அரசலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
வாமதேவர் என்ற முனிவர் தான் பெற்றிருந்த சாபத்திற்கு விமோச்சனம் தேடி பல தலங்களுக்கு சென்று சிவபெருமானை வணங்கி வந்தார். அவர் இந்த ஒழுந்தியாபட்டு வந்தபோது அரச மரத்திற்கு கிழே அமர்ந்து சற்று நேரம் ஒய்வெடுத்தார். குளிர்ச்சி தரும் இந்த அரசமரத்தடி நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே இங்கு சிவபெருமான் இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டே அயர்ந்து போனார். அவர் தூங்கி விழித்த போது அந்த அரச மரத்தின் அடியில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். கண் விழித்தபோது சிவனை கண்ட வாமதேவர் மனம் மகிழ்ந்து அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார்.
சிவபெருமான் சுயம்புவாக அரச மரத்தின் கீழ் அவதரித்ததால் அரசிலி என்றும் அரசலீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். பல்லாண்டுகளுக்கு பிறகு இத்தலத்தில் இருந்த லிங்கம் மறைந்துவிட்டது. சத்திய விரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் சிவபெருமான் மீது மிகுந்த பக்தியோடு இருந்தான். மன்னனுக்கு வாரிசுகள் இல்லை. இங்கு நந்தவனம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் சிவ பூஜை செய்து வழிபட்டு வந்தான். இதற்காக பணியாள் ஒருவர் நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்து வரும் பணியை செய்து வந்தார்.
ஒருசமயம் பணியாள் நந்தவனத்திற்கு சென்ற போது மலர்கள் இல்லை. அன்று வேறு மலர்களில் வழிபாடு செய்தான். மறுநாளும் பணியாள் நந்தவனத்திற்கு சென்ற போது மலர்கள் இல்லை. மன்னரிடம் பணியாள் முறையிடவே. மன்னன் யாரே நந்தவனத்தில் வந்து மலர்களை பறித்து செல்கின்றனர் என்ற சந்தேகத்தில் படையுடன் பார்வையிட சொன்னான். அங்குள்ள மலர்களை மான் உண்பதை கண்டனர். சிவபூஜைக்கு உள்ள மலர்களை மான் உண்பதை கண்ட மன்னன் கோபத்தில் மான் மீது அம்பு எய்தினான். மான் அம்புடன் ஓடியது. அதனை வீரர்கள் துரத்திச் சென்றனர்.
அந்த மான் அம்புடன் ஒரு அரசமரப் பொந்திற்குள் ஒழிந்து கொண்டது. மரத்தினை அகற்றி மானை வெளியே கொண்டு வர முயற்சித்தான். ஆனால், அங்கு மான் இல்லை. ஒரு சிவலிங்கம் மட்டுமே இருந்தது. சிவபெருமான்தான் மான் ரூபத்தில் வந்து தனக்கு காட்சி கொடுத்திருக்கிறார் என புரிந்து கொண்டு அந்த சிவலிங்கத்தை வைத்து கோயிலில் வைத்து வழிபாடு செய்தான். பிறகு அந்த மன்னனுக்கு புத்திரப் பேரும் உண்டாயிற்று. வாமதேவர், திருஞான சம்பந்தர், சேக்கிழார் ஆகியோர் பாடல் பெற்ற தலமாகும். இங்குள்ள தெய்வங்களுக்கு சூரியன், வியாழன், சுக்ரன் கிரகங்கள் நாமாகரணம் செய்து உள்ளன.
*புனர்பூசம் அல்லது பூரட்டாதி நட்சத்திர நாளில் அத்திமரத்தில் தொட்டில் வைத்து அதில் சிறியதாக செந்தாமரை மலர் வைத்து மஞ்சள் பட்டு நூலால் தல விருட்சமான அரச மரத்தில் கட்டினால் வெகு விரைவில் புத்திர பேரு உண்டாகும்.
*பௌர்ணமி - பிரதோஷ நாளில் தொடங்கி அமாவாசை பிரதோஷ நாள் வரை சுவாமிக்கு செந்தாமரை மாலை கொடுத்து மாம்பழம் அல்லது மாம்பழ சாறில் அபிஷேகம் செய்து நைவேத்தியமாக வழிபாடு செய்தால் நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பிறப்பு உண்டாகும்.
*அனுஷம் அல்லது மிருகசீரிஷ முதல் நாள் கருப்பு எள்ளும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து ஊறவைத்து இரவு தூங்கும் முன் தலையணைக்கு மேல் அருகாமையில் வைத்து, பின் அடுத்தநாள் அனுஷம் அல்லது மிருகசீரிஷம் அன்று அங்குள்ள தல விருட்சமான அரச மரத்தில் ஊற்றி விட்டு சுவாமியை வழிபட்டு வந்தால் அறுவை சிகிச்சையின்றி சுகப்பிரசவம் உண்டாகும்.
*அனுஷம் அல்லது அவிட்ட நட்சத்திர நாளில் திணை மாவும் நாட்டுச் சர்க்கரையும் நைவேத்தியமாக சுவாமிக்கு படைத்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக கல்வியில் தேர்ச்சி பெறுவார்கள்.
எப்படிச் செல்வது? கும்பகோணத்தில் இருந்து அம்பாள் சாலை வழியாக நாச்சியார்கோயில் அல்லது பேரளம், கூத்தனூர்/குத்தனூர் வழியாக கோயிலை அடையலாம் அல்லது மயிலாடுதுறை பேருந்து வழித்தடத்தில் அம்பர் மாகாளம் என்ற ஊருக்கு வந்து, அங்கிருந்து சுமார் 4.4 கி.மீ தொலைவில் அம்பல் பிரம்மபுரீஸ்வரர் கோயிலை அடையலாம்.
ஸ்தபதி - ஜோதிட ஆய்வாளர் திருநாவுக்கரசு