ஆடி அமாவாசை (24.7.2025)
முன்னோர்களின் ஆசி பூரணமாக கிடைக்கும். பல அமாவாசைகளில் முன்னோர் வழிபாட்டைத் தவற விட்டவர்கள் இன்று செய்வதன் மூலம் அந்தக் குறையைப் போக்கிக் கொள்ளலாம். ஆடி அமாவாசை காலத்தில் கடல் அல்லது புனித ஆறுகளில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெறமுடியும்.