தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இருள் நீக்கி இன்னருள் புரிவாய் அபிராமியே...

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

Advertisement

``குயிலாய்‌இருக்கும்‌கடம்பாட வியிடை; கோல இயல்‌

மயிலாய்‌இருக்கும்‌இமயாசலத்திடை; வந்து உதித்த

வெயிலாய்‌இருக்கும்‌விசும்பில்‌; கமலத்தின்மீது அன்னமாம்‌

கயிலாயருக்கு அன்று இமவான்‌அளித்த கனங்குழையே’’

- தொன்னூற்றி ஒன்பதாவது அந்தாதி

“ஆதியாக”

உலகில் உள்ளோர் பிறரிடத்தில் தன்னை அறிமுகம் செய்வது கொள்ள யாரிடம் அறிமுகம் செய்து கொள்ளப் போகிறோமோ அவருக்கு தெரிந்த உறவை, நுட்பத்தை, தேவையை சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொள்வார்கள். அதுபோல் அபிராமிப் பட்டர் அபிராமியை பற்றி ஒரு அறிமுகத்தை நமக்கு செய்து வைக்க முயல்கிறார். நமக்கு என்ன தெரியுமோ அதைக் கொண்டு அபிராமியை அறிமுகம் செய்கிறார். இந்தப் பாடலில் நமக்கு தெரிந்த, குயில், மயில், வெயில், அன்னம், தாமரை, என்ற பொருள்களைச் சூட்டி மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத உமையம்மையை நம் விழிக்கும் வினைக்கும் எட்டும்படி அறிமுகம் செய்கிறார். இதையறிய இப்பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”

* குயிலாய்

* இருக்கும் கடம்பாட வியிடை

* கோல இயல் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை

* வந்து உதித்த வெயிலாய் இருக்கும்

* விசும்பில்

* கமலத்தின் மீது அன்னமாம் கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

இவ்வரிசையின் வழி பாடலின்

விளக்கதை இனி காண்போம் ``குயிலாய்’’

என்பது ஒரு கலைச்சொல் ஆகும். இது ஹ்ரீம் என்ற உமையம்மையின் மந்திரத்தைச் சூட்டும். இதை ‘ஹ்ரீங்கார சாரிகா’ என்ற உமையம்மையின் அர்ச்சனையினால் அறியலாம். திருமணஞ்சேரியிலுள்ள உமையம்மைக்கு கோகிலாம்பாள் என்று பெயர். இதற்கு ஹ்ரீம் என்ற பெயரை உடைய குயில் என்று பொருள். இவையாவற்றையும்  மனதில் கொண்டே “குயிலாய்” என்கிறார்.

``இருக்கும் கடம்பாட வியிடை’’என்பதனால் கடம்ப மரங்கள் நிறைந்த காட்டுக்குள் வாழும் குயில் என்கிறார் பட்டர். கடம்ப மரமானதை தலவிருட்சமாகக் கொண்ட தலம் மதுரை. மீனாட்சியம்மன் அருள்புரியும் சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தவனம் மற்றும் அந்த கோயில் அமைந்துள்ள பகுதி முற்காலத்தில் கடம்ப வனமாக இருந்தது. அந்த வனத்திலேயே உமையம்மை மீனாட்சி என்ற பெயரில் குயிலாய் இருக்கிறாள் என்ற மதுரை தல புராணத்தைச் சூட்டி ``குயிலாய் இருக்கும் கடம்பாட வியிடை” என்று குறிப்பிடுகிறார். சிந்தாமணி கிரகத்திலுள்ள கடம்ப அடவியல் (கடம்ப மர காடு) உமையானவள் மூன்று விதமாய் தோன்றுகிறாள். காடுகளில் குயிலாய் இருப்பது, இசை மீட்டித் தான் மகிழ்வது, பிறர் பாடும் இசையைக் கேட்டு மகிழ்வதாக ஆகமங்களில் குறிப்பிடப்படுகிறது. உமையம்மையே பாடுகின்ற அந்த வடிவத்தைத் தான் இராஜ மாதங்கி என்கிறார்கள்.

