தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெளிவு பெறு ஓம்

Advertisement

சங்கு பற்றிச் சொல்லுங்களேன்?

- ஜி.வி.ரவி, சென்னை.

சங்குகளில் வலம்புரிச் சங்கு மிகவும் சக்தி வாய்ந்தது. பெருமாளுக்குரியது, பூஜையில் வைப்பது சிறப்பு. பல்வேறு சங்குகளைப் பற்றி விகனச ஆகமம் கூறியுள்ளது. எல்லா மூர்த்திகளுக்கும் ஒரே விதமான சங்கு இல்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு.

1) ஸ்ரீகிருஷ்ணர் கையிலிருப்பது - பாஞ்சசன்யம் எனும் சங்கு,

2) திருப்பதி திருவேங்கடவன் கையிலிருப்பது - மணிச்சங்கு,

3) ரங்கநாதர் கையிலிருப்பது - துவரிச்சங்கு,

4) அனந்த பத்மநாப ஸ்வாமி கையிலிருப்பது - பருதச் சங்கு,

5) பார்த்தசாரதி கையில் இருப்பது - வையவச் சங்கு,

6) சுதர்சன ஆழ்வார் கையிலிருப்பது - பார்ச்சங்கு,

7) சௌரிராஜப் பெருமாள் கையிலிருப்பது - துயிலாச் சங்கு,

8) கலிய பெருமாள் கையிலிருப்பது - வெண் சங்கு,

9) ஸ்ரீநாராயண மூர்த்தி கையிலிருப்பது - பூமா சங்கு என்பனவாகும்.

மகாபாரதத்திலும் சங்கு குறித்து வருகிறது

பஞ்ச பாண்டவர்கள் ஐவருமே ஆளுக்கொரு சங்குகளை வைத்திருந்தார்கள் என்பது மகாபாரதம் இயம்பும்.

1) தர்மருடைய சங்கு - அனந்த விஜயம்,

2) பீமனுடைய சங்கு - மகாசங்கம் (பௌண்டரம்),

3) அர்ச்சுனனுடைய சங்கு - தேவதத்தம்,

4) நகுலனுடைய சங்கு சகோஷம்,

5) சகாதேவனுடைய சங்கு - மணிபுஷ்பகம்.

சைவத்தில் சிவனுக்கு சங்காபிஷேகம் விசேஷமானது. 108, 1008 என சங்குகளில் புனித நீரை நிரப்பி அபிஷேகம் செய்வார்கள்.

?வாழ்க்கையில் அது இல்லை; இது இல்லை என்று சிலர் புலம்புகிறார்களே! என்ன காரணம்.? இது சரியா?

- கிருஷ்ணகுமார், அண்ணாநகர் - சென்னை.

அதற்குப் பல காரணங்கள் இருக்கும்.

1. எங்கே, தான் வசதியாக வாழ்வதைப் பார்த்துப் பொறாமைப்படுவார்களோ என்றொரு காரணம்!

2. ஏதேனும் கடன் கேட்டால் என்ன செய்வது என்று ஒரு காரணம்!

3. இதெல்லாம் மீறி சிலருக்கு எத்தனை வசதிகள் வந்தாலும், நிறைவு கிடைக்காது. ஏதும் இல்லாதவர்களாகப் புலம்பித்

தீர்த்துக் கொண்டிருப்பார்கள். என்னைப் பொருத்தவரை, நிஜமாகவே கவலை உள்ளவர்கள்கூட வெளியே சொல்வதால் பலன் இல்லை. காரணம், கவலைகளை நம்மிடமிருந்து வாங்க யார் தயாராக இருக்கிறார்கள்? இல்லாததை நினைத்து புலம்புவதைவிட இருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

?யார் தோழன்? யார் உறவு?

- சுப்பையா, ராமநாதபுரம்.

‘‘உயிர்காப்பான் தோழன்” என்பார்கள். நாம் சந்தோஷமாக இருக்கும்போது பலரும் துணையிருப்பார்கள். ஆனால், துன்பப்படும்போது யார்கூட இருக்கிறார்களோ அவர்களே உண்மையான தோழர்கள், உறவுகள்! இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிகையில் ஒரு செய்தி!

