வாழ்வில் அதிசயம் மலர அனுமன் சாலிசா
மன்னர் உடனே, ``அப்படியானால் எனக்கு ராமரை தரிசனம் தரச்சொல்’’ என்றார். அதற்கு துளசிதாசர், ஆத்மார்த்த அன்பு இருந்தாலே அது சாத்தியம் எனக்கூற அதனால், தான் அவமானப்பட்டதாக நினைத்த மன்னன், துளசிதாசரை சிறையில் அடைத்தான். துளசிதாசர், சிறையில் 40 அனுமன் சாலிசா பாடல்களைப் இயற்றி, அவற்றை பாடியும் வந்தார். என்ன ஆச்சர்யம்! நகரில் திடீரென வானரங்களின் கூட்டம் பெருகியது. அவற்றை அடக்க இயலாத மன்னன், துளசிதாசரை தேடி வந்தான். அப்போது துளசிதாசர், ``இது சிறியபடை, அடுத்து பெரியபடை வந்து அவற்றின் பின்னால் ராமர் வருவார்’’ எனக்கூற, மன்னன் தன் தவறை உணர்ந்து அவரை விடுவித்தான்.
ஜோதிடர் மாலிக், அனுமன் சாலிசாவை காலை அல்லது மாலையில் படிக்கலாம் என்கிறார். காலையானால், குளித்துவிட்டு சொல்ல வேண்டும். மாலையானால், கை, கால், முகம் கழுவி 40 பாடல்களையும் ஒரே சமயத்தில் படிக்க வேண்டும். இதனால் ஏற்படும் நன்மை என்ன என்று கேட்கிறார்கள். கெட்ட கனவுகள், தீய சக்திகள் நம்மிடமிருந்து விலக, அனுமன் உதவுகிறார். இரவு தலையணைக்கு அடியில் அனுமன் சாலிசாவை வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒரு வரி...
``பூத் பிச்சாஷ் நிகத் நஹி ஆவேன்
மகாவீர் ஜப் நாம் சுனவே..’’
அனுமன் சாலிசாவை தினமும் பாராயணம் (சொல்வதால்) உங்கள் வாழ்வில் வரும் அனைத்து தடைகளையும் அனுமான் அகற்றிவிடுவார். குறிப்பாக, தாழ்வு மனப்பான்மை சிந்தனைகள் அகலும், கவலை மற்றும் பயத்தை விரட்டும், ஆன்மிகத்தின் மேன்மையை கூட்டும், பாவங்களை அகற்றும், செய்யும் செயலில் ஈடுபாடு மற்றும் தெளிவு அதிகரிக்கும், உள் வலிமையை கூட்டும், வலுவானவராகவும் தைரியமானவராகவும் ஆக்கும், மாய மந்திரங்களை நெருங்கவிடாது விரட்டியடிக்கும்.
வியாதிஸ்தர்கள் முன் படித்தால் அவர்கள் ஆரோக்கியம் மேம்படும், பயணங்களுக்கு முன் அனுமன் சாலிசாவை படிப்பது விபத்துக்களை தவிர்க்கும், பஜ்ரங்பலி என அழைக்கப்படும் அனுமானை நம்பினோர் கைவிடப்படுவதில்லை, சனி தொல்லையில் உள்ளவர்கள் அனுமன் சாலிசா படிப்பது நல்லது, ஏனென்றால் சனிக்கு அனுமான் மீது பயம் உண்டு, தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வு போன்றவற்றையும் அகற்றுவார். அடிக்கடி வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகள், கண்ணில் புலம்படாத நடமாட்டங்களை தடுத்து, வீட்டில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவார்.
ராஜி ராதா