, காமம் போன்ற ஆறுவிதமான தீய குணங்களை ஒழித்தார் என்று கூறப்படுகிறது. சில ஏழைகளிடம் அவர் கட்டாயமாக தட்சணை வைத்தே ஆகவேண்டும் என்று கூறியதும் உண்டு. ஆனால் சில நாட்களுக்கு பின் அவர்கள் வாழ்வில் பல அற்புதங்கள் நடந்ததை அவர்கள் உணர ஆரமித்தனர். இதற்கு காரணம் பாபா, அவர்களின் கிரக தோஷத்தை போக்கினார் அதனால் அவர்களின் வாழ்வில் நன்மைகள் நடந்தது என்று நம்பப்படுகிறது.

ஒரு முறை கணபதிராவ் என்ற புகழ் பெற்ற மராத்தி நடிகர் ஒருவர் பாபாவிடம் சென்றார். பாபா அவரிடம் இருந்த அனைத்து பணத்தையும் தட்சணையாக பெற்றுக்கொண்டு அவரை அனுப்பினார். ஆனால் சில நாட்களிலேயே அவருக்கு அந்த பணம் பத்து மடங்காக திரும்ப கிடைத்தது என்று அந்த நடிகர் தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு நாளும் பாபா தன் பக்தர்களிடம் இருந்து பெற்ற மொத்த தொகை 100 ரூபாயை தாண்டாது. அன்று இரவு அந்த பணத்தை அவர் நல்ல காரியங்களுக்காக பகிர்ந்தளிப்பார். அப்படி பகிர்ந்தளிக்கயில் அவரிடம் 300 ரூபாய் இருக்கும். 100 ரூபாய் எப்படி 300 ரூபாயாக மாறியது என்ற ரகசியத்தை இதுவரை யாரும் அறியவில்லை.

Related News