ராஜஸ்தானில் ஒரு மூதாட்டி இறந்துவிட்டார். ஒரு வருடத்திற்கு முன் தன் கணவனை இழந்த அவர், ஒரு சிறிய அறையில் வாழ்ந்துகொண்டிருந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அந்த அம்மையாருக்கு உணவளித்து வந்தனர். இறந்தபிறகும், அவர்களே செலவு செய்து அடக்கம் செய்தனர். பிறகு அவர் வாழ்ந்த அறையைச் சோதனையிட்ட போது, அவரது வங்கிக் கணக்கில் 2 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் இருப்பது தெரிய வந்தது. இப்போது யாரோ ஒரு உறவினர், ‘நான்தான் இந்த மூதாட்டியின் வாரிசு! எனக்குத்தான் அந்தப் பணம் சேர வேண்டும்’ என்று குதித்திருக்கிறார். உறவு எப்படி இருக்கிறது, பாருங்கள்! இப்படிப்பட்ட உறவா உண்மை உறவு!

?மரணம் என்பது என்ன?

- பா.வான்மதி, திண்டுக்கல்.

இல்லாமல் போவதுதான் மரணம் என்கிறார்கள். எது இல்லாமல் போவது? என்ற கேள்வி எழும் பகவத்கீதையின் முன்னுரையில், “அச்சமே மரணம், தைரியமே வாழ்வு” என்று எழுதுவார் பாரதி. இதைத்தான் விவேகாநந்தரும் சொன்னார். சங்கர பகவத் பாதர், பகவானை மறந்தவன் இறந்தவனுக்குச் சமானம் என்றார்.

?செவ்வாய் தோஷம் என்று சொல்லி ஜாதகத்தை விலக்குவது, சரியா?

- திரிபுரசுந்தரி, தாம்பரம்.

பெரும்பாலான ஜோதிடர்களுக்கு செவ்வாய் தோஷம் தெரிகிறது. பிராயச்சித்த விதிகள் தெரிவதில்லை அல்லது கண்டு கொள்வதில்லை. அதனால் பல திருமணங்கள் நின்று விடுகின்றன. பொதுவாக, இலக்கினத்திற்கு 2, 4, 7, 8, 12ல் செவ்வாய் இருந்தால் தோஷம் உண்டு என்பது சிறப்பு விதி. ஆனால், ஆண்களுக்கு 2, 7, 8லும், பெண்களுக்கு 4, 8, 12லும் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் உண்டு என்பது பொது விதி. இதை சுக்கிரனுக்கும் சந்திரனுக்கும் லக்கனமாக வைத்துப் பார்க்க வேண்டும் என்பார்கள். அநேகமாக, எல்லா ஜாதகங்களிலும் இந்த விதிப்படி செவ்வாய் தோஷம் இருக்கும். தோஷம் பார்ப்பது அல்ல, தோஷ நிவர்த்தி பார்க்க வேண்டும். அதை பார்ப்பது இல்லை.

மிதுனம் - கன்னி இரண்டாமிடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும், ரிஷபம் துலாம் இருந்தாலும், பனிரண்டாம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும், மகரம் - கடகம் ஏழாமிடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும், தனுசு - மீனம் எட்டாமிடாமாகி அதில் செவ்வாய் இருந்தாலும், அங்காரகதோஷம் நிவர்த்தி உண்டு.செவ்வாய், சிம்மம், மேஷம், விருச்சிகம், மகரம், கும்பம் இவைகளில் இருந்தால் தோஷம் பரிகாரமாகிறது. செவ்வாய் இருக்கும் ராசிநாதன் செவ்வாய்க்கு கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும், புதன், சந்திரன், சுக்கிரன், குரு ஆகியவர்களோடு கூடினாலும், அவர்கள் பார்வை பெற்றாலும் செவ்வாய்தோஷம் விலகுகிறது.

கடக, சிம்ம லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு,செவ்வாயினால் வரும் எவ்வகை தோஷமும் இல்லை. ஜனன லக்கினம், சந்திர லக்கினம், சுக்கிர லக்கினம் இவ்வாறு பல இருப்பினும், லக்கினத்தைக் கொண்டே செவ்வாய் தோஷம் சொல்லப்பட வேண்டும்.

?நாம் மதிக்க வேண்டியது எதை?

- புருஷோத்தமன், ஆண்டிப்பட்டி.

தண்ணீரையும் கண்ணீரையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் மதிப்பானது. அது வானத்திலிருந்து வந்தாலும் சரி, மற்றவர்கள் கண்ணில் இருந்து வந்தாலும் சரி.

