தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்பிகையே வருக... அருள் மழை பொழிக!

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

Advertisement

``விழையைப் பொருதிறல்

வேரியம் பாணமும்’’

‘`விழைய’’ - ஆசையை, பொருத - தூண்டுகிற, வேரியம் - தேன் நிறைந்த, மலர்களை - பாணங்களை, அம்பாக கொண்ட பொருட்களை சூட்டும் வகையில் உமையம்மை கையில் இருக்கிற ஆயுதத்தை மலர் கொத்தை இங்கே குறிப்பிடுகிறார். பொதுவாக, சிற்ப சாஸ்திரத்தில் ஆயுதங்களை வடிவமைப்பர், அதில் இரட்டை ஆயுதங்கள் என்று ஒன்றுக்கு ஒன்று உதவுகிற, ஒன்று இல்லாது ஒன்று இயங்காத பண்பை கொண்ட ஆயுதங்களை வலம் இடமாகவும் அமைப்பர். உதாரணமாக, கத்தி - கேடயம், அபய முத்திரை - வரத முத்திரை, சூலம் - கபாலம், என்பது போல வில்லையும் - அம்பையும் அமைப்பர். அந்தவகையில் வில்லாகிய கரும்பை சொன்ன அபிராமிபட்டர் அதன் இணை ஆயுதமாக பஞ்ச பாணத்தை இங்கே குறிப்பிடுகிறார்.

மேலும், ``வேரியம் பாணமும்’’ என்பதனால், வண்டுகள் மொய்க்கப்படாத தேன் நிறைந்த மலர்களை இங்கே குறிப்பிடுகிறார். மேலும், சிவ சக்தியாகிய அபிராமி அவள் தன்னை வணங்குகிறவனுக்கு அவன் தேவையை நிறை செய்யும் பொருட்டுதான் வடிவமெடுத்து அருள்வாள். அந்த வகையில் மன்மதனின் படைப்பாற்றலை வழங்குவதற்கு உறுதுணையான கரும்பு - வில்லையும், வேரியம் - பாணத்தையும் தருகிறார்.

மன்மதனோ, உமையம்மையை உபாசித்து இறந்த தனது உயிரை, இழந்த தொழிலை, ஆயுதத்தை உமையம்மை அருளாலும், சிவனிடத்தில் இழந்ததை சிவ சக்தியால் பெற்றுவிடுகிறார். இதைதான் ‘அண்டமெல்லாம் பழிக்கும் படி’ (87) என்கிறார் பட்டர். இப்பாடல் மன்மதனுக்கு அருளிய கோலம் என்பதால் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றவல்லது

என்கிறது தந்திர சாத்திரம்.

விழைய - என்பதனால் பக்தர்கள் தாம் விரும்பிய பலனைப் பெற கரும்பையும், ஐம்மலர்களையும் கொண்டு தேன் சேர்த்து தினம் ஒரு மலராக ஐந்து நாளும் வெள்ளி, செவ்வாயிலும், கரும்பையும், தேனையும் வைத்து வழிபட்டால். ஆண், பெண் இருபாலரும் தாங்கள் விரும்பியவாறு மணவாழ்க்கை பெறுவர். மணந்தவர்கள் இதேபோல், வழிபட்டால் குழந்தை வரம் பெறுவார்கள் என்கிறது சாத்திரம். இவையாவும் மனதில் கொண்டே “விழையை பொருளியல் பேரியம் பாணமும்”

என்கிறார்.

