தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முசுகுந்தமகாராஜா இடத்தில் பால ஆஞ்சநேயர்

கொடுக்க மனமில்லை

இதனை சற்றும் எதிர்பாராத கோயிலின் உரிமையாளர் ``ஸ்வாமி... இக்கோயில் எங்களின் பூர்வீகத்துக் கோயில். ஆகையால், ஏனோ கொடுக்க மனமில்லை மன்னித்துவிடுங்கள்’’ என்று சொல்லிவிட்டார்கள். ஸ்வாமிகளும், ஓரிரு நாட்கள் ஸ்ரீரங்கத்தில் தங்கி, அதன் பிறகு பெங்களூருவிற்கு சென்றுவிட்டார். காலங்கள் உருண்டோட, மிகப் பெரிய ஜமீன் குடும்பம், வறுமையில் வாடத் தொடங்கியது. அவர்களின் குடும்பத்தார்களுக்கு நோய்கள் பரவத் தொடங்கின. வருடம் முழுவதிலும் நோயினால் அவதிக்குள்ளானார்கள். இப்படி இருக்க ஒரு நாள், கோயிலின் உரிமையாளர்களின் மிக முக்கியமான ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில், ஏன் இப்படியெல்லாம் நம் குடும்பத்தில் நடக்கிறது என்பதனை அறிய பிரசன்னம் போட்டுக் கேட்டார்கள், குடும்ப உறுப்பினர்கள்.

பிரசன்னம் போட்டு பார்த்ததில்

``பரம்பரை பரம்பரையாக ஒரு ஆஞ்சநேயரை பூஜை செய்து வந்திருக்கின்றீர்கள். ஆனால், சில ஆண்டுகளாக ஆஞ்சநேயருக்கு சரிவர பூஜைகள் நடைபெறுவதில்லை. ஆகையால், இக்கோயிலை மகான் ஒருவர் தானமாக கேட்டுள்ளார். அவருக்கு தர மறுத்துள்ளதால், உங்கள் குடும்பத்தினருக்கு இத்தகைய பிரச்னைகள் வந்திருக்கின்றன’’ என்று சொல்லப்பட்டது. மேலும், இக்கோயிலை அந்த மகானிடத்தில் ஒப்படைத்தால், இப்பிரச்னைகளிலிருந்து விடுபடலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

நானே கையெழுத்து போடுகிறேன்

அதன்படி, பால ஆஞ்சநேயர் கோயிலை ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்தரிடத்தில் ஒப்படைக்க முடிவெடுத்தனர். ஆனால், பத்திரத்தில் கையெழுத்திடும் மிக முக்கியமான ஒருவர் மருத்துவமனையில் ஐ.சி.யூ., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ரிஜிஸ்டர் செய்ய காலதாமதமானது. மேலும், அந்த நபர் கோமாவிற்கே சென்று விட்டதால் செய்வதறியாது திகைத்தனர். இப்படியே நாட்கள் சென்று கொண்டே இருப்பதினால் அர்த்தமில்லை என்று உணர்ந்த உறவினர்கள், ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளவரின் கை கட்டைவிரலை பதிந்து கோயிலை சுவாமிஜியின் பெயருக்கு மாற்றம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக, போலீஸ் உதவியுடன், ஒரு நீதியரசர், பத்திரம் மாற்றம் செய்யும் அதிகாரி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றார்கள்.

சென்றவர்களுக்கு அங்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. ஆம்!.. கோமாவில் இருந்த அந்த நபர், கண்விழித்து எழுந்து அமர்ந்து ``நானே கையெழுத்திடுகிறேன்’’ என்று சொல்லி பத்திரத்தில் கையெழுத்திட்டு, சுவாமிஜியின் பெயரில் ரிஜிஸ்டர் செய்து கொடுத்தார். இந்த நிகழ்வை, பால அனுமனின் மிக பெரிய மகிமையாக இன்றும் பெஜாவர் மடத்தின் பீடாதிபதியும், சீடர்களும் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக பெஜாவர் மடத்தின் கீழ் இக்கோயில் இயங்கிவருகிறது. தற்போதைய பெஜாவர் மடாதிபதியான ஸ்ரீ விஷ்வபிரசன்ன தீர்த்தர், இக்கோயிலை நிர்வகித்து வருகிறார். சத்சங்கம் செய்ய விரும்புவோர், இத்திருத்தலத்தில் வந்திருந்து புண்ணியம் என்னும் சம்பாத்தியத்தை சம்பாதித்துக் கொள்ளலாம். அதற்கான தங்கும் வசதி, உண்ண உணவு வசதிகள் ஆகியவை கோயிலின் சார்பாக செய்து கொடுக்கப்படுகின்றன.