?எப்பொழுது மகிழ்ச்சி பிறக்கும்?

- வே.முத்துராஜன், திருபரங்குன்றம்.

மற்றவர்களுக்கு தரும் பொழுது மகிழ்ச்சி பிறக்கிறது. “ஏகஸ் வாது ந புஞ்சித:” என்பார்கள். அதாவது, தனியாக சாப்பிடக்கூடாது என்று பொருள். பிறருக்கு தந்து உண்ண வேண்டும். அதுவே மகழ்ச்சி. நாம் சாப்பிட்டால் நம்முடைய நாக்கு மட்டுமே இனிக்கும். மற்றவர்களைச் சாப்பிட வைத்தால், நம்முடைய மனம் இனிக்கும். அதனால்தான் கொடுத்துச் சாப்பிடு என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். ஆன்மிகத்தின் அடிப்படையான பாடங்களில் முக்கியமானது மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது.

?பூஜைக்கு மனது சுத்தம் முக்கியமா? உடல் சுத்தம் முக்கியமா?

- வாசுகி பெரியசாமி, புதுக்கோட்டை.

இரண்டுமே முக்கியம். ஆனால், இரண்டிலும் மிக முக்கியம் மனத்தூய்மை. உடல் தூய்மை நீரால் அமையும், மனத்தூய்மை வாய்மையால் காணப்படும் என்றான் வள்ளுவன். பூஜையில் சிந்தை, செயல், சொல் மூன்றும் ஒன்றிழைய வேண்டும். ஒரு நிமிடமாவது இந்த திரிகரண சுத்தியோடு பூஜை செய்தால், அந்த பூஜை பலன் கொடுக்கும். இதைத்தான் ஆண்டாள், தூயோமாய் வந்து தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய் பிழையும் புகு தருவான் என்று பாடி வைத்தாள்.

?ஆன்மிகத்தின் எல்லை எது?

- கவிதா ராஜேந்திரன், கன்ணியாகுமரி.

ஆனந்தம்தான் ஆன்மிகத்தின் எல்லை. ஆனந்தத்தை அடைவதுதான் ஆன்மிகத்தின் குறிக்கோள். இந்த ஆனந்தத்தை பிரம்மானந்தம் என்று சொல்வார்கள்.

?நிறைய படித்தவர்களும், அறிவு குறைபாடு உடையவர்களாக இருக்கிறார்களே?

- கு.நந்தகுமார், விழுப்புரம்.

எவ்வளவு உணவு சாப்பிடுகிறோம் (படிக்கிறோம்) என்பது முக்கியம் கிடையாது. அதில் எவ்வளவு ஜீரணமாகிறது (வாழ்க்கைக்கு உதவுகிறது. பின்பற்றப்படுகிறது) என்பது முக்கியம். பல பேருக்கு சாப்பாடு ஜீரணமாகாமலே அப்படியே வந்து விடுகிறது. அதனால், படித்த படிப்பு எந்த விதத்திலும் உபயோகம் இல்லாமல் போய் விடுகிறது. படிப்பு என்பது நம்முடைய இயல்பான அறிவை மூடி இருக்கக் கூடிய அழுக்குகளை நீக்குவது. கல்வியின் நோக்கம் ஒருவனை அரத்துவமாக்குவது. இந்த அடிப்படையில் கற்றவர்களுக்கு அறிவுக் குறைபாடு வருவதற்கு வாய்ப்பு இல்லை.

?வாழ்க்கைக்கு திருப்தி அவசியமா? வெற்றி அவசியமா?

- கவீந்திரன், சென்னை.

திருப்திதான் அவசியம். அதுதான் நிறைவு. உலகம் திருப்தியோடு வாழக் கற்றுக் கொண்டுவிட்டால், இத்தனைப் பிரச்னைகள் இருக்காது. ஆனால், எல்லோரும் வெற்றியைத் துரத்துகிறார்கள். வெற்றி என்று எதுவும் இல்லை. அது ஒரு மயக்க நிலை. இன்று நீங்கள் ஒரு இலக்கை வெற்றி என்று கருதினால், அதைவிட கொஞ்சம் மேலான சாதனையோ வெற்றியோ கிடைத்துவிட்டால் உங்கள் வெற்றி ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும். ஆனால், திருப்தி அப்படி அல்ல. திருப்தி என்பது உங்களுடைய மனம் சொல்வது. வெற்றி என்பது பிறர் நிர்ணயம் செய்து தருவது. அதனால்தான் பிறரால் வெற்றியாளர்கள் என்று சொல்லப்படுகின்ற பலரும் சொந்த வாழ்க்கையில் பலத்த தோல்வி அடைந்து விடுகிறார்கள். சிலர் தற்கொலைகூட செய்து கொள்கின்றார்கள்.

