தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எப்படி நிவேதனம் செய்வது?

அப்படி, அந்த தெய்வத்தை வழிபடுகின்ற பொழுது, தினமும் நிவேதனம் செய்வதுதானே சரியான முறையாக இருக்கும். நாம் எதையும் உண்ணாமல் இருந்து, காலையிலேயே ஸ்வாமிகளுக்கு நிவேதனம் செய்வதுதான் சாலச் சிறந்தது. என்னென்ன பொருட்களில் நிவேதனம் செய்யலாம் என்று கேட்டால், நல்ல பசும் பாலை காய்த்து, எப்போதுமே தெரிந்துக் கொள்ளுங்கள், எந்தவொரு நிவேதனப் பொருட்களிலும், சீனி (Sugar / சர்க்கரை) என்று சொல்லக் கூடிய வெள்ளை நிறத்தால் இருக்கும் சர்க்கரையை சேர்க்கக் கூடாது. மாறாக, நாட்டு சர்க்கரை, வெல்லம், பனைவெல்லம் ஆகியவை மட்டுமே ஸ்வாமியின் நிவேதனத்திற்கு பயன்படுத்தலாம். ஆகையால், நாட்டு சர்க்கரையை சற்று பசும்பாலில் சேர்த்து, ஸ்வாமிகளுக்கு நிவேதனம் செய்யலாம். மேலும், மிக எளிமையாக வீட்டில் உள்ள கற்கண்டு, பனைகற்கண்டு, பேரீச்சம்பழம், முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை, பாதாம் பருப்பு போன்றவற்றை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யலாம். அதுபோக, பழவகையான வாழைப் பழம், மாதுளம் பழம், மாம்பழம், சாத்துக்குடி என்று என்னென்ன பழவகைகள் இருக்கின்றதோ.. அத்தனையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யலாம். இன்னும் மிக எளிமையாக நிவேதனம் செய்ய வேண்டும் என்று சொன்னால், அனுதினமும் நமது வீட்டில் சாதம் வடிக்காமல் இருப்பதில்லை. சாதம் இல்லாத மதியம் உணவே இல்லை என்றாகி விட்டது. ஆகையால், சாப்பிடுவதற்காக சாதத்தை வடிக்கின்றோம்.

அந்த வடித்த சாதத்தை ஸ்வாமிக்கு நிவேதிக்கலாம். தனியாக நிவேதனத்திற்கென்று ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பாத்திரம், வெள்ளியாக இருந்தால் இன்னும் சிறப்பு. அப்படியில்லை என்றால், செம்பு பாத்திரம், தாமிர பாத்திரம் ஆகியவைகளை பயன்படுத்தலாம். ஆனால், எவர்சில்வர் பாத்திரத்தை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.ஆக, அந்த வெள்ளி (சிறியதாக இருந்தால்கூட போதும்) பாத்திரத்தில் சாதத்தை வைத்து அதன் மீது சிறிதளவு நெய் சாற்ற வேண்டும். நெய்விடாமல் ஸ்வாமிக்கு அர்ப்பணம் செய்யக் கூடாது. காரணம், நெய்க்கு ``அன்னம் சுத்தி’’ என்று இன்னொரு பெயர் உண்டு. பொதுவாக, நாம் சமைத்த உணவில் சில தோஷங்கள் ஏற்பட்டிருக்கும். அதனை நம்மால் நீக்க முடியாது. அதாவது, ஒரு வாழைப் பழத்தை தண்ணீரில் நனைத்து சுத்தம் செய்துவிடலாம். அதே போல், வெற்றிலை, தேங்காய் போன்றவற்றையும் சுத்தம் செய்துவிடலாம். ஆனால், சாதத்தை எப்படி சுத்தம் செய்வது?நிச்சயம் சாதத்தை சுத்தம் செய்தாகவேண்டும் அல்லவா? ஆகையால், அந்த சாதத்திற்கு நெய்விட்டால், அது சுத்தி (சுத்தம்) ஆகிவிடுகிறது. அன்னம் மட்டுமில்லை. சமைத்த எந்த ஒரு பொருட்களாக இருந்தாலும், அது சுத்தி ஆகிவிடும். எனவேதான் நெய்க்கு அன்னம் சுத்தி என்று பெயர். அந்த நெய்விட்ட வெள்ளை சாதத்தை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு, வீட்டில் காக்கா வந்து சாப்பிட வழி இருக்கிறது என்போர், காக்காவிற்கு அந்த அன்னத்தை வைக்கலாம். வீட்டில் காக்கா வர வழியில்லை என்போர், நீங்கள் உண்ணும் சாதத்திலேயே நிவேதித்த சாதத்தை சேர்த்துவிடலாம். அன்றாடம் ஸ்வாமிக்கு இப்படி நிவேதனம் செய்யும் போது, வடலூர் வள்ளல் பெருமானாரை மனதார பிரார்த்தனை செய்துகொண்டு,

``அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!

தனிப் பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!’’

என்கின்ற அவருடைய தாரக மந்திரத்தை சொல்லி, அந்த சாதத்தை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்தால், நம் பரம்பரைக்கே அன்னம் குறை வராது. பொதுவாக, நாம் ஆடுகிறது, பாடுகிறது, ஓடுகிறது, சம்பாதிக்கிறது, கஷ்டப்படுகிறது எல்லாமே இந்த ஒரு ஜான் வயித்துக்குத்தான். வயித்துக்கு கிடைக்குற சாப்பாடு, அன்றாடம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கணும் என்றால், இந்த ``நித்திய நிவேதனம் முறையை’’ கண்டிப்பாக செய்ய வேண்டும். இப்போ.. பெண்களுக்கு ஒரு கேள்வி எழலாம். பூஜை அறைக்குள் செல்லமுடியாத காலங்களில், எப்படி நாங்கள் இந்த சாதத்தை நிவேதிப்பது? என்கின்ற கேள்வி வரலாம். அதற்குதான், முதலில் எண்ணற்ற பல நிவேதன வழிமுறைகளை நாம் அலசிவிட்டோம். சில நாட்களில், அதாவது பூஜை அறைக்குள் செல்லமுடியாத நாட்களில் மூன்று நாட்களோ, ஐந்து நாட்களோ, ஏழு நாட்களோ, பத்து நாட்களோ எத்தனை நாட்களாக இருந்தாலும், ஒரு வாழைப்பழமோ அல்லது கற்கண்டோ, உலர்திராட்சையோ குழந்தையிடம் கொடுத்து பூஜை அறையில் நிவேதிக்க சொல்லலாம்.மறுபடியும் நீங்கள் பூஜை அறைக்கு செல்லும் போது, சாதத்தை வைத்து மீண்டும் நிவேதனத்தை செய்ய தொடங்கலாம். மேலும், வீட்டில் ஒரு நாளில் கேசரி செய்தாலோ, பொங்கல் செய்தாலோ, ஒரு வடை செய்திருந்தால்கூட அதனை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யலாம். தவறில்லை.சைவ உணவாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. ``இறைவனும் நம்மில் ஒருவர்’’ என, என்று நாம் நினைக்கின்றோமோ, அன்று இறைவன், ``அவரில் ஒருவராக நம்மை ஏற்றுக் கொள்வார்.’’ ஆகையால், இந்த எளிமையான அன்றாட நிவேதன முறையை மேற்கொண்டு, வாழ்வில் அன்னக்குறைவின்றி நிறைந்த செல்வம் பெற்ற ஒரு வாழ்க்கையை நாம் அனைவரும் பெற்று இன்பமாக வாழலாம்.

ஜி.ராகவேந்திரன்

 

Related News