“வெண்ணகையும்”நகை என்பது புன்சிரிப்பை குறித்தது, வெண்ணகை என்பதனால் வெண்மையான பற்கள் சற்றே விலகித் தோன்ற அதிகமான மகிழ்ச்சி அடைந்த உமையம்மையின் மகிழ்ச்சியை காண்கிறார் பட்டர். அத்தகைய தோற்றத்தில் வழிபடுவோரும் மகிழ்ச்சி அடைவர் என்கிறார். மேலும், நகை என்பது அணியை குறிக்கும். “வெண்ணகை” என்பது உமையம்மைக்கு மிகுந்த விருப்பம் உடைய அணியைக் குறிக்கும். ‘முத்தாரமும்’ (53‌) என்பதனால் இதை நன்கு அறியலாம். நகை அணிந்து காட்சியளிக்கும் உமையம்மையை செல்வச் செழிப்பை வழங்குவாள் என்கிறது ஆகமம். இலக்கிய நோக்கில் வெண்மையானது குற்றமற்ற புகழை குறிக்கும். உமையம்மையானவள்தான் புகழுடையவள். தன்னை வணங்குவோர்க்கு புகழை வரச் செய்பவள் இதை “மாறாத கீர்த்தி” என்றும் ‘பனி முறுவல் தவளத் திருநகையும்’ (38) என்பதனாலும் இதை நன்கு அறியலாம்.

‘பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும்’ (38) என்று உதடுகளை சொல்லாமல் சற்றே சிரிப்பதால் சிவப்பு வண்ணத்தில் நடுவில் மல்லிகை மொட்டு போன்ற வெண்மையான பல் வரிசை சற்றே தெரிவதை கொண்டே ``வெண் நகையும்’’ என்கிறார். மேலும், அவளுடைய சிரிப்பு கள்ளம் கபடமற்றது. ஒரு குழந்தையை பார்த்து தாய் சிரிப்பதை போன்றது என்பதை வலியுறுத்துவதோடு உமையம்மையின் பற்கள் ஷோடஷாக்ஷரி மந்திர வித்தையை குறிக்கின்ற ஒரு அடையாள சொல்லாகும். அந்த வகையில் ``சோடஷாக்ஷரி’’ மந்திரத்தின் பயன்களான காமியம், மோஷம், ஞானம் என்ற மூன்றையுமே வழங்க வல்ல ஆற்றலையே “வெண்ணகையும்” என்கிறார்.

``உழையப் பொருகண்ணும்’’

``உழைய’’ - என்பதனால் வருத்தத்தையும், ‘`பொருது’’ என்பதனால் - தடையையும், ‘`கண்ணும்’’ என்பதனால் கண்ணையும், முறையே என்பதனால் தன்னை வழிபடுவோரின் துன்பத்தை கண்களாலேயே தடைசெய்து காத்தருள்வாள் என்பதையே ``உழையப் பொருகண்ணும்’’ ‘தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே’ - நூற்பயன் என்பதனால் நன்கு அறியலாம்.

‘`உழை’’ என்ற வார்த்தையை அபிராமிபட்டர் துன்பப் பொழுதை சூட்டவும் பயன்படுத்துகிறார். அறிவற்ற பண்பாலும், ஆசையாலும், வறுமை முதலிய சூழலாலும், தோன்றும் துன்பத்தில் சிக்கிக் கொள்கிற போது உலகியல் வழியில் யாசகத்தாலோ, சில செய்கையாலோ தீர்த்துக்கொள்ள முடியாமல் ஆலயத்தில் இருக்கும் அபிராமியையே நாடி வழிபாட்டையே செய்ய விழைகிறார் பட்டர். அதையே ‘உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தேன்’ (33) என்பதனால் நன்கு அறியலாம். அபிராமியின் கண்களானது மூன்று விதமான செயலை செய்கிறது என்கிறார் பட்டர்.

`‘தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா

மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங் குழலாள் அபிராமி கடைக்கண்களே’’ (69)

என்பதனால் உலகியலுக்கு தேவையான நல்லன எல்லாவற்றையும் அளித்துவிடும் ஆற்றலைக் கொண்டது என்பதையும் ‘அந்தகன்பால் உன்தன் விழியின் கடை உண்டு’ (39) என்பதனால் மரணத்தை விளக்கி மோட்சத்தையும் தர வல்ல ஆற்றல் உடையது. மேலும் ‘விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு’ (79) என்று அனைத்து ஞானத்தையும் அளிக்கும் ஆற்றல் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகை புருஷார்த்தங்களையும் கண்களே அளித்தருளும் வல்லமையையே இங்கே ``உழையப் பொருகண்ணும்” என்கிறார்.

“நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே”என்பதனால் உமையம்மையின் திருஉருவ அருட்காட்சி தனது நெஞ்சத்தில் நீங்காமல் நிலைத்து நிற்கிறது என்கிறார். அப்படி நிலைத்து நிற்பது என்பது உமையம்மையின் அருள். வேத ஆகமங்கள் சொன்ன தியான முறை அபிராமிபட்டர் செய்த இடைவிடாத முயற்சி இவை மூன்றும் ஒருசேர சரியாக தவறின்றி நின்றதனால், குறைவின்றி அவள் அருளானது நிறைவாக நெஞ்சில் நிறைந்து இருப்பதையே இங்கே குறிப்பிடுகிறார்.

இது மிகவும் கருத்தாழம் பொருந்திய சொல். அபிராமி பட்டரின் உள்ளமானது முதலில் எப்படி இருந்தது, இடையில் எப்படி இருந்தது, இந்தப் பாடலின் முடிவில் எப்படி இருக்கிறது என்பதையே முதலில் ‘உதிக்கின்ற செங்கதிர்…. விழுத் துணையே’ (1) என்று உமையம்மையை துணைக்கு அழைக்கின்றார். ‘நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்’ (59) என்று தன் முயற்சி குறைவை குறிப்பிடுகிறார்.

தான் முயற்சிக்கும்போது, உமையம்மையின் அருள் நெஞ்சத்து அழுக்கை எல்லாம் அகற்றி தூய்மைப்படுத்தியதை ‘நின் அருட்புனலால் துடைத் தனை’ (27) என்று உமையம்மை உதவி செய்ததை குறிப்பிடுகின்றார். அழுக்கையெல்லாம் தீர்த்த உடன் உமையம்மையை நன்கு காண முடிகிறது. அவள் அருளை அனுபவிக்க முடிகிறது. என்று தனக்குள் ஏற்பட்ட வியப்பை `என்ன புண்ணியம் செய்தனமே மனமே’ (41) என்று தகுதியில்லா தனக்கு அருள் கிடைத்ததைக் கண்டு வியக்கிறார்.

அருளைப் பெற்ற பிறகு ‘எங்ஙனே மறப்பேன’ (82) என்று தன் அனுபவத்தை பதிவு செய்கிறார். இந்த எல்லாவற்றிற்கும் மேலாக இப்பாடலில் அவளது அருளானது தன் நெஞ்சத்தை விட்டு நீங்காது அபிராமி பட்டரின் மனதில் வந்து புகுந்ததால் பழைய இடமாகவே, தனக்கு பல வருடமாக வசிக்கின்ற வீடாகவே, தான் வாழ விரும்புகிற வீடாகவே, என்னை வாழ வைப்பதற்குதான் வாழுகிற வீடாகவே, தன் அருள் நிறைகிற வீடாகவே மாறி, நினைத்தல், மறத்தலின்றி, இருத்தல் - மறத்தலன்றி எப்பொழுதுமே விளங்கும் காலமற்ற தன்மை தோன்ற ``நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே’’ என்கிறார்.

‘`அந்தமாக’’``குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி’’ என்பதனால் சிவசக்தியின் இணைபிரியா தோற்றத்தையும், ``கழையை பொருத திருநெடுந்தோளும்’’ என்பதனால் தனக்கு வரம் அளித்தும், அளித்துக் கொண்டிருக்கிற, அளிக்க போவதுமாகிற, கொடை பண்பை இயல்பாக கொண்ட கையையும், ``கருப்பு வில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ண கையும்’’ என்பதனால் மன்மதனுக்கு அருள்செய்து ஆசையை நிறைவேற்றிய திருக்கோலத்தையும், அவர் உருவாக்கிய காதிவித்யா என்ற மந்திரத்தையும், ``உழைய பொருகண்ணும்’’ தான் துன்பம் நீங்கியதையும் ‘`நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே’’ என்பதனால் உமையம்மை அருளி இடையறாது இரண்டறக் கலந்த ஆனந்த அனுபவத்தில் திளைப் பதையே பதிவு செய்கிறார். நாமும் ஆனந்த வாரிதியில் திளைப்போம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

 

Advertisement