?மகிழ்ச்சிக்கு துணைபுரிவது எது?

- வித்யா ராஜகோபாலன், திருச்சி.

எளிமையான வாழ்க்கை. பெரிய கஷ்டம் என்று சொன்னால் எளிமையாக வாழ் வதற்கு கஷ்டப்பட வேண்டி இருக்கும். அந்த எளிமை இயல்பாக வந்துவிடாது.

?ஆன்மிகத்தில், ஆன்மா என்று சொல்லுகின்றார்கள். ஆன்மாதான் நிரந்தரமானது, அழிவதில்லை; என்று சொல்கின்றார்கள், இப்படிச் சொல்வதற்கு ஏதாவது சான்று இருக்கிறதா?

- எஸ்.சந்திரசேகர், திருவள்ளூர்.

ஏன் இல்லை? நம்முடைய உடல் தினம் அழிகிறது. தினம் தினம் படைக்கப்படுகிறது. ஒவ்வொரு செல்லும் புதிதாகத் தோன்றி கொண்டே இருக்கின்றது. பழைய செல்கள் மடிந்து கொண்டே இருக்கின்றன. பௌதிகமான உடம்பு தினம் அழிந்து அழிந்து உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றது. ஆனால், இது தெரிவது கிடையாது. ஆனால், உங்களுக்குள் இருக்கும் ஆன்மா எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கின்றது. இதை உணர்ந்தாலே போதும் அழியக்கூடிய உடலிலே ஆன்மா நிரந்தரமாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

?மனிதன் எதை இழக்கக்கூடாது?

- சுரேஷ், நாகை.

நிகழ் காலத்தை இழக்கக் கூடாது. BE IN PRESENT என்பார்கள். ஆனால், கடந்த கால துக்கங்களிலும் எதிர்காலக் கற்பனைகளிலும் நிகழ்காலத்தை இழந்து

கொண்டிருக்கிறோம்.

?பூனை இடமிருந்து வலம் போனால் சுகம் என்கிறார்களே?

- வேலாயுதபாணி, தேனி.

இது சகுனத்தில் சாஸ்திர விஷயம். கருடன், மான், கோட்டான், கீரி, அணில், நாய், பூனை, மூஞ்சூறு இவைகள் வலம் இருந்து இடம் செல்வது சுபம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் போலவே காகம், நரி, கிளி, குரங்கு, கொக்கு, மயில், குயில், மாடு, எருமை, இடமிருந்து வலம் போனால் சுகம். இதில் இன்னொரு நுட்பமான விஷயம். சாதாரண பூனை வலம் இருந்து இடம் போனால் சுபம். ஜவ்வாது பூனை இடமிருந்து வலம் போனால்தான் சுபம்.

?அர்த்தோதயம் என்றால் என்ன?

- மா.சுமதி, கோவை.

அபூர்வமாக வருகின்ற ஒரு சுபவேளைதான் அர்த்தோதயம். ஆண்டுக்கு ஒரு முறை வரலாம். சில ஆண்டுகளில் வராமலும் போகலாம். குறிப்பிட்ட மாதம் வாரம் திதி யோகம் நட்சத்திரம் இவைகளெல்லாம் ஒன்றாகக் கூட வேண்டும். தை மாசி மாதங் களில், அமாவாசை நாள் உதயத்தில், ஞாயிற்றுக் கிழமையில், வியதீபாத யோகம் உள்ள நேரத்தில், திருவோண நட்சத்திரமும் வந்தால் அதற்கு அர்த்தோதயம் என்று பெயர். இப்படிப்பட்ட நாளில் சமுத்திர ஸ்நானம் செய்தால், கோடி சூரிய கிரகண புண்ணிய காலத்தினுடைய பலன் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்லுகின்றது.

தொகுப்பு: தேஜஸ்வி

Advertisement

Related News