மகானும் சாதுர்மாதம் விரதமும்

முன்னொரு காலத்தில் ஸ்ரீ வியாசராஜ மடம் வழியில் வந்த ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர் என்னும் ஒரு மகான், இக்கோயிலில் சாதுர்மாதம் விரதத்தை மேற்கொண்டிருந்திருக்கிறார். அக்காலத்தில், மன்னர் கிருஷ்ணதேவராயர், வியாசராஜ மடத்துக் கென்று தனியாக பெரிய பெரிய யானைகள், குதிரைகள் ஆகியவைகளை எல்லாம் கொடுத்து கௌரவித்துள்ளார். அந்த யானைகள், குதிரைகள்கூட சாதுர்மாதம் மேற்கொண்ட மகானின் காலத்தில், இக்கோயிலில் கட்டிவைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவலாகும். ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர் மூலபிருந்தாவனம், ஸ்ரீரங்கத்தில் உள்ள வியாசராஜமடத்தில் உள்ளது. இந்த பால ஆஞ்சநேயர் ஆலயத்தில், தோஷம் நிவர்த்தி செய்ய ஹோமங்கள் நடைபெறுகின்றன. அதே போல், மஹாளயபட்சம் தினத்தில் செய்யப்படும் முன்னோர்களின் நீத்தார் கடன் ஆகியவைகளும் இங்கு செய்யப்படுகின்றன.

மார்கழி இல்லை சித்திரை

இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, அனைத்துக்கோயில்களிலும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையில்தான் அனுமன் ஜெயந்தியை கொண்டாடுவார்கள். ஆனால், இந்த கோயிலில், சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியில்தான் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. காரணம், இக்கோயிலில் உடுப்பி சம்ரதாயத்தை பின்பற்றுகிறார்கள்.

அதன்படி அனுமன், சித்திரை மாதத்தில் பிறந்ததாக ஓர் ஐதீகம். அன்றைய தினத்தில் விசேஷ அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்று, அன்னதானம் விநியோகிக்கப்படும்.மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், பால அனுமனை வியாசராஜர் பிரதிஷ்டை செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.. ஆனால் அருகிலேயே, ஒருபுறத்தில் பீமனும், மறுபுறத்தில் ஸ்ரீ மத்வாச்சாரியாரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எப்போது, யாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கின்ற விவரமெல்லாம் தெரியவில்லை. அதே போல், உற்சவர்களான பிரகலாதன், வீர ஆஞ்சநேயர், பஞ்சமுகி ஆஞ்சநேயர் ஆகியோரும் காட்சியளிக்கிறார்கள்.

கல்வெட்டு என்ன கூறுகிறது?

அதே போல், இங்குள்ள விநாயகரையும் யார் பிரதிஷ்டை செய்தது என்கின்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால், விநாயகரின் சந்நதி மேலே, சில கல்வெட்டு எழுத்துக்கள் காணப்படுகின்றன. அந்த எழுத்துக்களை பார்க்கும் போது, ஏதோ கிரந்த மொழி எழுத்தின் வடிவம் போல் காணப்படுகிறது. இதனை படிக்கும் யாரேனும் ஆராய்ச்சியாளர்கள், இக்கோயிலுக்கு விசிட் செய்து, கல்வெட்டு குறித்து ஆராய்ந்தால், இந்த கோயிலைப் பற்றிய மேலும் பல தகவல்கள் வெளியே வரக்கூடும். தற்போது, பெங்களூர் போன்ற கர்நாடகாவில் இருந்து வரும் யாத்திரிகர்கள், முசிறி வழியாகத்தான் சென்னைக்கு செல்ல வேண்டும். அல்லது திருச்சி, ஸ்ரீரங்கம் போன்ற தலங்களுக்கு இந்த முசிறி வழியே எளிய வழி. அப்படி செல்லும் யாத்திரிகர்கள், முசிறியில் தங்குவதற்கு ஏதுவாக, ரூம்ஸ் வசதிகளும் இக்கோயிலில் இருக்கின்றன. வரும் பக்தர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உணவு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. அதுமட்டுமில்லை... அருகிலேயே அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்கள் இருப்பதால், இக்கோயிலை மையப்படுத்தி சென்ற இதழில் கூறிய கோயில்களுக்கு எல்லாம் செல்லலாம்.அது போக, பால ஆஞ்சநேயரின் சந்நதி புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதியதாக ராமர், சீதா, லட்சுமணரை பிரதிஷ்டை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதால் அதற்கான திருப்பணி செய்ய விரும்புவோர் தொடர்புக்கு: ஸ்ரீராம் ஆச்சாரி - 9600341993.

