தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூர்தாசர்

பகுதி 2

Advertisement

சூர்தாசர் பாடத் தொடங்கியதும், சரஸ்வதிதேவி வீணையோடும் விநாயகர் ஜால்ராவுடனும் அங்குதோன்றி, பாடல்களுக்கு வீணை வாசிக்கவும் தாளம் போடவும் தொடங்கி, சூர்தாசருக்கு

இருபுறமும் நின்றார்கள்.பாடல்களுக்குத் தகுந்தவாறு தேவலோகத்துப் பெண்கள், அபிநயம் பிடித்து ஆடினார்கள். தேவாதிதேவனான மகாவிஷ்ணுவும் அங்கு எழுந்தருளி, சூர்தாசரின் பாடல் களைக் கேட்டு பிரம்மானந்தம் அடைந்தார்.

கண்ணனின் லீலைகளைப் பாடல்களாகப் பாடிய சூர்தாசர் பாடி முடித்ததும், தெய்வங்களும் தேவர்களும் அங்கிருந்து மறையத் தொடங்கினார்கள். சபையில் இருந்தவர்கள் எல்லாம், மெள்ளமெள்ள தங்கள் நிலைக்குத் திரும்பினார்கள்.மன்னர், சூர்தாசரை நெருங்கிக் கைகளை கூப்பி, ‘‘சுவாமி! உங்கள் பாடல்கள் எங்களை தெய்வீக நிலைக்கு உயர்த்தி விட்டன. நீங்கள் இங்கேயே சில நாட்கள் தங்கி, பாமரர்களுக்கும் பக்தி என்னும் அமுதத்தைப் புகட்ட வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.சூர்தாசர் இணங்கினார். தினந்தோறும் பக்தியோடு பாடல்களை, தான் பாடுவதுடன் மற்றவர்களையும் அதில் ஈடுபடுத்தி, பக்திச் சுவையை அனுபவிக்கும்படிச் செய்தார்.

சூர்தாசரின் பெருமை, அந்தப்புரத்தில் இருந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களையும் எட்டியது. அவர்கள், ‘‘மகானான சூர்தாசரை அந்தப்புரத்திற்கு அழைத்து வந்து, பாடச் செய்து எங்களையும் மகிழ்ச்சி அடையுமாறு செய்ய வேண்டும்’’ என அரசரிடம் வேண்டினார்கள்.அவர்களின் வேண்டுதல் சூர்தாசரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் ஒப்புக் கொண்டார். சூர்தாசரை அந்தப்புரத்திற்கு அழைத்து வந்து, உயர்ந்ததான ஆசனத்தில் அவரை அமர வைத்தார்கள். சூர்தாசர் பாடத் தொடங்கினார்.

வெளியாட்கள் எதிரில் ‘கோஷா’ இல்லாமல் வராத அந்தப்புரப் பெண்கள், ‘‘இவருக்குத் தான் பார்வை கிடையாதே! இவர் எதிரில் நாம் உட்காருவதில் தவறே இல்லை’’ என்று, கோஷா இல்லாமலேயே சூர்தாசரின் எதிரில் நெருக்கமாக உட்கார்ந்தார்கள். நேரம் ஆக ஆக, சூர்தாசரின் பாடல்களைக் கேட்டு, அந்தப்புரப் பெண்கள் மெய் மறந்தார்கள்.

கண்ணபிரானால் சபிக்கப்பட்ட சத்யபாமாவின் நிலை பற்றிப் பார்க்கலாம் இனி. ‘‘நீ ஒரு பணிப் பெண்ணாகப் பிறப்பாய்’’ எனக் கண்ணனால் சாபம் தரப்பட்ட சத்யபாமா பணிப்பெண்ணாகப் பிறந்து, அந்த தேச (அவந்தி) அரசரின் அந்தப்புரத்தில் பட்ட மகிஷிகளுக்குப் பணிப்பெண்ணாக இருந்தாள். ஏற்கனவே, கண்ணன் வாக்களித்தற்கு இணங்க, கண்ணன் அருள் மழை பொழிந்தார். சாபம் நீங்கி, சத்யபாமாவின் வடிவம் வெளிப்பட்டது. தன் உண்மையான வடிவத்துடன் சத்யபாமா, சூர்தாசரின் எதிரில் போய் நின்றார்.

கண்ணன் அருளால் சூர்தாசருக்குப் பார்வை தெரிந்தது.