அவள் குரலைப் பற்றி அபிராமிபட்டர் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார். இதையே பட்டர், `பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே’ (86) என்கிறார். அபிராமி அம்மையானவள் கடம்பவனத்தில் தோழியர் சூழ தான் மகிழ்ச்சியாக இருப்பதையும் இசை வடிவமாக குயிலாய் இருப்பதையும் மிகத் தெளிவாகப் பதிவு செய்கிறார். அவள் கையில் அணிந்திருக்கும் வளையல் ஓசையைக் கூட காதுகளால் கேட்டிருக்கிறார். `வளைக்கை அமைத்து அரம்பையடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல் என்பாய் நரம்பை அடுத்து இசைவடி வாய் நின்ற நாயகியே’ (49) என்கிறார்.

உமையம்மையை உருவ, அருவமாக ஸ்ரீ சக்கரம் என்ற யந்திரத்தை வைத்து வழிபடுவர் அந்த யந்திரத்தை வழிபடுவதற்கு சொல்லப்படும் ஸ்ரீவித்யா மந்திரத்தையே இங்கு குறிப்பிடுகிறார்.

யந்திரம், தந்திரம், தேவதை என்ற மூன்றும் ஒன்றோடு ஒன்று மிகுந்த நெருங்கிய தொடர்புடையது. அதனாலேயே ஒன்றை சூட்டி சொல்வதால் அதைச் சார்ந்த மற்ற இரண்டையும் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையிலேயே தான் குயிலாய் என்ற சொல் மந்திரத்தையும் அதற்குரிய ஸ்ரீ யந்திரத்தையும் அந்த தேவதையின் உருவமாக மீனாட்சியையும் தெளிவாக ஒரே சொல்லால் குறிப்பிடுகின்றார். உமையம்மை இருக்கும் இடத்திற்கு சிந்தாமணி கிரகம் என்று பெயர். இது சிவத்திற்கு கைலாசம் போல் விஷ்ணுவிற்கு வைகுண்டம் போல என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த சிந்தாமணி கிரகத்தில் இருபத்தி ஐந்து மதில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் இடையில் மரங்கள் உள்ளன. அதில் கடம்ப மரமும் ஒன்று. அந்த வனத்தில் உமையம்மை அமர்ந்து சங்கீதம் பாடுவாள். சங்கீதம் கேட்பாள், தோழிகளுடன் கூடி ஆடிப்பாடி மகிழ்வாள். அந்த இடத்தில் உமையம்மைக்கு மாதங்கி என்று பெயர். இவள் ஆயிரம் நரம்புகள் தாங்கிய வீணையை வாசித்து மகிழ்வாள். இவை யாவற்றையும் இணைத்தே “குயிலாய் இருக்கும் கடம்பாட வியிடை” என்கிறார்.

``கோல இயல் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை’’என்ற வரியால் ஒரு தல புராணத்தை குறிப்பிடுகிறார். ஒரு முறை சிவபெருமான் தன்னைப் பற்றிய சிவ ரகசியத்தை உமையம்மைக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் ஒரு அழகான மயிலானது உபதேசித்த வனத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. சிவபெருமான் மிகவும் தெளிவாக உமையம்மைக்கு உபதேசித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவர் கூறும் அந்த உபதேசக் கருத்தில் மனதை செலுத்தாமல் அங்கு வந்து விளையாடும் மயில் மீது கவனத்தை செலுத்தினாள் உமையம்யை. இதைக் கண்ட சிவபெருமான் கோபித்து உபதேசத்தைக் கேட்காமல் மயிலைக் கண்ட நீ மயிலாக ஆவாய் என சபித்தார்.

அதற்காக பூலோகத்தில் மயிலாய் பிறந்து உமையம்மை பூசித்த தலங்கள் மாயூரம், மயிலாப்பூர் மற்றும் திருக்கயிலை என்ற தலங்களாகும். இந்த தலப் புராணத்தை விளக்கும் வகையில் “மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை” என்று இவ்வரியில் சூட்டுகிறார். மேலும், உமையம்மையின் மந்திரமானது பதினாறு வகையாக உள்ளது. அந்த பதினாறு வகையான மந்திரத்தை குயில், மயில், அன்னம் போன்ற பறவைகளைச் சூட்டுவது போல் சக்தி மந்திரத்திற்கு உண்டான வேறுபாடுகளை மிக நுட்பமாக உணர்ந்து சூட்டுகிறார். அந்த வகையில் அபயாம்பிகை, கற்பகாம்பிகை, உமையப்பார்வதி என்ற உமையம்மையின் திருமந்திரத்தையே ``கோல இயல் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை’’ என்கிறார்.