முதல் கூகுள் மேப்

நாம், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை எங்கு காணும் போதும், ``ஏன் வியாசராஜர் இங்கு அனுமனை பிரதிஷ்டை செய்தார்?’’ என்ற கேள்வியை மறக்காமல் அர்ச்சகரிடத்தில் முன்வைப்பது வழக்கம். அதே போல், இந்த அர்ச்சகரிடத்திலும் முன்வைத்தோம். மகான் ஸ்ரீ வாதிராஜர், ``தீர்த்த பிரபந்தம்’’ என்னும் நூல் இயற்றியிருக்கிறார். அது முழுக்க முழுக்க ஒரு வழிகாட்டி நூலாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, இக்காலத்தில் கூகுள் மேப் (Google Map) இருப்பதைப் போல.. அக்காலத்தில் எந்தெந்த கோயிலுக்கு செல்லலாம், அங்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும், எந்த விதமான புண்ணியங்கள் கிடைக்கும் என்பது போன்ற தெளிவான விளக்கங்களை ``தீர்த்த பிரபந்தம்’’ என்னும் நூலில் எழுதியுள்ளார், வாதிராஜர். அதே போல்தான், மகான் ஸ்ரீ வியாசராஜரும். அங்கங்கு அனுமனை பிரதிஷ்டை செய்து, அந்த ஊர் மக்களுக்கு ஓர் வழிகாட்டியாகவும், அதே சமயத்தில், அனுமன் காரியசித்தி அல்லவா! கேட்டதை உடனடியாக தந்துவிடுவார் அல்லவா! ஆகையால், அனுமனை பிரதிஷ்டை செய்வதினால், அவ்வூர் மக்கள் வழிபாடு செய்து, தங்களின் துன்பத்தை போக்கிக் கொள்ளவே வியாசராஜர், அனுமனை பிரதிஷ்டை செய்திருக்கிறார், என்கின்ற அருமையான விளக்கத்தை தெரிவித்தார், அர்ச்சகர்.

திடபக்தி

``கோயிலைச் சுற்றிலும் புதர்கள், தென்னை மரங்கள், செடி கொடிகள், அடிக்கடி கோயிலுக்குள் நுழையும் பாம்புகள்! அருகிலேயே பெரிய மயானம் வேறு.. இவைகளோடு நீங்கள் எப்படி தனியாக வசித்து அனுமனுக்கு பூஜைகளை செய்து வருகின்றீர்கள்?’’ என்று அர்ச்சகரின் முன்பாக ஒரு கேள்வியை முன்வைத்தோம். அதற்கு; ``பால ஆஞ்சநேயர் எனக்கு துணை இருக்கிறார்’’. என்ற ஒரே ஒரு பதில்தான் வந்தது. எத்தகைய திடபக்தியையும், நம்பிக்கையையும் பாருங்கள்! அத்தகைய அதே திடபக்தி நம்மிடத்திலும் இருக்குமேயானால், கல்வி, வேலைவாய்ப்பு, திருமணத்தடை, குழந்தைப்பேறு ஆகிய நியாயமாக நாம் கேட்கும் வரத்தை பால அனுமன் வழங்கி அருள்வார் என்பதில் துளிகூட சந்தேகமில்லை!

Related News