தன் எதிரில் வந்து நின்ற சத்யபாமாவைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்; ‘‘தாயே! சத்யபாமா தேவீ! நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள்?’’ எனக் கேட்டார்.பார்த்துக் கொண்டிருந்த அந்தப்புரப் பெண்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.‘‘இந்த மகானை நாம் குருடர் என்று நினைத்துத்தானே, இவர் முன்னால் வெட்கம் இல்லாமல் உட்கார்ந்தோம். ஆனால், இப்போது இவர் நடந்து கொண்டதைப் பார்த்தால், இவருக்குப் பார்வை தெரியும் போல் இருக்கிறதே!’’மகானான இவர் போய்க் குருடனைப்போல நடிப்பாரா என்ன? ஒருக்காலும் செய்ய மாட்டார். குருடாக இருந்த இவருக்குத் திடீரென்று பார்வை தெரிந்திருக்கும்.

‘‘அதுவும் இல்லாமல், இவ்வளவு நாட்களாக நம்மிடம் பணிப் பெண்ணாக இருந்தவள், திடீரென்று சத்யபாமாவாக மாறி விட்டாளே! என்ன ஆச்சரியம்! அகில உலகங்களுக்கும் அன்னையான சத்யபாமாவையா, இத்தனை நாட்களும் விரட்டிவிரட்டி வேலை வாங்கினோம்?

‘‘குருடாக இருந்தவருக்குப் பார்வை வந்ததும், வேலைக்காரியாக இருந்த பெண் சத்யபாமாவாக மாறியதும், ஏதோ விந்தை போல இருக்கிறதே!’’ என்று பேசிக் கொண்ட அந்தப்புரப் பெண்கள், வேகவேகமாகப் போய்த் திரை மறைவில் இருந்து கொண்டு, அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அதே சமயத்தில், பரம்பொருளான பகவான் அங்கு தோன்றி, அனைவருக்கும் காட்சி கொடுத்தார். சூர்தாசரும் பணிப் பெண்ணும், போன பிறவியில் அக்ரூரரும் சத்யபாமாவாகவும் இருந்ததைச் சொல்லி, நடந்ததை எல்லாம் விவரித்தார். கேட்ட அனைவரும் பகவானையும் சத்யபாமாவையும் சூர்தாசரையும் வணங்கித் துதித்தார்கள்.

எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சத்ய பாமாவையும் சூர்தாசரையும் தனக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்ட பகவான் அங்கிருந்து மறைந்தார்.பெரும்பெரும் மாளிகைகளில் ஒரு சிலவற்றிலாவது, ஒரு படம் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். அதே படம் ஒரு சில படக் கடைகளிலும் சிறிய அளவில் இடம் பெற்றிருப்பதையும் பார்த்திருக்கலாம். 2 -க்கு 8; 1 -க்கு 4; என்ற அளவில், இருக்கும் அப்படம். அதில், இடது கைப்புரமாக முதுமையில் மெலிந்த ஓர் உருவம் கையில் தம்புராவுடன் இருக்கும்; பொக்கைவாய் சிறிது திறந்து இருக்கும். கண்களை மூடிய நிலையில் இருக்கும் அவருக்கு எதிரில், கால்களைக்கட்டி சப்பணம் இட்டு அமர்ந்து, கைகளைக் கட்டி மடியின் மீது வைத்து, மிகவும் அடக்க ஒடுக்கமாகக் கண்ணன் அமர்ந்திருப்பார்.

இந்த இருவருக்கும் பின்னால் அழகான குடிசை; அதற்கு இடப்புறத்தில் சிறிதும் பெரிதுமான மரங்கள்; மரங்களில் ஆங்காங்கே மலர்ந்திருக்கும் மலர்கள்; மரங்களுக்குக் கீழே விழுந்திருக்கும் சில பல இலைச்சருகுகள்; மரங்களுக்குப் பின்னால் தூரத்தே இருந்து ஓடிவரும் சிற்றாறு அல்லது ஓடை - எனக் காட்சியளிக்கும் அப்படம், பார்ப்பவர்களை அப்படியே பரவசப்படுத்தும்.அந்தப் படத்தில் இருப்பவர் தான் ‘சூர்தாசர்’. கண்களில் பட்டுக் கருத்தில் பதிந்த அந்த ‘சூர்தாசர்’ நமக்கும் கண்ணன் அருளை வழங்க வேண்டுவோம்!

பி.என். பரசுராமன்

Advertisement

Related News