``மயில்” என்பது சாக்த உபாசனையைப் பொருத்தவரை அவளுக்கு உண்டான மந்திரங்களுள் சண்முக வித்யா என்று அழைக்கப்படும். ஹஸக ஹலஹ்ரீம் - ஸகஹல ஹ்ரீம் என்ற மந்திரத்தையே மயில் என்று குறிப்பிடுகிறார். ``இருக்கும்” என்பதனால் பிரணவ வித்தை எனப்படும் ஓங்காரத்தை அகர, உகர, மகர, நாத, விந்து என்ற ஐந்து எழுத்துக்கள் கூடிய பிரணவத்தை குறிப்பிட பவ வித்யா என்ற சொல்லையே தூய தமிழில் ``இருக்கும்’’ என்று பயன்படுத்து கிறார். ``இமயா சலத்திடை’’ என்பதனால் ‘யஜாமஹே ஸுகந்த்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருகமிவ பந்த்தனான் ம்ருத்யோர்முஷீய மாம்ருகாத்’ என்ற இதனுடன் முன்னும் பின்னும் காயத்ரியையும் ஜாத வேதஸ் என்ற துர்க்கையையும் இணைத்து சொல்லப்படும் நூறு எழுத்து கொண்ட மந்திரத்தையே குறிப்பிடுகிறார்.

பனி போக்கும் சூரியனை ‘தத்ஸவிதுர்- வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி / தியோ யோநஃ பிரசோதயாத் / ஜாத வேதஸே ஸுநாம ஸோம மராதீயதோ நிதஹ்தி வேத: / ஸ ந: பரிஷததி துரிதாக்யக்னி:’ என்ற வார்த்தையால் சூரிய மந்திரத்தையும் அசல என்ற வார்த்தையால் த்ரயம்பக மந்திரத்தையும் இடை என்ற வார்த்தையால் ஜாதவேதஸ் என்ற துர்கா மந்திரத்தையும் “இமயாசலத்திடை” என்பதனால் தசாஷரி என்று அழைக்கப்படும் (24 44 32) என்ற ஸ்ரீவித்யா மந்திரத்தையே மறைமுகமாக பதிவு செய்கிறார்.

ம்ருத்யுஞ்ஜய த்யானத்தில் `கைலாச கமனீய ரத்ன கஜிதே கல்பத்ரு மூலே ஸ்திதம்’ என்ற வரியால் கைலாயத்தில் உள்ள கல்பதரு மரத்தின் கீழ் மிருத்யுஞ்ஜயர் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதையே ‘மலைப் பொருந்திய அசலம்’ என்பதனால் நன்கு அறியலாம். ஹிமம் என்பதனால் ஹிமகரன் நிஷாகரன் என்று சந்திரனையும், ஹிமாரி நிஷாரி என்று சூரியனையும் அழைப்பர். அதுபோல் ஹிமயா என்ற வட சொல்லே தமிழில் இமய என்ற வார்த்தையால் குறிப்பிடப்படுகிறது. இடை என்பதனால் துர்க்கையை குறிப்பிடுகிறார். இவள் கன்னியாதலால் இடை சிறுத்தவள் என்பதனால் இடையை குறித்து ஜாதவேதஸ் என்ற மந்திரத்தை குறிப்பிட்டார்.

றெகாயத்ரீ மந்த்ரம், ஸ்ரீ துர்கா மந்த்ரம், ம்ருத்யுஞ்சய (த்ரயம்பக மந்த்ரம்) இந்த மூன்று தேவதைகளையும் இணைத்து ஒரே மந்திரத்தில் சொல்லக்கூடிய சதாக்ஷரி மந்திரத்தையே இங்கு “கோல இயல்” மயிலாய் சண்முக வித்யா என்பதனால் என்பதையும் ``இருக்கும்’’ என்பதால் பல வித்யையும் ``இமையா சலத்திடை’’ என்பதனால் மூன்று தேவதைகளை ஒருங்கே வணங்கும் மந்திரமான சதாக்ஷரி மந்திரத்தை குறிப்பிடுகிறார். இதை யாவற்றையும் இணைத்து “கோல இயல் மயிலாய் இருக்கும் இமையாச்சலத்திடை” என்கிறார்.

