தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேவியர் தரிசனம்

* திருச்செந்தூருக்குத் தெற்கே 14 கி.மீ தொலைவில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் அறம் வளர்த்த நாயகியை தரிசிக்கலாம். ஆலயத்தில் அன்னைக்குப் படைக்கப்பட்டு அளிக்கப்படும் மாம்பழ பிரசாதம் மழலை வரம் அருள்கிறது.

Advertisement

* திருநெல்வேலி காந்திமதி அன்னை தினமும் உச்சிக்காலத்தில் நெல்லையப்பருக்கும் பரிவார தேவதைகளுக்கும் தீவட்டி பரிவாரங்கள் மற்றும் அர்ச்சகருடன் சென்று நிவேதனம் செய்த பின்னே தன் பூஜையையும், நிவேதனத்தையும் ஏற்றருள்கிறாள்.

* சக்தி பீடங்களில் விமலை பீடமாய் திகழ்கிறது நெல்லை, அம்பாசமுத்திரம், பாபநாசம் உலகம்மை சந்நதி. நமசிவாயர் எனும் கவியின் வயிற்று வலி தீர்த்தருளி அவரை ஆட்கொண்ட தேவி இவள்.

* குற்றாலத்தில் யோகபீடம் எனும் பெயரில் பராசக்தி மேரு வடிவில் திருவருள் புரிகிறாள். பௌர்ணமி தினங்களிலும், நவராத்தியின் போதும் இந்த பராசக்தி பீடம் விசேஷமாக வழிபடப்படுகிறது.

* விருதுநகர் - தென்காசி பாதையில் உள்ள சங்கரன்கோயிலில் கோமதியம்மன் தனிப் பெருங்கருணையோடு அருள்கிறாள். இத்தேவியின் சந்நதி முன் வேலப்ப தேசிக மூர்த்திகள் எனும் அடியார் பிரதிஷ்டை செய்த சக்கரத்தின் அருகே ஆடாத பேயும் ஆடுகிறது. தீராத நோயும் தீர்கிறது.

* 64 திருவிளையாடல்களைப் புரிந்த மதுரை சோமசுந்தரக் கடவுளின் பட்டத்து ராணியான மீனாட்சி தேவியை தொடர்ந்து மூன்று நாட்கள் திருப்பள்ளியெழுச்சியின் போதும் இரவு பள்ளியறை பூஜையின் போதும் வணங்கினால் நம் எல்லா கோரிக்கைகளும் நிறைவேறுகின்றன.

* ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளின் குலதெய்வமாக விளங்குபவள் ராமேசுவரம் பர்வதவர்த்தனி அம்பிகை. அழகு தமிழில், மலைவளர் காதலி, இத்தேவியின் திருவடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தங்க ஸ்ரீசக்ரம் சக்தி வாய்ந்தது.

* மயிலாடுதுறை திருமணஞ்சேரியில் அருளும் அருள்வள்ளல்நாதரும் யாழினுமென்மொழியாளும் தம்மை தரிசிப்பவர்களுக்கு மணப்பேற்றைத் தருகின்றனர். இத்தலத்தில் திருமணமானவர்களின் மண வாழ்க்கை ஒரு போதும் முறிவதில்லைஎன்பது நிச்சயமான உண்மையாகும்.

* திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, ஆதி சங்கரரால் அணிவிக்கப்பட்ட ஸ்ரீசக்ரம், சிவசக்ரம் எனும் இரண்டு தாடங்கங்களை அணிந்து தன் மேலிரு கரங்களில் மகாலட்சுமியைப் போன்றே தாமரை மலர்களை ஏந்தி அருள்பாலிக் கிறாள்.

* கும்பகோணம் கும்பேசுவரர் ஆலயத்தில் கொலுவிருக்கும் மந்திரபீடேஸ்வரி மங்களநாயகி, பக்தர்களின் பல்வேறு நோய்களைப் போக்குவதால் ‘பலநோயறுக்கும் பரை’ என்ற பெயரும் இத்தேவிக்கு உண்டு.

* திருவாரூர் தியாகராஜர் ஆலய இரண்டாம் பிராகாரத்தில் தன் ஒரு கையில் நீலோத்பல மலரை ஏந்தி மறு கரத்து சுண்டு விரலால். தோழியின் தோள் அமர்ந்திருக்கும் முருகனின் சுண்டு விரலைப் பிடித்திருக்கும் எழிலுருவில் நீலோத்பலாம்பாளை தரிசிக்கலாம்.

ஜெயசெல்வி

Advertisement

Related News