தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிசயத்தக்க அபிஜித் நட்சத்திரம்

Advertisement

கால புருஷனுக்கு இருபத்தி ஒன்றாவது (21) நட்சத்திரத்தி ற்கும் இருபத்தி இரண்டாவது (22) நட்சத்திரத்திற்கும் இடையில்தான் வெற்றியின் நட்சத்திரமான அபிஜித் நட்சத்திரம் உள்ளதாக ஜோதிட ஆய்வாளர்கள் சாஸ்திரத்தில் உள்ளதாக சொல்கிறார்கள். இந்த நட்சத்திரத்தை இருபத்தி எட்டாவது (28) நட்சத்திரமாக எடுத்துக் கொள்ளலாம். ஜித் என்ற வார்த்தையானது வெற்றியைக் குறிக்கிறது. அபிஜித் என்பது விரைவான வெற்றியைக் குறிக்கிறது.இந்த நட்சத்திரம் ஏன்? அதிகளவில் பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்வி எல்ேலார் மனதிலும் உண்டு. இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை பிரம்மா இருக்கிறார். பிரம்மாவிற்கு பூமியில் பூஜைகள் இல்லை என்பதால் அபிஜித் நட்சத்திரம் அதிக புழக்கத்தில் இல்லை. பிரம்ம முகூர்த்தத்திற்கு நிகரான நேரமாக அபிஜித் நட்சத்திர பிரசன்னமாகிறது. வான் மண்டல விண்வெளியில் லைரா (Lyra) என்ற நட்சத்திரக் கூட்டத்திற்குள் வேகா என்ற நட்சத்திரமாக இந்த அபிஜித் நட்சத்திரம் மறைந்துள்ளது. வேகா (Vega) என்பது அபிஜித் நட்சத்திரத்தின் சமஸ்கிருதப் பெயராகும். முன்னூற்று அறுபத்து ஆறு நாட்களாக இருக்கும் (366) ஜீலியன் காலண்டர்களில் இந்த நட்சத்திரம் பற்றி குறியீடுகள் உள்ளன என்பது சூட்சுமம் ஆகும்.

அபிஜித் நட்சத்திர புராணம்...

இதிகாசங்களும் புராணங்களும் வாழ்வை பற்றிய கற்பித்தலை நமக்கு சொல்லித் தருகிறது. அவ்வாறே, மகாபாரதத்தில் குருேகஷத்திரப் போர் தொடங்குகிறது. அச்சமயத்தில் ஜோதிட வித்தகன் சகாதேவனிடம் துச்சாதனன் ‘‘எந்த நேரத்தில், எப்படி போர் தொடங்கினால் வெற்றி பெற முடியும்.’’ என்ற கேள்வியை கேட்கிறார். ஜோதிடத்தை பற்றிய உண்மையை எப்பொழுதும் மறைக்காமல் சொல்லும் பண்புடையவன். சகாதேவன் அபிஜித் நட்சத்திரம் தோன்றும் நேரத்தில் போர் தொடங்கினால் வெற்றி என்று சொல்லிச் செல்கிறார். இதையறிந்த கிருஷ்ண பகவான் நல்லவர்களுக்கும் தீயவர்களும் ஒரு நியதி வேண்டும் என்பதால் நல்லவர்களை காப்பற்றவும் தீயவர்கள் வெற்றி பெறாமல் இருக்கவும். அதாவது தர்மம் என்ற நியதி வலுவாமல் இருக்க அபிஜித் நட்சத்திரத்தை தன் மயிலிறகில் கிருஷ்ண பகவான் எடுத்து மறைத்து வைத்துள்ளார் என்பதேசூட்சுமம்.பரமாத்வாகிய பரமேஸ்வரனே முப்புரங்களையும் வென்று இந்த நட்சத்திரத்தில்தான் ்போரிட்டு வெற்றுள்ளதாக புராணங்கள் சொல்கின்றன.

அபிஜித் நட்சத்திர அடையாளம் என்ன?

அபிஜித் நட்சத்திரமானது நான்கு தெருக்கள் சந்திக்கும் நாற் சந்தியை போன்ற வடிவமாகி அது ஒரு பெரும் புள்ளியை சந்திக்கும் அமைப்பாக உள்ளது.

அபிஜித் நட்சத்திரம் என்பது என்ன?

காலையில் சூரிய உதய காலத்திலிருந்து 6 மணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளைதான் அபிஜித் காலம் அதாவது, ஒவ்வொரு நாளும் பகல் 12மணி முதல் 1மணி வரை உள்ள நேரமே அபிஜித் முகூர்த்தம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

அபிஜித் நட்சத்திர வழிபாடு?

தினமும் இந்த அபிஜித் முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்வது உங்கள் விருப்பமானது நிறைவேற்றும் வெற்றியை தரும் அமைப்பாக உள்ளது.

அபிஜித் நட்சத்திர நேரத்தில் பிறந்த அதிர்ஷ்ட குழந்தையாக உள்ளது

அபிஜித் நேரத்தில் பிறந்த குழந்தை அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் குழந்தையாக உள்ளது. மேலும், இந்த நட்சத்திரத்தை பற்றி விவரங்கள் கூறாவிடிலும் சில வழக்கமான விஷயங்களில் நாம் சிலவற்றை புரிந்து கொள்ளமுடியும்.

அபிஜித் முகூர்த்த நேரத்தில் பிறந்த குழந்தையின் குணங்கள்...

* செய்யும் தொழிலில் நேர்த்தி உண்டு.

* தாய் - தந்தையின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

* கௌரவத்தை நேசிக்கும் பண்புடையவர்கள்.

* எப்பொழுதும் அறிவார்ந்த நண்பர்களோடு பழக்கம் வைத்துக் கொள்பவர்கள்.

* மகிழ்ச்சி நாடக்குடியவர்கள். அதேபோன்று மற்றவர்களின் மகிழ்ச்சியில் அக்கறை உள்ளவர்கள்.

* ஆன்மிக நாட்டம் உடையவர்கள். ஆன்மிகத்திற்காக நீண்ட பயணத்தை மேற்கொள்பவர்கள்.

* இவர்களை அதிர்ஷ்டம் துரத்திக் கொண்ேட இருக்கும்.

* ஒரு விஷயத்தில் தொடர் முயற்சி செய்யும் குணம் கொண்டவர்கள்.

* தர்ம சிந்தனை கொண்டவர்கள். தலைமை பண்பு கொண்டவர்கள்.

அபிஜித் முகூர்த்த நேரத்தில் யாரை வழிபடலாம்...

* அபிஜித் நட்சத்திரத்தின் அதிதேவதையாக பிரம்மா உள்ளார். ஆகவே, வியாழக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருப்பட்டூர் கிராமத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் வழிபடுவது சிறந்த நற்பலன்களைத் தரும்.

* திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில், சமயபுரத்தை அடுத்து, சிறுகனூர் கிராமத்திலிருந்து மேற்கில் சுமார் 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூரில் அமைந்துள்ளது.

அபிஜித் முகூர்த்த நேரத்தில் வழிபடும் நேரம்...

* இக்கோயில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும். மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். வியாழக்கிழமை அன்று காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் திறந்திருக்கும். காலை அபிஷேகம் 8 மணி நடைபெறும்.

Advertisement

Related News