``வந்து உதித்த வெயிலாய் இருக்கும்’’என்ற வார்த்தையினால் சூரியனில் எழுந்தருளியுள்ள உமையம்மையை குறிப்பிடுகிறார். நேரடியாகவே சூரியனைப் பார்த்து அதிலேயே தியானம் செய்வதால் உருவங்கள் ஏதும் வைக்கவில்லை. சூரியனை ப்ரத்யக்ஷப் ப்ரம்மம் என்கிறது சாத்திரம். காலை, மதியம், மாலை என்ற மூன்று வேளையும் உமையம்மையை சூரியனின் நடுவில் வழிபடுவதையே ``வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில்’’ என்கிறார்.

``விசும்பில்’’என்பதனால் திருஉருவம் அமைக்கப் படாமல் நேரடியாக சூட்டிக் காட்டுவதையே விசும்பில் என்கிறார். அவ்வாறு வழிபட வேண்டிய உமையம்மையை சந்தியா வந்தனத்தில் எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இங்கே குறிப்பிடுகிறார். அதை இனி காண்போம்.

ப்ராதஸ்ஸந்தி - ப்ராம்ஹி

காலையில் சிவந்த ஆபணங்களும், சிவந்த பட்டுப்புடவையும், உடையவளாய் சிவந்த நிறமுள்ளவராய் சடையும், பூணூலும் உள்ளவராய், சரஸ்வதியம்மன் ரூபமாய் அன்ன வாகனத்தின் மேல் பத்மாஸனமாயிருந்து கொண்டு சிறு பெண்ணாய் நான்கு முகமும், நான்கு கைகளும் உள்ளவராய் ஸ்ருக்கு (வேள்விக்கரண்டி) ஜப மாலிகை, வலது கைகளிலேயும், தண்ட கமண்டலங்கள் இடது கைகளிலேயும், உள்ளவனாய் ப்ராம்ஹி என்கிற பெயருடையவளாய் எட்டு கண்களுள்ளவளாய் த்யானிக்கிறேன். இது நட்சத்திரங்கள் கூடியிருக்கும் ப்ராதக் காலத்திலேயே செய்யத் தக்கது.

மாத்யாந்ஹிக ஸந்தி -வைஷ்ணவீ

மத்யானத்தில் வெள்ளை பட்டு புடவையுடையவளாய், வெள்ளை நிறமாய் வனமாலையும் பூணூலும் உள்ளவளாய், கருடன் மேல் பத்மாஸனமாக உட்கார்ந்துகொண்டு யெளவன வயது பெண்ணாய், சங்கு, சக்ரம், இடது கையிலும், கதை, அபயம் இரண்டும் வலது கையிலும் உள்ளவராய் மகாலக்ஷ்மி ரூபமாய் வைஷ்ணவீ என்கிற பெயருடையவளாய் ஸர்வாபரண பூஷிதையாய் த்யானிக்க வேண்டும்.

ஸாயம் ஸந்தி- ரௌத்ரீ

இனி ஸாயங்காலத்தில் கருநெய்தல் புஷ்பம் போல் காந்தியுள்ளவராய், சற்று திரும்பின யௌவன முடையவளாய், நான்கு கைகளுள்ளவளாய் மூன்று கண்களும் சடையும் பூணூலும் சிரசிலே மூன்றாம் பிறை சந்திரனும் உள்ளவராய், சூலமும் ஜபமாலையும் வலது கைகயிலும், அபயமும் சக்தி ஆயுதமும் இடதுகையிலுள்ளவளாய் வ்ருஷப வாஹணத்திலே பத்மாசனமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் பார்வதியின் ஸ்வரூபத்தை த்யானிக்க. இது சூரியன் பாதி மறையும் ஸமயத்திலேயே செய்யத்தக்கது.‌இந்த ஸாயங்கால சந்தி என்ற

மூன்றையும் இணைத்தே “விசும்பில்” என்கிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Advertisement

Related News