பிருந்தாவன ராகவேந்திரா...
மகான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை (சித்தி அடைந்த தினம்) வருகின்ற 11.08.2025 அன்று வருகின்றது. மகான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் மிருத்திகா பிருந்தாவனகள் தமிழகத்தின் பல இடங்களில் இருக்கின்றன. அதில் சில முக்கியமான பிருந்தாவனத்தின் முகவரிகள் தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. அதனை அறிந்து, உங்கள் பகுதி அருகில் உள்ள பிருந்தாவனத்தை தரிசித்து, மகான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் அருளைபெறுக!
* ஸ்ரீ சுமத்தீந்திர ஸ்வாமி மடம், எண்: 7, ராகவேந்திரபுரம், ஸ்ரீரங்கம், திருச்சி மாவட்டம் - 620006. இங்கு ராகவேந்திர ஸ்வாமி மிருத்திகா பிருந்தாவனத்துடன், ராகவேந்திர ஸ்வாமிகளின் சீடர்களான ஸ்ரீ யோகீந்திர தீர்த்தர், ஸ்ரீ சுமத்தீந்திர தீர்த்தர், ஸ்ரீ உபேந்திர தீர்த்தர், ஸ்ரீ முனீந்திர தீர்த்தர் ஆகிய நான்கு மகான்களின் மூல பிருந்தாவனங்களும் இருக்கின்றன.
* ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமி மடம், எண்: 7D, குறுக்கு துரை தெற்கு மாடத் தெரு (குறுக்குத்துறை முருகன் கோயில் அருகில்) திருநெல்வேலி மாவட்டம்.
*ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமி மடம், எண்:1, வடக்கு மாடத் தெரு, ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம்.
* ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமி மடம், க்யூ 85 (Q 85), கோவைப்புதூர், கோவை மாவட்டம்.
*ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமி மடம், எண்:7, டிபி கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600005.
* ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமி மடம், எண்: 7/2, அழகிரி நகர், கிழக்கு தெரு, வடபழனி, சென்னை மாவட்டம்.
* ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவனம், கருங்கல்பாளையம், (செக்போஸ்ட் பஸ் ஸ்டாப் அருகில்) ஈரோடு - 638003.
* ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி பிருந்தாவனம், ஸ்ரீ காடு ஹனுமந்தராய ஸ்வாமி கோயில் வளாகம் தாராபுரம் - 638656, ஈரோடு மாவட்டம். (இங்கு, மூலவராக மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் அருள்பாலிக்கிறார்)
* ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி மடம், பிளாட் எண்: 123, பர்மா காலனி, (ஏர்செல் டவர் அருகில்) காரைக்குடி.
* ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி மடம், எண்:16, பெருமாள் கோயில் தெரு, கரூர் மாவட்டம்.
* ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி மடம், (பாம்பே கோட்டை தியேட்டர் - Bombay Castle Theater) அருகில் நீலகிரி - 643001.
* ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம், எண்:1, வெங்கடசுவாமி நாயுடு அக்ரஹாரம், (பேச்சியம்மன் படித்துறை அருகில்) மதுரை - 1.
* ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனம், மகாதானபுரம் (P.O) (PIN:629702) கன்யாகுமரி.
* ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமி பிருந்தாவனம் சந்நதி வளாகம், எண்:159, சோலையப்பன் தெரு, கும்பகோணம். (இங்கு மகான் ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமியின் மூல பிருந்தாவனம் உள்ளது).
* ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி மடம், எண்:20, அக்ரஹாரம், காவேரி சாலை, மோகனூர் அஞ்சல், நாமக்கல் மாவட்டம்.
* ஸ்ரீ ராகவேந்திர மடம், ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் தெரு, விருபாக்ஷிபுரம், தர்மபுரி - 636701. (இந்த மடம் புத்திகே மடத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது)
* தட்சிண மந்திராலயம், பாப்பாரப்பட்டி அக்ரஹாரம், (பிஓ) தர்மபுரி மாவட்டம் - 636809.
* ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மிருத்திகா பிருந்தாவனம், கொண்டையம் பேட்டை, திருவானைக்காவல், திருச்சி மாவட்டம்.
* ஸ்ரீ ராகவேந்திர மடம், ஸ்ரீ ராமர் தெரு, தேவராஜா நகர், தசரதபுரம், சாலிகிராமம், சென்னை - 600093.
* ஸ்ரீ ராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனம், அக்ரஹார தெரு, சிந்தலவாடி - 639102, கரூர் மாவட்டம்.
(சிந்தலவாடி ஸ்ரீ யோக நரசிம்மர் கோயிலின் பின்புறத்தில் மடம் உள்ளது).